சினிமா

விவசாயிகளுக்கு நடிகர் விஜய் சேதுபதி கட்டித் தந்த கட்டடம் !

விவசாயிகளுக்கு நடிகர் விஜய் சேதுபதி கட்டித் தந்த கட்டடம் !

விஜய்சேதுபதி புரொடக்சன், 7Cஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் 'லாபம்'.விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.இப்படத்தின் படப்பிடிப்பிற்காக விவசாயிகள் சங்க கட்டடம் ஒன்று தேவைப்பட்டுள்ளது. விஜய்சேதுபதி அந்தக் கட்டடத்தை செட்டாகப் போடாமல் உண்மையான கட்டடமாகவே கட்டச்சொல்லி இருக்கிறார். படப்பிடிப்பு முடிந்ததும் அந்தக் கட்டடத்தை அந்த ஊர் மக்களுக்கே கொடுக்கச் சொல்லி இருக்கிறார் விஜய்சேதுபதி. அந்த ஊரில் லாபம் படப்பிடிப்பு நடந்ததால் தங்களுக்கும் லாபம் என ஊர் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.படம் பற்றி இயக்குனர் ஜனநாதன் கூறுகையில்,"என் படத்தின் டைட்டில் லாபம் என்றதும் பலரும் ஆச்சர்யமாகக் கேட்கிறார்கள். இந்தப் படம் யாருக்கு லாபம் என்பதையும் எது லாபம் என்பதையும் பேசும்.இந்தியாவின் மிகப் பெரிய பொருளாதாரமே விவசாய உற்பத்தி தான். நம்மிடம் இருந்த விவசாய நிலங்களும் அதில் விளைந்த விளைச்சலும் தான் பிரிட்டிஷ் காரன் கண்களை உறுத்தியது.நமது விவசாய நிலங்களையும் அதன் மூலமாக வந்த வளங்களையும் கொள்ளையடிக்கத்தான்…
Read More
மல்டி மீடியா மாணவர்களுக்கு மவுசு! படித்து கொண்டிருக்கும் போதே வேலை!!

மல்டி மீடியா மாணவர்களுக்கு மவுசு! படித்து கொண்டிருக்கும் போதே வேலை!!

எஞ்சினியரிங் உள்பட பல பெரிய படிப்புகளை படித்து விட்டு வேலையில்லாமல் லட்சக்கணக்கான இளைஞர்கள் இருக்கும் நிலையில், மல்டிமீடியா மாணவர்களுக்கு படித்துக் கொண்டிருக்கும் போதே வேலைவாய்ப்பு அவர்கள் இருக்கும் இடத்தை தேடி வருகின்றது சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மல்டிமீடியா மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்ய அமேசான் உள்பட பெரிய நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூவுக்கு அடுத்த மாதம் வரவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.அமேசான், டிசிஎஸ் போன்ற பெரிய கம்பெனிகளுக்கு மல்டிமீடியா மாணவர்கள், குறிப்பாக டிசைனிங் மாணவர்கள் அதிக அளவில் தேவைப்படுவதாகவும் அதனால் அந்த வேலைக்கு படித்துக் கொண்டிருக்கும் போதே பகுதிநேர ஊழியராக சேர்த்துக் கொள்ள இந்த நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூ ஒன்றை அடுத்த மாதம் நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது இதனை அடுத்து மல்டிமீடியா மாணவர்களுக்கு மவுசு அதிகரித்து உள்ளதால் அந்த படிப்பை படிக்க மாணவர்கள் அதிக ஆர்வம் கொள்கின்றனர். மல்டிமீடியா படிப்பிற்கு கொஞ்சம் அதிகம் செலவானாலும் படித்து முடித்தவுடன் அல்லது படித்துக் கொண்டிருக்கும்…
Read More
மீண்டும் வரும் அர்னால்டின்   Terminator Dark Fate (டெர்மினேட்டர் டார்க் ஃபேட்) !

மீண்டும் வரும் அர்னால்டின் Terminator Dark Fate (டெர்மினேட்டர் டார்க் ஃபேட்) !

