முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக எங்கள் காரை நிறுத்துவதா..? நீதிபதி கேள்வி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக எங்கள் காரை நிறுத்துவதா..? நீதிபதி கேள்வி!
நடிகர் சிவாஜிகணேசனின் 96-வது பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. சென்னை அடையாறு பகுதியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திரையுலக பிரபலங்கள் சிவாஜி கணேசன் குடும்பத்தினர் பலர் கலந்துகிட்டாங்க..

கூகுள் நிறுவனம் கூட தனது டூடுளில் சிவாஜி கணேசன் படத்தை இடம்பெறச் செய்து கவுரவம் வழங்கியது. தமிழக அரசு சார்பிலும், சிவாஜி கணேசனை நினைவுகூறும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில், உள்ள சிவாஜி மணி மண்டபத்தில் வைத்துதான் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் சிலர் இதில் பங்கேற்றனர். சிவாஜி குடும்பத்தினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மொத்தமே 20 நிமிட நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, சாலையில் காத்திருந்ததோ பல ஆயிரம் வாகனங்கள். முதல்வர் வருகை தந்ததால், போலீசார் அந்த சாலையில் பிற வாகனங்களை செல்ல விடாமல் தடுத்து வைத்திருந்தனர். இதனால், மைலாப்பூர், மெரினா பீச், எம்ஆர்சி நகர், சாந்தோம், பட்டினப்பாக்கம், மெட்ராஸ் ஹைகோர்ட் மற்றும் கிண்டி போகும் சாலைகளில் வாகனங்கள் நகர முடியவில்லை. சில டூவீலர்கள் மட்டும் குறுக்கு சந்துகள் வழியே நுழைஞ்சு போய்ட்டாங்க., கார்கள்லாம் அங்கேயே நின்னுச்சு.

முதலமைச்சர் வருகையையொட்டி, அடையாறு பகுதியில் போக்குவரத்தை போலீசார் நிறுத்தி வைச்சாங்க. இது வழக்கமான நடைமுறை தான்.காவல்துறை புள்ளி விவரப்படி 30 ஆயிரம் கார்கள் , அடையாறு ரோடு ஜங்ஷனில் தினமும் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 11,000 கார்கள் பயணிக்குதாம்.. ஆனால், முதல்வர் வருகை தந்ததால் வாகனங்களை போலீசார் நிறுத்தி வைத்த காரணத்தால், அங்கு சுமார் 30 ஆயிரம் கார்கள் வரிசையாக நின்னுது. இது தவிர டூவீலர்களும் காத்திருந்திச்சு. வெயில் நேரம் வேறு கடுமையான வெயிலில் வாகன ஓட்டிகள் அப்படியே காத்திருக்க வேண்டியதாயிற்று. அலுவலகம் செல்வோரும் தாமதமானதால் வாட்ச்சை திரும்ப திரும்ப பார்த்துக்கிட்டே இருந்தாங்க. இந்த டிராபிக்கில்தான் ஹைகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாரு.  அவரு நீதிமன்றம் போய்ச் சேந்ததும், அரசு உள்துறை செயலாளரை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகச் சொல்லி விளக்கம் கேட்டிருக்காரு நீதிபதி. நீதிமன்றத்திற்கு 25 நிமிஷம் லேட்டா வந்ததால வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டதை சுட்டிக் காட்டிய நீதிபதி, அரசு ஊழியரான தன்னை பணி செய்ய விடாமல் தடுத்தது நீதிமன்ற அவமதிப்புக்கு ஈடான குற்றம்ணு கடுமையாக கண்டனத்தை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்ன சொல்றாருன்னா ஒரு முக்கியமான சாலையை இப்படி மூடி வைத்தது ஆச்சரியம் மட்டுமல்ல, அதிர்ச்சியளிக்கிறது. இவ்வளவு பேர் பயணிக்கும் சாலையில் போக்குவரத்து நிறுத்துவது விபரீதமானது, துரதிருஷ்டவசமானதுன்னு கருத்து தெரிவிச்சிருக்காரு.
. முதல்வருக்காக டிராபிக் நிறுத்தப்பட்டு சர்ச்சையானது இது முதல் முறை கிடையாது. முன்னாள் முதல்வர்கள் சிலரும் கூட இதுபோன்ற நிகழ்வுகளை பார்த்துள்ளனர். பொதுவாக, டிராபிக்கை நிறுத்துங்கள் என்று, எந்த முதல்வர்களும் சொல்வதில்லை. சில அதிகாரிகள்தான், முதல்வர் மெச்சவேண்டும்ங்கிறதுக்காக இவ்வாறு பொதுமக்களைப்பற்றி கவலைப்படாமல் செய்றாங்க. ஜெயலலிதாவுக்காக நிறுத்தப்பட்ட ரஜினி 1991-96ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வருவதற்கு பல மணி நேரம் முன்னரே டிராபிக் நிறுத்தப்படுவது வாடிக்கையாக இருந்தது. அவர் முதல் முறையாக முதல்வராக பதவி வகித்து வந்த காலகட்டம் அது. ஜெயலலிதா சென்றால், அவருக்காக சாலையில் ஆங்காங்கே சுங்கச்சாவடிபோல் தடுப்புகளும் அமைத்தார்கள். ஒருமுறை நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் அருகே டிராபிக்கில் மாட்டிக்கிட்டு வீட்டுக்கு திரும்ப முடியாமல் காரிலிருந்து இறங்கி வெளியில் நிற்கும் நிலை ஏற்பட்டது. அப்போது பொதுமக்களால் இது கடுமையாக பார்க்கப்பட்டது. பத்திரிக்கைகள் விமர்சித்து எழுதுனாங்க கார்ட்டூன்கள், சினிமாக்களில் கூட காமெடிக்காட்சிகள் வைக்கப்பட்டுச்சு. இந்த நிலையில்தான், 1996ம் ஆண்டுக்கு பிறகு, ஆட்சிக்கு வந்த கருணாநிதி முற்றிலும் இதை நிராகரித்தார். அதன் பின்னர் 2வது முறையாக ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவும் முன்னர்போல் நடக்காமல் பார்த்துக்கொண்டார். நடந்த தவறுகளை திருத்த கடுமையாக போலீசாருக்கு உத்தரவிட்டார். எனவே ஜெயலலிதா வரும் நேரம் மட்டுமே டிராபிக் நிறுத்தப்பட்டு உடனடியாக வாகனங்கள் செல்லவும் வழி அமைக்கப்பட்டது. ஆனால், முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் சமீப காலமாக அனுபவமில்லாத சில அதிகாரிகளால் முதல்வர் புறப்படுவதற்கு 30 நிமிடங்கள் முன்னரே சாலைகள் அடைக்கப்படுவதும், அவர் சென்றபின்னரும் வாகனங்களை விடாமல் வைத்திருப்பதும் ஆங்காங்கே தொடர்கதையாக நடந்து வருகிறது. அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் இது முதல்வர்மீது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும் செயல் என்பதை அதிகாரிகள் புரிந்துக்கொள்ளாமல் இருக்கின்றனர். இதனால் காவலுக்கு நிற்கும் கடைகோடி போலீஸாரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இதுதொடர்பாக, கண்டனம் தெரிவித்த நீதிபதி, தமிழக உள்துறை செயலாளர் ஆன்லைன் வாயிலாக பிற்பகலில் ஆஜராகணும்னு உத்தரவிட்டார்.

