உள்ளாட்சி தேர்தல் எடப்பாடிக்கு அக்னீபரீட்சை ?

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் செ 15 க்குள்ள நடத்தியே ஆகவேண்டிய நிலையில் அதிமுக கட்சிக்கு பல சவால்களும், சிக்கலும் இருக்குது. இந்த தேர்தல் அதிமுகக்கு மிகப்பெரிய அக்னீபரீட்சையாக மாறியிருக்குது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்த 9 மாவட்டங்களுக்கும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தல் நடத்தணும்னு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்துச்சு. ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்காக மாநில தேர்தல் ஆணையமும் தீவிரமாக தயாராகி வருது. இதனோட இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும்னு எதிர்பாரக்கப்படுது.

கடந்த சட்டமன்ற தேர்தல்ல தோல்வி அடைஞ்ச பிறகு அதிமுகவிற்கு இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுது. தொண்டர்கள் மத்தியிலும், கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் கட்சியின் மதிப்பை மீட்டு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக இருக்குது. இந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக எதிர்கொண்டு இருக்கும் சவால்களும், சிக்கல்களும் என்னென்னன்னு பார்க்கலாம்.   முதல் சிக்கல் : கோடநாடு அதிமுகவிற்கு இருக்கும் முதல் சிக்கல், பெரிய சிக்கல்னு பார்த்தா அது கோடநாடு வழக்குதான். 2017 ஏப்ரல் 24ல் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. சயான், மனோஜோட சேர்த்து மொத்தம் 11 பேர் மேல இந்த வழக்கில் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், இதில் தமிழ்நாடு அரசு மேல் விசாரணை நடத்தி வருது. இந்த வழக்குல எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சயான் வாக்குமூலம் கொடுத்ததாக தகவல்கள் வந்துள்ள நிலையில் விசாரணை சூடு பிடிச்சு போய்க்கிட்டிருக்குது. அதிமுகவிற்கு இது மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்து இருக்குது. மொத்த அதிமுகவையும் இந்த வழக்கு பதற்றமான சூழ்நிலைக்கு தள்ளிடுச்சி. அதிமுகவிற்கு ஆளும் திமுக தரப்பு வைத்த செக் போலத்தான் இந்த வழக்கு பார்க்கப்படுது. திமுகவோட பிரச்சாரங்களில் கண்டிப்பாக கோடநாடு வழக்கு முக்கியமான அங்கம் வகிக்க போகுது. கோடநாடு வழக்கில் அதிமுக கொதிப்பிலும் பதற்றத்திலும் இருப்பது சட்டசபை புறக்கணிப்பு தொடங்கி தொடர் பேட்டிகள் வரை பலவற்றில் தெளிவாக தெரியுது. கண்டிப்பா அதிமுகவின் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் இந்த வழக்கு பாதிப்பை ஏற்படுத்தும்னு உறுதியா சொல்லலாம். முக்கியமா எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் பிரச்சாரத்தில் இந்த வழக்கு பலவகையில அழுத்தம் கொடுக்கும்னு சொல்றாங்க.

அடுத்த சிக்கல் கோடநாடு வழக்கு மாதிரி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு எதிராக ஆளும் கட்சி விசாரணைகளை நடத்திக் கிட்டு வருது. ராஜேந்திர பாலாஜி சொத்துகுவிப்பு வழக்கு, எஸ்பி வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு, அவரின் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டுகள், பொள்ளாச்சி வழக்கில் அதிகரிக்கும் கவனம், சென்னையில் குடிசை மாற்று வாரிய கட்டிடங்களில் செய்யப்பட்ட முறைகேடுகள், இதில் ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்னு ஒவ்வொரு முன்னாள் அமைச்சர்களுக்கும் எதிராக பல கேஸ்கள், விசாரணைகள் நடைபெற்று வருது மனரீதியாக அதிமுகவின் தேர்தல் பணிகளை இது பெரிய அளவில் பாதிக்கும் வாய்ப்புகள் இருக்குது. அமைச்சர்கள் தேர்தல் மேல கவனம் செலுத்துவதில சிக்கல் ஏற்படுத்தும்.

அடுத்த சிக்கல்: மூன்றாவதாக அதிமுகவின் கூட்டணி கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் அந்த கட்சிக்கு வாக்கு ரீதியாக உதவி செய்யுமா என்ற கேள்வி எழுந்து உள்ளது. பாஜகவிற்கு எதிரான சமீபத்திய சில வீடியோ சர்ச்சைகள் உள்ளாட்சி தேர்தலின் போது அதிமுகவிற்கு எதிராக திரும்பும் வாய்ப்புகள் இரேக்குதுன்னு சொல்றாங்க. பாமகவுடன் அதிமுக வைத்திருக்கும் கூட்டணி வடமாவட்டங்களில் அக்கட்சிக்கு உதவினாலும் பெரிய அளவில் வெற்றியை இது தீர்மானிக்குமா என்பது சந்தேகம்தான். 10.5 சதவீத வன்னியர்கள் உள் இட ஒதுக்கீடு விஷயத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கோபத்தில் இருக்கிறாங்க.பாமகவின் கோரிக்கையை ஏற்று எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் இன்னும் தென் மாவட்டங்களில் சர்ச்சையாகிட்டுத்தான்இருக்குது. இதனால் நெல்லை, தென்காசி உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு இது எதிராக திரும்பும் வாய்ப்புகளும் உள்ளதுங்கிறாங்க.

