அண்ணாமலையால் பாஜகவின் உள் கட்டமைப்பே தமிழகத்தில் ஆட்டம் கண்டுள்ளது. அதன் அடையாளமாகவே அந்தக் கட்சியில் இருந்து அடுத்தடுத்து பலர் விலகிக் கொண்டுள்ளனர். தன் வரம்பு மீறிய பேச்சுக்களால், அரசியலை வன்முறைக் களமாக்கும் அண்ணாமலையால் அதிமுக விலகும் வாய்ப்பு கனிந்துள்ளதா..?
ஒருவரையடுத்து ஒருவராக அடுத்தடுத்து பாஜகவில் இருந்து பலரும் விலகுவது உணர்ந்து தன்னை சற்றேனும் சுய பரிசீலனைக்கு உள்ளாக்கிக் கொள்ள விரும்பாத அண்ணாமலை, தோழமைக் கட்சியான அதிமுகவின் மீது பாய்ந்து குதறி வருவதோடு, தன்னுடைய அடிப் பொடிகளை வைத்தும் அதிமுகவிற்கு எதிராக வசைமாறிப் பொழிந்து பகை அரசியல் செய்கிறார்! இதனால் இரு கட்சி அணிகளும் பகைக்களம் கண்டுள்ளன!
ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு சிலர் மாறிச் செல்வதும், தன்னை பாதிப்புக்கு ஆளாக்கிய தலைமை மீது குற்றம் சாட்டுவதும் புதிதல்ல! காலம்காலமாக நடப்பது தான்! ஆனால், அண்ணாமலை காலத்தில் தான் ஏராளமானவர்கள் பாஜகவில் இருந்து விலகிய வண்ணம் உள்ளனர். தமிழகத்தை பொறுத்த அளவில் அப்படி பாஜகவில் இருந்து விலகியவர்கள் சேர முடிந்த ஒரே கட்சியாக அதிமுக தான் இருக்க முடியும். தங்களின் ஜென்மப் பகைவனாகக் கருதும் திமுகவிற்கோ, காங்கிரசிற்கோ அவர்கள் செல்வதற்கு அதிக வாய்ப்பில்லை. அரசியலுக்குள் அதிரடியாக நுழைந்த அண்ணாமலை இன்னும் எதையுமே கற்கவில்லை. ஆனால், எல்லாம் தெரிந்தவர் போலப் பேசி அனைவரையும் பகையாளியாக ஆக்கிக் கொள்கிறார்!
பாஜகவிலேயே கூட, தங்கள் கவுரவத்தை காப்பாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் அனைவருமே அண்ணாமலையிடம் இருந்து சற்று விலகியே இருக்கின்றனர். அண்ணாமலையைச் சுற்றி சில்லறை தலைவர்களான கிரிமினல்களே வலம் வருகின்றனர். அண்ணாமலைக்கு பாஜகவை வளர்க்கும் நோக்கம் அறவே கிடையாது! தன்னை வளர்த்துக் கொள்வதில் மட்டுமே குறியாக உள்ளார். பொதுவாக எந்த தேசியக் கட்சியும் இது போன்ற நபர்களை நீண்ட நாட்கள் அனுமதிக்காது! பாஜக தலைமை அண்ணாமலையை பீஸ் பிடுங்கப்பட்ட பல்ப்பாக எப்போது வேண்டுமானாலும் தூக்கி எறிந்துவிட வாய்ப்புள்ளது.
பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலத் தலைவர் சி டி ஆர் நிர்மல் குமார் கடந்த சில தினங்களுக்கு முன் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் எடப்பாடி முன்னிலையில் இணைந்ததைத்தொடர்ந்து, பாஜகவின் அறிவுசார் பிரிவு மாநில முன்னாள் செயலாளர் எஸ் வி கிருஷ்ணன். தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ஓபிசி அணியின் மாநிலச் செயலாளர் அம்மு, திருச்சி புறநகர் மாவட்டத் துணைத் தலைவர் டி விஜய் மற்றும் சென்னை மேற்கு மாவட்ட பாஜகவின் ஐடி.பிரிவினர் 13 பேர் என பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த வண்ணம் உள்ளனர்!
