அரசியல்

சாத்தியமாகுமா அதிமுக – அமமுக இணைப்பு?

சாத்தியமாகுமா அதிமுக – அமமுக இணைப்பு?

சாத்தியமாகுமா அதிமுக - அமமுக இணைப்பு? எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக), அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) இணைப்பு சாத்தியமாகுமா என்ற கேள்வி தமிழக அரசியல் அரங்கில் எழுந்துள்ளது. தமிழக தேர்தல் களத்தில், குறிப்பாக காவிரி டெல்டா, தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் (பிறமலைக் கள்ளர், மறவர், அகமுடையார்) வாக்கு வங்கி கடந்த பல தேர்தல்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாகவே இருந்து வந்திருக்கிறது. திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 50 முதல் 60 தொகுதிகளில் முக்குலத்தோர் வாக்குகள் வெற்றி-தோல்வியை நிர்ணயம் செய்யும் அளவுக்கு அடர்த்தியாக உள்ளன. தமிழகத்தில் பார்வர்டு பிளாக் கட்சி யை வழிநடத்திய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1957-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் 1.3 சதவீத வாக்குகளையும், 1984-ஆம் ஆண்டு…
Read More
எப்படி இருந்த தேமுதிக… தப்புத் தப்பா கணக்குப் போட்டு. .. இப்படி திக்கு திசை தெரியாம போயிருச்சே!

எப்படி இருந்த தேமுதிக… தப்புத் தப்பா கணக்குப் போட்டு. .. இப்படி திக்கு திசை தெரியாம போயிருச்சே!

எப்படி இருந்த தேமுதிக... தப்புத் தப்பா கணக்குப் போட்டு. .. இப்படி திக்கு திசை தெரியாம போயிருச்சே! தனித்து போட்டியிட்டு தங்களை நிரூபித்த தேமுதிக இன்று தானாக போய் போய் ஒரு கட்சியுடன் ஒட்டிக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வேதனை அளித்தாலும் இதற்கு விஜயகாந்தின் பொறுமையின்மையும் சுற்றத்தாரின் தலையீடே காரணம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். கேப்டன் விஜயகாந்த் என்றால் பாகிஸ்தான் தீவிரவாதிகளை பறந்து பறந்து பந்தாடுபவர். அரசியல்வாதிகளை தட்டி கேட்கும் நல்ல காவல் துறை அதிகாரி, எந்த சூழலிலும் தவறுக்கு துணை போகாதவர், அனைவருக்கும் உதவுபவர் என திரைப்படங்களில் பார்த்து பார்த்து நம் மக்கள் பழகிவிட்டார்கள். திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் கேப்டன் எல்லாருக்கும் உதவி செய்பவர்தான். இது போன்ற கேப்டனின் உண்மையான முகத்திற்குதான் அவர் கட்சி தொடங்கியதுமே மக்கள் ஆதரவு அளிக்க தொடங்கினார்கள். போட்டியிட்டவுடன் இரண்டு இலக்க சதவீதத்தில் ஓட்டு வாங்கியவுடன் பல ஆண்டுகளாக அரசியல் செய்து வந்த ஜெயலலிதாவும், கருணாநிதியும்…
Read More
ராகவேந்திரா கல்யாண மண்டப சொத்துவரி மர்மங்கள்?

ராகவேந்திரா கல்யாண மண்டப சொத்துவரி மர்மங்கள்?