அதற்கடுத்த சிக்கல் : இதெல்லாம் போக கட்சிக்கு உள்ளேயே அதிமுகவில் நிறைய பூசல்கள் இருக்குது. கட்சிக்கு உள்ளேயே நிர்வாகிகள் பல்வேறு ஈகோ யுத்தங்கள் காரணமாக பிரிஞ்சு கிடக்கிறாங்க. வெளியே ஒற்றுமையாக இருந்த மாதிரி காட்டிக்கிட்டாலும் உள்ளே கட்டுப்பாடு இல்லை. இது தேர்தல் நேரத்தில் கட்சிப் பணிகளை செய்றதுல அதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்தும். யார் சொல்வதை கேட்பது, யாருக்காக பணிகளை செய்வது, போஸ்டரில் யார் யார் புகைப்படங்களை போடுவதுன்னு பல விஷயங்களில் அதிமுகவிற்கு இது பெரிய சிக்கலை ஏற்படுத்தும்னு கழக உடன்பிறப்புகள் பேசிக்கிறாங்க.

இந்த சிக்கலைத் தாண்டி என்னென்ன சவால்கள் இருக்குன்னு பாப்போம். முதல் சவால் இப்போ தேர்தல் நடக்க இருக்கிற 9 மாவட்டங்கள்ல காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்கள்ல திமுகதான் வலிமையாக இருக்கிறது. திமுக ஆளுங்கட்சியா இருக்கிறதுனால இங்க திமுக நிர்வாகிகள் ஏற்கனவே தேர்தல் பணிகளை தீவிரமாக செய்யத் தொடங்கிட்டாங்க. திமுகவுக்கு ஸ்டிராங்கான ஏரியாங்கிறதால இங்க அதிமுக தேர்தல் பணிகளை செய்றதும், ஆளும் கட்சியை எதிர்த்து வெற்றி பெர்றதும் கொஞ்சம் சவாலான காரியம்னு அடிச்சி சொல்றாங்க. இதை அதிமுக எப்படி செய்ய போறதுங்கிறது மிகப்பெரிய கேள்வியாக இருக்குது.

அடுத்த சவால் : எடப்பாடி பழனிசாமிக்கு தனிப்பட்ட வகையில் இந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் ஒரு அக்னி பரீட்சைன்னு தான் சொல்லணும். தனிப்பட்ட வகையில் தன்னுடைய ஆளுமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்குது. கட்சி நிர்வாகிகள் மீதான வழக்குகள், பல்வேறு நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியே போறது, கட்சிக்கு உள்ளேயே இருக்கும் சில எதிர்ப்புகள், சசிகலா எதிர்ப்பு உள்ளிட்ட பல விஷயங்களுக்கு எதிராக கட்சியை உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற வைக்க வேண்டிய சவால் எடப்பாடி பழனிசாமி முன்னாடி இருக்குது. ஆளும் கட்சியாக தேர்தலை சந்திப்பதற்கும், எதிர்க்கட்சியாக தேர்தலை சந்திப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்குது. எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி எப்படி தேர்தலை சந்திப்பார் என்கிற கேள்வி எழுந்திருக்குது.

அடுத்த சவால் 4:  திமுகவின் கடந்த மூன்று மாத ஆட்சிக்கு எதிராக பெரிய அதிருப்தி இல்லை. தேர்தல் பணிகளிலும் அக்கட்சி வேகம் காட்டி வருது. பல்வேறு நலத்திட்டங்கள், அறிவிப்புகள் மூலம் திமுக பெரிய அளவில் ஸ்கோர் பண்ணிடுச்சின்னு சொல்லலாம். கொரோனா கட்டுப்பாடு, பெட்ரோல் விலை குறைப்பு, பெண்களுக்கான இலவச மாநகர பேருந்து பயணம் உள்ளிட்ட பல விஷயங்கள் திமுகவிற்கு ஆதரவாக திரும்பியிருக்குது. சில வாக்குறுதிகளை திமுக இன்னும் நிறைவேத்தலை தான் இருந்தாலும் அதிமுக எதை சொல்லி பிரச்சாரம் பண்ணும், எதை சொல்லி வாக்கு கேட்கும் என்ற கேள்வியும் எழுந்திருக்குது. இது அக்கட்சிக்கு இந்த தேர்தலில் வியூகம் வகுப்பதில்நிறைய சவால்களை கொடுக்கும்.இவ்வளவு சிக்கல்களையும் சவால்களையும் தாண்டி அதிமுக ஓரளவாவது ஜெயிக்குமாங்கிற எதிர்பார்ப்பு எல்லார் கிட்டேயும் இருக்குது.திமுகவ எடுத்துகிட்டா நல்லாட்சி பண்ணிகிட்டு வர்றாரு ஸ்டாலின்.ஒவ்வொரு அமைச்சர்களும் தொண்டர்கள் சிபாரிசு க்கு இங்க வராதீங்கன்னு அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டி வச்சிருக்காங்க.இது தொண்டர்கள் மத்தியில கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்குது.
இதையும் தாண்டி திமுக தொண்டர்கள் வேலை செஞ்சாத்தான் உள்ளாட்சித் தேர்தலில் கணிசமா ஜெயிக்க முடியும். என்ன செய்யப் போராரு முதல்வர் ஸ்டாலின்.