இது குறித்து அண்ணாமலை கூறுகையில், ”பாஜகவின் இரண்டாம் மூன்றாம் கட்ட தலைவர்களை திராவிட கட்சிகள் இழுத்து வருகின்றன திராவிட கட்சிகளின் இந்த செயல் பாஜகவின் வளர்ச்சியை தான் காட்டுகிறது! திராவிட கட்சிகளைச் சார்ந்து தான் பாஜக வளரும் என்ற குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் இன்று பாஜகவிலிருந்து ஆட்களை எடுத்துச் சென்றால்தான் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பாஜகவில் இருந்து நிர்வாகிகள் வெளியேறுவது நல்லது தான். அப்போது தான் புதியோர்களுக்கு பதவி வழங்க முடியும். பாஜகவினரை இணைத்துக் கொண்டு தாங்கள் வளர்ந்து விட்டதாக காட்ட அதிமுக முயற்சிக்கிறது! பாஜகவில் இருந்து யாரை வேண்டுமானாலும் இழுத்துச் செல்லட்டும். அவர்களின் ஒவ்வொரு வினைக்கும் நிச்சயம் எதிர்வினை இருக்கும்” என்கிறார் அண்ணாமலை.இந்தப் பேச்சு சாமார்த்தியமாக இருக்கலாம்! சாகஸமாகக் கூட இருக்கலாம்! ஆனால், சமநிலை பேணுவதற்கு குந்தகமாகிவிடும் என்பதை அண்ணாமலையால் உணர முடியவில்லை! உண்மையில் அண்ணாமலையின் முதிர்ச்சியற்ற அரைவேக்காட்டுத்தனத்திற்கான ஆகச் சிறந்த உதாரணம் தான் இந்தப் பேச்சு!
பாஜகவினரை இணைத்துக் கொண்டு தாங்கள் வளர்ந்து விட்டதாக காட்ட அதிமுக முயற்சிக்கிறதாம்! தமிழகத்தில் அதிமுகவின் உயரம் என்ன? பாஜகவின் உயரம் என்ன..? அதிமுகவின் உயரம் இமயமலை என்றால், பாஜகவின் உயரம் பரங்கிமலை தான்! பரங்கி மலையில் இருந்து சில கற்களை எடுத்துப் போட்டுக் கொண்டு இமயமலை வளர்ந்துவிட்டதாக காட்ட முயற்சிக்கிறதாம்..!அண்ணாமலைக்கு எதிராக களம் கண்ட அதிமுகவினர்!
தன் இயலாமைகளை மறைத்துக் கொண்டு, தன்னை வீரன் போலக் காட்டிக் கொள்ள முயன்றாலும், அண்ணாமலையின் எல்லை மீறிய பேச்சுக்கள் அவர் ஒரு கோழை என்பதை நிர்தாட்சயண்யமின்றிச் சொல்லிவிடுகின்றன!
அதே சமயம் அதிமுகவில் வழிகாட்டு உறுப்பினராக இருந்த சோழவந்தான் மாணிக்கம், இளம் பெண்கள் பாசறை நிர்வாகி அரவக்குறிச்சி செந்தில்நாதன், மீனவர் அணி தலைவர் நீலாங்கரை முனுசாமி போன்றவர்கள் பாஜகவில் சேர்ந்த போது எடப்பாடி பழனிசாமி இப்படி எல்லாம் புலம்பவில்லை! இது போதாது என்று செங்கோட்டையின் மகன் கதிர் ஈஸ்வரனையும் அண்ணாமலை இழுத்துக் கொண்டு இருப்பதும் அதிமுக தலைமைக்கு தெரியாதது அல்ல! அனைத்துக்கும் மேலாக பாஜக கொடுக்கின்ற ஆதரவினால் தான் பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிச்சாமிக்கு குடைச்சலுக்கு மேல் குடைச்சல் தருகிறார் என்பதை அதிமுகவில் அனைவருமே உணர்ந்துள்ளனர். இவ்வளவையும் தாங்கிக் கொண்டு. தெரிந்தும் தெரியாதது போல ஒரு அரசியலை அதிமுக தலைமை செய்து கொண்டிருப்பதில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி எவ்வளவு பெரிய ஜித்தன், வில்லனுக்கு வில்லன் என்பதை உணர வேண்டாமா..?
