அரசியலில் களமிறங்கும் விஜய்.! 2 வது நாளாக மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை !

அரசியலில் களமிறங்கும் விஜய்.! நடிகர் விஜய் நேற்று முன்தினம் மக்கள் இயக்க நிர்வாகிகளுடனான ஆலோசனையை தொடங்கிய நிலையில், இன்றும் 2 வது நாளாக நிர்வாகிகள் சந்திப்பும் ஆலோசனையும் நடைபெற உள்ளது. தொடர்ந்து பிசியாக நடித்து வரும் நடிகர் விஜய் புஸ்ஸி ஆனந்த் மூலமாக மக்கள் இயக்கத்தின் சார்பாக அரசியலுக்கு காய் நகர்த்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் அரசியலுக்கு வருவார் என்ற பேச்சுக்கள் எழுந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் இயக்க நிர்வாகிகளை களமிறக்கினார் விஜய். தற்போது லியோ படத்திற்கான படப்பிடிப்பை நிறைவு செய்து இருக்கும் விஜய், வேகமாக அரசியல் நோக்கி நகர்ந்து வருகிறார். புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த ரசிகர்களை நடிகர் விஜய் கேட்டுக்கொண்டு இருந்தார். அப்போதே அவர் அம்பேத்கரை வைத்து அரசியலை தொடங்கி இருப்பதாக பேச்சுக்கள் எழுந்தன. அதன் தொடர்ச்சியாக காயிதே மில்லத், பாவேந்தர் பாரதிதாசன், தீரன் சின்னமலை, சிவந்தி ஆதித்தனார் போன்ற தலைவர்களின் பிறந்தநாளின்போதும் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். அதேபோல் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களுக்கு இஃப்தார் விருந்து வழங்கி நலத்திட்ட உதவிகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கினர். அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் ஒரு வேளை மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு விஜய் நேரில் பரிசுகளை வழங்கி கவுரவித்தார். விஜய் 12 மணி நேரத்துக்கும் மேலாக மேடையில் நின்றுகொண்டு மாணவர்கள், பெற்றோர்களிடம் நடந்துகொண்ட விதம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மாவட்டம், வட்டாரம், மாநில அளவில் பொதுத்தேர்வில் சாதித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவது வழக்கமாக உள்ள நிலையில், 234 தொகுதி அளவில் விஜய் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கியது அரசியல் நகர்வாகவே பார்க்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், கர்மவீரர் காமராஜரை படியுங்கள் என்று மாணவர்களிடம் அறிவுறுத்திய விஜய் ஓட்டுக்கு பணம் வாங்குவது பற்றியும் பேசினார். அதை தொடர்ந்து சமீபத்தில் விஜய்காந்த பிறந்தநாளன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அதன் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மேற்கொண்டனர். இந்த நிலையில் நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் பனையூர் இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார். அதில் அரசியலுக்கு வருவது தொடர்பாகவும் அவர் விவாதித்ததாக கூறப்படுது. இந்த நிலையில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் 2 வது நாளாக நடிகர் விஜய் ஆலோசனை செய்தார்.விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 234 தொகுதிகளிலும் இரவுநேர பாடசாலை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது கடந்த 15 ஆம் தேதி முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருது.காமராஜர் பிறந்த நாளில் தமிழகம் முழுவதும் இந்த இரவு பாட சாலை திட்டத்தை விரிவுபடுத்த விஜய் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகுது. இதனிடையே, விஜய், தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு மக்களை நேரில் சந்திக்க இருப்பதாகவும் மக்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து கொண்டு பின்னர், அரசியலில் ஈடுபடுவது குறித்த அறிவிப்பை வெளியிட விஜய் திட்டமிட்டு இருப்பதாகவும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மத்தியில் பேசப்படுது.
விஜய் மக்கள் இயக்கம் பொதுவான நிகழ்ச்சிகளை நடத்தி இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் எந்த ஒரு நிகழ்வை நடத்தினாலும் 234 தொகுதிகளையும் கணக்குப் போட்டு, பகிரங்கமாக அறிவித்து செயல்படுத்துவதால் இயல்பாகவே விஜய் அரசியல் வியூகம் வகுக்கிறார் என்பது பேசுபொருளாகிவிடுகிறது. கடந்த மாதம் அனைத்து தொகுதி மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள்.. கடந்த சில நாட்களாக அனைத்து தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை.. இதனைத் தொடர்ந்து அனைத்து தொகுதிகளிலும் இரவு நேர பாடசாலைகள் தொடக்கம்.. இவையெல்லாம் நடிகர் விஜய் அரசியல் நோக்கி நகருகிறார் என்பதை உறுதிப்படுத்துது

