தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் வளைகாப்பு பேச்சையும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டிவியா சமீபத்தில் செய்த செயல்பாடுகளையும் ஒப்பிட்டு இந்தியா முழுவதும் இதுதான் உங்கள் திராவிட ஸ்டாக்கான்னு கிண்டல் பண்ணிட்டு வர்றாங்க நெட்டிசன்ஸ்.
சமீபத்தில் உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த GST கூட்டத்தில் ஏன் கலந்துக்கலைங்கிற கேள்வியை தமிழக நிதி அமைச்சரிடம் கேட்க, நிகழ்ச்சி அழைப்பு லேட்டாக வந்ததாகவும், அதற்குள் வளைகாப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டியிருந்ததால கூட்டத்துக்கு போகலைன்னு சொல்லியிருந்தாரு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
GST கூட்டம்ங்கிறது 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு மாதிரி. முக்கியமான கூட்டம் இங்குதான் மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய நிலுவை தொகை, வரி வருவாய் பங்கீடு, வரி மாற்றம் எல்லாத்தையும் பேச முடியும் ஆனால் அதை விட்டுட்டு வளைகாப்பு முக்கியமான்னு நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப இந்தியா முழுவதும் திமுக அரசாங்கத்தின் செயல்பாடு கடும் விமர்சனத்தை உண்டாக்கிடுச்சு.
இந்த நிலையில் மத்திய சுகாதார துறை அமைச்சர் மாறு வேஷத்தில் போய் அரசு மருத்துவமனையை பார்வையிட்டதப் பத்தியும், அங்கு அவருக்கு நடந்த சம்பவத்தப்பத்தியும் பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது, இந்நிலையில் பாஜக அமைச்சர் செயல்பாடு, திமுக அமைச்சர் செயல்பாடு இரண்டையும் ஒப்பிட்டு எது சிறந்ததுன்னு நீங்களே முடிவு பண்ணுங்கன்னு பலரும் விமர்சனம் செஞ்சிட்டு வர்றாங்க.
49 வயதான மன்சுக் மாண்டவ்யா சமீபத்தில் மத்திய சுகாதார அமைச்சரானார். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளூர் டாக்டர் ஹர்ஷவர்தன் பிரபலமான மருத்துவர் & அரசியல்வாதி.அதனால எல்லாருக்கும் தெரியும்.. ஆனா, குஜராத்தை சேர்ந்த மாண்டவ்யாவை டில்லி மருத்துவமனைகள் பலவற்றுக்கு தெரியாது. சுகாதார துறை குறைகளை தெரிஞ்சிக்கிறதுக்காக, சாமானியனைப் போல, டில்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் பொது நோயாளி பிரிவுக்கு போயிருக்கிறாரு மாண்டவ்யா.
சஃப்தர்ஜங் மருத்துவமனை சென்ற மாண்டவ்யா, அங்கிருந்த பெஞ்சில் (bench) உக்காந்திருக்காரு. மருத்துவமனை காவலாளி அவரைத் திட்டுனதோட அங்கே உட்காரக் கூடாதுன்னு சொல்லி மாண்டவ்யாவை அடிச்சிருக்கிறார். பல நோயாளிகள் தங்களுக்கு தேவையான ஸ்ட்ரெட்சர் (stretcher) பெற முடியாமல அவதிப்பட்டதை பார்த்திருக்கிறாரு மாண்டவ்யா.
