அரசியல்

யார் ஓட்டுப் போட்டாலும் போடாவிட்டாலும் நான் ஜெயிக்கப் போவது உறுதி! அண்ணாமலை சவால் !

யார் ஓட்டுப் போட்டாலும் போடாவிட்டாலும் நான் ஜெயிக்கப் போவது உறுதி! அண்ணாமலை சவால் !

பாஜகவின் எதிர்கால முதலமைச்சராக கருதப்படும் அண்ணாமலையை எப்படியாவது சட்டசபைக்குள் இடம் பெற வைக்க மத்திய பாஜக அரசு சாம,பேத,தான,தண்டங்களை பிரயோகித்து வருகிறது…! பிரதமரே அரவக்குறிச்சி மீது தனிப்பட்ட அக்கரை காட்டுகிறாராம்…! திமுகவை மிரட்டி, முடக்கி அரவக்குறிச்சியை அடித்து, தூக்கி எடுத்துவிட பாஜக அரசு முயற்சித்து வருகிறதாம். ‘’முதல்ல அண்ணாமலை ஓட்டுக் கேட்டு வந்தப்ப உண்மையிலேயே ஒரு காமெடிப் பீஸாத் தான் தெரிஞ்சார்..! அவரோட பேட்டிங்க, காணொலிங்க..எல்லாம் பாத்தபோது அப்படித்தான் தோணுச்சு..! ஆனா, இப்ப எங்களுக்கே கொஞ்சம் அபிராயம் மாறிடுச்சு..’’ இப்படிச் சொன்னவரு அரவக் குறிச்சியைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர். ‘’சார் பயங்கரமாக எலெக்‌ஷன் ஒர்க் பண்றார்! அவரு கூட பெரிய டீமே வர்றாங்க…தொகுதி பிரச்சினைகள் அனைத்தையும் எடுத்து எந்த இடத்துல எதைப் பேசணுமோ அதைப் பேசுறார். ஆறுகள் வற்றிக்கிடப்பது, தண்ணீர் பிரச்சினை, மணல் அள்ளி ஆற்றுப்படுகைகள் சூறையாடப்பட்டு இருப்பது, வேலை இல்லா திண்டாட்டம்..அதற்கு தோதாக தொழிற்சாலைகள் கொண்டு வர ஏற்பாடு செய்வதாகப்…
Read More

“புள்ளி” வச்ச சசிகலா.. “கோலம்” போட்ட திமுக.. சொல்லி அடிச்ச தினகரன்.. விக்கித்து பார்க்கும் அதிமுக!

எப்படி ரஜினி அரசியலுக்கு வராமலேயே ரிடையர் ஆகிவிட்டாரோ, அந்த மாதிரி சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள நிலையில் சாதித்து காட்டி உள்ளார்.. அதிமுகவுக்கு ஒரு பெரிய ஷாக்கை சசிகலாவின் அரசியல் விலகலின் தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. நேற்றைய தினம் எக்ஸிட் போல்கள் வெளியாகின.. அதில், பெரும்பாலும் திமுகவுக்கே சாதகமான கணிப்புகள் கூறப்பட்டுள்ளன.. இது ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், தென் மண்டலங்களில் யாருக்கு சாதகமான சூழல் அமைய போகிறது என்ற ஆவல் அதிகரித்தபடியே இருந்தது. இதற்கு 2 காரணம் உண்டு.. ஒன்று சசிகலா அரசியலில் இருந்து விலகியது.. மற்றொன்று, அமமுக துணிந்து களம் இறங்கியதுதான். சசிகலாவை பொறுத்தவரை 20 வருடம் ஜெ.வுடன் சேர்ந்து லாபி செய்தவர்.. அரசியல் ஞானம் தெரிந்தவர்.. அனுபவம் மிக்கவர்.. தன் சமூக வாக்குகளை அபரிமிதமாக அள்ளக்கூடிய திறன் படைத்தவர்.. இவ்வளவு சாணக்கியத்தனம் நிறைந்தவரை, விட்டுவிட வேண்டாம், இவர் மட்டும் உங்களுடன் இருந்தால் தென்மண்டலங்களை வாரிசுருட்டி கொண்டு வந்துவிடுவார்,…
Read More
அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் மிகப் பெரிய பதவிகளை அனுபவித்த ஓபிஎஸ், இன்று சொந்த கட்சியிலும்,தொகுதியிலும் அந்நியப்பட்டு நிற்கிறார். !

அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் மிகப் பெரிய பதவிகளை அனுபவித்த ஓபிஎஸ், இன்று சொந்த கட்சியிலும்,தொகுதியிலும் அந்நியப்பட்டு நிற்கிறார். !

பசுவைப் போல சாந்த சொரூபியாக காட்சி தருவார்!பணிவின் சிகரமாக வெளிப்படுவார் ! ஆனால், படு காரியவாதி! அவர் தான் ஓபிஎஸ்! பதவி ஒன்றே அவரது இலக்கு! பாஜக விசுவாசம் மட்டுமே அவரது குறிக்கோள்! இருபதாண்டுகளாக அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் மிகப் பெரிய பதவிகளை அனுபவித்த ஓபிஎஸ், இன்று சொந்த கட்சியிலும்,தொகுதியிலும் அந்நியப்பட்டு நிற்கிறார். பெரிய குளத்தில் தேனீர் கடையோடு, பைனான்ஸ் பிசினஸையும் பார்த்துக் கொண்டு, எம்ஜிஆர் இளைஞர் அணியில் செயல்பட்டு வந்த பேச்சிமுத்துவுக்கு பெயர்மாற்றம் செய்து கொண்டால், பெரிய வளர்ச்சி இருக்கும்னு ஒரு ஜோசியர் சொல்ல பன்னீர்செல்வமாக பெயர்மாற்றம் கண்டார். 1989 ம் ஆண்டு போடித் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்ட போது ஜெயலலிதாவிற்கு எதிராக ஜானகி அணி சார்பில் வெண்ணிற ஆடை நிர்மலா நின்றார். ஜெயலலிதாவோட தேர்தல் பணிகளை முன்னின்று செய்த சுலோச்சனா சம்பத் மற்றும் வளர்மதி ஆகியோருக்கு மிகவும் உதவிகரமாக இருந்தார்.பன்னீர்செல்வம். அதன் பிறகு 1991 ல் ஜெயலலிதாவின் பொதுக்…
Read More

திமுக வி.ஐ.பி.க்களை வளைக்கும் செய்தித்துறை அதிகாரிகள்

திமுக ஆட்சி அமைந்ததும் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும் திட்டங்கள் முன்னெடுக்க திமுக தலைமைத் திட்டமிட்டிருக்கிறது. அதற்கு வசதியாக, அதிமுக ஆட்சியில் ஓய்வுக்குப் பிறகும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு கோலோச்சும் அதிகாரிகள், அலுவலர்கள் பலரையும் வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தை கையிலெடுக்கவிருக்கிறது திமுக தலைமை. இதற்காக அனைத்து துறைகளிலும் சில பல புள்ளிவிபரங்களை தொகுத்து வருகின்றனர். முதல்வரின் சிறப்பு பணி அலுவலர் என்கிற பதவியில் இருக்கும் எழிலழகன், ஓய்வுப் பெற்று 7 வருடங்களாக அரசு பணியில் இருந்து வருகிறார். சிறப்புச் செயலாக்கத்துறையில் மக்கள் தொடர்பு அலுவலராக சச்சிதானந்தம் இருந்து வருகிறார். இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்று கடந்த 18 வருடங்களாக ஆகிறது. ஒய்வு பெற்ற பிறகு திமுக ஆட்சியில் 2 வருடங்கள் கோ-ஆப்டெக்ஸில் பணிபுரிந்த இவர், அதிமுக ஆட்சியில் நீண்ட வருடங்களாக இப்போதும் பணிபுரிந்து வருகிறார். அவர்க்கு தற்போது 75 வயதாகிறது. செய்தித்துறையின் துணை…
Read More
தேர்தல் முடிவுகளில் AIADMK போடும் கணக்கு!

தேர்தல் முடிவுகளில் AIADMK போடும் கணக்கு!

சட்டமன்ற தேர்தல் முடிவுகளை வெளியிடும் நாள் நெருங்க நெருங்க அதிமுகவினரின் கவலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6ஆம் தேதி ஒரேகட்டமாக நடந்து முடிந்தது. இதற்கான முடிவுகள் வரும் மே 2ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்படவுள்ளன. மற்ற கட்சிகளை விட அதிமுகவினருக்கு கூடுதலான எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதாவது 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்த நிலையில் வெற்றி கைநழுவி சென்றுவிடுமோ என்றும், அப்படிச் சென்றால் எதிர்க்கட்சி அந்தஸ்தாவது கிடைக்குமா என்றும் பதற்றம் தொற்றிக் கொண்டது. இன்று எக்ஸிட் போல் முடிவுகள் ஏனெனில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் இத்தகைய பயத்தை அதிமுகவினர் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது. பெரும்பாலான முடிவுகளில் திமுகவே ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்று இரவு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. இந்த முடிவுகள் எப்படியிருக்கும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. கவுரவமான வெற்றி முதல்வர் எடப்பாடி…
Read More
இன்று எக்சிட் போல் முடிவுகள்!