இரவு நேர பாடசாலை என்பது அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் திராவிடர் இயக்கம் கடைபிடித்த அரசியல் பார்முலா. சலூன்களும் மக்கள் கூடும் சந்தைகளும் திராவிடர் இயக்க அரசியலின் ஆணிவேராக அடித்தளமாக அமைந்திருந்தன. இந்த வரிசையில் இரவு நேர பாடசாலைகளை அன்றைய திராவிடர் இயக்கமும் திமுகவும் முன்னெடுத்தது. வள்ளுவர் பாடசாலை, பெரியார் பாடசாலை, அண்ணா பாடசாலை என்பதெல்லாம் அன்றைய தமிழ்நாட்டின் அவசிய தேவைகளில் ஒன்றாகத்தான் இருந்தது. ஏனெனில் 2,000 ஆண்டுகாலம் கல்வி மறுக்கப்பட்ட பொது தமிழ்ச் சமூகம், திராவிடர் இயக்கத்தின் அரசியல் பாய்ச்சலின்போது முன்னர் இழந்த உரிமைகளை பெற்ற காலம்.. பாட்டனும் முப்பாட்டனும் படிக்காத போது அப்பாக்கள் படிக்க தொடங்கிய காலம்.. அம்மாக்கள் கல்வியை பற்றி பேசவும் சிந்திக்கவும் தொடங்கிய காலம்… அன்று தமிழ்ச் சமூகம் அறிவுத் தேடலில் ஆர்ப்பரித்து படையென கிளர்ந்தோடிக் கொண்டிருந்தது. அவர்களுக்கு ஆறுதல் கரங்களாக இரவுநேர பாடசாலைகள் இருந்தன. பின்னர் திராவிடர் இயக்க ஆட்சிகளில் கல்வி முறை செழுமைப்படுத்தப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டு எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வழிவகை செய்த போது இயல்பாகவே இதன் தேவைகள் குறைந்தன. ஆனால் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் முழுமையாக முன்னேற்றம் அடைய, ஒடுக்குமுறைகளில் இருந்து விடுதலை பெற பின்னரும் இந்த இரவு நேர பாடசாலைகள் தேவைப்பட்டன. இதனை திராவிடர் இயக்கம் கையில் எடுக்காமல் இருந்த தருணத்தில் தலித்தியம் இப்பாடசாலைகளை பயன்படுத்திக் கொண்டது. இன்றளவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உற்றதுணையாக இந்த பாடசாலைகள் இருப்பதை மறுக்கவும் மறைக்கவும் முடியாது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றது போலவே தனது அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்படுகின்றன. சமீபத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒவ்வொரு தொகுதியிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகள் என 234 தொகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத் தொகை வழங்கினார் விஜய்.
அப்போது பேசிய நடிகர் விஜய், நாளை வாக்காளர்களான இன்றைய மாணவ மாணவிகள், தங்களின் பெற்றோர் ஓட்டுக்கு பணம் வாங்குவதை தடுக்க வேண்டும் என்றார். மேலும் அம்பேத்கர், பெரியார், காமராஜர் ஆகிய தலைவர்கள் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். விஜய்யின் இந்த நடவடிக்கையை அவரது அரசியல் வருகைக்கான முன்னோட்டம் என்று கூறி வருகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

இந்நிலையில் நடிகர் விஜய் தனது பனையூர் இல்லத்தில் தன்னுடைய மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தற்போது நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் இரவு நேர பாடசாலை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஜூலை 15 ஆம் தேதி காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட முடிவு செய்து இந்த திட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள்.

