போக்ஸ்வேகன் – ஸ்கோடா நிறுவனங்கள் இணைப்பு !

பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான, போக்ஸ்வேகன் குழுமம், அதன் மூன்று நிறுவனங்களையும் ஒன்றாக இணைத்து, ஒரே நிறுவனமாக மாற்றப் போவதாகவும், புதிய நிறுவனம், ‘ஸ்கோடா ஆட்டோ போக்ஸ்வேகன் இந்தியா’ என, அழைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

மேலும், இந்த இணைப்பு மற்றும் புதிய நிறுவனம் சம்பந்தமான அனைத்து அனுமதிகளையும், ஒழுங்குமுறை அமைப்புகளிடமிருந்து பெற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.‘போக்ஸ்வேகன் இந்தியா, போக்ஸ்வேகன் குழுமம் விற்பனை இந்தியா, ஸ்கோடா ஆட்டோ இந்தியா’ ஆகிய மூன்று நிறுவனங்களும் ஒன்றிணைகின்றன.தற்போது உள்நாட்டு சந்தையில் மிகக்குறைந்த பங்களிப்புடன் இருக்கும் போக்ஸ்வேகன் நிறுவனம், தன்னை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில், இந்த மூன்று கார் நிறுவனங்களையும் ஒன்றிணைக்கும் முடிவை எடுத்துள்ளது.

இணைக்கப்பட்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக குர்பிரதாப் போபராய் இருப்பார். போபராய், தற்போது போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருக்கிறார்.’இந்தியா 2.0’ எனும், 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தின்படி, இந்த இணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இதன் மூலம், 2025ல் சந்தையில், 5 சதவீத பங்கை கைப்பற்ற, இந்நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. தற்போது இது, 2 சதவீதமாக உள்ளது.

Related posts:

ஸ்ரீராம் கார்த்திக் நடிக்கும் 'மைலாஞ்சி' படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு!

லெஜண்ட்ரி இயக்குநர் ஜோஷி அடுத்து ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படத்தை உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் (UMF) மற்றும் ஐன்ஸ்டீன் மீடியா பேனரின் கீழ் இயக்க இருக்கிறார்....

கோழிப்பண்ணை செல்லதுரை -- விமர்சனம்.!

சரத்குமார்‍‍-அமிதாஷ் நடிக்கும் 'பரம்பொருள்' டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு !

'ஜென்ம நட்சத்திரம்' வெளியீட்டுக்கு முன்பே ஹிட்! ஊடக விமர்சனங்களும் முன்னோட்டக் காட்சிகளும் வரவேற்பை பெற்றுள்ளன!

ஷாருக்கான், மகேஷ் பாபு மற்றும் அர்ஜுன் தாஸ் குரல்களில் 'முஃபாசா: தி லயன் கிங்' திரைப்படம் ரசிகர்களின் இதயங்களை திருடி பாக்ஸ் ஆபிஸில் ஆட்சி செய்கிறது!

கலைஞானத்திற்கு வீடு வாங்கி கொடுத்த நடிகர் ரஜினிகாந்த் !