கவலைப்படாதீங்க”.. தைரியப்படுத்திய முதல்வர் !. பிடிஆரின் அதிரடி முடிவு !

“நான் யாருடன் நேரத்தை செலவிடணுங்கிறத முடிவுசெய்யணும். இனி நான், எளிய மக்களின் கேள்விகளுக்கு மட்டும் பதில் தருவேன்”னு இப்ப இருக்கிற குழப்பமான சூழ்நிலையில தன் மீதான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிடிஆர் ஒரு அதிரடி முடிவை அறித்துள்ளார்.

ஜிஎஸ்டி கூட்டத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பங்கேற்காதது குறித்த விவாதங்கள் சமீபகாலமாக சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளன.. இதற்கு பதிலடியாக பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் ஒரு கருத்தை வெளியிட்டாரு அதுவும் வழக்கம் போல பரபரபபாக்கப்பட்டுச்சு…

ஆனால் அதுக்கும் சலசலப்பு கிளம்புச்சு.. ஒருபக்கம் பாஜகவின் அண்ணாமலையும் அதிமுகவில் மாஜி அமைச்சர் ஜெயக்குமாரும் பிடிஆரை விமர்சித்து மாறி மாறி பேட்டிகளை தந்தாங்க.அதேசமயம், பிடிஆர் அளித்து வரும் பேட்டிகளும் பரபரப்பை கிளப்பி விடுறதால திமுகவுல தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டதா செய்திகள் கசிஞ்சது.. டிகேஎஸ் இளங்கோவனைப்
பத்தி பிடிஆர் சொன்ன கருத்தை வைச்சே அவருக்கு செக் வைக்கவும் திமுகவுக்குள் சில முயற்சிகள் நடந்துச்சு. ஆனால் திமுக மேலிடம் எதையுமே பொருட்படுத்தலைன்னு சொல்றாங்க.
.நிதித்துறையை பிடிஆர் இருந்தா மட்டுமே சரியாக இருக்கும்னு மேலிடம் நெனைக்குது. உங்கள் வேலையை சரியாக பாருங்கள். யாரை பற்றியும் கவலைப்பட வேண்டாம்னு முதல்வரும் பிடிஆருக்கு தைரியம் சொன்னதாக செய்திகளும் கசிஞ்சு வருது. இப்படிப்பட்ட சூழலில்தான், இந்தியன் எக்ஸ்பிரஸ்-க்கு தந்த பேட்டியில் அதிரடி முடிவை பிடிஆர் அறிவிச்சிருக்காரு.
.அதில், “முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இவங்களோட விமர்சனங்களுக்கு பதில் தர போவதில்லை.. அவர்கள் இருவரையும் முழுவதுமாக புறக்கணிக்கத் திட்டமிட்டிருக்கேன்… இப்போதில் இருந்து, என்னுடைய நேரத்திற்கு மதிப்பில்லாதோருக்குப் பதில் அளிப்பதைத் தவிர்ப்பதுங்கிறத கொள்கையாக மாத்தியிருக்கேன்.. ஒரு நிதியமைச்சராக நான் செய்வதற்கு அவ்வளவு இருக்கிறது…அதனால் நான் யாருடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதை முடிவுசெய்ய வேண்டும். இனி நான், எளிய மக்களின் கேள்விகளுக்கு மட்டுமே பதில் தருவேன்.. ஒரு அரசியல்வாதியின் மிகப்பெரிய கடமை என்பது அரசுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் கடினமானவற்றையும் எளிய வாக்காளர்களுக்குப் புரிய வைப்பதுதான்” என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்… இதையடுத்து சமீப காலமா வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முடிவை நிதியமைச்சர் பிடிஆர் எடுத்துள்ளார்.. இந்த முடிவு அதிமுக, பாஜகவுக்கு மட்டுமில்லாம திமுகவில் உள்ள சில சீனியர்களுக்கும் மறைமுக பதிலடியாக அமைஞ்சிருக்குது பிடிஆர் தொடர்ந்து விமர்சனங்களுக்கு மத்தியில் பயணித்து வந்தாலும், அவர் சார்ந்த நிதித்துறை ரீதியான செயல்பாட்டில் அவர் மேல எந்தமாதிரியான விமர்சனங்களும் இதுவரை வரலை. கடும் கட்டுபாடுகளோடு தான் அவர் செயல்பட்டு வர்றதா சொல்றாங்க. தலைமைச் செயலகத்தில். கோப்புகளில் கையெழுத்து போடுறதுக்கு முன்பு அதுகுறித்த விவரங்களை முழுமையாகக் கேட்பதால் மூத்த அமைச்சர்கள் சிலருக்கு சிக்கல் ஏற்பட்டுருக்குன்னு கோட்டை வட்டாரத்தில் பேசிக்கிறாங்க.