இரவு நேர பாட சாலைக்கான இடம் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தேர்வு செய்து தரப்படும் என்றும் இதற்கான வாடகையும் விஜய் மக்கள் இயக்கத்தால் கொடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இரவு நேர பாட சாலைக்கான ஆசிரியர் பணிக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் குறைந்தபட்ட கல்வி தகுதியாக இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் 4 இடங்களுக்கு மேல் இந்த இரவு நேர பாடசாலை அமைக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மாணவ மாணவிகளை சந்தித்த நடிகர் விஜய், அசுரன் படத்தின் வசனத்தை கூறி கல்விதான் முக்கியம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை விஜய் மக்கள் இயக்கம் எடுத்திருப்பது கவனத்தை பெற்று வருகிறது.
சட்டமன்ற தொகுதி வாரியாக செயல்படுத்தப்படும் நிகழ்வுகள்! தொகுதி வாரியாக நிர்வாகிகள் நியமனங்கள், மாணவர்களிடம் பேசிய அரசியல் .. எல்லாம் அரசியல் ஆசைகளை வெளிப்படுத்துகின்றன..! நண்பன் யார்? எதிரி யார்? என அடையாளம் காண முடியாத ஒரு அரசியல் சாத்தியமே இல்லை! உண்மையைச் சொல்வாரா விஜய்?

சமீபத்தில் நடிகர் விஜய் நன்றாகப் படிக்கும் மாணவ,மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கம் தரத்தக்க வகையில் பேசியுள்ளார்! கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், கல்வி கூடத்திற்கு வெளியே கற்க வேண்டியது குறித்தும் பேசியுள்ளார்.
ஒரு வகையில் இது வரவேற்கத்தக்க நிகழ்வு என்றாலும், நன்றாக படிக்கும், முதல் ரேங்குகளில் வரும் மாணவ, மாணவிகளை மட்டுமே அழைத்து உதவுவது சரி தானா? என்று யோசிக்க வேண்டும். உதாரணத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற நந்தினிக்கு ஏராளமான நிறுவனங்களும், வைரமுத்து போன்ற தனி நபர்களும், அரசும் பல பரிசுகள் உதவிகள் செய்யும் நிலையில் விஜய்யும் தன் பங்கிற்கு வைர நெக்லஸ் தந்துள்ளார்.

இது வரை சமூகத்தில் சாதித்தவர்கள் பட்டியலை எடுத்தால் சுமாராக படித்த மாணவர்கள் தான் பல்வேறு தளங்களில் சாதித்து உள்ளனர். இன்னும் சொல்வதென்றால், பள்ளி, கல்லூரிகளில் படிப்பு வராமல் இடை நின்ற சிலர் கூட பெரிய சாதனையாளர்களாக, தொழில் அதிபர்களாக உயர்ந்துள்ளனர். நடிகர் விஜய் அவர்களே தன்னை சுமாரான மாணவன் என பகிரங்கமாக கூறிய வகையில் அவரே இதற்கு உதாரணமாகிறார்.