அரசியலில் தவளை போல தன் இருப்பை அடிக்கடி காட்டிக் கொண்டிருக்கும் நோக்கில் கத்திக் கொண்டிருந்தால், பாம்பின் வயிற்றுக்குத் தான் இரையாக வேண்டி இருக்கும்! அண்ணாமலை பரமசிவன் கழுத்து பாம்பு என்ற நினைப்பில் கருடனைப் பார்த்து கனைக்கிறார்!
பாமகவும் பாஜகவிடம் இருந்து விலகி வருகிறது! தேமுதிகவும் விலகிவிட்டது! திமுகவோ கூட்டணி பலத்தோடு, ராஜபலத்தையும் கொண்டுள்ளது! இந்த நிலையில் ஒன்றிரண்டு எம்.பி, எம்.எல்.ஏ சீட்டு வேண்டும் என்றால் கூட, அதிமுக நிழலில் ஒதுங்குவதைத் தவிர, வேறு நாதியற்ற நிலையில் தான் தமிழக பாஜக உள்ளது. அப்படி இருக்க, அந்த அதிமுகவையும் பகைத்து ஒற்றை மரமாக பாஜகவை நிற்க வைக்க அண்ணாமலை விரும்பினால், ஒரு வகையில் அதுவும் தமிழகத்திற்கு நல்லது தான்! மேலும், எடப்பாடியை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு பன்னீர் செல்வத்தை பாஜகவில் இணைத்துக் கொண்டால், அதைவிட மகிழ்ச்சி அதிமுகவிற்கு இருக்க முடியாது! பாஜகவிடம் இருந்து விலகிக் கொள்ள அதிமுகவிற்கு வசதியாகிவிடும்!
பாஜகவின் டெல்லி தலைமை அதிமுகவுடன் கூட்டணி பேச இனி அண்ணாமலையை அனுப்ப முடியாது! அனுப்பினால், அதற்கு நல்ல பலன் கிடைக்காது!”அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருக்கும் வரை அதிமுக-பாஜக கூட்டணி சாத்தியமில்லை” என அதிமுக தலைமை சொன்னால், அண்ணாமலையை ஓரம் கட்டுவதைத் தவிர, டெல்லித் தலைமைக்கு வேறு வழி இருக்காது. இல்லை என்றால், ஏதாவது ஒரு கட்டத்தில், ‘என்ன நடந்தாலும் பரவாயில்லை, பாஜகவிடம் இருந்து விலகி நிற்க, அண்ணாமலையின் வாய்க் கொழுப்பை ஒரு வாய்ப்பாக்கிக் கொள்ளலாம்’ என அதிமுக முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம்!
இப்படி எல்லாம் நடக்கும்பட்சத்தில், ‘தங்களை பிடித்த எல்லா பீடையும் தாங்களாகவே விலகிக் கொண்டன…’ என அதிமுகவினர் மகிழவே செய்வர்.