அதனால், பிடிஆரப்பத்தி கட்சியின் சீனியர்கள் நேரடியாக ஸ்டாலினிடமே நேரடியா பேசுனாங்களாம். கட்சியின் சீனியர்களப் பத்தி பிடிஆரின் ட்வீட், அவரது கோபமான பேச்சு எல்லாத்தையும் எடுத்துச் சொல்லிஅவரை வேறு ஏதேனும் துறைக்கு மாற்றலாம்னு அவங்க எல்லாரும் ஸ்டாலினிடம் யோசனை சொல்லி காய் நகர்த்தியதாக தெரியுது. காரணம் கமிஷன் பாக்க முடியலையாம்.ஒரு கட்டத்தில் ஸ்டாலினும் அதற்கு ஓகே சொல்லும் மனப்பான்மைக்கே போய்ட்டாராம். ஆனா இதப்பத்தி ஸ்டாலின் தனது குடும்பத்திலுள்ளவங்க அப்புறம் தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் ஆலோசிச்சப்போ, நிதித்துறைக்கு பிடிஆர்தான் சரியான தேர்வு, அவரே தொடரட்டும் வேணும்னா தேவையில்லாத அவரது பேச்சை கொஞ்சம் குறைச்சுக்கச் சொல்லலாம்னு ஆலோசனை சொல்லியிருக்காங்க.

அதுமட்டுமில்லாம பிடிஆர் ஏற்கனவே ஸ்டாலினுக்கு நெருக்கமானவருங்கிறதால், நேரடியாக ஸ்டாலினை சந்திச்சு அமைச்சர்கள் சிலரது நிதிச் செயல்பாடுகள் பத்தி விளக்கமளிச்சதா சொல்றாங்க விவரம் அறிந்தவர்கள். இதனைக் கேட்டு ஷாக்கான ஸ்டாலின், எதற்கும் கவலைப்படாமல் வேலையை சரியாக செய்யுமாறு பிடிஆருக்கு தைரியம் சொல்லி அனுப்பியதாகவும் அவர்கள் சொல்றாங்க. அதேசமயம், பிடிஆர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், அமைச்சர்கள் பற்றிய லிஸ்ட்டை ஸ்டாலின் எடுக்க சொல்லியிருக்கிறதால அவரைப் பத்தி போட்டுக் கொடுத்த அமைச்சர்கள் பீதியில் உறைஞ்சு போயிருக்கிறதா திமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது

பிடிஆர் காட்டும் கறாரால் பலராலும் கமிஷனை பார்க்க முடிவதில்லையாம்.தன்னை பற்றி வரும் எந்த ஒரு விமர்சனத்துக்கும் உடனடியாக எதிர்வினையாற்றுவதும், அதற்கு அவர் பயன்படுத்தும் வார்த்தைகளும் தியாகராஜன் கொஞ்சம் ஓவராகவே பேசுறார்ங்கிற பிம்பத்தை உருவாக்குவதாகச் சொல்றாங்க. ஆனா அரசியல்ல எப்பவுமே விமர்சனங்களைக் கவனிச்சிட்டு கடந்து போய்டணுமே தவிர அது எல்லாத்துக்கும் பதில் சொல்லிக்கிடிருக்க தேவையில்லை. அமைச்சர் பொறுப்பில் இருக்கும் பிடிஅர், தனது முன் கோபத்தையும் எல்லாவற்றிற்கும் பதில் சொல்ல வேண்டும் என்ற குணத்தையும் விட்டுடணும்னுங்கி அறிவுறுத்தல்கள் அவருக்கு சொல்லப்பட்டிருக்காம். ஆனால், எல்லா விதத்திலும் சரியாக இருக்கும் ஒருவரால், புகார்களுக்கு ஆளாகாத ஒருவரால் நிச்சயம் விமர்சனங்களையும், தவறான தகவல்களையும் எளிதில் கடந்து விட முடியாதுன்னு பிடிஆர் ஆதரவாளர்கள் அடிச்சுச் சொல்றாங்க.தமிழக நிதித்துறை அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டபோதே பெரிதும் பேசப்பட்டவர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் தேசிய ஊடகங்களாலும் கொண்டாடப்பட்டவர். சுமார் ரூ.5 லட்சம் கோடியை கிட்டத்தட்ட எட்டி கடனில் சிக்கி தமிழகம் தவித்து வருது. கொரோனா காலத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுச்சு. இதனை மாற்றி வளர்ச்சிப் பாதையில் தமிழகத்தை கொண்டு செல்லும் திறன் வாய்ந்த ஒருவரை நிதித்துறைக்கு நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்த நிலையில், ஸ்டாலினின் சாய்ஸாக பழனிவேல் தியாகராஜனே இருந்தாரு.

தமிழ்நாட்டின் நிதி நிலைமையை எப்படியும் இரண்டு மூன்று வருடங்களில் பிடிஆர் மீட்டெடுத்துவிடுவாருங்கிற ஸ்டாலினின் நம்பிக்கையே அவரது நியமனத்துக்கு காரணமாக சொல்லப்ப்பட்டது. அமைச்சர் பதவிக்கு மட்டுமே இவர் புதியவர்ன்னாலும், நீண்ட திமுக அரசியல் பாரம்பரியத்தையும், நிதித்துறையில் உலகளாவிய அனுபவமும் பெற்றவர்.

அமைச்சராகி இவர் பங்கேற்ற முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இவர் பேசுன பேச்சு மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருந்துச்சு. பிற மாநிலங்கள் பிடிஆரை கொண்டாடிய நிலையில, இங்குள்ள எதிர்க்கட்சிகளும், பாஜகவும் அவரை சீண்ட ஆரம்பித்தன. மத்திய அரசின் மீதான குறைகளை வெறும் வாயால் அவர் சொல்வதில்லை. புள்ளி விவரங்களோடு அடுக்குகிறார். ஜக்கி வாசுதேவ் குறித்து எந்த அரசியல்வாதியும் தமிழகத்தில் வாய் திறக்காத நிலையில், பிடிஆர் அவரைப் பற்றி பேசினாரு

இவ்வளவு விமர்சனங்கள் இருந்தபோதும், ஜிஎஸ்டி கவுன்சிலில் அமைப்புரீதியாக மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து மத்திய நிதியமைச்சருக்கும், ஜிஎஸ்டி கவுன்சிலுக்கும் பரிந்துரை வழங்கும் அந்தக்கவுன்சிலின் அமைச்சர்கள் குழு உறுப்பினராக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  நியமிக்கப்பட்டுள்ளதும், தனது செயல்பாடுகளால் ஸ்டாலினின் குட் புக்கில் இடம் பிடிச்சதுமே அவரது திறமைக்கு சான்றாகும் என்று சிலாக்கிறார்கள் பிடிஆர் ஆதரவாளார்கள்.