ஆகவே, படிப்பதற்கு உதவி தேவைப்படும் லட்சோப லட்சம் மாணவ, மாணவிகள் இருக்கின்றனர். அவர்களை சற்று மெனக்கெட்டு கண்டறிந்து உதவினால், அது அவர்களுக்கு காலத்தே செய்யும் உதவியாக இருக்கும் . இதற்கு நடிகர் சூர்யா பின்பற்றும் மாடலை விஜய் கவனத்தில் கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சி மீண்டும் ”விஜய் அரசியலுக்கு வருவாரா?” என்ற கேள்வியை, எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. காரணம், இந்த நிகழ்வுக்கு மாவட்டம் வாரியாகவோ, தாலுகா வாரியாகவோ மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. 234 சட்டமன்ற தொகுதிகள் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விஜய் பிறந்த நாளின் போது அன்னதானம் செய்த போதும் கூட, ஆங்காங்கே இருக்கும் விஜய் மக்கள் இயக்கங்கள் செய்வதாக அமையாமல் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஓரிடம் என நடந்துள்ளது. பொதுவாக அரசியல் கட்சிகள் தாம் இது போன்ற அரசியல் ரீதியான கண்ணோட்டத்துடன் செயல்படுவார்கள்.

விஜய்யின் நடவடிக்கைகளை தொடர்ந்து பார்க்கும் போது அவருக்கு அரசியல் ஆசை இருக்கிறது. ஆனால், அதற்கான துணிச்சல் இல்லாத காரணத்தால் தயக்கமும் இருக்கிறது என்பது தெரிய வருகிறது. கிட்டத்தட்ட ரஜினியும் இந்த மாதிரியான ஒரு நிலைபாட்டிலேயே சுமார் முப்பது வருட காலத்தை ஒப்பேற்றிவிட்டு, கடைசியில் பின்வாங்கினார்.

அரசியலில் ஈடுபடுவதற்கு தேவையான அடிப்படை பண்பு ஒன்று உண்டு. அது நாட்டு நடப்புகளில் ஈடுபாடு காட்டுவது, அநீதிகளை எதிர்ப்பது, மக்களின் துயரங்களில் பங்கெடுப்பது போன்றவை!மக்கள் பிரச்சனைகளைக் கையிலெடுத்து மக்களோடு கை கோர்த்து போராட வேண்டும். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்க்கட்சியாக இருக்கும் போதெல்லாம் மக்களுக்காக நீதி கேட்டு போராட்டங்களை நடத்தி கட்சியை உயிர்ப்புடன் வைத்திருப்பார்.அதே போல மறைந்த முதலமைச்சர் கருணாநிதி எதிர்க்கட்சியாக இருக்கும் போதெல்லாம் மக்களுக்காக நீதி கேட்டு போராட்டங்களை நடத்தி கட்சியை உயிர்ப்புடன் வைத்திருப்பார்.

சினிமாவில் சுற்றுச் சூழல் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவது குறித்து கொந்தளித்து வசனம் பேசிவிட்டு, தினசரி தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான லாரிகளில் ஆற்று மணல்களும், மலைகளை தரைமட்டமாக்கி எம்சாண்ட் எடுக்கப்பட்டு இயற்கை வளம் கொள்ளை போவது குறித்தும் அமைதி காத்து வருவதில் என்ன பலன் இருக்கிறது..?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச் சூழலை சூறையாடிய நிலையில், அவர்களின் போராட்டத்திற்கு துணை நிற்க முடியாத ஒருவரால் அரசியலில் என்ன சாதிக்க முடியும்?

டாஸ்மாக் சாராய போதைக்கு அடிமையாக்கப்பட்டு எளிய மக்களின் குடும்பங்கள் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகிய நிலையில் அது பற்றி பரிவோடு, பேசவோ, செயல்படவோ யோசிக்கவும் முடியாத ஒருவரால் இங்கு எப்படி அரசியல் செய்ய இயலும்?

தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு பணப்பட்டுவாடா கனஜோராக நடக்கும் போது, ”பணத்தை வாங்காதீர்கள்…” என களத்தில் இறங்கி சொல்லத் துணியாமல் உள் அரங்கில் பேசுவதில் என்ன பலன் கிடைக்கப் போகிறது…?