அண்ணாமலை அரசியலில் இருந்தே அடியோடு சொந்தக் கட்சியாலேயே தூக்கி எறியப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அப்படி நடந்தால் தமிழக அரசியல் களம் சற்றேனும் ஆரோக்கியமடையும்அதிமுகவை விமர்சிக்காதீங்க.. தமிழக பாஜகவை கண்டித்த ‘டெல்லி’..பின்னணியில் இப்படி ஒரு பிளானாமே! அதிமுக தலைமை பற்றியோ அக்கட்சி தொண்டர்கள் குறித்தோ எதுவும் குறை கூறி பேசவேண்டாம் என்று பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக பாஜக கூட்டணி இடையே லேசான மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதிமுகவுடன் நாம் (பாஜக) சுமூக உறவை வைத்துக்கொள்ள வேண்டும். அதிமுக தலைமை பற்றியோ அக்கட்சி தொண்டர்கள் குறித்தோ எதுவும் குறை கூறி பேசவேண்டாம். தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் இதனை பின்பற்ற வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாஜகவின் மாநில தகவல் தொழில்நுட்ப செயலாளராக இருந்த சி.டி நிர்மல் குமார் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்டார். அவரைத் தொடர்ந்து பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் அடுத்தடுத்து இணையும் படலம் நடைபெற்று வந்தது. அதுவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை காட்டமாக விமர்சித்ததும் பாஜகவினர் மத்தியில் புகைச்சலை உண்டாக்கியது. பாஜக நாராயணன் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு அதிருப்தியால் கட்சி தாவுவது சகஜம் என்றாலும், கூட்டணிக் கட்சியான பாஜகவில் இருந்து வந்த நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமியே நேரடியாக வரவேற்றது பாஜகவினருக்கு கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்தது என்றே சொல்லப்படுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போதே அதிமுக – பாஜக இடையே லேசான உரசல் வெளிப்பட்டதை காண முடிந்தது. பாஜக தலைவர் அண்ணாமலையும் நேரடியாக இவ்விவகாரம் தொடர்பாக பேசினார். பா.ஜ.க. நிர்வாகிகளை அழைத்து கட்சி நடத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு எனவும் காட்டமாக பேசினார். அதிமுக-பாஜக கூட்டணியில் சலசலப்பு மேலும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை பா.ஜ.க.வினர் எரித்து போராட்டம் நடத்தினார்கள். இதனால், அதிமுக – பாஜக நிர்வாகிகள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால், அதிமுக – பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் தான் கூட்டணி என்றும் அதிமுக மூத்த தலைவர்கள் வெளிப்படையாகவே பேசி கூட்டணி முறிய இருப்பதாக வெளியான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்து இருந்தனர். ஜே பி நட்டா அறிவுறுத்தல் இந்த அறிவிப்புக்கு பிறகு கூட பாஜக நிர்வாகிகள் சிலர் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்ததை பார்க்க முடிகிறது. இதனிடையே, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கடந்த 10-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தமிழக பாஜக நிர்வாகிகளை தனியாக சந்தித்து ஜேபி நட்டா ஆலோசனை நடத்தினார். அப்போது பாஜக நிர்வாகிகளுக்கு சில அறிவுறுத்தல்களையும் விடுத்ததாக சொல்லப்படுகிறது. சுமூக உறவை வைத்துக்கொள்ள வேண்டும் அதாவது, அதிமுகவுடன் நாம் (பாஜக) சுமூக உறவை வைத்துக்கொள்ள வேண்டும். அதிமுக தலைமை பற்றியோ அக்கட்சி தொண்டர்கள் குறித்தோ எதுவும் குறை கூறி பேசவேண்டாம். தமிழக பாஜக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் இதனை பின்பற்ற வேண்டும். மீறி நடக்கக் கூடாது” என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கண்டிப்புடன் கூறினாராம். ஜேபி நட்டாவின் இந்த பேச்சு மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்பது உறுதியாகி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறும் கருத்தாக உள்ளது. அண்ணாமலையை விமர்சித்த கடம்பூர் ராஜூ அதிமுக – பாஜக நிர்வாகிகள் இடையேயான கருத்துமோதல்கள் கடந்த சில நாட்களாக அடங்கியிருந்த