11
Sep
Screen Scene Media Entertainment PVT.LTD தயாரிப்பில், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள, ஹாரர் காமெடி திரைப்படம் “இடியட்”. ‘தில்லுக்கு துட்டு’ இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து, ஹாரர் காமெடி பாணியில், மீண்டும் கலக்கல் கமர்ஷியல் மசாலா திரைப்படமாக, இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ராம்பாலா. விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, படம் குறித்தான அனுபவங்களை பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வில் ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜி பேசியதாவது.., இப்படம் முழுதுமே மிக வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படத்திலும் உங்களுக்கு அந்த அனுபவம் கிடைக்கும். எனக்கு வாய்ப்பளித்ததற்கு ராம்பாலாவுக்கு நன்றி. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி என்றார். இசையமைப்பாளர் விக்ரம் செல்வா பேசியதாவது... ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் போதே ராம்பாலாவை சந்தித்து வாய்ப்பு கேட்டிருந்தேன். அவர் ஞாபகம் வைத்து இந்தப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்தார். இந்தபடத்தில்…
