கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை… எடப்பாடி சசிகலா இணைவார்களா ?

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை… எடப்பாடி சசிகலா இணைவார்களா ?
இது தான் இப்ப ஹாட் டாபிக்கா போய்க்கிட்டிருக்கு.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை சூடு புடிச்சு போய்க்கிட்டிருக்கிற நெலைல இதை எப்படி சந்திக்கிறதுங்கிற வகையில் அரசியலில் இரண்டு துருவங்களா இருக்கிறமாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை ஒண்ணா சேத்து வைக்க அதிமுக சீனியர்கள் சிலர் படுதீவிரமான முயற்சிகளை எடுத்துட்டு வர்றதா சொல்றாங்க .

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி நள்ளிரவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்கு தமிழகத்தை உலுக்கியது.எல்லாருக்குமே தெரியும். இந்த சம்பவத்தில் ஓம் பஹதூர்ங்கிற காவலாளி கொல்லப்பட்டார். அப்புறம் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்த ஆவணங்கள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதுன்னு பரபரப்பாகப் பேசப்பட்டுச்சு.

இந்த வழக்கு பல மர்ம முடிச்சுகளுடன் தொடர்ந்து போய்க்கிட்டே இருக்குது. கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களாக சொல்லப்பட்டவர்கள் அடுத்தடுத்து சினிமா கட்சிகளை மிஞ்சும் வகையில் மர்மமான முறையில் உயிரிழந்திட்டாங்க.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தின்போதே, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு உள்ளதாக புகார் கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போ திமுக ஆட்சியில் கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்குது. இந்த வழக்கில மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு பரபரப்பான தகவல்கள் வெளியாகி கிட்டே வருது.

ஆனால் இந்த மறுவிசாரணைங்கிறதே தம்மை சிக்க வைக்கும் சதி என குமுறினார் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித்திடமும் எடப்பாடி பழனிசாமி புகார் செய்தாரு. அடுத்து சட்டசபையிலும் இந்த விவகாரம் பூதாகரமா வெடிச்சது. இன்னொருபுறம் இவ்வழக்கில் சசிகலா, இளவரசி இரண்டு பேரையும் விசாரிக்கணும்னு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போட்டிருக்காங்க.அது இன்னமும் விசாரணைக்கு வரலை.

இதுக்கிடைல கோடநாடு கொலை-கொள்ளை வழக்கை எந்த பாரபட்சமும் காட்டாமல் முறையாக விசாரணை செய்யணும்; அதிமுககாரங்க சொல்றது மாதிரி அரசியல் பழிவாங்கல் இல்லாம உள்ளது உள்ளபடி வெளிப்படணுங்கிற உத்தரவை முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டிருக்காராம். இதனால கோடநாடு கொலை-கொள்ளை வழக்கில் நடந்தது என்ன என்பதை முழுமையாக வெளிப்படுத்தும் வகையில் விசாரணைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருது. திமுக அரசின் இந்த நடவடிக்கைபத்தி அதிமுக தரப்பில் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருதாம்.

சில நாட்களுக்கு முன்னால். மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அதிமுக மாஜிக்கள் சிலர் சந்தித்து பேசினாங்களாம். அப்போ,அண்ணே இந்த விவகாரத்தில் சசிகலாவின் உதவி இருந்தால்தான் உங்களுக்கு சிக்கல் இல்லாமல் இருக்கும்ணே. அதிமுகவில் சசிகலாவை இணைக்கிறதப் பத்தி நீங்களே நேரில் போய் பேசுங்கண்ணேன்னு சொல்லிருக்காங்க. 2026-வரைக்கும் திமுக ஆட்சியை ஒண்ணும் செய்ய முடியாது. அதனால சசிகலாவை அதிமுகவுக்கு கொண்டு வந்தா மட்டுமே அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அதிமுகவுக்கு வலிமை கிடைக்கும்.. கட்சி வலிமையாக இருந்தால்தான் திமுகவை எதிர்கொள்ள முடியும். இல்லைன்னா, திமுக, சசிகலா என இரண்டு எதிரிகளை நாம நேருக்கு நேரா சந்திக்க வேண்டியதிருக்கும்னு மந்திராலோசனை நடத்திருக்குது.
தற்போதைய சூழ்நிலையில இந்த நெருக்கடியிலேரேந்து தப்பிக்கிறுதுக்கு ஒரே வழி சசிகலாவை சந்திச்சு சமாதானம் ஆவதுதான்.. அதற்கான வழியை மட்டும் பாருங்கண்ணேன்னு எடப்பாடி பழனிசாமிக்கு அந்த சீனியர்கள் அட்வைஸ் பண்ணியிருக்கிறாங்க.ஆனால், அதற்கு எடப்பாடி பழனிசாமியோ, கோடநாடு விவகாரத்தை எனக்கு எதிராக ஸ்டாலினிடம் சொல்லி தூண்டிவிடுவதே நம்மவர்தான்.. யாரைச் சொல்றாருன்னு புரியுதா ? அதே நபர்தான் சசிகலாகிட்டேயும் பேசிக்கிட்டிருக்கிறாரு சசிகலாகிட்ட எனக்கு எதிரா அத்தனையையும் தூண்டிவிடுவதும் நம்மவர்தான்.. நம்மவர் சொல்வதை சசிகலா இப்போது முழுமையாக நம்புறாரு. அப்படிப்பட்ட நிலையில் சசிகலாவிடம் எப்படி நான் சமாதானமாகப் போக முடியும்? நடப்பது நடக்கட்டும்.. என்னை ஆளை விடுங்கள், நான் பார்த்துக்கிறேன்னு காட்டமாகவே சொன்னாராம் எடப்பாடி பழனிசாமி.எடப்பாடிக்கு என்ன கவலன்னா சசிகலா உள்ள வந்திட்டா கட்சி கைவிட்டு போயிடும்ணு பயப்படுறாரு.அதனால வழக்கை சந்திக்க தயாராகிட்டாரு. இருந்தாலும் , சசிகலாவையும் எடப்பாடி பழனிசாமியையும் சந்திக்க வைக்க சில முயற்சியை எடுத்துகிட்டுதான் வர்றாங்களாம் அதிமுக சீனியர்கள். இந்த முயற்சி கை கூடி வந்தால் அடுத்தடுத்த பரபரப்புகள் தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்கும்ங்கிறாங்க அரசியல் ஆர்வலர்கள்.சசிகலா எடப்பாடி சந்திப்பு நடக்குமாங்கிறத காலம்தான் பதில் சொல்லணும்.