நிலையில் நேற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, அண்ணாமலை குறித்து விமர்சித்ததும் அவருக்கு பதிலடியாக தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பேசியதும் மீண்டும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது. கடம்பூர் ராஜூ, அண்ணாமலையை ஒரு கத்துக்குட்டி என்றும் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் டெபுடேஷனில் வந்திருப்பதாகவும் ஆட்சி மாற்றம் வந்தால் மீண்டும் காவல்துறைக்கு திரும்பி விடுவார் என்றும் விமர்சித்தார். இதற்கு உடனடியாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ட்விட்டரில் காட்டமாக எதிர்வினையாற்றினார். நாராயணன் திருப்பதி கூறுகையில், அண்ணாமலை அவர்கள் டெபுடேஷனில் அரசியலுக்கு வந்திருப்பதாகவும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மீண்டும் காவல்துறைக்கு திரும்பி விடுவார் என்றும் அவன், இவன் என்ற ஏக வசனத்தில் பேசியுள்ளதோடு, அரசியலில் கத்துக்குட்டி என்றும் விமர்சித்து பேசியிருப்பது அரசியல் அநாகரீகத்தின் வெளிப்பாடு. டெபுடேஷனில் அரசியலில் இருப்பது அதிமுகதான் என்பதை கடம்பூர் ராஜூ உணர வேண்டும். கடம்பூர் ராஜூ அரசியல் கத்துக்குட்டி தமிழகத்தில் லஞ்ச, ஊழலை ஒழித்து கட்டி, நாகரீக அரசியலுக்கான மாற்றத்தை உருவாக்க தான் அண்ணாமலை அரசியல் பிரவேசம் என்று கடம்பூர் ராஜு போன்ற அரசியல் கத்துக்குட்டிகளுக்கு தெரியாதது வியப்பல்ல. கட்சியை அண்ணாமலை அவர்கள் காலி செய்து விடுவார் என்று சொல்லும் கடம்பூர் ராஜு அவர்களே, எங்கள் கட்சியை நாங்கள் பார்த்து கொள்கிறோம். காலியாகிக் கொண்டிருக்கும் உங்கள் கட்சியை நீங்கள் கவனமாக பார்த்து கொள்ளுங்கள்” என மிகக் கடுமையாகவே பதிலடி கொடுத்தார். இதுதான் டெல்லியின் விருப்பம் அதிமுக – பாஜக நிர்வாகிகள் இடையே சில சில கருத்து மோதல்கள் இருந்தாலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி நீடிப்பதையே டெல்லி தலைமை விரும்புவதால், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் இந்த மோதல்கள் தேர்தல் கூட்டணியை பங்கம் செய்யாது என்றே அரசியல் வட்டாரத்தில் பேசும் கருத்தாக உள்ளது.அதிமுக – பாஜக கூட்டணி முறிகிறதா?’ – பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன?
அ.தி.மு.க – பா.ஜ.க இடையே சமீபகாலமாக வார்த்தைப்போர் நிலவிவருகிறது. அத்தோடு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் பா.ஜ.க-விலிருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்தது பா.ஜ.க-வினரை மேலும் கோபப்படுத்தியது. கூட்டணி தர்மத்தை மீறி அ.தி.மு.க செயல்பட்டு வருவதாகக் கூறி பா.ஜ.க-வினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். `ஒவ்வொரு வினைக்கும் கண்டிப்பாக ஓர் எதிர்வினை இருக்கும்’ என அ.தி.மு.க-வை அண்ணாமலை கடுமையாகச் சாடியிருந்தார். தொடர்ந்து இரு கட்சியினரும் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோரின் உருவப்படங்களை எரித்தனர்.
இதைத் தொடர்ந்து நடந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு, `பா.ஜ.க-வுக்கும், அ.தி.மு.க-வுக்குமிடையே எந்தவித மோதலும் இல்லை. கூட்டணிக் கட்சிகளுக்குள் சிறுசிறு சலசலப்பு இருக்கத்தான் செய்யும். பா.ஜ.க-வுடனான கூட்டணி தொடரும்’ என அ.தி.மு.க தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அ.தி.மு.க தலைவர்கள், நிர்வாகிகள் யாரும் பா.ஜ.க-வையோ அண்ணாமலையையோ விமர்சிக்கக் கூடாது என்று எடப்பாடி தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே தமிழகத்துக்கு வந்த பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, ‘அ.தி.மு.க குறித்தோ, எடப்பாடி பழனிசாமி குறித்தோ யாரும் விமர்சிக்கக் கூடாது. அவர்களுடன் சுமுகமான உறவை வைத்துக்கொள்ள வேண்டும். இதை தமிழக பா.ஜ.க நிர்வாகிகளும் தொண்டர்களும் பின்பற்ற வேண்டும். மீறினால் கட்சி நடவடிக்கை பாயும்’ என அறிவுறுத்திச் சென்றார். ஆனாலும், தொடர்ந்து அ.தி.மு.க., பா.ஜ.க இடையேயான வார்த்தைப்போர் முற்றிவருகிறது.