2009 தொடங்கி ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய பிறகு, ஒரு மாதத்திற்கு நான்கு நாளேனும் அதற்கு செலவழித்திருப்பீர்களா விஜய் அவர்களே? வருடத்திற்கு ஒரு படம் தான் நடிக்கிறீர்கள் எனும் போது மக்களுக்கான சேவையில் ஈடுபட நிறைய நேரம் கிடைக்கிறதல்லவா? என்ன செய்கிறீர்கள்?‘மெர்சல்’ படத்தில் மருத்துவ கொள்ளைகள் குறித்து தோலுரித்து பேசினால் போதுமா? சம்பாதித்த பணத்தில் நான்கு மருத்துவமனைகளைக் கட்டி மருத்துவ சேவை என்றால் என்ன? என்பதை நிருபித்து காட்டி இருக்கலாமே!‘சர்க்கார்’ படத்தில் இலவசங்கள் குறித்து கடுமையான விமர்சனங்கள் வைத்த நீங்கள் தமிழகத்தில் இலவசமாக தொலைகாட்சி பெட்டிகள், மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் போன்றவற்றை தேர்தல் வாக்குறுதியாக கட்சிகள் அறிவித்த போது, ”இலவசம் முக்கியமல்ல, நேர்மையான நிர்வாகம் தான் மக்கள் எதிர்பார்ப்பது, உழைக்கத் தயார், வேலை தாருங்கள் மக்கள் தாங்களாகவே அனைத்தையும் வாங்கிக் கொள்வார்கள்” என சொல்லி இருக்கலாமே!

2006-2011 திமுக ஆட்சி காலத்தில் சன்பிக்சர்ஸ் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்த காலத்தில் உங்கள் காவலன் படம் பாதிக்கப்பட்டது. அதை எதிர்க்க துணிவின்றி அமைதி காத்து, 2011 தேர்தலில் ஜெயலலிதா கேட்காமலே அதிமுகவிற்கு ஆதரவு தந்தீர்கள்! ஏன் ஜெயலலிதா நேர்மையான ஆட்சி தரக் கூடியவர் என்பதாலா? அதிமுக வெற்றி பெற்ற பின் அந்த வெற்றியில் அணிலாய் உங்கள் பங்களிப்பும் இருந்தது என சொன்னதற்காக ஜெயலலிதாவால் அவமானப்படுத்தப்பட்டீர்களே! உங்கள் தன்மானம் எங்கே போனது?
2011 தேர்தலில் ஜெயலலிதாவிற்கு வலிந்து ஆதரவு தெரிவித்த போது.தலைவா படத்தில் டைம் டூ லீட் என்ற வாசகத்தை பேனரில் வைத்தற்காக படத்தை திரையிட ஜெயலலிதா அரசு தடுத்த போது கொட நாடு ஓடிச் சென்று பார்க்கப் போனீர்கள். ஜெயலலிதா பார்க்கவே விரும்பாததால் திரும்பி வந்தீர்கள். இது பற்றி பொதுவெளியில் பேசவும் பயந்து, அம்மா அவர்கள் தலைவா படம் வெளியீட்டிற்கு உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து, அம்மாவின் கோபத்திற்கு காரணமான ‘டைம் டு லீட்’ என்ற வாசகத்தை அகற்றினீர்களே..!

