21
Oct
சட்டவிரோதமாக குட்கா விற்பனை செய்ய லஞ்சம் வாங்கிய விவகாரம், கொரோனா காலத்தில் உபகரணங்களை கொள்முதல் செய்ததுல முறைகேடுன்னு அதையும் தாண்டி இபபோ வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிச்ச வழக்குன்னு வசமாக சிக்கியிருக்காரு முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர். சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை மிக இழிவாக விமர்சனம் செய்தாருங்கிறதுக்காகவே விஜயபாஸ்கருக்கு 2013-ல் அமைச்சர் பதவியை கொடுத்தவர் ஜெயலலிதா. 2011-ல் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயே குவாரி தொழில், கல்வி நிறுவனங்கள் என சகலத்திலும் கால் பதித்துவிட்டார் விஜயபாஸ்கர். 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக ஜெயிச்சதும் சுகாதாரத்துறை அமைச்சரானார் விஜயபாஸ்கர். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 75 நாட்களும் அங்கேயே முகாமிட்டு சர்வ வல்லமை பொருந்திய சக்தியாக, சசிகலா தரப்பின் ஆகப் பெரும் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் விஜயபாஸ்கர். சசிகலா தரப்பில் செல்வாக்கு தாம் உட்பட மூத்த அமைச்சர்கள் யாரும் ஜெயலலிதாவை பார்த்துவிடக் கூடாது என விஜயபாஸ்கரும் அவரது ஆதரவாளர்களும் தடுத்தனர்…
