27
May
திடீர்ன்னு டெல்லிக்குப் பறந்த "தங்கம் தென்னரசு ! ஸ்டாலின் தந்த முக்கிய டாஸ்க் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லி புறப்பட்டுச்சென்றுள்ளார். முக்கியமான 2 திட்டங்களை மனதில் வைத்து இவர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். என்கிறார்கள். தமிழகத்தில் மக்களுக்கு தடுப்பூசி போடுவது தற்போது அதிகரித்து உள்ளது. தினமும் தடுப்பூசி போடப்படும் மக்களின் எண்ணிக்கை 2.1/2 லட்சத்தை தாண்டி உள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 5 லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலேயே தடுப்பூசி தயாரிக்கும் திட்டத்தில் தமிழக அரசு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்துள்ள மத்திய அரசின் ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு மையத்தை.. தமிழக அரசுக்கு குத்தகைக்கு தர வேண்டும்.. பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருக்கிறார். இதன் ஒரு கட்டமாகவே முதல்வர் ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின்…