“1500 காவலாளிகள் (guard) இருக்கும் இந்த மருத்துவமனையில் ஏன் ஒருவர் கூட உதவி செய்ய மறுக்கிறீங்கன்னு?” மாண்டவ்யா காவலாளியிடம் கேட்டிருக்காரு ஆனா பதிலில்லை. இதை பிரதமருக்கு தெரிவிக்க, பிரதமரும் கோபப்பட்டு, “அந்த காவலாளி மீது நடவடிக்கை எடுத்தீங்களா?”ன்னு மாண்டவ்யாவை கேட்டிருக்கிறார்.மாண்டவ்யா பதிலுக்கு, “அமைப்பை மேம்படுத்த முயற்சிக்கிறேன் (trying to improve the system). தனி மனிதனை (காவலாளியை) அல்ல”ன்னே சொல்லியிருக்கிறாருங்கிறது பிரபல பத்திரிகையானINDIA TIMES
இப்படியும் ஒரு அமைச்சரா? ன்னு பத்திரிகையாளர்கள் புகழ் மாலை சூட, இப்படியும் ஒரு அமைச்சர் தன் மக்களை காக்க தன் அதிகாரத்தை துறந்து சாதாரண காவலளியிடம் அடி வாங்கி இருக்கிறார், அவர் நினைச்சிருந்தா 100 அதிகாரிகளோடப் போய் மேற்பார்வை பாத்திதிருக்க முடியும் ஆனால் உண்மையை அறிய தானே போயிருக்காரு.
ஆனால் தமிழக நிதி அமைச்சர் தியாகராஜனோ போகவேண்டிய இடத்துக்குக் கூட போகாம வளைகாப்பு இருக்குன்னு சாக்கு போக்கு சொல்லி தன்னோட மாநில மக்களின் எதிர்கால கனவில் மண்ணள்ளி போட்டுட்டாரு இப்படியும் ஒரு அமைச்சர் ன்னு நெட்டிசன்கள் மட்டுமல்லாமல் தீவிர இடதுசாரிய சிந்தனை கொண்ட பத்திரிகையாளர்களும் கேள்வி எழுப்பி வர்றாங்களாம். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் செயல்பாடு மூலம் கடுமையாக சிக்கியுள்ளார் பழனிவேல் தியாகராஜன். ஆனா இதுக்கு வேற காரணம் சொல்றாங்க.
எதிர்க்கட்சிகளால் டார்கெட் செய்யப்படும் பிடிஆர்..? காரணங்கள்.. என்னன்னு பாக்கலாம்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்தான் இப்போது சமூக வலைத்தளங்களில் டாப் டிரெண்டிங்ல இருக்காரு. முக்கியமாக ஜிஎஸ்டி கவுன்ஸில் கூட்டத்தில் இவர் கலந்துக்காமப் போனதுனால வரிசையா இவருக்கு எதிரா எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை வைச்சிகிட்டு வருது அதிமுக பாஜக போன்ற எதிர்க்கட்சிகள் அமைச்சர் பிடிஆரை தொடர்ந்து விமர்சனம் செய்து வருது. இன்னொரு பக்கம் பிடிஆரும் எதற்கும் சளைக்காமல.. நீங்கள் பேசுவதற்கு எல்லாம் நானும் பதிலடி கொடுப்பேன்னு ட்வீட்டரில் விளாசிக்கிடடு இருக்கிறாரு. இவர் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துக்காதது பத்தி இணையத்தில் சிலர் பொய்யான வதந்திகளை பரப்பினாங்க. அந்த வதந்திகளுக்கு பதில் அளிக்க தொடங்கியதில் இருந்துதான் பிடிஆர் ட்வீட்டரில் மீண்டும் டிரெண்டாகி வர்றாரு.