லாக் டவுன் காலத்தில் தன் கல்யாண மண்டபத்துக்கு வருமானம் இல்லை என்பதால் சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என்று ரஜனி நீதிமன்றத்தை நாடினார்.இதுல என்ன தப்பு இருக்கு ? ஓங்கி உதைத்து அனுப்பாத குறையாக, இத்தோட ஓடிப்போயிடு... இல்லேன்னா ஃபைன் போட்டுடுவேன் என்று நீதிமன்றம் விரட்டி விட்டது. இது எல்லாருக்கும் தெரிந்த கதை. அவர் கேட்டதில் என்ன தவறு? ஆம்னி பஸ்காரர்களும்கூட வரி தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்கிறார்களே? ரஜனிக்கு சொத்துவரி தள்ளுபடி அல்லது சலுகை கொடுத்தால், அது மற்ற எல்லாருக்கும்கூட தள்ளுபடி கிடைக்குமே? இப்படியெல்லாம் சில கேள்விகள். கேள்வி கேட்பவர்களில் பலர் அப்பாவிகள். சிலர் குழப்பவாதிகள். அது இருக்கட்டும். இந்த வாதம் ஏன் செல்லாது என்பதை எளிமையான மொழியில் பார்ப்போம். சொத்துவரி என்பது வேறு, வருமான வரி அல்லது சேவை வரி என்பது வேறு. கல்யாண மண்டபம் வாடகைக்கு விடப்படுகிறது. அதன் மூலம் வருமானம் கிடைக்கிறது. அந்த…
Read More
’’உங்களுக்கு பாசிடிவ்’’ என்று சொன்னால் சொன்னது தான்!

’’உங்களுக்கு பாசிடிவ்’’ என்று சொன்னால் சொன்னது தான்!

ஆள் தூக்கும் அரசியல் மாபாதகங்கள், சதிச் செயல்கள்…போன்றவற்றை பயங்கரவாத இயக்கங்கள் அல்லது பாசிஸ அரசுகள் செய்வதை கேள்விப்பட்டுள்ளோம்! ஆனால், ஜனநாயகத்திற்கு பேர் போன இந்தியா போன்ற அதுவும் அமைதி பூங்கா என்று வர்ணிக்கப்படும் தமிழ் நாட்டிலா? கொரோனாவைக் காரணம் காட்டி வீடுவீடாக வந்து அதட்டி,உருட்டி டெஸ்டுக்கு வா என்று நிர்பந்தித்து அழைத்துச் செல்லும் செய்திகளை முதலில் வடசென்னையில் நடந்தது. இதையடுத்து தமிழகத்தின் பல பகுதிகளிலுமிருந்து இது போன்ற செய்திகள் கடந்த ஒரு மாதமாக வந்தவண்ணம் உள்ளன! முதலில் தனியார் மருத்துவமனைகள் தான் டெஸ்ட்டுக்கு யாராவது வந்தாலே போதும் அவர்களுக்கு பாசிட்டிவ் என்று படுக்க வைத்து ’லம்ப்’பாக பணம் பார்த்தார்கள்! இதையடுத்து தான் அரசு மருத்துவமனைகளுக்காக ஆள்பிடிக்கும் அதிகேவலமான, அநீதியான அராஜகங்கள் நடந்து கொண்டுள்ளன! கொரானாவே இல்லாதவர்கள் கூட இவர்கள் செய்யும் அலப்பறையிலும் ஆஸ்பிட்டல் சூழல்களிலும் மரணித்து போவதும் நடக்கிறது! அப்படி மரணித்தவர்களை வீட்டார் பார்க்கவும் வழியின்றி புதைக்கப்படுவது கொடுமையிலும் கொடுமை! ’’உங்களுக்கு…
Read More
பிரசாந்த் கிஷோரை தொடர்ந்து மும்பையில் இருந்து ஜான் ஆரோக்கியசாமி  தமிழகத்திற்கு வர உள்ளார்.

பிரசாந்த் கிஷோரை தொடர்ந்து மும்பையில் இருந்து ஜான் ஆரோக்கியசாமி தமிழகத்திற்கு வர உள்ளார்.