அரசியலில் ஈடுபடுவதற்கான முதல் தகுதியே துணிச்சல் தான் விஜய் அவர்களே?! அது உங்களிடம் இருக்கிறதா? என சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்! சர்க்கார் படத்தில் ஜி.எஸ்.டி பற்றி பேசியதற்காக பாஜகவினரின் கோபத்திற்கு ஆளானீர்கள்! அதை சமாளிக்க மோடியை நேரில் சந்தித்தீர்களே! மோடி உங்களிடம் விதித்த நிபந்தனை என்ன? சொல்லத் தயாரா? தற்போதும் கூட, ‘சில முன் நிபந்தனைகளுடன் தான் நீங்கள் அரசியலில் இறங்கிக் கொள்ள பாஜக இசைவு தெரிவித்துள்ளது’ எனச் சொல்லபடுகிறதே..? உண்மையை விளக்குவீர்களா..? உங்களை துவேஷமாகப் பார்த்த இந்துத்துவர்களும், தினமலர் போன்ற பத்திரிகைகளும் இன்று நேசமாகப் பார்ப்பதன் பின்னணி என்ன?உங்களால் சொல்லவே முடியாது. ஏனென்றால், கருப்பு பணத்தில் புரளும் உங்களால் மத துவேஷத்திற்கு எதிராகவோ, ஊழலுக்கு எதிராகவோ ஒரு போதும் குரல் கொடுக்கவோ, செயல்படவோ முடியாது.

இதோ பக்கத்து மாநிலமான கர்நாடகத்தில் பிரகாஷ்ராஜ் எப்படி சுதந்திரமாக அரசியல் கருத்துகளை மனம் திறந்து பேசுகிறார்! பாஜகவை துணிச்சலாக எதிர்க்கிறார். அநீதியை எதிர்க்க முடிந்தவர்களால் மட்டுமே மக்கள் நம்பிக்கையை பெற முடியும்.
எம்.ஜி.ஆர் ஆக ஆசைப்படுகிறீர்கள்! ஆனால், தமிழகத்தில் யாராலும் எதிர்க்க முடியாதவராக கருணாநிதி கருதப்பட்ட காலத்தில் தான் அவரை துணிந்து எதிர்த்தார் எம்.ஜி.ஆர். அதனால், அவரது உலகம் சுற்றும் வாலிபன் படத்தை திரையிட முடியாத சூழலை கருணாநிதி உருவாக்கினார். எத்தனையோ பல தாக்குதல்களை சமாளித்து தான் எம்ஜி.ஆர் தலைவனாக வெற்றி பெற்றார். ஜெயலலிதாவும் ஏராளமான எதிர்ப்புகளை சந்தித்து தான் மேலெழுந்து வந்தார்!வலிகளை தாங்க முடியாவிட்டால், அரசியலை நினைத்துக் கூட பார்க்க முடியாது! எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்படும் ஒரு அரசியலை நினைத்து பார்க்கவே கூடாது! ஏனெனில், அது துன்பத்தையே பரிசளிக்கும்.அதைத் தொடர்ந்து பனையூரில் உள்ள அவரது வீட்டுக்குப் பக்கத்தில் விஜய் கட்டி வைத்துள்ள ரசிகர்மன்ற ஆபீசில் இரண்டுநாள் சட்டமன்றத் தொகுதிவாரியாக ரசிகர்களின் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார் விஜய். அதில் “காமராஜர் பிறந்த தினத்தன்று தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு ஊரிலும் இரவு பாடசாலை அமைக்க வேண்டும். அதற்கான இடத்தைத் தேடுங்கள்” என உத்தரவிட்டு அதன்படி இரவு பாடசாலையையும் கடந்த 15ம் தேதி துவங்கிவிட்டார். அத்துடன் காங்கிரஸின் ராகுல்காந்தி ஸ்டைலில் தமிழகம் முழுவதும் பாத யாத்திரை நடத்தப்போகிறார் என செய்திகள் வெளியானது.
எப்பொழுதும் விஜய்க்கென சமூக வலைத்தளங்களில் ஒரு டீம் இருக்கும். அந்த டீமை சேர்ந்தவர்களிடம், “இனி அஜித்தை தாக்கி மட்டும் செய்திகள் வெளியிட வேண்டாம். ரஜினியை விட விஜய் பெரிய ஆள் என்கிற பிம்பத்தை உருவாக்குங்கள். விஜய்யின் பெயர் இளைஞர்களுக்கு பெரிய அளவிற்கு போய்ச் சேரவேண்டும்” என விஜய் உத்தரவிட்டிருக்கிறார்.
ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் “உங்கள் ஊரில் அரசியல் ஆர்வம்மிக்க இளைஞர்களை கண்டுபிடியுங்கள். அவர்கள் எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும் பரவாயில்லை. அவர்களை விஜய் மன்றத்தில் சேர்த்து பொறுப்பு கொடுங்கள். இந்த வேலை அடுத்த வருடத்திற்குள் நடக்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

