முதல்வரை மட்டும் ஏன் “குறி” வைத்து தாக்குகிறார்.. தினகரன் திமுகவின் பி டீமா.. நக்கலடிக்கும் அதிமுக!

முதல்வரை மட்டும் ஏன் “குறி” வைத்து தாக்குகிறார்.. தினகரன் திமுகவின் பி டீமா.. நக்கலடிக்கும் அதிமுக!

சென்னை: அமமுக விளம்பரங்களை எல்லாம் பார்த்தால், வேறு தினுசாக தெரிவதாகவும், ஒருவேளை டிடிவி தினகரன், திமுகவின் B டீமா? இருக்குமோ என்ற சந்தேகங்கள் எழுந்து வருவதாக அதிமுகவினர் கேள்வி கேட்கின்றனர்.டிடிவி தினகரனை பொறுத்தவரை, சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கிய பின்னும் தனது அரசியல் பயணத்தை அமமுக மூலம் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.. பொது எதிரி திமுக என்கிறார்.

இனி திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் இருப்பதும் தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்பதுமே அமமுகவின் நோக்கம் என்றும் தொடர்ந்து பேசி வந்தார்.

சசிகலாவின் அறிக்கைக்கும் தனது அரசியல் பயணத்திற்கும் தொடர்பு இல்லையென தெளிவுபடுத்தி, பொது எதிரியான திமுகவை ஆட்சிக்கு அமைக்க விடாமல் இருப்பதே குறிக்கோள் என்றும் டிவிக்களில் பேட்டியும் அளித்தார்.

ஆனால் சமீபத்தில் அமமுக சார்பில் டிவியில் வரும் விளம்பரங்களை பார்த்தால் டிடிவியின் உள்நோக்கம் தெரிவதாகவும், அந்த அமமுகவின் விளம்பரங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மட்டும் விமர்சிக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள்..

அதுமட்டுமல்ல, ஓபிஎஸ்ஸையோ, மற்ற அதிமுகவினரையோ தாக்குவது போல எந்த சீனும் அந்த விளம்பரங்களில் அமைக்கப்படவில்லை… எனவே, திமுகவை வீழ்த்துவோம் என்று சொல்லி கொண்டிருந்த தினகரன், இப்போது ஏன் முதல்வரை மட்டும் குறிவைத்து தாக்குகிறார்? என்ற கேள்வியும் எழுகிறதாம்.

எனவே, மறைமுகமாக திமுகவிற்கு துணை நின்று அதிமுவை தோற்கடிக்க பார்க்கிறாரா? அல்லது திமுகவின் B டீம் தினகரன் தானா? என்கிற பல்வேறு கேள்விகள் சோஷியல் மீடியாவில் எழுந்து வருகின்றன.. தனது சித்தி கழகத்தின் ஆட்சி தொடர வேண்டும் என்று சொன்னபிறகும் தொடர்ந்து டிடிவி தினகரன் இதுபோல செய்து வருவது, திமுக ஆட்சிக்கு வர உதவுவதற்கு தானோ என்றும் அரசியல் நோக்கர்கள் தங்கள் சந்தேகத்தை முன்வைக்கின்றனர்.

ஏற்கனவே அதிமுக தேர்தலில் தோற்றால் அதற்கு முழு காரணம் அமமுக தான் என்று கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது எடப்பாடியை தாக்குவதன் மூலம் நேரடியாக திமுகவிற்கு ஆதரவு கொடுத்து வருகிறார் டிடிவி தினகரன் என்ற தகவலும் தீயாய் பரவி கொண்டிருக்கிறதாம்.