எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த செங்கோட்டையன் ! எடப்பாடியே எதிர்பார்க்கலை இந்த அதிர்ச்சிய.அதுவும் இவ்வளவு நாளாக அமைதியா இருந்திட்டு இப்ப திடீர்னு பிரச்சினையக் கிளப்புறாரேன்னு எடப்பாடி புலம்புறாராம்.அதிமுக கூட்டத்தின் அனல் இன்னமும் அடிச்சிகிட்டே தான் இருக்குது.. இதையடுத்து அக்கட்சிக்குள் என்னதான் நடக்குது? சீனியர்களின் அடுத்தடுத்த மூவ்கள் என்னங்கிற எதிர்பார்ப்புகளும் எகிறி வருது. அதிமுகவின் மா. செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் கடந்த 24-ம் தேதி நடந்து முடிந்தது.. ஏகப்பட்ட முட்டல் மோதல்கள், கருத்து வேறுபாடுகள், களேபரத்துடன் இந்த கூட்டம் நடந்து முடிந்தாலும், அப்படியெல்லாம் எதுவுமே நடக்கலை, கூட்டம் நல்ல முறையில் மிக அமைதியாக நடந்து முடிஞ்சுதுன்னு ஜெயக்குமார் அப்படியே பேசி சமாளிச்சத நாம் பார்த்தோம். வழக்கமாக எந்த கூட்டம் நடத்தப்பட்டாலும், ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே கருத்துமோதல்களும், அதிருப்திகளும் வர்றது சகஜம்தான்.  ஆனால், இந்த முறை கட்சியின் சீனியர்கள் அன்வர் ராஜா செங்கோட்டையனின் ஸ்டண்ட்கள் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுது. இவங்கள்ல எடப்பாடி பழனிசாமிக்கு, மிகப்பெரிய ஷாக் தந்தது செங்கோட்டையன்தான்னு சொல்றாங்க கூட்டத்துல கலந்து கிட்டவங்க. கொங்குவோட முதல் எதிர்ப்பு குரல் மட்டுமல்ல, கட்சி தலைமைக்கே செக் வைக்கும் வகையில அவரது பேச்சு அன்றைய தினம் அமைந்திருந்ததுதான்…இப்ப வரைக்கும் பரபரப்பா பேச்சு ஓடிக்கிட்டே இருக்கு. அந்த வகையில் அதிமுக மேலிடம் என்ன நினைக்குது? குறிப்பாக எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை எப்படி கையாள போறார்? செங்கோட்டையனின் அன்றைய தின பேச்சின் நோக்கம் என்னங்கிறதப் பத்தி  நாம் சில நிர்வாகிகள் கிட்ட பேசினோம்.. அவங்க என்ன சொல்றாங்கன்னா ?

சீனியர் செங்கோட்டையனை பொறுத்தவரை எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி.தொடர்ந்து தேர்தலில் ஜெயிச்சுகிட்டே வர்றாரு. மூத்த நிர்வாகியும் கூட எடப்பாடியைவிடவும் சீனியர்.. பல பொறுப்புகளை வகித்தவர்.. ஆனாலும் ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதே செங்கோட்டையனின் பவர் பறிக்கப்பட்டுவிட்டது.. இதற்கு பிறகு செங்கோட்டையனும் மவுனமானார்.. ஜெ.மறைவுக்கு பிறகு சசிகலா தலைமையை செங்கோட்டையன் ஏத்துக்கலை. அதுக்குப் பிறகு சசிகலா தரப்பில் சில சமாதான முயற்சி மேற்கொண்டதாகவும், அதில், செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் தரப்படும்ன்னு வாக்குறுதி தருவதாக சொல்லவும், அதற்கு பிறகே சசிகலாவின் தலைமையை செங்கோட்டையன் ஏற்பதாகவும் செய்திகள் வந்த நிலையில், அது அப்படியே அமுங்கி போய்விட்டது. காரணம், அப்போதைய 2 அமைச்சர்கள் செங்கோட்டையனை முன்னிலைப்படுத்தக்கூடாதுன்னு சசிகலாவிடம் கிசுகிசுத்ததாக சொல்லப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான், திடீரென செங்கோட்டையன் தன்னுடைய அரசியலை விளையாட்டை விளையாட ஆரம்பிச்சிருக்காருன்னு சொல்றாங்க கொங்கு மண்டல அவரது விசுவாசிகள். “மொதல்ல வழிகாட்டுதல் குழு போடுங்க.. ஆட்சி மன்ற குழுவை போடுங்க.. கட்சியின் எல்லா முடிவுகளையும் தலைமைதான் எடுக்குதுன்னா , எதுக்காக அந்த வழிகாட்டுதல் குழு வச்சிருக்கணும்? ஒண்ணு, அதுக்கான அதிகாரத்தை அதிகப்படுத்துங்க.. இல்லன்னா அந்தக் குழுவை கலைச்சிடுங்க.. குழுவை கலைக்க முடியாதுன்னு சொன்னா ஏற்கனவே இருக்கும் 11 பேரில் எங்களுடைய ஆதரவாளர் 7 பேரையும் அதில் சேர்த்து மொத்தம் 18 பேரை நியமனம் செய்யுங்க.. அந்த குழுவில் உள்ள எங்களுக்கு மேலும் பிரதிநிதித்துவம் தரணும்.. முக்கியத்துவம் தரணும்.. கூட்டணி தொடர்பான முடிவுகள், வேட்பாளர் தேர்வு, கட்சி உறுப்பினர் சேர்க்கை, நீக்கம் இவைகளை எல்லாம் அந்த குழுதான் முடிவெடுக்கணும்.. அந்த குழுவுக்கு இனி ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுப்படணும்.. இந்த மாற்றங்களை செய்துட்டு உள்ளாட்சித் தேர்தல், உட்கட்சித் தேர்தல்களைச் சந்தித்தால் மட்டுமே கட்சிக்கு நல்லதுங்கிற கோரிக்கையை மெல்ல வைக்கவும்தான் எடப்பாடி தரப்புக்கு தூக்கி வாரிப்போட்டுச்சாம்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது, செங்கோட்டையன் ஒதுங்கியே இருந்தார்.. பெரிதாக கட்சிக்குள் கருத்துக்கள் எதுவும் சொல்லலை.. எந்தவித சர்ச்சைகளிலும் சிக்கலை.. உட்கட்சி பூசலிலும் இறங்கலை.. தலையிடவும் இல்லை… அதேசமயம் செங்கோட்டையனின் கொங்கு மண்டல செல்வாக்கை, எடப்பாடி தரப்பு உணராமல் இல்லை.. அதனால்தான், பெரிய அளவு முக்கியத்துவம் தராமல் செங்கோட்டையனை கொஞ்சம் அடக்கியே இத்தனை வருடமும் வைச்சிருந்தது எடப்பாடி டீம். இப்போ திடீர்னு 18 பேர் கொண்ட குழுவை பற்றி பேசியதை எடப்பாடி தரப்பு எதிர்பார்க்கலை.. அதுமட்டுமல்ல, 18 பேர் கொண்ட குழுவிற்கு செங்கோட்டையனையே தலைவராக நியமிச்சிடலாம், ஏன்னா அவர் கட்சியின் மூத்த தலைவர், அரசியல் அனுபவமும் பக்குவமும் நிறைந்தவர்ன்னு செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் சிலரும் அந்த கூட்டத்திலேயே கருத்துக்களை பரவவிடவும், இதுவும் எடப்பாடி தரப்புக்கு டென்ஷனை எகிற வைத்துள்ளதாக சொல்லப்படுது.  இப்படி ஒரு வழிகாட்டு குழுவை அன்று போடச் சொன்னதே ஓபிஎஸ்தான்.. குழுவை போடச் சொன்னாரே தவிர, அதற்கு அதிகாரம் தரணும்னு ஓபிஎஸ் கேட்கவே இல்லை.. அந்த குழுவைக் கண்டுக்கவும் இல்லை. அமைதியாகவே இருந்து வந்தது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியே வந்தது.. இப்போது கட்சியின் எல்லா சீனியர்களையும் அடக்கிய 18 பேர் லிஸ்ட்டை செங்கோட்டையன் ரெடி செய்து, அதற்கு தலைவராகவும் முயற்சிப்பது, இந்த நேரத்தில் மிகச்சிறந்த வியூகமாக பார்க்கப்படுது. இந்த 18 பேர் என்பது சாதாரணமானவர்கள் இல்லை, எல்லாருமே சீனியர்கள்.. இவர்களின் வழிகாட்டுதல்படிதான், ஓபிஎஸ், இபிஎஸ் நடந்து கொள்ள முடியும் என்ற ரீதியிலேயே “ஃபுல் பவர்” கேட்கப்படுவதாக தெரியுது.. அதேசமயம் எடப்பாடி பழனிசாமி மேல பெருத்த நம்பிக்கையை செங்கோட்டையன் வைக்கலை என்பதும் இதன்மூலமே தெரிய வருது.. ஒருவேளை சசிகலா பக்கம், செங்கோட்டையன் சாயப் போகிறாரோ என்ற சந்தேகத்தையும் சிலர் கிளப்பி விடுறாங்க.. ஆனால், அதற்கு வாய்ப்பிருக்காது.. செங்கோட்டையன் மீது சசிகலாவுக்கு எப்போதுமே ஒருவித நம்பிக்கை உள்ளதுதான்.. அதிமுக இரு அணிகளாக இருந்தபோதே, செங்கோட்டையனை முதல்வராக்க விரும்பினோம் என்று சசிகலா தரப்பு அப்போது சொல்லியிருந்ததை மறுக்க முடியாது.. ஆனால், செங்கோட்டையனை பொறுத்தவரை தனி ஆவர்த்தனம் நடத்த பார்க்கிறார்.. யார் பக்கமும் சாய விரும்பலை.. 18 பேர் கொண்ட குழுவை வைத்து கட்சியின் தலைமை பொறுப்பை அடைய நினைக்கிறார் போலும்.  இதை எடப்பாடி இனி எப்படி சமாளிக்க போகிறார் என்று தெரியலை.. கொங்குவில் ஒரு சீனியர் வருமானவரி மேட்டரில் சிக்கி உள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணியை விட கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையனுக்கே செல்வாக்கு அதிகமாக இருக்குது… கொங்கு மண்டலத்தின் செல்லப்பிள்ளை.. கொங்கு மண்டலத்தில் அனைத்து சமுதாயமும் ஏற்றுக்கொள்ளும் அதிமுக பிம்பமாக செங்கோட்டையன் பார்க்கப்படுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.அதிமுகவின் செயற்குழு கூட்டம் டிசம்பர் 1ம் தேதி நடைபெறும்னு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவிப்பு வெளியிட்டனர். டிசம்பர் 1ம் தேதி அதிமுக செயற்குழுவில் வழிக்காட்டுதல் குழுவை விரிவுபடுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் இ.பி.எஸ் அதிகாரம் குறையும்னு எதிர்பார்க்கப்படுது.திடீர்னு கிளம்பியிருக்கிற செங்கோட்டையன் பூகம்பத்த எடப்பாடியார் எப்படி சமாளிக்கப் போறார்ங்கிறத பொறுத்திருந்து தான் பாக்கணும்.