இன்று எக்சிட் போல் முடிவுகள்!

  தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி மேற்கு வங்கம், அஸ்ஸாம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக்கணிப்பான, ‘எக்சிட் போல்’ இன்று (ஏப்ரல் 29) இரவு 7.30 மணிக்கு வெளியாகிறது. தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் நடந்தத் தேர்தலில் எக்சிட் போல் முடிவுகளை பிரபல செய்தி நிறுவனங்கள் இன்று வெளியிட இருக்கின்றன. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி அடையும், திமுக கூட்டணி அல்லாத மற்ற கட்சிகள் 50 இடங்களுக்கும் குறைவாகவே பெறும் என்று திமுகவுக்கான தேர்தல் ஆலோசகராகப் பணியாற்றிய ஐபேக் பிரசாந்த் கிஷோர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்., கடந்த 2016ல் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இப்படித்தான் எக்சிட் போல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாகத் தான் இருந்தது. ஆனால் மக்கள் முடிவுகள் வேறு மாதிரி இருந்தன என்கிறார்கள் அதிமுகவினர். 2016 எக்சிட் போல் முடிவுகளும் மக்கள் முடிவுகளும்! 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் செய்தி நிறுவனங்கள்…
Read More
அதிமுகவின் மிகப்பெரிய தவறு.. திமுகவுக்கு “தீயாய்” உதவும் தினகரன்.. காரணம் இதுதான்!

அதிமுகவின் மிகப்பெரிய தவறு.. திமுகவுக்கு “தீயாய்” உதவும் தினகரன்.. காரணம் இதுதான்!

அதிமுக தெரிந்தே இந்த தவறை செய்துவிட்டதா? அல்லது திக்கு தெரியாமல் கூட்டணி வைத்து சிக்கி கொண்டு விட்டதா என்று தெரியவில்லை.. அதிமுகவின் வெற்றிக்கு அமமுக மிகப்பெரிய தடையாக உருவெடுத்துள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வந்துகொண்டிருக்கின்றன.. இதில் தொடர்ந்து நாம் கவனித்து வரும் விஷயம், அமமுகவின் வளர்ச்சிதான்.. அந்த வகையில், தென்மண்டலங்களின் பல இடங்களில் அதிமுகவுக்கு அமமுக ஒரு தலைவலியாக உருவெடுத்துள்ளது. இது அதிமுகவுக்கு சறுக்கலை தந்து திமுகவின் வெற்றிக்கு வழிவகுத்து வருகிறது. 2019 தேர்தலில் சில இடங்களிலேயே அமமுக இந்த அதிர்வை மறைமுகமாக ஏற்படுத்தியது.. அது எம்பி தேர்தல் என்பதால் அதன் வீரியம் அவ்வளவாக தெரியவில்லை.. இது சட்டமன்ற தேர்தல் என்பதால், ஒவ்வொன்றும் வெளிப்படையாகவே வாய்ப்பு உள்ளது. இதற்கு காரணம், டிடிவி தினகரன் தன் கட்சிக்கான அதே வாக்கு வங்கியை அப்படியே வைத்திருக்கிறார் என்பதும் உண்மை.. இந்த முறைகூட அமமுக அதிமுகவின் வாக்குகளை பெருமளவு பிரிக்கக்கூடிய சக்தியாக உருவெடுத்துள்ளது..…
Read More
பா.ஜ.வுக்கு கூஜா தூக்கும் தேர்தல் கமிஷன்

