யூனியன் பிரதேசமாகப் போகும் கொங்கு நாட்டின் முதலமைச்சராகிறார் எடப்பாடியார் !

தனி யூனியன் பிரதேசமாகிறதா கொங்கு நாடு!

மத்திய அரசை, ‘ஒன்றிய அரசுன்னு’, தி.மு.க.,வினர் சொல்லிட்டு வர்றதால கடும் அதிருப்தியில் உள்ள மோடி அரசு, அதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக சொல்றாங்க.

தமிழகத்தின் மேற்கு பகுதியான கொங்கு மண்டலத்தை, ‘கொங்கு நாடு’ என்ற பெயரில், தனி யூனியன் பிரதேசமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை துவக்கியுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்குப் பின், அரசியல் களம் மந்த நிலையை நோக்கிச் செல்லும் என அனைவரும் நினைத்த நேரத்தில், பா.ஜ., மேலிடத்தின் அடுத்தடுத்த நகர்வுகள், அதை சூடு பிடிக்க வைத்துள்ளது .
அதுக்கு என்ன காரணம்னா

புதிதாக பதவியேற்ற தமிழக அரசு, ஜி.எஸ்.டி., கூட்டத்தில் எதிர்ப்பு, ‘நீட்’ தேர்வின் தாக்கத்தை ஆய்வு செய்ய குழு அமைத்தது என, மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருது. இதன் உச்சகட்டமாக தமிழக சட்டசபையில், ‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையை களங்கப்படுத்தி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசியது, மத்திய அரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈஸ்வரன், தி.மு.க.,வின் உதய சூரியன் சின்னத்தில் நின்று, சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றவர். ஜெய்ஹிந்த் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசிய போது, அதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.,வினர் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

மேலும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சமீப காலமாக மத்திய அரசை ஒன்றிய அரசு எனக்கூறி வருவது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ., – அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒன்றிய அரசு என்ற வார்த்தையை, தி.மு.க.,வினர் தொடர்ந்து பயன்படுத்திதான் வருகின்றனர். பிரிவினைவாதத்தை துாண்டும் நோக்கத்தில் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்துவதாக, தேசபக்தர்களும் அதிருப்தி தெரிவித்து வருகின்றார்கள்.

தி.மு.க.,வினரின் இந்த நடவடிக்கைகள், மத்திய அரசையும், பா.ஜ., மேலிடத்தையும் கடும் கோபம் அடையச் செய்துள்ளது.ஏற்கனவே இது தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பினர் தரப்பில், மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.,வினரும், இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு மேலும் பொறுமை காக்க முடியாது என்ற எண்ணத்தில், இதற்கு பதிலடி கொடுக்க, மத்திய அரசு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இதன் வெளிப்பாடாகவே, சமீபத்தில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற முருகனை பற்றிய குறிப்புகளில், கொங்கு நாடு என்ற வார்த்தை இடம் பெற்றதாகவும், மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் மேற்கு பகுதியில் உள்ள கொங்கு மண்டலத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, நீலகிரி, கரூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த மண்டலத்தில், 10 லோக்சபா தொகுதிகளும், 61 சட்டசபை தொகுதிகளும் உள்ளன. இவற்றோடு அருகில் உள்ள சில தொகுதிகளையும் சேர்த்து, மொத்தம் 90 சட்டசபை தொகுதிகளுடன் கொங்கு நாடு என்ற பகுதியை பிரித்து, அதை புதுச்சேரி போல, தனி யூனியன் பிரதேசமாக
அறிவிக்கவும், மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசு நிர்வாக வசதிக்காக மாவட்டங்களைப் பிரிக்க இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இடம் இருக்கும் போது மத்திய அரசு நிர்வாக வசதிக்காக மாநிலத்தில் ஒரு பகுதியைப் பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவிக்க முடியும் என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.

கொங்கு மண்டலத்தில், பா.ஜ.,வுக்கென தனியாக ஓட்டு வங்கி இருக்குது. சமீபத்தில் இப்பகுதியில் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., படுதோல்வியை சந்தித்துஇருந்தது.இது முதல் தடவை அல்ல
கடந்த 25 ஆண்டுகளாக கொங்கு மண்டலத்தில் அதிமுக தான் அதிக இடங்களைக் கைப்பற்றி அசைக்க முடியாத கட்சியாக இருக்குது. இதை வைத்து, எதிர்காலத்தில் தி.மு.க.,வுக்கு விளையாட்டு காட்ட, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன், பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மண்டலத்தைச் சேர்ந்த முருகன், மத்திய இணை அமைச்சராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக இந்த பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை, தமிழக பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் வாயிலாக கொங்கு மண்டலத்தில், தி.மு.க.,வுக்கு நேரடி போட்டியாக பா.ஜ.,வை முன்னிறுத்துவதற்கான முயற்சிகள் துவங்கிஉள்ளன.புதிதாக அமையும் யூனியன் பிரதேசத்துக்கு கொங்கு நாடு என, பெயர் சூட்டவும் திட்டம் தயாராக உள்ளதாக கூறப்படுது. இதற்காக துணை நிலை கவர்னரை நியமிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன..

வரும், 2024ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, கொங்கு நாடு யூனியன் பிரதேசத்தை அமைக்கும் நடவடிக்கைகள் துவக்கப்பட உள்ளதாகச் சொல்றாங்க. ஒன்றிய அரசு என வெறுப்பேற்றி வருவோருக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், தமிழகத்தில் தங்கள் கட்சி எதிர்காலத்தில் வலுவான கட்சியாக காலுான்றவும், இந்த யூனியன் பிரதேச அஸ்திரத்தை, பா.ஜ., கையில் எடுத்துள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுப்பிரமணிய ஸ்வாமியின் அறுபடை வீடுளாக திருச்செந்தூர் திருத்தணி திருப்பரங்குன்றம் பழனி,ஸ்வாமிமலை பழமுதிர்சோலை இருந்தாலும் ஏழாவது ஸ்தலமாக இருக்கும் மருதமலை கொங்கு மண்டலத்தில் இருக்குது.தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் வேல் யாத்திரை மூலம் அறுபடை வீடுகளுக்கும் சென்றார்.முருகன் அருளால் கொங்கு மண்டலத்தைக் கைப்பற்ற பாஜக தீவிர முயற்சி எடுக்கிறது.ஆனால் கொங்கு மண்டலத்தின் அசைக்க முடியாத தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்து வருகிறார்.உடனடியாக கொங்கு மண்டலத்தை யூனியன் பிரதேசமாக அறிவித்தாலும் சரி மத்தியில் பாஜக ஆட்சி முடிவதற்குள் அறிவித்தாலும் கொங்கு மண்டலத்தின் முதல் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி யைத்தான் கொங்கு மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்
.அப்போது பாஜக கூட்டணியில் இருந்தால் வானதி சீனிவாசன் துணை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

Related posts: