பாஜக வைத்த புள்ளியில், கோலம் போட வருகிறார் “பிரபலம்”.. குழம்பும் எடப்பாடி பழனிசாமி டீம் பாஜகவின், வியூகத்துக்கும், வேகத்துக்கும் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈடு கொடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த முறை தேர்தலில், தென்மண்டலங்களிலும் காலூன்ற தமிழக பாஜக முயன்று வருகிறது. அதனால்தான் “ஒருங்கிணைந்த அதிமுக” என்ற விஷயத்தை தொடர்ந்து முன்னெடுத்து வந்தது.. ஆனால், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாத போக்கை, பாஜகவால் தளர்த்தவே முடியவில்லை.. ஒவ்வொருமுறையும் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றபோதெல்லாம், டிடிவி தினகரன் + ஓபிஎஸ் + சசிகலா மூன்று பேரையுமே இணைத்து கொள்ள வேண்டும் என்று மேலிட பாஜக வலியுறுத்திய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்தபடியே இருந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. கடைசியாக கடந்த மாதம் டெல்லி சென்றபோதுகூட, ஒருங்கிணைந்த அதிமுகவை பாஜக தலைவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.. அப்போதும் எடப்பாடி ஒப்புக்கொள்ளவில்லையாம்.. பிறகு சீட் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா எடப்பாடியிடம், “எம்பி தேர்தலில், நீங்கள் 20 இடங்களில் போட்டியிடுங்கள், எங்களுக்கு 20 தொகுதிகளை கொடுத்து விடுங்கள்.. இந்த இடங்களில் நாங்களும் போட்டியிட்டுக்கொண்டு, கூட்டணி கட்சிகளுக்கும் (ஓபிஎஸ், டிடிவி) பிரித்து கொடுத்து விடுகிறோம்” என்று கேட்டாராம்.. இதற்கு எடப்பாடி ஓகே சொல்லவில்லையாம். ஓபிஎஸ், டிடிவி தினகரனை, மேலிட பாஜக கடைசிவரை கைவிடாமல் இருப்பதை பார்த்ததால்தான், பாஜகவுடன் கூட்டணி முறிவு என்ற முடிவை அதிமுக அறிவித்ததாகவும் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, எப்படியும், ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆதரவுடன் தென் மாவட்டங்களில் பாஜக களமிறங்கும் என்பதால், அந்த வியூகத்தையும் நொறுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு கணக்கு போட்டு வருகிறதாம். அதன்படி, தேவேந்திர குல வேளாளர், மற்றும் நாடார் சமூக மக்களின் வாக்குகளை பெறுவதற்காக, அதிமுகவுக்குள் இந்த 2 சமூத்தை சேர்ந்தவர்களை மாவட்ட செயலாளர்களாக நியமிக்க உள்ளதாக தெரிகிறது. இதன்மூலம், பாஜகவுக்கும் ஒரு செக் வைக்க முடியும், முக்குலத்தோர் ஆதரவையும் அதிமுக பக்கம் திருப்ப முடியும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாராம். அதற்கேற்றவாறே, பாஜகவும் தன்னுடைய மாஸ்டர்பிளானை கையில் எடுத்துள்ளது.. ஏற்கனவே, அமமுக டிடிவி தினகரனிடம் கூட்டணி குறித்து பாஜக மேலிடம் பேசியதாக தெரிகிறது.. அத்துடன், செலவு உள்ளிட்ட விஷயங்களையும் கவனித்து கொள்வதாக, தினகரனிடம் உறுதி தந்துள்ளதாகவும் தெரிகிறது. இதையடுத்து, அமமுகவுக்கு 4 சீட்வரை ஒதுக்கப்படலாம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. இதனால், அமமுகவில் நிறைய நிர்வாகிகள், இந்த முறை தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறார்களாம். சசிகலாவை பொறுத்தவரை, பாஜக அவரை கண்டுகொள்ளாமலேயே இருந்தது.. அதிமுக தன்னை எப்படியாது சேர்த்து கொள்ளும் என்று காத்து கிடந்த சசிகலாவுக்கு தொடர்ந்து ஏமாற்றம் கிடைத்தபடியே இருந்தது. எனவே, எடப்பாடியை சமாதானம் செய்வதற்கு பதில், மேலிட பாஜகவை சந்தித்து பேசலாம் என்று முடிவுக்கு வந்ததாக தெரிகிறது. அதனால்தான், கடந்த 2 வருடங்களாகவே, மேலிட தலைவர்களை சந்தித்து பேச, ரஜினிகாந்த், விஜயசாந்தி, என்று பல புள்ளிகள் மூலமாக தூது படலம் நடத்தி கொண்டிருந்தார். அதற்கு ஓரளவு பலனும் கிடைத்து வருகிறது.. இப்போது விஷயம் என்னவென்றால், தென்மண்டலங்களில் வாக்குகளை பெற்றாக வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு வந்துள்ளதால், சசிகலாவின் தயவையும் உதறி தள்ள முடியவில்லையாம். அதனால்தான், சமீபகாலமாகவே சசிகலாவுடன், மேலிட பாஜக பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக சொல்கிறார்கள். குறிப்பாக, ராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் ஒருவர் சசிகலாவுடன் பேசிவிட்டு சென்றாராம்.. இப்போதும் பாஜக மேலிட தரப்பில் சசிகலாவிடம் பேசிவருகிறார்களாம். அந்தவகையில், மிகப்பெரிய அசைன்மென்ட் சசிகலாவுக்கு தரப்படுவதாக தெரிகிறது.. இதனால், டிடிவி தினகரனை தொடர்ந்து சசிகலா தரப்பும் பெருத்த நம்பிக்கையிலும், குஷியிலும் உள்ளதாம். இதையெல்லாம் எடப்பாடி பழனிசாமி டீம் கவனிக்காமல் இல்லை.. எனினும், முக்குலத்தோர் வாக்குகளை அறுவடை செய்ய அதிமுக என்ன செய்ய போகிறது? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