கொழுந்தியாள் வீட்டு வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழாவுக்குப் போகணும்ங்கிறதால ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துக்கலைன்னு அவருக்கு எதிரா வதந்திகள் பரபரப்பட்ட நிலையில் அனைத்திற்கும் எதிராக பிடிஆர் பதில் அளித்தார். சில இடங்கள்ல எதிர்க்கட்சிகளோட சாதாரண ட்வீட்டர் ஐடிகள் மட்டுமின்றி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக உறுப்பினர் காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலர் இப்படி தொடர்ந்து பிடிஆருக்கு எதிராக கடுமையாக கருத்து தெரிவிச்சிட்டு வர்றாங்க. இப்படி தொடர்ந்து எதிர்க்கட்சிகள் மூலமும், ஆளும் தரப்பிற்கு எதிரான கருத்து கொண்டவர்கள் மூலமும் பிடிஆர் டார்கெட் செய்யப்பட்டு வர்றாருன்னு சொல்றாங்க. இவர் செய்வதை எல்லாம் எதிர்க்கட்சிகள் தீவிரமாக வாட்ச் செய்து வருவதாகவே அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுது. பிடிஆர் இப்படி திடீரென சமூக வலைத்தளங்களில் டார்கெட் செய்யப்பட பல முக்கியமான காரணங்கள் இருப்பதாகச் சொல்லப்படுது அது என்னன்னு பாப்போம்.. முதல் காரணம், பிடிஆர் மற்ற அரசியல் தலைவர்கள் போல இல்லை. இவர் சட்டுனு கோபப்படுறாரு. அதை பொது வெளியிலயும் காட்டிவடுகிறாரு. அது தனது சொந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் சரி. தன் பக்கம் நியாயம்னு தெரிஞ்சா துணிச்சலா ட்வீட்டரில் பேசிடுறாரு. இதை கொஞ்சம் எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக்கிறாங்க.. கொஞ்சம் லேசாக இவருக்கு எதிராக விமர்சனம் வைத்தால் போதும் பிடிஆர் தானாக கோபப்பட்டு நிறைய ட்வீட்களை செய்து அதை பெரிதாக்கி விடுறார். இரண்டாவதாக மத்திய அரசை ஆதாரங்களோடு இவர் விமர்சனம் செய்கிறார். நிதித்துறையை கையில் வைச்சிருக்கிறதுனால ஜிஎஸ்டி தொடங்கி அனைத்து விஷயங்களையும் புள்ளி விவரங்களோடு பேசுறார். இதனால் இவரை தொடர்ந்து டார்கெட் செய்வதாக சொல்லப்படுது. தொடர்ந்து மத்திய அரசை இவர் சீண்டும் நிலையில் இதை மையமாக வைத்து பிடிஆரை இங்கு எதிர்க்கட்சிகள் விமர்சிச்சிட்டு வர்றாங்க. மத்திய அரசை இவர் விமர்சிக்க கூடாது.. பிடிஆரின் இமேஜை மாற்ற வேண்டும்ங்கிற திட்டத்தில் இப்படி எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை வைப்பதாக திமுக தரப்பினர் குற்றஞ்சாட்டு வைக்கிறாங்க. அதோடு பிடிஆர் தேசிய அளவில் பிரபலமாக இருப்பதால் அவருக்கு எதிராக இங்கே அதிகம் விமர்சனங்களை வைக்கிறார்கள்னு திமுககாரங்க குற்றஞ்சாட்டு வைக்கிறாங்க.. அவர் தேசிய அளவில் பிரபலமாக இருக்கிறார். திமுகவின் தேசிய முகம் போல ஊடகங்களில் பேசுறாரு. இதை விரும்பாத அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக கடுமையாக நெகட்டிவ் பிரச்சாரங்களைக் கையில் எடுத்திருக்காங்க. பிடிஆருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பக்காவா களமிறங்கி இருக்குதுன்னு அறிவாலய வட்டாரங்கள் சொல்லுது. மதித்து பதில் சொல்கிறார் அதோடு பிடிஆர் எல்லா ஐடிகளுக்கும் மதித்து பதில் அளிக்கிறார். பேக் ஐடியாக இருந்தாலும்.. உண்மையான ஐடியில் வந்து