பா.ஜ.வுக்கு கூஜா தூக்கும் தேர்தல் கமிஷன்

காலங்காலமாக மத்தியில் ஆளும் அரசுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு எந்த அரசு ஆட்சி அமைத்தாலும் உண்டு. அதே போன்று இப்போது தேர்தல் ஆணையம் ஆளும் பா.ஜ.வுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக டுவிட்டரில் #EC_Cheats_India என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. இந்தியா என்பது மிகப்பெரிய ஜனநாய நாடு. ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய தேர்தல் ஆணையம் தான் தேர்தலை நடத்தி வருகிறது. சமீபத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றுள்ளது. இவற்றில் மேற்கு வங்கம் மட்டும் 8 கட்டங்களாக நடப்பதால் இன்னும் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் மீது தேசிய அளவில் உள்ள எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். குறிப்பாக தேர்தல் இயந்திரத்தில் முறைகேடு செய்யப்படுவதாக பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். சில ஊர்களில் நடந்த…
Read More
அமைச்சர்கள் தங்கமணி-எஸ்.பி.வேலுமணி மோதல்; இ.பி.எஸ்.ஸுக்கு இடியாப்பச் சிக்கல்…

அமைச்சர்கள் தங்கமணி-எஸ்.பி.வேலுமணி மோதல்; இ.பி.எஸ்.ஸுக்கு இடியாப்பச் சிக்கல்…

அமைச்சர்கள் தங்கமணி-எஸ்.பி.வேலுமணி மோதல்; இ.பி.எஸ்.ஸுக்கு இடியாப்பச் சிக்கல்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நான்காண்டு கால ஆட்சி வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பதற்கு இரண்டு பிரமுகர்கள்தான் காரணம். அவர்கள் இருவருமே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தங்கமான மணிகள்.. ஒருவர் எடப்பாடி பழனிசாமிக்கு உறவினரான, மின்சாரத்துறை அமைச்சர் பி. தங்கமணி..மற்றொருவர் கொங்கு மண்டலம் பெற்றெடுத்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. கட்சியிலும் சரி ஆட்சியிலும் சரி பணம் தொடர்பான பஞ்சாயத்துன்னா முன்னால் வந்து நின்று தீர்த்து வைப்பவர் எஸ்.பி.வேலுமணி. கட்சியிலும், ஆட்சியிலும் பதவி தொடர்பான பிரச்னைகள், துறை ரீதியான பிரச்னைகள் என்றால், பிரச்னைக்குரிய அமைச்சர்களுக்கும் முதல்வருக்கும் தூதுவராக இருந்து செயல்பட்டு வந்தவர் பி.தங்கமணி. அதிமுக.வுக்கும் முதல்வருக்கும் டெல்லியில் இருந்து நெருக்கடி வந்தால், பி.தங்கமணியும், எஸ்.பி.வேலுமணியும் இணைந்து அதை தீர்த்து வைப்பார்கள். இருவரின் தனிப்பட்ட முறையிலான டெல்லிப் பயணங்கள் மாபெரும் வெற்றியைத் தேடி தந்ததால், இரண்டு பேர் மீதும் அளவுக்கதிகமான நம்பிக்கை வைத்திருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.…
Read More
ரிசல்ட்டுக்குப் பிறகு அதிமுக தன் கைக்கு வருமா? ஜோதிடர்களுக்கு வலை வீசும் சசிகலா…

ரிசல்ட்டுக்குப் பிறகு அதிமுக தன் கைக்கு வருமா? ஜோதிடர்களுக்கு வலை வீசும் சசிகலா…

ரிசல்ட்டுக்குப் பிறகு அதிமுக தன் கைக்கு வருமா? ஜோதிடர்களுக்கு வலை வீசும் சசிகலா… மே 2 ஆம் தேதிக்குப் பிறகு அதிமுக ஆட்சி அமைக்குமா.?..திமுக ஆட்சி அமைக்குமான்னு இரண்டு கட்சித் தலைவர்களும் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறாங்க ?. அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என ஒரு பெரும் பட்டாளமே அண்ணா அறிவாலயத்திற்கு போக வேண்டியிருக்குமா.. ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்திற்கு போக வேண்டியிருக்குமான்னு குழம்பிப் போயிருக்காங்க.! இப்படிபட்ட சூழலில், மே 2 ஆம் தேதிக்குப் பிறகு அதிமுக தனது கைக்கு வருமா ? என்று சரியாக குறி பார்த்து சொல்ல, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சோதிடம் பார்த்த பிரபல சோதிடர்களை எல்லாம் வலை வீசி சசிகலா தேடிக் கொண்டிருப்பதாக தகவல் ஒன்று பரவி வருது. அப்படிபட்ட தகவலை மன்னார்குடி மைனர் பரப்பி வர்றதா சொல்றாங்க ! பெங்களுரில் இருந்து சென்னை வந்த கொஞ்ச நாட்களிலேயே இந்த தேர்தலில் அதிமுக நிச்சயம் தோற்கும் என்பதை…
Read More