அதையடுத்து பிற்பகல் 2.15 மணிக்கு தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் உயர் நீதிமன்றத்தில் ஆன்லைனில் ஆஜரானார். போக்குவரத்தை நிறுத்தி வைப்பது தொடர்பாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தமிழக உள்துறை செயலாளரிடம் பல கேள்விகளை எழுப்பினார். இந்த நிகழ்ச்சி குறித்து காலை 9.30 மணிக்குத்தான் தகவல் தெரியவந்தது. அதையடுத்து. உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியை தொடர்புகொண்டு, காலையில் உயர் நீதிமன்றத்துக்கு செல்லும்போது வாகனத்தை நிறுத்தவேண்டாம்னு உதவியாளர் மூலம் தகவல் தெரிவித்துவிட்டேன். இந்த நிலையில் என்னுடைய கார் மறிக்கப்பட்டது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இரும்பு தடுப்புகள் பலவற்றை வைத்து சாலை மறிக்கப்பட்டிருந்தது. இதனால் 25 நிமிடங்கள் காலதாமதமாக உயர் நீதிமன்றத்துக்கு வந்தேன். பொது ஊழியரான என்னை பணி செய்யவிடாமல் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. ஒரு நீதிபதியின் வாகனத்தை மறித்தது போல, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள செல்லும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் கார்களை போலீசார் மறிப்பபர்களா? ஏற்கனவே தகவல் தெரிவித்தும் உயர் நீதிமன்ற நீதிபதியின் காரை தடுத்த இந்தச் செயல், நீதிமன்ற அவமதிப்பு செயல். இதற்காக நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், அதை நான் விரும்பவில்லை.

உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் பலத்தைக் காட்ட உங்களை ஆஜராக சொல்லவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக யார் மீதும் குற்றம்சாட்டவும் விரும்பலை. இதுபோன்ற செயல் எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது என்பதற்கான ஒரு செய்தியாகவே இதை பதிவு செய்ய விரும்புறேன். முதலமைச்சர் பிற அமைச்சர்களை போலீசார் எப்படி நடத்துகின்றனரோ, அதுபோலவே நீதிபதிகளையும் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினாரு

நீதிபதியின் கேள்விகளை உள்வாங்கிக் கொண்ட உள்துறை செயலாளர் பிரபாகர், நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனருடன் கலந்தாலோசிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த ஆட்சில கருத்து சுதந்திரம் மதிக்கப்படுது.இதே மாதிரி சம்பவம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக்காலத்திலயும் நடந்திருக்கு.ஆனா எதிர்த்து கேள்வி கேக்க முடியல.கேட்டிருந்தா என்ன நடந்திருக்கும் ங்கிறது எல்லாருக்கும் தெரியும்.இனியும் இதுபோன்ற செயல்கள் தொடராமல் இருக்க சென்னை காவல் ஆணையர் நடவடிக்கை எடுப்பார் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நம்புகின்றனர்.