“விஜய் அரசியலுக்கு வந்தால் நாங்கள் அவரை வரவேற்போம்” என அண்ணாமலையும், வானதி சீனிவாசனும், நயினார் நாகேந்திரனும், குட்டித்தலைவரான அமர்பிரசாத் ரெட்டியும் அறிக்கை விட்டனர். முன்பு ஜோசப் விஜய் என்று விமர்சித்த பா.ஜ.க.வினர் இன்று விஜய்க்கு ஆரத்தி எடுக்கின்றார்கள்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ரஜினியை அரசியலுக்கு கொண்டுவர ஒரு டீம் முயன்றது. குருமூர்த்தி தலைமையில் இயங்கிய அந்த டீமில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக இருந்து ஓய்வு பெற்றவர்கள் இருந்தனர். அந்த டீம் மறுபடியும் இயங்க ஆரம்பித்திருக்கிறது. அவர்கள் விஜய் அரசியலுக்கு வந்தால் அவரது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவை பற்றி ஒரு நீண்ட அறிக்கையை தயார்செய்து ஓய்விலிருக்கும் விஜய்யிடம் படிக்கக் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த டீம் 2021ல் ரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் என சர்வே எடுத்த டீம். ரஜினி, தி.மு.க., அ.தி.மு.க.வில் இருந்து தொண்டர்களைப் பிரித்து எடுத்து ஒரு கட்சியை உருவாக்கினால் இருபதிலிருந்து இருபத்திரெண்டு சதவீத வாக்குகளைப் பெறுவார். ரஜினியுடன் விஜய் இணைந்தால் ஆட்சி அமைப்பார் என பி.ஜே.பி.க்கு அறிக்கை கொடுத்த டீம். இப்பொழுது ரஜினியின் அரசியல் வரவு ‘சூனியம்’ ஆனதால், அந்த வாக்குகள் விஜய் பக்கம் வரும் என விஜய்க்கு சொல்லியிருக்கிறார்கள்.
அதனால்தான் நான் ரஜினியை விட பெரிய ஆள் என சமூக வலைத்தளங்களில் பரப்பச் சொல்லியிருக்கிறார். விஜய் 2014ல் நரேந்திரமோடியை சந்தித்தார். கோவையில், விஜய் அப்பா சந்திரசேகரின் ஏற்பாட்டில் நடந்த அந்த சந்திப்பை, “அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” என அப்பா மீது பழிபோட்டு தப்பித்தார் விஜய்.
இப்பொழுது அவர் அரசியலுக்கு வர வேண்டுமென்றால் தனியாகத்தான் வரவேண்டும். அதற்கு ஏராளமான பணம் தேவைப்படும். ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் இருபது கோடி ரூபாய் தேவைப்படும் என்ற இன்றைய சூழ்நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்டமைப்பை ஏற்படுத்த நூற்றுக்கணக்கான கோடிகள் தேவைப்படும். இதற்கான நிதி உதவியை யார் செய்வார்கள்?
ஏற்கெனவே ரஜினியை சுற்றியிருந்த பா.ஜ.க. டீம் தற்பொழுது விஜய்யை சுற்றி வியூகம் அமைத்துள்ளது. ‘பாராளுமன்றத் தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்தவேண்டும். மோடி எதிர்ப்பு ஓட்டுக்களை அவர் சிதறடிக்க வேண்டும் என்பது தான் விஜய் அரசியல் வியூகத்தின் டார்கெட்’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
இதற்கிடையே “நான்தான் புதுச்சேரி எம்.பி.” என்று புஸ்சி ஆனந்த் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு, பாத யாத்திரை போன்றவை எல்லாம் நடக்காத விசயங்கள் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தை சேர்ந்தவர்கள். முன்னர் சசிகலா காலில் அ.தி.மு.க. வினர் விழுவதுபோல இப்பொழுது புஸ்சி ஆனந்தின் கால்களில் விழ ஆரம்பித்துவிட்டார்கள் விஜய் ரசிகர்கள்.
