தமிழக அமைச்சரவையில் மாற்றம்…புதிய அமைச்சர்கள் பட்டியல்..?

திமுக ஆட்சி அமைத்தவுடன் ஆறு மாத காலம் முடிந்ததும் அமைச்சர்களின் செயல்பாடுகளை வைத்து அவர்களின் இலாகாக்களை மாற்றலாம் அல்லது புதிய அமைச்சர்கள் பட்டியலில் இடம் பெற வைக்கலாம்னு திமுக திட்டமிட்டிருந்தது. ஆரம்ப காலம் தொட்டு அமைச்சர்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து அவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கி வந்தது திமுக தலைமை.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும்னு சொல்லப்படுது. அந்தவகையில் அமைச்சரவையின் புதிய பட்டியலை மாற்ற இருப்பதாக திமுக மேல்மட்ட நிர்வாகிகளிடையே பேச்சுக்கள் வர ஆரம்பிச்சிருக்கு. அந்தப் பட்டியலில் திமுக சீனியர் அமைச்சரான ஐ.பெரியசாமி, ’’தான் எதிர்பார்த்த துறை தனக்கு கிடைக்கவில்லை’னு ரொம்பவே மன வருத்தத்தில் இருந்து வந்தார். ஸ்டாலினிடமும்  நேரடியாக எடுத்துச் சொல்லியிருந்தாரு. இந்நிலையில் செந்தில்பாலாஜியிடம் இருக்கிற மின்சாரத்துறையை கூட்டுறவு துறை அமைச்சராக உள்ள ஐ.பெரியசாமியிடம் கூடுதல் பொறுப்பாக குடுக்கப் போறாங்க.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையை மட்டுமே
அமைச்சர் செந்தில்பாலாஜி கவனிப்பார்னு சொல்றாங்க.

சீனியர் அமைச்சர் துரைமுருகனும், ’எனக்கு வேண்டிய துறைகள் கிடைக்கலைன்னு வருத்தப்பட்டுக்கிட்டே இருந்தாரு. இந்த நிலையில் ஏ.வ.வேலுவிடம் இருக்கும் பொதுப்பணித் துறையை கூடுதல் பொறுப்பாக துரைமுருகனிடம் ஒப்படைக்க முகஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுது. நெடுஞ்சாலைத் துறையை மட்டும் எ.வ,வேலு கவனிப்பாராம். பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து நிதித்துறையை எப்படியாவது  வாங்கிறணும்னு பலபேரு காய் நகர்த்தி கிட்டு வந்தாங்க ஆனா , பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மு.க.ஸ்டாலின் குட் புக்கில் இடம் பிடிச்சிருக்கிறதால் அவரது பதவி அவரிடமே இருக்கும்னு அடிச்சி சொல்றாங்க அவரோட விசுவாசிகள்.

இவரைப் போலவே இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் முதல்வரின் குட்புக்கில்  இடம்பிடிச்சிருக்கிறாரு. அதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒருத்தருக்கு கூட அமைச்சர் பதவி இல்லாததால் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த திமுக எம்எல்ஏ ஒருவர் அமைச்சராக கூடும்னு எதிர்பாக்கிறாங்க. சபாநாயகராக உள்ள அப்பாவு, அமைச்சராகலாம்னு எதிர்பார்க்கப்படுது. புதிய சபாநாயகராக கு.பிச்சாண்டி, துணை சபாநாயகராக சின்ன சேலத்தை சேர்ந்த உதயசூரியனும் இருப்பார்கள்ங்கிறாங்க. ஆனால் விசாரித்த வரையில் அப்பாவு அமைச்சர் ஆவதற்கு வாய்ப்புகள் மிகமிக குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே நாடார் சமூகத்தை சேர்ந்த மனோ தங்கராஜ், கீதா ஜீவன் ஆகியோர் அமைச்சராக இருப்பதால் அப்பாவுவுக்கு வாய்ப்பில்லைன்னு சொல்லப்படுது. அனிதா ராதாகிருஷ்ணன், மதி வேந்தன் ஆகியோர் செயல்பாடுகள் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது. இதனை உளவுத்துறை மூலம் முக ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் குடுத்திருக்காங்க. மனோ தங்கராஜ், துறை ஐ ஒண்ணு எடுத்து போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வழங்கலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.எல்லாம் உள்ளாட்சித் தேர்தல் முடிஞ்சா தான் தெரிய வரும்

ரிய வரும்