`அதிமுக – பாஜக கூட்டணி முறிகிறதா?’ – பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன?
இந்த நிலையில்தான், பா.ஜ.க மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை அமைந்தகரையிலுள்ள ஐயாவு மஹாலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவரிடம் பேசினோம். “ `அ.தி.மு.க-வினர் நம்மைவிட்டு விலகுவதற்கான எல்லா வேலைகளும் செய்து வருகிறார்கள். எனவே, அவர்களோடு இனி தொடர்வதா… இல்லை தனித்து நிற்பதா என்பதை நம் கட்டமைப்பை வைத்துதான் முடிவுசெய்ய வேண்டியிருக்கிறது. அதற்காக பூத் அளவில் நாம் உழைக்க வேண்டும். எனவே, அ.தி.மு.க உடனான கூட்டணிக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்கும் நேரத்தில் இருக்கிறோம்’ என்று கூட்டணி குறித்து அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது” என்றார்.
இன்று கூட்டத்தில் பேசப்பட்ட கூட்டணி விவகாரத்தின் பின்னணி குறித்துப் பேசினார், தமிழக பா.ஜ.க தலைமைக்கு நெருக்கமான இரண்டாம் கட்ட தலைவர் ஒருவர். அவர் பேசுகையில், “மூன்று மாதங்களுக்குள் தமிழகத்தில் பா.ஜ.க-வின் உண்மையான நிலை என்ன என்பது குறித்து அறிக்கை கேட்கப்பட்டிருக்கிறது. அதில் பா.ஜ.க குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
அதனடிப்படையில் பா.ஜ.க தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும். அப்படிக் கட்சியின் வளர்ச்சியில் தொய்வு ஏற்படுமாயின், உடைந்த அ.தி.மு.க-வில் யாரெல்லாம் பா.ஜ.க-வோடு கூட்டணி அமைக்கத் தயாராக இருக்கிறார்களோ அவர்களைப் பயன்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க தேசியத் தலைமை ஆலோசனை மேற்கொண்டிருக்கிறது. எனவே, இப்போது எங்களுக்கு இருக்கும் ஒரே வேலை தி.மு.க Vs பா.ஜ.க என்கிற போட்டியை உருவாக்க, கட்சியின் கட்டமைப்பை உறுதிப்படுத்த வேண்டும். அதை டெல்லி தலைமை தெளிவாகவும், கண்டிப்புடனும் உத்தரவிட்டிருக்கிறது” என்றார்.
தமிழக பாஜக வளரவேண்டும் என நினைபபவர்கள் யார்? தமிழக பாஜக பத்தோடு பதினொன்றாக இருக்க வேண்டும் என நினைப்பது யார் என தெரிந்துகொள்ள அண்ணாமலை போட்ட ஸ்கெட்ச் வேலை செய்ய ஆரம்பித்துள்ளது. தமிழக அரசியல் களம் தற்பொழுது பாஜகவை சுற்றியே நகர்கிறது என கூறலாம், குறிப்பாக தமிழக பாஜகவில் என்ன நடக்கிறது? யார் என்ன பேசுகிறார்கள்? யார் வெளியில் செல்கிறார்கள்? யார் என்ன கருத்தை கூறுகிறார்கள்? என மற்ற கட்சிகள் அதனை விமர்சித்தோ, ஆதரித்தோ பேசி அரசியல் செய்யும் நிலையில் தான் தற்பொழுதைய தமிழக அரசியல் உள்ளது. தமிழக பாஜக தான் தற்பொழுது பேசுபொருளாக ஆகிவிட்டது, இவ்வளவுக்கும் தமிழக பாஜக ஆளுங்கட்சியும் கிடையாது, எதிர்க்கட்சியும் கிடையாது தமிழகத்தில். இப்படி பாஜக தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறிவர காரணம் அண்ணாமலை என்ற இளைஞரின் தமிழக பாஜக தலைமை, ஜே.பி.நட்டாவும், அமிஷாவும், பி.எல்.