20 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றியை பறித்த அ.ம.மு.க.,

சட்டசபை தேர்தலில், அ.ம.மு.க., கடும் தோல்வியை சந்தித்த போதிலும், அக்கட்சி பெற்ற ஓட்டுகளால், 20 தொகுதிகளில், அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றி வாய்ப்பு பறிபோயுள்ளது.

அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட தினகரன், அ.ம.மு.க., என்ற கட்சியை துவக்கி, நடத்தி வருகிறார். இக்கட்சி, 2019 லோக்சபா தேர்தலில், சில முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டது. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஆனால், சில தொகுதிகளில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகளைப் பெற்றது.அதைத் தொடர்ந்து, சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., உட்பட, பல்வேறு கட்சிகளுடன் இணைந்து களம் இறங்கியது. லோக்சபா தேர்தலை போல, ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட்ட தினகரனும் தோல்வியை தழுவினார். பெரும்பாலான தொகுதிகளில், ஓட்டு சதவீதம் கணிசமாக குறைந்துள்ளது.

அதேநேரம், 20 தொகுதிகளில், அ.ம.மு.க., பெற்ற ஓட்டுகளால், அ.தி.மு.க., கூட்டணியின் வெற்றி பாதிக்கப்பட்டுள்ளது.

அதன் விபரம்:

*கடலுார் மாவட்டம், நெய்வேலி தொகுதியில், தி.மு.க., வேட்பாளர், 977 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த தொகுதியில், அ.ம.மு.க., வேட்பாளர், 2,230 ஓட்டுகளை பெற்றார்

* காட்பாடி தொகுதியில், தி.மு.க., வேட்பாளர், 748 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த தொகுதியில், அ.ம.மு.க., 1,040 ஓட்டுகளை பெற்றது

* விருத்தாசலம் தொகுதியில், காங்., வேட்பாளர், 862 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அங்கு, அ.ம.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற தே.மு.தி.க., 26 ஆயிரத்து, 908 ஓட்டுகளை பெற்றது

* காரைக்குடியில், காங்., வேட்பாளர், 21 ஆயிரத்து, 589 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அங்கு அ.ம.மு.க., 44 ஆயிரத்து, 864 ஓட்டுகளை பெற்றது

* நாங்குநேரி தொகுதியில், காங்கிரஸ், 15 ஆயிரத்து, 363 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அங்கு அ.ம.மு.க., 30 ஆயிரத்து, 596 ஓட்டுகளைப் பெற்றது

* ராஜபாளையத்தில், தி.மு.க., வேட்பாளர், 3,789 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, அ.ம.மு.க., 7,623 ஓட்டுகளைப் பெற்றது

* மயிலாடுதுறையில் காங்கிரஸ், 2,747 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அங்கு அ.ம.மு.க., 7,282 ஓட்டுகளை பெற்றது

* திருமயத்தில், தி.மு.க., 919 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அ.ம.மு.க., 1,426 ஓட்டுகளை பெற்றது

* கந்தர்வகோட்டையில், மா.கம்யூ., 12 ஆயிரத்து, 721 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அ.ம.மு.க., 12 ஆயிரத்து, 840 ஓட்டுகளைப் பெற்றது

* பாபநாசம் தொகுதியில், மனிதநேய மக்கள் கட்சி, 16 ஆயிரத்து, 273 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கு, அ.ம.மு.க., 19 ஆயிரத்து, 778 ஓட்டுகளை பெற்றுள்ளது

* மன்னார்குடியில் தி.மு.க., 37 ஆயிரத்து, 393 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அ.ம.மு.க., 40 ஆயிரத்து, 481 ஓட்டுகளைப் பெற்றது

* ஆண்டிப்பட்டியில், தி.மு.க., 8,538 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, அ.ம.மு.க., 11 ஆயிரத்து, 896 ஓட்டுகளைப் பெற்றது உத்திரமேரூரில், தி.மு.க., 1,622 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கு அ.ம.மு.க., 7,211 ஓட்டுகளைப் பெற்றது

* திருவாடானை தொகுதியில், காங்கிரஸ் கட்சி, 13 ஆயிரத்து, 316 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அ.ம.மு.க., 32 ஆயிரத்து, 74 ஓட்டுகளைப் பெற்றது\

* வாசுதேவநல்லுார் தொகுதியில், ம.தி.மு.க., 2,367 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, அ.ம.மு.க., 13 ஆயிரத்து, 376 ஓட்டுகளைப் பெற்றது

*சாத்துாரில், ம.தி.மு.க., 11 ஆயிரத்து, 179 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, அ.ம.மு.க., 32 ஆயிரத்து, 916 ஓட்டுகளைப் பெற்றது

* சங்கரன்கோவிலில், தி.மு.க., 5,354 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, அ.ம.மு.க., 22 ஆயிரத்து, 676 ஓட்டுகளைப் பெற்றது தென்காசியில் காங்கிரஸ், 370 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, அ.ம.மு.க., 9,944 ஓட்டுகளை பெற்றது

* திருப்போரூரில், வி.சி.க., 1,947 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, அ.ம.மு.க., 7,662 ஓட்டுகளை பெற்றது

சென்னை தி.நகரில், தி.மு.க., 137 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, அ.ம.மு.க.,782 ஓட்டுகளை பெற்றிருந்தது.

Related posts:

ஓபிஎஸ் மாஸ்டர் பிளான், கலக்கத்தில் ஈபிஎஸ்!
பத்மஷேசாத்ரின்னா பொங்குரீங்க ? வைரமுத்துன்னா ஏன் பம்முரீங்க கனிமொழி மேடம்னு சின்மயி கேள்வி கேட்டிருக்காங்க ?
திட்டம்போட்டு காய் நகர்த்தும் சசிகலா! தன்னையும் கட்சியையும் காப்பாற்ற தினகரனுடன் கைக்கோர்க்கத் தயாராகும் எடப்பாடி பழனிச்சாமி !
 திமுகவுடன் கை கோர்க்க தயாராகி வரும் தேமுதிக
தேர்தலில் யார் வெற்றிக்கு வேலை செய்தார் சுனில்?- அதிமுகவில் வெடிக்கப் போகும் பூகம்பம் ?
கொங்கு மண்டலத்தின் வெற்றி கவுண்டர்களின் வர்க்க அரசியலின் வெற்றி!
கனிமொழிக்கு தரப்படும் முக்கியமான டாஸ்க்.. திமுக பிளான்?
திமுகவில் ஓரங்கட்டப்படும் கனிமொழி ?அதிர்ச்சியில் அவரது ஆதரவாளர்கள்.?