விஜய் அரசியலுக்கு வருவது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர் சினிமாவை விட்டு விலகுவதை எண்ணி ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். விஜய் அரசியலுக்கு வருவேன் என இதுவரை அறிவிக்கவில்லை. ஆனாலும் பலர் அவர் அரசியலுக்கு வருவார் என்றே கூறி வருகிறார்கள். இதுகுறித்து விஜய்யின் நெருங்கிய வட்டாரங்களை கேட்ட போது அவர்கள் விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்றே கூறி வருகிறார்கள். இந்த நிலையில் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பிரபல ஜோதிடர் சீதா சுரேஷ் கூறியிருப்பதாவது: விஜய் அரசியலுக்கு வருவார். அதே நேரம் சுக்கிரன் தோஷம் முடியும் வரை சினிமாவில்தான் நடிப்பார். சினிமாவுக்கு முழுக்கு போட மாட்டார்.அது மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தொடங்குவதற்கான அனைத்து திட்டங்களையும் தீவிரமாக செய்வார். ஆனாலும் சினிமாவிலிருந்து விலக மாட்டார். விஜயகாந்திற்கு விருச்சிக லக்னம் இருப்பதால் சந்திர மங்கள யோகம் இல்லை. விஜய்க்கு சந்திரன்- செவ்வாய் சேர்ந்திருக்கும். எனவே விஜய் அவரே சொந்தமாக கட்சி ஆரம்பித்து தனியாக நின்று ஜெயிக்க முடியாது. அதையும் மீறி அவர் தேர்தலில் போட்டியிட்டால் யாராவது அவருக்கு எதிராக நின்று தோற்கடிப்பார்கள். ஆகவே விஜய்- விஜயகாந்துடன் இணைந்துதான் அரசியலில் செயல்படுவார் என ஜோதிடர் தெரிவித்துள்ளார்.விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா கூறியதாவது:- அரசியல் என்பது வேறு.. சினிமா என்பது வேறு.. விஜய் மாணவர்களுக்கு உதவி செய்வது நல்ல விஷயம். விஜய் அரசியலுக்கு வருகிறாரா இல்லையா என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். அவர் சொல்வதற்கு முன்பாக அதைப்பற்றி பேசுவது சரியாக இருக்காது” என்றார். விஜயகாந்தை ஆரம்ப கட்டத்தில் செய்தது போலவே விஜயும் மாணவர்களுக்கு உதவி செய்து அதே பாணியை பின்பற்றுவதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற ரீதியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “எதையுமே எதிர்பார்க்காமல் தன்னால் முடிந்ததை மக்களுக்கு செய்த ஒரே தலைவர் விஜயகாந்த் மட்டும்தான். அதனால் விஜயகாந்த் மாதிரி நாம் என்று யாராவது நினைத்தால் அதனுடைய விளைவு மிக மோசமானதாக இருக்கும். விஜயகாந்தை பார்த்து மக்களுக்கு நல்லது செய்தால் அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் விஜயகாந்த் மாதிரி வர முடியுமா என்பது ஒரு மில்லியன் கேள்வி… விஜயகாந்தின் வாழ்க்கை ஒரு சரித்திரம். அதனால் பொறுத்து இருந்து பார்ப்போம்” என்றார்.
நடிகர் விஜய் விரைவில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை சந்திக்க உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.