சந்தோஷும் எதை முன்னிறுத்தி அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக நியமித்தார்களோ அதற்கு உண்டான காலம் தற்பொழுது நெருங்கிவிட்டது. தமிழக பாஜக இத்தனை ஆண்டுகளாக ஏதாவது ஒரு கட்சிகளுடன் கூட்டணி வைக்கும், இல்லையேல் தனித்து நிற்கும் ஆனால் பெருமளவில் மக்கள் பிரதிநிதிகளை பெற முடியாத நிலையில் இருந்து வந்தது என்றே கூற வேண்டும். தமிழக பாஜக அதிமுக கூட்டணியில் இருக்கும் பொழுது அதன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் வேறு மாதிரி இருக்கும், திமுக கூட்டணியில் இருக்கும் பொழுது பாஜக மீது வைக்கப்படும் விமர்சனங்கள் வேறு மாதிரி இருக்கும். ஆனால் தற்பொழுது தமிழக பாஜக அதனை எல்லாம் தகர்த்துவிட்டு கூட்டணி அமைந்தால் அது பாஜக தலைமையில் தான், இப்படி தமிழக பாஜக தலைமையில் கூட்டணி அமைந்தால்தான் பாஜக அடுத்த கட்டத்துக்கு நகரும் என்ற நிலையை எட்டி உள்ளது. இதற்கு அண்ணாமலை போட்ட திட்டமும் ஒரு முக்கிய காரணமாகும், குறிப்பாக தற்பொழுது உள்ள சூழலில் திமுக தலைமையிலான கூட்டணி எப்படியும் காங்கிரஸ் அல்லது பாஜக அல்லாத எதிர் கூட்டணியில் தான் 2024 தேர்தலை சந்திக்கும். அதிமுக கூட்டணி தற்பொழுது இருக்கும் இரட்டை தலைமை முடிவிற்கு வந்த உடன் திமுகவை எதிர்ப்பதை பிரதானமாக வைக்குமே தவிர தேசிய அரசியலில் என்றுமே அதிமுக பெரிய அளவில் ஆர்வம் காட்டியதில்லை. அதிமுகவை பொறுத்த வரையில் மக்கள் மத்தியில் நாங்கள் எம்ஜிஆர் துவங்கிய கட்சி, ஜெயலலிதா வழி நடத்திய கட்சி திமுகவின் எதிர்ப்பே எங்கள் நிலைப்பாடு என்கிற ரீதியில் அரசியல் செய்து தான் வருமே தவிர தேசிய அரசியலில் பெரிய அளவில் அதிமுக என்றுமே ஈடுபட நினைத்ததில்லை, ஈடுபடமும் ஈடுபடாது. இந்த நிலையில் தற்பொழுது தமிழகத்தில் தேசிய அரசியலில் பங்கு பெற விரும்பும் கட்சிகளான புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க, அமமுக இது போன்ற கட்சிகள் தங்களுடைய பிரதிநிதிகள் நாடாளுமன்றம் வரை செல்ல வேண்டும் என நினைக்கும் கட்சிகளாகும். இந்த கட்சிகளை எல்லாம் ஒன்றிணைத்து ஒரு புதிய கூட்டணியை பாஜக தலைமையில் அமைக்கும் பட்சத்தில் பாஜக பிரதான கட்சியாகவும் இருக்கும், மக்கள் பிரதமர் மோடி தான் 3 வது முறையாக வர வேண்டும் என நினைக்கும் சமயத்தில் பாஜக கூட்டணியை ஆதரிக்க செய்வார்கள் அதனாலதான் அண்ணாமலை தற்பொழுது காய்களை நகர்த்தி வருகிறார். இந்த சூழலில் அண்ணாமலை நகர்த்தும் காய்களை ஒரு சிலர் பாஜக ஆதரவாளர்களாக காண்பித்துக் கொண்டு அண்ணாமலை செய்வது சரியில்லை, பாஜக கூட்டணியுடன் தான் இருக்க வேண்டும், அண்ணாமலை ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? அண்ணாமலை ஏன் கூட்டணியை விட்டு விலக நினைக்கிறார்? என்கிற ரீதியில் பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இது அண்ணாமலைக்கு கட்சியில் யார் யாரெல்லாம் முன்னேற வேண்டும் என நினைக்கிறார்கள். யாரெல்லாம் இப்படியே இருந்தால் போதும் என நினைக்கிறார்கள் என