இவர்களின் பணி என்ன? இது குறித்து தான் விரிவாக இந்த பதிவில் பார்க்கப் போறோம். பிரசாந்த் கிஷோரை தொடர்ந்து மும்பையில் இருந்து ஜான் ஆரோக்கியசாமி என்ற அரசியல் வியூக வகுப்பாளரும் தமிழகத்திற்கு வர உள்ளார். திருச்சியை பூர்வீகமாக கொண்ட ஜான் ஆரோக்கியசாமி வெளிநாடுகளில் உயர் பதவிகளில் இருந்து விட்டு இப்போது ''பெர்சனா டிஜிட்'' என்ற பெயரில் மும்பையில் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். அரசியல் கட்சிகள் என்னதான் மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என நடத்தினாலும் அதன் தாக்கம் 2 நாட்களுக்கு மேல் மக்களிடம் இருப்பதில்லை. இந்நிலையில் அரசியல் கட்சிகள் மக்களுக்காக ஆற்றும் பணிகளை, அவர்களுக்காக கொடுக்கும் குரல்களை முழு அளவில் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கின்றன. இதன் எதிரொலியாகவே அரசியல் கட்சிகள் மார்க்கெட்டிங் நிறுவனங்களை நாடத் தொடங்கியுள்ளன. கட்சிகளின் சக்திக்கேற்ப ஆலோசகர்கள் வைத்துக்கொள்ளப்படுகிறது. இதுவரை பிரசாந்த் கிஷோரை மட்டுமே அறிந்த தமிழக அரசியல்வாதிகள் இனி ஜான் ஆரோக்கியசாமி…
Read More
தீபாவளிக்கு ஒரு தமிழர் கூட மது அருந்தக் கூடாது ! பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் !!

தீபாவளிக்கு ஒரு தமிழர் கூட மது அருந்தக் கூடாது ! பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் !!

தீபாவளி பண்டிகையின்போது ஒரு தமிழர் கூட மது அருந்தக் கூடாது என்று மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக தஞ்சையில் அவர் அளித்த பேட்டியில், தீபாவளிக்கு ரூ.600 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்ததற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். தீபாவளி அன்று மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பது தவறானது. தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் இஸ்லாமிய பண்டிகைகளின்போது தமிழர்கள் மது அருந்தக் கூடாது' என்று கூறியுள்ளார்.
Read More
விஜய்-யின் அரசியல் பிரவேசம் எப்போது?

விஜய்-யின் அரசியல் பிரவேசம் எப்போது?

தமிழக அரசியல்களம் ரொம்பவே வித்தியாசமானது.முழு நேர அரசியல்வாதிகள் தவிர, திரையுல நட்சத்திரங்களும் இங்கு அவ்வப்போது படையெடுப்பதுண்டு. சுதந்திர போராட்ட காலம் தொட்டு தமிழக அரசியலில் நட்சத்திரப் படையெடுப்பு இருந்தாலும், எம்ஜிஆரின் விஸ்வரூப வளர்ச்சிக்குப் பின்னர்தான் இதன் வேகம் அதிகமானது.எம்ஜிஆரின் புகழுக்கு சினிமா கவர்ச்சி ஒரு முக்கிய காரணம் என்றபோதிலும் அவரது நீண்டகால அரசியல் தொடர்பும், நடவடிக்கைகளும் வெற்றிக்கு அடித்தளமிட்டது மறுக்க முடியாத உண்மை.இதைப் புரிந்துகொள்ளாமல் எம்ஜிஆரை பார்த்து சூடுபோட்ட 'நட்சத்திர பூனைகள்' அநேகம் உண்டு.சிவாஜி, பாக்கியராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார், கார்த்திக் என இந்த பட்டியல் நீளும். இதில் விஜயகாந்த் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கானவர். தமிழக எதிர்க்கட்சித் தலைவர் என்கிற அளவிற்கு உயர்ந்தும், உடல்நலக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அடுத்தக்கட்டத்திற்கு அவரால் செல்ல இயலவில்லை. எதிர்கால முதல்வர் கனவில் மிதக்கும் நட்சத்திர பட்டியலில் நடிகர் விஜய்க்கு தனியிடம் உண்டு. ஆரம்பத்தில் பிளேபாய் வேடங்களில் நடித்துவந்த விஜய், பின்னர் மாறுபட்ட கதாபாத்திரங்களில் கவனம் ஈர்க்கத்…
Read More
மோடி – ஜின்பிங் சந்திப்பு ! மொழிபெயர்ப்பாளர் இந்தியர் மதுசுதன் ரவீந்திரன் !!

மோடி – ஜின்பிங் சந்திப்பு ! மொழிபெயர்ப்பாளர் இந்தியர் மதுசுதன் ரவீந்திரன் !!

சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு மகாபலிபுரத்தில் நடைபெற்று வருகிறது. மகாபலிபுரத்தில் அமைந்திருக்கும் சிற்பம் சுற்றுலா மையங்களைப் பார்வையிட்டபடி இருவரும் பேசி வருகின்றனர்.மோடி – ஜின்பிங் சந்திப்பு முறைசாரா சந்திப்பாக அமைந்துள்ளதால் இருநாட்டுத் தலைவர்களும் எந்தக் குறிப்புகளும் வைத்துக்கொள்ளாமலேயே உரையாடுவார்கள்.இந்தச் சந்திப்பின்போது மோடி மற்றும் சீன அதிபருடன் மேலும் இரண்டு பேர் உடனிருக்கின்றனர்.அதில் ஒருவர் சீனர். இன்னொருவர் இந்தியர்.மது சுதன் ரவீந்திரன் எனும் இந்திய அதிகாரி இரு தலைவர்களுக்குமான மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டு வருகிறார். மதுசுதன் சீன தலைநகர் பெய்ஜிங்கில் இருக்கும் இந்திய தூதரகத்தின் முதன்மை செயலர் (அரசியல்) ஆவார்.கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற மோடி – ஜின்பிங் சந்திப்பில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அங்கும் உடனிருந்தார் மதுசுதன்.தற்போதும் அவரே மோடி – ஜின்பிங் சந்திப்பின்போது மொழிபெயர்ப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். பின்னர் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு மீண்டும் பெய்ஜிங்கில் உள்ள…
Read More
மோடியை வரவேற்கும் ‘பேனர்’ வைக்க அ.தி.மு.க.,வுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி !

மோடியை வரவேற்கும் ‘பேனர்’ வைக்க அ.தி.மு.க.,வுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி !

பிரதமர் மோடியை வரவேற்று 'பேனர்' வைக்க அ.தி.மு.க. அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டி உள்ளது. அதேநேரத்தில் 'மீண்டும் தவறு செய்யாதீர்கள்' என அறிவுரை வழங்கியதுடன் 'டிஜிட்டல் பேனர்கள் பதாகைகள் வைப்பதற்கு சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை அரசு பின்பற்ற வேண்டும்' என்றும் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் சென்னையில் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மென்பொறியாளர் சுபஸ்ரீ நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது தண்ணீர் லாரி ஏறியதில் மரணம் அடைந்தார்.இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணையின் போது 'சட்டவிரோதமாக பேனர் வைக்க மாட்டோம் என அரசியல் கட்சிகள் உத்தரவாதம் அளிக்குமா' என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில் இந்தியா - சீனா இடையேயான வர்த்தக உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திக்க உள்ளனர். அக்.,…
Read More
சரியான வாய்ப்பு.. டிரம்பை வைத்து மோடி நகர்த்தும் காய்கள்.. ஹவுடி மோடிக்கு பின் அதிரடி திட்டம்!

சரியான வாய்ப்பு.. டிரம்பை வைத்து மோடி நகர்த்தும் காய்கள்.. ஹவுடி மோடிக்கு பின் அதிரடி திட்டம்!

டெக்ஸாஸ்: அமெரிக்காவில் நடக்க உள்ள ஹவுடி மோடி விழா பிரதமர் மோடிக்கு அரசியல் ரீதியாக பெரிய பலனை ஏற்படுத்தி கொடுக்க போகிறது என்று கூறுகிறார்கள். பலரும் எதிர்பார்க்கும் ஹவுடி மோடி விழா இன்று நடக்கிறது. அமெரிக்காவின் ஹவுஸ்டன் நகரத்தில் ஹவுடி மோடி விழா இன்று மாலை நடக்க உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடியுடன் சேர்த்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டெக்ஸாஸ் இந்தியா போரம் என்ற அமைப்பு மூலம் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோடி முதலில் இந்த விழாவில் மோடி மட்டுமே கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் கடைசியில் இதில் டிரம்பையும் கலந்து கொள்ள வைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் டிரம்ப் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி தரப்பில் கேட்கப்பட்டது. இதற்கு அமெரிக்க அதிபர் தரப்பு கொஞ்சமும் யோசிக்காமல் உடனே ஒப்புக்கொண்டது.
Read More