சினிமா

திருவள்ளூர் தமிழ் கலாச்சாரத்தை இசைவடிவில் உலகளாவிய அளவில் கொண்டு செல்லும் ஏ ஆர் ரகுமான்

திருவள்ளூர் தமிழ் கலாச்சாரத்தை இசைவடிவில் உலகளாவிய அளவில் கொண்டு செல்லும் ஏ ஆர் ரகுமான்

திருவள்ளூர் தமிழ் கலாச்சாரத்தை இசைவடிவில் உலகளாவிய அளவில் கொண்டு செல்லும் முயற்சி த என்ற புதிய இசை திட்டத்தை ஏ ஆர் ரகுமான் தனது பிறந்த நாளான நேத்திக்கு வெளியிட்டார். இதன் மூலம் தமிழக கிராமபுரத்தில் உள்ள இசையை உலக அளவில் கொண்டு செல்வதே தனது இலக்கு என்று அவர் கூறினார். கொஞ்சம் கிராமிய மணம் கமழும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஐயர் கண்டியிலுள்ள திரைப்பட இசை ஒளிப்பதிவு மற்றும் படப்பிடிப்பு ஸ்டுடியோ வில் நடைபெற்ற விழாவில் திரைப்பட இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தமிழ் கலாச்சாரத்தை இசைவடிவில் உலகளாவிய வகையில் கொண்டு செல்லும் முயற்சியாக த என்ற இசை ஆசையை தனது பிறந்த நாளையொட்டி வெளியிட்டார்.. இதையடுத்து செய்தியாளர் பேசிய அவர் தற்போது நடைபெற்று வரும் விரும்பத்தகாத போர் போராட்டங்களால் இளைஞர்கள் மனதில் தவறான எண்ணங்கள் வேரூன்றி வருவதாகவும் இதிலிருந்து விடுபட இசை பேருதவி புரியும் என்றும் கூறியவர்…
Read More

ரஜினியின்’தர்பார்’ அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ஏர்டெல்.!

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் செயலியில் நேர்காணல்கள் மற்றும் திரைக்குப்பின்னால் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்கள் உட்பட ' தர்பார் திரைப்பட உள்ளடக்கத்திற்கு பிரத்யேக அணுகுவசதியை இது வழங்குகிறது • ஏர்டெல் ரீடெய்ல் ஸ்டோர்களில் குறுகிய பதிப்பாக ' தாபார் ' பிராண்டுடன் கூடிய சிம்கள் கிடைக்கப் பெறுகின்றன. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் செயலியில் அதிக அளவிலான இன்ட்ராக்டிவ் முறையிலான தர்பார் க்விஸ் ( வினாடி வினா ) செயல் திட்டத்தில் பங்கேற்பதன் மூலம் தர்பார் திரைப்பட டிக்கட்டுகளையும் மற்றும் தர்பார் திரைப்பட நட்சத்திரங்களையும் வாடிக்கையாளர்கள் வெல்லும் வாய்ப்பை பெறுவார்கள். ஒருங்கிணைக்கப்பட்ட தொலைத்தொடர்பு சேவைகள் துறையில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான பார்தி ஏர்டெல் " ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் ' தர்பார் திரைப்படத்துடனான ஒரு பிரத்யேக கூட்டு வகிப்பு செயல்பாட்டை அறிவித்திருக்கிறது . இந்த ஒத்துழைப்பு செயல்பாட்டின் ஒரு பகுதியாக தனது வாடிக்கையாளர்களுக்கு தர்பார் " திரைப்படத்தின் மீது வரம்பற்ற அபைவத்தை தரும் உறுதிமொழியோடு கிளர்ச்சியூட்டும்…
Read More
பச்சை விளக்கு இசை வெளியீட்டு விழா ! பாரதிராஜா, பாக்யராஜ் பாராட்டு !!

பச்சை விளக்கு இசை வெளியீட்டு விழா ! பாரதிராஜா, பாக்யராஜ் பாராட்டு !!