கண்டறிய நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது. காரணம் பாஜகவில் தலைவர் பொறுப்பை அண்ணாமலை கையில் எடுத்த சமயம், ‘எனக்கு ஒரு வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது, நான் எனக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் தமிழகத்தில் பாஜகவை பிரதான கட்சியாக கொண்டு வருவேன்’ என சபதம் எடுத்து அந்த சமயத்தில் தலைவர் பொறுப்பிற்கு வந்தார். இதனால்தான் பாஜக அடுத்த கட்டத்திற்க்கு நகர வேண்டும், நாம் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்றால் முதலில் கூட்டணியில் இருந்து வெளியே வரவேண்டும், முதலில் கூட்டணி இருந்து வெளியே வரவேண்டும் என்றால் பாஜக தலைமையில் கூட்டணி அமைய வேண்டும், பாஜக தலைமையில் கூட்டணி அமைந்தால் மட்டுமே பாஜக தலைமையை ஏற்றுக் கொண்டு கூட்டணிக்கு வரும் கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் தாமரை மலர வைக்க முடியும் அதனை விடுத்து நம் மற்ற கட்சி கூட்டணியில் ஒட்டிக் கொண்டு இருந்தால் தமிழகத்தில் பாஜக என்றைக்கும் தனியாக வளரவே வளராது, நமது சித்தாந்தம் இங்கே தமிழ்நாட்டில் இறங்க வேண்டும் என்றால் அதற்க்கு பாஜக தலைமையிலான கூட்டணி வேண்டும் என நினைத்து அண்ணாமலை முழுவதும் செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாக தற்பொழுது கூட்டணியில் நான் இருக்கப் போவதில்லை என அண்ணாமலை கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் அண்ணாமலை கூட்டணியில் இருந்து பிரிந்தால் யாரெல்லாம் ஒப்புக்கொள்கிறார்கள் எனவும், கூட்டணியில் இருந்து பிரிந்தால் யாரெல்லாம் அதற்கு மறுக்கிறார்கள் எனவும் அண்ணாமலை அனைவரையும் கவனித்து வருகிறார் கூட்டணியில் பிரிந்தால் வாருங்கள் நம் தனியாக களம் காணலாம் என்பவர்கள் கட்சிக்காக வேலை செய்பவர்கள், கட்சி வளரவேண்டும் என நினைப்பவர்கள் என்றும்! கூட்டணியில் இருந்து பிரிந்தால் ஏன் நாம் தனியாக பிரிய வேண்டும் நாம் அப்படியெல்லாம் பிரியக்கூடாது நாம் கூட்டணி கட்சியில் மட்டுமே இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் எல்லாம் கட்சி வளருவதை விரும்பாதவர்கள் என அண்ணாமலை கணக்கு போட்டு விட்டார். இதன் காரணமாகத்தான் அண்ணாமலை இந்த முடிவை அறிவித்ததாக வெளியில் செய்தி பரவ விட்டது தெரியவந்துள்ளது, விரைவில் இது குறித்த பல செய்திகள் வெளிவரும் எனவும் தெரிகிறது4 மாநில தலைவர்களை மாற்றி அறிவித்த மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தமிழக பாஜக தலைமையை மட்டும் எந்த விதத்திலும் மாற்றம் ஏற்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டார். இதற்குப் பின்னணியில் அண்ணாமலை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறார், அவரை அப்படியே செல்ல விட்டால் பாஜகவின் வளர்ச்சிக்கு தான் சரியாக இருக்குமே தவிர அவரை மாற்றுவது என்பதெல்லாம் சரியான முடிவல்ல என ஜே.பி.நட்டா தெளிவாக உணர்ந்துள்ளார்.
