செல்போன் டவர் வைக்க 80 லட்சம் அட்வான்ஸ்! மாசம் 50,000 வாடகை! உஷார்!!

இணையதளம் முழுக்கவே வோடோபோன், ஏர்டெல் நெட்வொர்க் தனது சேவையைத் தொடர முடியாமல் தத்தளித்து வருகிறது என்று செய்திகள் வாட்ஸ்-அப், ட்விட்டர் என்று வலம் வந்துக் கொண்டிருக்கிறது.
92,000 கோடி ரூபாய் பாக்கித் தொகையை அரசுக்கு செலுத்த வேண்டும் என்று அதிரடியாக வசூல் வேட்டையில் இறங்கியிருக்கும் நிலையில், இந்த செல்போன் நிறுவனங்கள் விழி பிதுங்கி நிற்கின்றன. ஒவ்வொரு மாதமும் ஒரு நெட்வொர்க் சேவைக்கு மாறி வரும் அளவிற்கு செல்போன் பயனாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், பேராசையுடன் காத்திருக்கும் நில உரிமையாளர்களுக்கு பொறி வைத்து ஏமாற்றுவதற்கு ஒரு கும்பல் வலம் வந்துக் கொண்டிருக்கிறது.

பிரபல செல்போன் நிறுவனங்களின் டவர் வைப்பதற்கு ஒன்றிலிருந்து, ஒன்றரை செண்ட் வரையில் நிலம் தேவைப்படுகிறது. காலி இடமாக இருந்தாலும் சரி, அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும் சரி. அபார்ட்மெண்ட்டாக இருந்தால், குடியிருப்பவர்கள் அத்தனைப் பேரும் வாடகையைப் பகிர்ந்துக் கொள்ளலாம் என்று ஆசை வார்த்தைகளைச் சொல்லி வலை விரிக்கிறார்கள்.

குறைந்தது 15லிருந்து 20 வருஷம் வரையில் ஒப்பந்தம். ரெண்டு வருஷத்துக்கு ஒருமுறை வாடகையை ஏற்றி தருவோம் என்று பேசும் இவர்கள், அட்வான்ஸ் தொகையாக 80 லட்சமும், மாத வாடகையாக 50,000 ரூபாயும் தருவதாக அதிர வைக்கிறார்கள். இத்தனைக்கும் உங்களோட காலி இடம் தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் பரவாயில்லை.. அந்த இடத்தோட பத்திரம், ஆதார் கார்ட் ஜெராக்ஸ், போட்டோ மட்டும் கொடுத்தீங்கன்னா ரெண்டே வாரத்துல உங்களோட பெயருக்கு அக்ரிமெண்ட் போட்டுட்டு, அட்வான்ஸ் தொகையைக் கொடுத்திடுவோம் என்கிற ரீதியில் அந்த கும்பல் செயல்பட்டு வருகிறது. பொதுமக்களே உஷார்!! தேவையில்லாம இப்படி வலை விரிக்கிறவங்க கிட்ட ஏமாந்து நிற்காதீங்க..!

Related posts:

தொழில் மற்றும் கல்வி இணைப்பை வலுப்படுத்தும் வகையில் ‘Industry–Academia Leadership Roundtable 2026’ நிகழ்வை நடத்திய ஜேப்பியார் பல்கலைக்கழகம்!

ஜிடிஎன் படத்தில் இருந்து வெளியாகியுள்ள முதல் பார்வை போஸ்டரில் 'இந்தியாவின் எடிசன்' ஆக நடிகர் மாதவனின் மாற்றம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது!

கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தொழில் அதிபர் ஏ.எம். கோபாலன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது...

*ஹர்ஷ் மற்றும் சந்தனா தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்வை கோலாகலமாக நடத்திய லால்வானி குடும்பம்!

*நடிகர் அஜித் குமாரின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது!*

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து வழங்கும். புதிய திரைப்படம் !..

தளபதி விஜய்யின் 'கோட்' திரைப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகிறது, புதிய போஸ்டர் வெளியிட்ட படக்குழுவினர். !

நில உச்சவரம்பு சட்டப்படி 16ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்க கூடாது ? கூடுதல் நிலம் அரசால் கையகப்படுத்தப்படும். ?