உலகம் முழுதும் நவம்பர் 1 முதல் டெர்மினேட்டர் டார்க் ஃபேட் திரைப்படம் அர்னால்ட் நடிப்பில் வெளியாகிறது. இந்த Terminator படத்தொடருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆக்‌ஷன் படங்களின் வரலாற்றை மாற்றிய Terminator படம் மூலம்தான் ஹாலிவுட்டில் பிரபலமானார் Arnold Schwarzenegger. இன்றும் உலகில் பெரு வெற்றி பெற்று அதிக வசூல் குவித்த படங்களுல் Terminator முதல் பாகமும் இரண்டாம் பாகமும் நிலைத்து நிற்கிறது. இந்த இரண்டு பாகங்களையும் உலகப்புகழ் James Cameron இயக்கியிருந்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் கதையில் பங்காற்றி தயாரித்திருக்கும் இப்படத்தில் Terminator ஆக Arnold Schwarzenegger மீண்டும் நடித்துள்ளார். இந்தியாவில் இப்படத்தினை Fox Studios வெளியிடுகிறது. உலகளவில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள இப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பத்திரிகையாளர் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டு டிரெய்லரை வெளியிட்டு பேசிய போது, “ ரொம்ப சந்தோஷமாயிருக்கு. இவ்வளவு நாள் ஜிம்…
Read More
எப்பா.. இந்த ஆதித்யா வர்மா படத்தாலே எனக்கு ஏகப்பட்ட டென்ஷன் – விக்ரம் பேச்சு!

எப்பா.. இந்த ஆதித்யா வர்மா படத்தாலே எனக்கு ஏகப்பட்ட டென்ஷன் – விக்ரம் பேச்சு!

துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சத்யம் சினிமாஸில் இன்று நடைபெற்றது. தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ஆதித்ய வர்மா. தமிழ் திரையுலகில் மக்களின் உள்ளம் கவர்ந்த நடிகரான சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக கால் பதிக்கிறார். கிரி சாயா இயக்கிய இந்த படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பல நட்சத்திரங் கள் நடித்துள்ளனர். திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு இசை விழாவை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா பேசுகையில்,“ஆதித்ய வர்மா படப்பிடிப்பு தளத்தில், நடிகர் விக்ரம் ஒருபோதும் உச்ச நட்சத்திரம் போல நடந்து கொள்ளவில்லை.. பாசமிகு தந்தையாகவே திகழ்ந்தார். 2021-ம் ஆண்டில், விக்ரம் மற்றும் துருவ் இருவரும் இணைந்து நடித்து நம்மை மகிழ்விப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.” என்றார் ஒளிப்பதிவாளரான ரவி.கே.சந்திரன் பேசுகையில்,…
Read More
படிப்பு தான் முக்கியம் என்பார் அப்பா! தந்தையைப் பற்றி பாடகி எஸ்.பி. ஷைலஜா!!

படிப்பு தான் முக்கியம் என்பார் அப்பா! தந்தையைப் பற்றி பாடகி எஸ்.பி. ஷைலஜா!!

படிப்பு தான் முக்கியம் என்பார் அப்பா!தன் தந்தையைப் பற்றி, பாடகி, எஸ்.பி. ஷைலஜா: நாங்கள் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர்கள். அப்பா பெயர், சாம்பமூர்த்தி; ஹரிகதை சொல்வதில் வல்லவர். அம்மா, சகுந்தலா, குடும்பத் தலைவி, நன்றாக பாடுவார். என்னுடன் பிறந்தவர்கள், ஐந்து பெண்கள், இரண்டு ஆண்கள். 'ஸ்ரீபதி பண்டித்தாராஜுலா' என்ற பெயரில், எங்கள் வம்சத்தில் மகான் இருந்தார். அவர் பெயரை, எங்களின் இனிஷியலாக சேர்ப்பது வழக்கம்.அந்த வகையில் என் பெயர், எஸ்.பி.ஷைலஜா; அண்ணன் பெயர், எஸ்.பி.பாலசுப்ரமணியம். அப்பா ரொம்ப, 'ஜோவியல்!' ஆனால், படிப்பின் மீது அலாதி நம்பிக்கை கொண்டவர். புத்தகம் வாசிப்பது தான் அவரின் விருப்பம். அவர் போலவே, நானும், அண்ணனும் புத்தகங்களை விரும்பி படிப்போம்.அப்பா ரொம்ப மென்மையானவர்; எங்களைத் திட்டவே மாட்டார். அதிக சினிமா படங்களைப் பார்க்க மாட்டார். அப்பாவின் முதல் மனைவி இறந்து விட்டார். அவருக்கு, ஒரு பெண் குழந்தை. அதன் பிறகு, எங்கள் அம்மா சகுந்தலாவை, அப்பா திருமணம்…
Read More
கல்யாண விஷயத்தில், நான் எடுத்த முடிவு தவறு?நடிகை சீதா!