டிஜி திங் மீடியா பட நிறுவனம் சார்பில் டாக்டர் மாறன் கதாநாயகனாக நடித்து, இயக்கி இருக்கும் படம் 'பச்சை விளக்கு'.புதுமுகங்கள் தீசா, தாரா, 'அம்மணி' புகழ் ஸ்ரீ மகேஷ், மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, நந்தகுமார் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு 'வேதம் புதிது' தேவேந்திரன் இசை அமைத்திருக்கிறார்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பாரதிராஜா திரைப்படக் கல்லூரியில் நடைபெற்றது. விழாவில் மொரிஷியஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் கே.பாக்யராஜ், மதுரா பாலன், மலேசிய எழுத்தாளர் நெல்லையப்பன் நாயக்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்வில் இயக்குனர் பாரதிராஜா பேசும் போது, "இன்று மீடியா வளர்ந்துள்ளது. நாங்கள் படம் எடுத்த காலத்தில் இரண்டு மூன்று பேர் தான் கேமராக்களோடு வருவார்கள். இன்று மாறன் படத்திற்கு இத்தனை பேர் வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மாறனின் இந்தப்பச்சை விளக்குப் படம் அரசாங்கம் எடுக்க வேண்டிய படம்.…
Read More
மருத்துவக் கழிவுகள் பற்றிய படம் ‘கல்தா’.!

மருத்துவக் கழிவுகள் பற்றிய படம் ‘கல்தா’.!

மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'கல்தா'.ஹரி உத்ரா இயக்கத்தில், ஜெய் கிரிஷ் இசையமைப்பில், சிவநிஷாந்த், ஆண்டனி, அய்ரா, திவ்யா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.வெளிமாநிலத்திலிருந்து வரும் மருத்துவக் கழிவுகள், நம் தமிழ்நாட்டில் வந்து கொட்டப்படுவதால் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதைச் சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படம் பற்றி இயக்குநர் ஹரி உத்ரா கூறியதாவது, 'கல்தா'ங்கிறது வழக்கமா நம் வாழ்க்கையில் கையாளுற சொல்லாடல் தான். அரசியல்வாதிகள் தொடர்ச்சியா மக்களுக்கு கல்தா கொடுத்திட்டு இருக்காங்க. அதை அடிப்படையா கொண்டுதான் இந்த டைட்டில் வைத்தோம்.அரசியல் பழகு அப்படிங்கிறது தான் இந்தப்படம் சொல்லும் கருத்து. கமர்ஷியல் கலந்த இயல்பான படமா இதை உருவாக்கி இருக்கோம். நிஜத்தில் இங்க நடந்துட்டு இருக்குற சம்பவங்கள மையமா வச்சு இந்தப் படம் உருவாகியிருக்கு. எல்லோருக்கும் பிடிக்கிற வகையில் படம் இருக்கும். 'மேற்கு தொடர்ச்சி மலை' ஆண்டனி என்னுடைய நெடு நாள் நண்பர். நான் கதை…
Read More
அவனே ஸ்ரீமன் நாராயணா…அதிக திருப்பங்கள் நிறைந்த திரைப்படம். !

அவனே ஸ்ரீமன் நாராயணா…அதிக திருப்பங்கள் நிறைந்த திரைப்படம். !