ட்வீட் செய் என்று சொல்லும் அளவிற்கு பிடிஆர் எல்லோரின் விமர்சனங்களுக்கும் சளைக்காமல் பதில் சொல்றார். இதை பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து அவரை சண்டைக்கு இழுத்து.. வாயில் இருந்து வார்த்தைகளை பிடுங்கி.. எப்படியாவது முடிந்த அளவு சர்ச்சைகளை உண்டாக்கும் வேலைகளும் நடப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுது. இதெல்லாம் போக மற்ற திமுக அமைச்சர்கள் நீண்ட காலம் அரசியலில் இருந்தவர்கள். அன்பில் மகேஷ், சேகர் பாபு, மா. சுப்பிரமணியன் போன்ற அமைச்சர்கள் எல்லாம் தங்களுக்கு எதிராக விமர்சனம் வைக்கப்பட்டால் அதிகபட்சம் ஒன்றிரண்டு முறை அதற்கு பதில் சொல்லிவிட்டு அதை கண்டுக்காம விடீடிர்றாங்க. அமைச்சர் மா. சுப்பிரமணியன் வேக்சின் விஷயத்தில் கோவை புறக்கணிக்கப்படுவதாக வந்த விமர்சனங்களை நேர்த்தியாக கையாண்டார். ஆனால் பிடிஆர் கொஞ்சம் பட்டென பேசுவதும், சமயங்களில் அவருக்கு எதிராக திரும்பி விடுகிறது. இவரோட சமீபத்திய பேச்சுக்கள் காரணமாக திமுக தரப்பு அதிருப்தியில் இருப்பதாக நேற்று தகவல்கள் வந்தது. பேட்டி ஒன்றில் கூட திமுக மூத்த உறுப்பினரும், ராஜ்ய சபா எம்பியுமான டிகேஎஸ் இளங்கோவன் பிடிஆரின் சமீபத்திய ட்வீட்கள் குறித்து விமர்சனம் செய்தார். அதில், பிடிஆர் எளிதில் கோபப்பட கூடிய நபர்.அவர் தன்னை கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொள்ளணும். நானும் அவரிடம் அதைத்தான் சொல்லி இருக்கிறேன். அவர் ஒரு அரசியல் தலைவருங்கூட. கொஞ்சம் கட்டுப்பாடு இருக்கணும்னு அவரிடம் சொல்லி இருக்கிறேன். முதல்வர் பிடிஆரிடம் பேசி இருப்பார்னு தான் நான் நினைக்கிறேன். முதல்வர் ஸ்டாலின் எல்லோரையும் கண்காணித்துக்கொண்டு இருக்கிறார் என்று குறிப்பிட்டார். அதாவது பிடிஆரின் பேச்சை தலைமை சரியாக எடுத்துக்கொள்வது இல்லை என்பது போல டிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம் வைத்து இருந்தார். பிடிஆர் இப்படி செய்ய வேண்டும் ஆனால் அதே சமயம் திமுக தரப்பில் பிடிஆரின் பேச்சை சிலர் ரசிப்பதாகவும் சொல்லப்படுது. தலைமை நிர்வாகிகள் சிலர்.. பிடிஆர் பேசுவதில் தவறு இல்லை. கட்சியில் மற்றவர்கள் மாதிரியே அவரும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவர் அடித்து ஆடுவதுதான் சரி. தேசிய அளவில் தற்போது இருக்கும் ஊடக டிரெண்டிற்கு இப்படி ஒருவர் பேசினால்தான் சரியாக இருக்கும். ட்வீட்டரில் திமுக வலுவாக இல்லை. பிடிஆர் போன்றவர்கள் இப்படி கொஞ்சம் வலுவாக பேசுவது நல்லதுதான்.. அப்போதுதான் சமாளிக்க முடியும் என்றும் திமுகவில் சிலர் கருதுகிறார்களாம். முன்பு கருணாநிதி முதல்வராக இருந்த போது சில அமைச்சர்கள் மட்டும் கொஞ்சம் அதிரடியாக பேசுவார்கள். விமர்சனங்களுக்கு கருணாநிதி நாசுக்காக பதில் சொல்வார். சில அமைச்சர்கள் அதிரடியாக பொறி பறக்க பேசுவார்கள். அப்படிதான் ஸ்டாலின் இப்போது நாசுக்காக பேசுறாரு. பிடிஆர் அதிரடியாக பேசும் பொறுப்பை எடுத்துக்கொண்டுள்ளார். மேலிடத்தின் கிரீன் சிக்னல் கிடைச்சதுனாலத்தான் அவர் இப்படி எல்லாம் அதிரடியா பதில் சொல்றாருன்னு கட்சி வட்டாரத்தில் பேசிக்கிறாங்க.