30
Oct
சில தினங்களுக்கு முன், உச்ச நீதிமன்றம், ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற இந்திய டெலிகாம் நிறுவனங்கள், மத்திய டெலிகாம் துறை கோரிய 92,642 கோடி ரூபாயைச் செலுத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கி இருப்பதை அறிவோம். இந்த பிரச்னை ஏதோ டெலிகாம் நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் டெலிகாம் துறைக்கு இடையில் நடந்த பிரச்னையாக மட்டும் தானே நமக்குத் தெரியும்..! ஆனால் இப்போது இந்த தீர்ப்பினால், வங்கிகள் தங்கள் தலையில் கை வைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏன் ஏர்டெல், வொடாபோன் ஐடியா, ஏர்செல் போன்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு எதிராக வெளி வந்த தீர்ப்புக்கு இவர்கள் வருத்தப்படுகிறார்கள் என்று கேட்டால்... கடன் என்கிறார்கள். அட ஆமாங்க. நம் ஏர்டெல், வொடாபோன் ஐடியா தொடங்கி பல முன்னணி டெலிகாம் நிறுவனங்களும் பெரிய அளவில் கடன் கொடுத்து இருக்கிறார்கள் நம் வங்கிகள். ஏர்டெல் நிறுவனம், தன்னுடைய கடந்த ஜூன் 2019 காலாண்டு நிதி நிலை…