கல்யாண விஷயத்தில், நான் எடுத்த முடிவு தவறு?நடிகை சீதா!

மீண்டும் நடிக்க வந்தது பற்றி நடிகை சீதா: சென்னை தான் சொந்த ஊர். அப்பா, மோகன் பாபு, குணச்சித்திர நடிகர். புதிய பாதை படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே, அதன் இயக்குனர், பார்த்திபன் சாருடன் காதல் ஏற்பட்டு விட்டது. ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேறி, கல்யாணம் செய்து கொண்டேன். திருமணத்திற்கு பின் நடிப்பதில், பார்த்திபன் சாருக்கு பிடித்தம் இல்லை. அதனால், படங்களில் நடிக்க வாங்கிய, 'அட்வான்ஸ்' தொகையை திருப்பிக் கொடுத்தேன்.நான்கரை ஆண்டு களில், மூன்று மொழிகளில்,60 படங்களுக்கு மேல், கதாநாயகியாக நடித்திருந்தேன். ஏராளமான வாய்ப்புகள் வந்த நேரத்தில், அவற்றை வேண்டாம் என உதறி, திருமண வாழ்வில் புகுந்தேன். பெற்றோரை எதிர்த்து, நான் சென்ற இல்லற வாழ்க்கையில் நிறைய மனக் கசப்புகளையும், கஷ்டங்களையும் சந்தித்தேன். அப்போது தான், கல்யாண விஷயத்தில், நான் எடுத்த முடிவு தவறு என உணர்ந்தேன். திருமண பந்தத்திலிருந்து இருவரும் விலகி, சுமுகமாக விவாகரத்து பெற்றோம். அது போன்ற…
Read More
சென்னையில் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா சொகுசு கார்களுக்கான  ஒருங்கிணைந்த டீலர்ஷிப் ஷோரூம்!

சென்னையில் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா சொகுசு கார்களுக்கான ஒருங்கிணைந்த டீலர்ஷிப் ஷோரூம்!

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா, இந்திய சொகுசு கார் சந்தையில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது: சென்னையில் இந்நிறுவனம் சொகுசு கார்களுக்கான மிகப் பெரிய ஒருங்கிணைந்த டீலர்ஷிப் ஷோரூம் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது! சொகுசு கார் பிராண்டில், தொடர்ந்து 5 ஆண்டுகளாக 10,000 சொகுசு கார்களை உற்பத்தி செய்த ஒரே நிறுவனம் என்ற சாதனையை தக்க வைத்துள்ளது.மெர்சிடிஸ் பென்ஸ் – சுந்தரம் மோட்டார்ஸ் தற்போது தமிழ்நாட்டில் மிகப் பெரிய 3 எஸ் டீலர்ஷிப் [3S luxury car dealerships] நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.சுமார் 72 ஆயிரம் சதர அடி பரப்பளவில், மிகவும் விசாலமாக அதிநவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது | திறன் பயிற்சி பெற்ற 136 ஊழியர்கள் | 6 கார் பார்வைப்பகுதிகள் (car display) 63 சேவை தளங்கள் (service bays) | இந்த டீலர்ஷிப் 5 மாத காலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது | ஆண்டுக்கு 15 ஆயிரம் கார்களை சர்வீஸ் செய்யும் ஆற்றல், வசதிகளைக் கொண்டது.அதிநவீன…
Read More
தி.நகரில் 100 சிசிடிவி கேமராக்கள் ! காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.!

தி.நகரில் 100 சிசிடிவி கேமராக்கள் ! காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.!