நீங்க போட்டிபோடாதீங்க.. 9 தொகுதிகளுக்கு ஆப்பு? அதிமுகவிற்கு ஆணி அடிக்கும் பாஜக.. என்ன நடந்தது? தமிழ்நாட்டில் 9 தொகுதிகளில் லோக்சபா தேர்தலில் போட்டியிட பாஜக முடிவு செய்துள்ளதாம். இதனால் அதிமுகவிற்கு முக்கியமான பிரஷர் ஒன்றை கொடுக்கவும் பாஜக முடிவு செய்துள்ளதாம். தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணி பிரிவால் உட்சபட்ச அரசியல் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. இந்த குழப்பம் காரணமாக அண்ணாமலைக்கு ஏகப்பட்ட பிரஷர் ஏற்பட்டு இருக்கிறது. டெல்லியில் அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்த பல்வேறு கூட்டங்களில் , ஆலோசனைகளில் அண்ணாமலை கலந்து கொண்டார். சமீபத்தில் பிஎல் சந்தோஷ் உடனும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை செய்தனர். இந்த ஆலோசனைகளில் தமிழ்நாட்டில் பாஜக 9 இடங்களில் போட்டியிடும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளதாம். கோவை, ஈரோடு, திருப்பூர், வேலூர், தென் சென்னை, சிவகங்கை, நீலகிரி, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட 9 தொகுதிகளில் பாஜக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாமலை இதை வெளிப்படையாகவே தொகுதி குறிப்பிடாமல் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, தென்சென்னையில், வேலூர் இதெல்லாம் பாஜகவிற்கு ஆதரவாக இருக்கும் தொகுதிகள் என்று நினைக்கிறார்கள். இங்கே முன்பு பாஜக தலைவர்கள் போட்டியிட்டு உள்ளனர். சில கணிசமான வாக்குகளை பெற்றுள்னனர். இந்த முறை அவர்கள் தூத்துக்குடியில் போட்டியிடவில்லை. அதற்கு பதிலாக இந்த முறை தென்காசியில் கூட அவர்கள் நிற்க வாய்ப்பு உள்ளது. தேவேந்திரகுல வேளாளர் வாக்குகளை கவர வேண்டும் என்று அவர்கள் தென்காசியில் போட்டியிட முடிவு செய்துள்ளனர், அங்கே வெற்றிபெற முடியும் என்று அவர்கள் நினைப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சிவகங்கை, நீலகிரி, ராமநாதபுரம், கன்னியாகுமரி இங்கே எல்லாம் அவர்கள் தோல்வி அடைந்தாலும் நல்ல வாக்குகளை பெற்றுள்ளனர். மத ரீதியாக, ஜாதி ரீதியாக பிரிவு உள்ள இடங்களில் வாக்குகளை பெற பாஜக முயன்று வருகிறது. அதை மனதில் வைத்தே இந்த முடிவை பாஜக எடுத்துள்ளது. சர்வே எடுத்துதான் அவர்கள் இதை தேர்வு செய்துள்ளனர் என்று பாஜக தரப்பு கூறியுள்ளது. இங்கே அதிமுகவும் வலிமையாக உள்ளது. இந்த நிலையில்தான் இங்கே அதிமுகவை போட்டியிட வேண்டாம் என்று சொல்ல டெல்லி பாஜக முயன்று வருகிறதாம். அதாவது தமிழ்நாட்டில் 9 இடங்களில் நாங்கள் கண்டிப்பாக போட்டியிட உள்ளோம். இங்கே நீங்கள் போட்டியிட்டால் வாக்குகள் பிரியும். நாம் கூட்டணியில் இருக்க வேண்டும். கூட்டணியில் இருந்தால் இந்த 9 இடங்களை கொடுங்கள். இல்லையென்றால் இந்த தொகுதியில் போட்டியிட வேண்டாம். இந்த 9 தொகுதியில் விட்டுக்கொடுங்கள். எங்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுங்கள் என்ற அழுத்தத்தை பாஜக அதிமுகவிற்கு எதிராக வைக்க உள்ளதாம். இங்கே எல்லாம் அதிமுக – பாஜக பிரிந்து நின்றால் அது திமுகவிற்குத்தான் சாதகமாக மாறும். அதனால் அதிமுக – பாஜக மீண்டும் கூட்டணி அமைய வேண்டும். இதனால்தான் அவர்கள் மீண்டும் சேர வேண்டும். இல்லையென்றால். இங்கே பாஜக தனியாக மட்டுமே வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.. அதிமுக ஒருவேளை வேட்பாளர்களை நிறுத்தினாலும் பலமில்லாத வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று பாஜக அதிமுகவிற்கு பிரஷர் கொடுக்க உள்ளதாம்.