அவனே ஸ்ரீமன் நாராயணா... திருப்பங்கள் நிறைந்த திரைப்படம். புஷ்கர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சச்சின் இயக்கத்தில் நாயகனாக ரக்ஷித் நாயகியாக சார்லி நடித்திருக்கிறார்கள்.முற்றிலும் கற்பனையான கதை என்றாலும் காட்சிகளைப் பார்க்கும்போது நம்ப முடியாத அளவுக்கு காட்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார் இயக்குனர்.அமராவதி எனும் ஒரு பழமையான வெகுதூரத்து கிராமத்தில், புதையல் ஒன்றுடன் தொடர்புடைய இன்றளவும் தீர்க்கமுடியாத, ஒரு மர்மத்தை தீர்க்கும் முயற்சியே இத்திரைப்படம்.அமராவதி கிராமத்தில் புதையல் இருப்பதாக ஒரு நாடக கோஷ்டி.ஒரு கொள்ளைக் கும்பல் என்று புதையலைத் தேடி புறப்படுகிறார்கள். இதற்கிடையில் அந்த ஊரில் இன்ஸ்பெக்டராக இருக்கும் ஸ்ரீமன் நாராயணாவும் கிளம்புகிறார்.இதற்கிடையில் அந்த நாடக கோஷ்டியிடம் புதையல் சிக்கியதை அறிந்து அவர்கள் 6 பேரில் 5 பேரை சுட்டுக் கொல்கிறது.பேண்டு வாசிக்கும் நபரைக் கூட்டிச் செல்கிறது கொள்ளை கோஷ்டி.அந்த தலைவன் மூச்சிறைப்பு நோயால் அவதிப்படும் போது வேலைக்காரிக்கு பிறந்த ஜெயராமன் அப்பாவைக் கொன்று விட்டு தான் தலைவராகிறான். சொந்த மகன் துக்காராம் கோபித்துக் கொண்டு…
Read More
ஆஹா.. அறுசுவை! உணவே மருந்து!!

ஆஹா.. அறுசுவை! உணவே மருந்து!!

சமைப்பது, ஒரு வகையில் தவம். மாங்காய்க் குழம்பு, பாயசம், பாகற்காய் பொரியல், வாழைப்பூ கூட்டு, கார வறுவல், வடுமாங்காய் என அன்றாட உணவில் அறுசுவையையும் படைத்து, ருசித்து மகிழ்ந்த காலம் ஒன்று உண்டு. ''நாம் உண்ணும் உணவில் தினசரி அறுசுவைகளும் சரியான அளவில் இருந்தாலே, எந்த நோயும் கிட்ட நெருங்காது!'' என்று கூறும் சித்த மருத்துவர் வீரபாபு, அறுசுவையின் அருமை பெருமைகளை விளக்குகிறார். ''சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கைப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு என்ற இந்த ஆறு சுவைகள்தான் உணவுக்கு அடிப்படை. நம் உடலில் உள்ள தாதுக்கள் சரிவர இயங்க இந்த அறுசுவையும் சரியாக இருக்க வேண்டும். இன்றோ, நம்மில் பலர், குறிப்பிட்ட சில சுவைகளைத் தொட்டுக்கூடப் பார்ப்பது இல்லை. தொடர்ந்து ஒரேவிதமான சுவையுடைய உணவை அதிகம் உண்பதும், ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகளுக்கு வழி வகுத்து விடும்'' என்கிற வீரபாபு, எந்தச் சுவையை, எப்படிச் சாப்பிடலாம்…
Read More
‘பிழை’ – பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இது ஒரு பாடம் !

‘பிழை’ – பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இது ஒரு பாடம் !

பெற்றோர்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று பாடம் சொல்லிக் கொடுக்கிறது இந்தப்படம் , அதே சமயம் குழாதை படித்தால் தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்கிற கருத்தை வலுவாகச் சொல்லியிருக்கிறார்கள்.நடிகர்கள் சார்லி , ஜார்ஜ் ,மைம்கோபி மூன்று பேருமே கல் உடைக்கும் தொழிலாளர்கள்.நாங்கள் தான் படிக்க வில்லை . குழந்தைகளாவது நன்றாகப் படுக்கட்டும் என்கிற எண்ணத்தில் அவர்களை படிக்க வைக்கிறார்கள். காக்கா முட்டை ராஜேஷ் தலைமையிலான 3 பேர் அடிக்கும் லூட்டி இடை வேளை வரைத் தொடருது. கதை எதை நோக்கி பயணிக்கிறது என்பதை இடைவேளை வரை கணிக்க முடியாதபடி இயக்குநர் கதையை நகர்த்தி இருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு அந்த ஊரைச் சேர்ந்த கதாநாயகன் ஊரை விட்டு காணாமல் போய் விட்டு உஊருக்குத் திரும்பியதைப் பார்த்து 3 நிறவா காடுக்கும் 13 சிறுவர்களுக்கும் இது போல பணம் சமாதிக்கணும் என்று முடிவு செய்து வீட்டை விட்டு ஓடுகிறார்கள் . அந்த…
Read More
திரையரங்கில் ஓடும்போதே ஹாட்ஸ்டாரில் ‘கைதி’ ? காரணம் என்ன?

திரையரங்கில் ஓடும்போதே ஹாட்ஸ்டாரில் ‘கைதி’ ? காரணம் என்ன?

கைதி திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்போதே ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களிலும் வெளியாகியுள்ளது தமிழ்த் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், மூன்றாவது வாரத்திற்கு மேல் தங்களுக்கு பெரிதாக வருவாய் வருவதில்லை என்பதில்லை என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.கார்த்தி நடித்து தீபாவளி தினத்தன்று வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதால் ஒரு மாதம் கழிந்த நிலையிலும், தற்போதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தப் படம் சில நாட்களுக்கு முன்பாக ஹாட் ஸ்டார் ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியானது.படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே, ஹாட் ஸ்டாரில் வெளியானதற்கு பல திரையரங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன. சென்னையில் உள்ள ரோஹினி திரையரங்கின் நிர்வாகியான நிகிலேஷ், "கைதி திரைப்படம் வெளியாகி 30வது நாளன்றுகூட இரண்டு காட்சிகள் முழுமையாக நிரம்பின. ஆனால், தற்போது படம் ஆன்லைனில் வெளியாகியிருக்கிறது. இதனால், உடனடி பாதிப்பு இருக்காது என்றாலும்கூட, மிக அபாயகரமான முன்னுதாரணம்" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இந்தியில் பேச வற்புறுத்திய நபர், 'தமிழில் பேசலாமா'…
Read More
பஞ்சபூத கதாபாத்திரங்களுடன் ‘பஞ்சராக்ஷரம்’ !

பஞ்சபூத கதாபாத்திரங்களுடன் ‘பஞ்சராக்ஷரம்’ !

பேரடாக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், பாலாஜி வைரமுத்து இயக்கத்தில், கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைப்பில், சந்தோஷ் பிரதாப், அஷ்வின் ஜெரோம், கோகுல், மது ஷாலினி, சனா அல்டாப் மற்றும் பலர் நடிக்கும் படம் 'பஞ்சராக்ஷரம்'.இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் வைரமுத்து பேசும்போது,"நான் தயாரிக்கும் முதல் படம் இது. என் மகன் இயக்குநராக ஆக வேண்டும் என்பதற்காகவே இந்தப் படத்தை எடுத்துள்ளேன்," என்றார். பாடலாசிரியர் ஜிகேபி பேசுகையில்,என்னை வெளிகாட்டுவதை நான் விரும்புவதில்லை. 'வாயாடி பெத்த புள்ளை' மாதிரியான பாடல்களை எளிமையாக எழுதிவிடுவேன். ஆனால், கர்மா, அண்டம் பற்றியான படத்திற்கு பாடல்கள் எழுதுவது சவாலாக இருந்தது. இசையமைப்பாளர் சுமோ எனக்கு ஒரு நோட்ஸ் அனுப்பியிருந்தார். பொதுவாகவே நான் பாடல்கள் எழுதுவதாக இருந்தால் மிகவும் ஆழமாக சிந்தித்து நேரம் எடுத்து எழுதுவேன். ஆனால், அந்த இசையைக் கேட்டவுடன் பாடல் வரிகள் சரளமாக வந்தது. அதை நேரடியாக பாலாஜிக்கு அனுப்பினேன்.…
Read More