தீபாவளி ஷாப்பிங் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் சென்னை தி.நகரில் 100 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தீபஒளி திருநாளை முன்னிட்டு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்து வருவதால் சென்னை தியாகராய நகர், காவல்துறையின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தியாகராய நகரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்ட சென்னை காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 100 கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.நகர் பகுதியில் 1,200 கேமராக்கள் ஏற்கனவே நிறுவப்பட்டு செயல்பாட்டில் உள்ளன என்றும் மேலும் 100 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அந்த எண்ணிக்கை 1,300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் தீபாவளி பண்டிகையின் போது தியாகராயநகர் பகுதியில் எந்த குற்றச்சம்பவங்களும் நடைபெறவில்லை என்று கூறிய அவர், இந்த ஆண்டும் குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.…
Read More
40 ஆண்டுகளுக்கு பின் நடிகைக்கு சம்பள பாக்கியை திருப்பி கொடுத்த தயாரிப்பாளர்!

40 ஆண்டுகளுக்கு பின் நடிகைக்கு சம்பள பாக்கியை திருப்பி கொடுத்த தயாரிப்பாளர்!

நடிகை ஊர்வசி சாரதா பழம்பெரும் நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் துலாபாரம், ஞான ஒளி, என்னைப்போல் ஒருவன், நினைத்ததை முடிப்பவன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.தயாரிப்பாளர் வி.வி.ஆண்டனி, 1979-ம் ஆண்டு புஷ்யராகம் என்ற பெயரில் மலையாளப்படம் ஒன்றை எடுத்துள்ளார். இந்த படம் வெளியாகி அவர்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. இந்த படத்தில் நடித்த நடிகை ஊர்வசி சாரதாவுக்கு பேசிய சம்பளத்தை கொடுக்காமல், குறிப்பிட்ட தொகையை மட்டுமே கொடுத்துள்ளார். அதன் பின் வி.வி.ஆண்டனி எடுத்த படங்கள் பெரிய அளவில்வெற்றியை பெறாத நிலையில், சாரதாவுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை அவரால் கொடுக்க முடியாமலே போய்விட்டது. 40 ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், வி.வி.ஆண்டனி தனது பிள்ளைகளின் பொருளாத நிலை உயர்ந்ததையடுத்து, சாராதாவுக்கு சம்பளபாக்கியை கொடுத்துவிட விரும்பியுள்ளார்.இந்நிலையில், நடிகை ஊர்வசி சாரதா, சினிமா விழா ஒன்றில் பங்கேற்பதற்காக கொச்சி டவுன் ஹாலுக்கு வருவதாக தயாரிப்பாளர்…
Read More
90 வயது தாத்தாவுக்கு சண்டை காட்சிகள் அமைப்பது மிகவும் சவாலாக உள்ளது ! பீட்டர் ஹெயின் சொன்ன ரகசியம்!!

90 வயது தாத்தாவுக்கு சண்டை காட்சிகள் அமைப்பது மிகவும் சவாலாக உள்ளது ! பீட்டர் ஹெயின் சொன்ன ரகசியம்!!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் முதல் பாகத்தின் இறுதியில் தப்பித்து போன சேனாபதி மீண்டும் வந்து இந்தியாவில் நடக்கும் ஊழல்வாதிகளுக்கு மரண பயம் காட்டுவார் என தெரிகிறது. இந்த படத்தில் சண்டை இயக்குநராக பணிபுரியும் பீட்டர் ஹெயின், 90 வயது தாத்தாவுக்கு சண்டை காட்சிகள் அமைப்பது மிகவும் சவாலாக உள்ளது என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 1996ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி வெளியான இந்தியன் படத்தில் சுதந்திர போராட்ட வீரர் மற்றும் வயதான தாத்தா என இரு கெட்டப்களிலும், சந்துரு என மகனாகவும் நடித்து கமலஹாசன் அசத்தியிருந்தார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்த படம் இன்றளவும் ஷங்கரின் சிறந்த படமாக விளங்குகிறது. ரஜினியை வைத்து சிவாஜி, எந்திரன் மற்றும் 2.0 என மூன்று பிரம்மாண்ட படங்களை ஷங்கர் கொடுத்தாலும், ஷங்கரின் ரசிகர்கள் இந்தியன் 2வையே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த…
Read More