பிடிஆரை சந்தித்த லாட்டரி மார்டின் ! என்ன காரணம் ?

 

தமிழகத்தில் லாட்டரி விற்பனையை மீண்டும் தொடங்குவதற்கான பணிகளை அரசு தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மாஃபியா கும்பல்களிலேயே பெரிய தலைவராக அறியப்படுபவர் சாண்டியாகோ மார்ட்டின்
2003ஆம் ஆண்டில் லாட்டரி தொழிலை தடை செய்து மார்டினை நெருக்கடிக்குள் தள்ளியது அதிமுக அரசு ஆட்சி மாறினாலும் கூட லாட்டரியை மீண்டும் கொண்டு வந்து மக்களின் ஆத்திரத்தை சம்பாதித்துக் கொள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தயங்கினார் தமிழகத்தில் நிதி வருவாயை பெருக்குவதற்கு தமிழக அரசு லாட்டரி சீட்டு விற்பனையை தொடங்க வேண்டும் என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் அண்மையில் யோசனை தெரிவித்திருந்தார்.

லாட்டரி சீட்டை அரசே ஏற்று நடத்த வேண்டும். லாட்டரி சீட்டு நடத்துவதால் பல குடும்பங்கள் சீரழிகின்றன என்று விவாதங்கள் வரும். ஆனால் ஆதார் கார்டு வைத்துக்கொண்டு ஒருவருக்கு 10 டிக்கெட் மட்டுமே என்று வரைமுறைப்படுத்த வேண்டும். இதனை விவாதித்து முடிவு எடுக்கலாம். விவாதம் நடத்தினால் தான் எதற்கும் தீர்வு கிடைக்கும். புதுபுது உத்திகளை கையாண்டால் மட்டுமே வருவாயை பெருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

கடுமையான நிதி நெருக்கடியில இருக்கிற தமிழக முதல்வருக்கு கார்த்தி சிதம்பரம் வருவாயைப் பெருக்குவதற்காக அந்த யோசனையை சொன்ன போது பலரும் அதனை எளிதாக கடந்து சென்று விட்டார்கள். ஆனால், தமிழக அரசு அதற்கான வேலைகளில் இறங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் மதுரைக்கு வந்திருந்த லாட்டரி தாதா மார்ட்டின், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியதாக தெரிகிறது. இந்த பின்னணியில், வேறு பல மாநிலங்களில் உள்ளது போல தமிழக அரசே லாட்டரியை ஏற்று நடத்த வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்

18 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனை கொடிகட்டிப் பறந்தது. இதனால் குறிப்பிட்ட சிலருக்கு அதிக அளவிலும், அரசுக்கும் பெரும் வருவாய் கிடைத்து வந்தது. அதேநேரம், என்றாவது ஒருநாள் லட்சாதிபதி ஆகிவிடுவோம் என்ற நம்பிக்கையில், தினக்கூலி பணியாளர்களும், ஏழை எளியோரும் லாட்டரி சீட்டுக்கு அடிமையாகவே இருந்தனர். சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை லாட்டரி வாங்கவே செலவழித்ததால், அவர்களது குடும்பங்கள் நடுத்தெருவில் நின்றன. இதில் மதுபோதைக்கு அடிமையான பலர்,லாட்டரி சீட்டுக்கும் அடிமையாகிக் கிடந்தனர்.

தமிழகத்தில் லாட்டரி போதையால் பல குடும்பங்கள் சீரழிந்துள்ளன. ஆனால், இதற்கு பின்னால் மிகப்பெரிய மாஃபியா கும்பல் செயல்பட்டு வருவது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். இந்த மாஃபியா கும்பல்களிலேயே பெரிய தலைவராக அறியப்படுபவர் சாண்டியாகோ மார்ட்டின்.

ஆட்சியில் யார் அமர்ந்தாலும் உடனே போய் ஒட்டிக் கொண்டு தன்னையும், தனது லாட்டரி சாம்ராஜ்யத்தையும் பாதுகாத்துக் கொள்வது மார்டினுக்கு கைவந்த கலை. 1990களின் துவக்கத்தில் அதிமுகவுடன் இணக்கமான உறவு வைத்துக் கொண்டு தனது லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலை வெற்றிகரமாக நிலைநாட்டிக் கொண்ட மார்டின், பின்னர் கருணாநிதி அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அவருக்கு விசுவாசமானார். மீண்டும், 2001ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அங்கு தனது விசுவாசத்தை இடம் மாற்றிக் கொள்ள முயன்ற மார்ட்டினுக்கு தோல்வியே பரிசாக அமைந்தது.
அப்போது நடந்த பேரம் படியாததால்தான், 2003ஆம் ஆண்டில் லாட்டரி தொழிலை தடை செய்து மார்டினை நெருக்கடிக்குள் தள்ளியது அதிமுக அரசு என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதற்குள்ளாகவே மார்ட்டினின் சொத்து மதிப்பு 10ஆயிரம் கோடியை தாண்டியிருந்தது. ஆனால், மீண்டும் திமுக ஆட்சி மாறினாலும் கூட லாட்டரியை மீண்டும் கொண்டு வந்து மக்களின் ஆத்திரத்தை சம்பாதித்துக் கொள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் தயங்கினார்.

தமிழகத்தில் சட்டப்பூர்வ லாட்டரி தடைசெய்யப்பட்டிருந்தாலும் தன்னுடைய அரசியல் தொடர்புகளால் சட்டவிரோத லாட்டரி விற்பனை அமோகமாக இன்றும் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது. இதற்கு மார்ட்டினின் வலுவான அரசியல் செல்வாக்குதான் காரணம்னு சொல்றாங்க.. முன்னதாக, 2006-2011 காலகட்டத்தில் திமுகவின் நேரடி மற்றும் மறைமுக ஆசியினால் சட்டவிரோதமாக லாட்டரி தொழிலை நடத்தி வந்த மார்ட்டின் மீது, அதிமுக ஆட்சி மீண்டும் மாறியதும் சரமாரியாக வழக்குகள் பாய்ந்தன. இந்த வழக்குகளில் இருந்து தப்பிக்க அதிமுக ஆசியோடு கருணாநிதி குடும்பத்தின் மீது ஒரு வழக்கையும் அவர் தனது மனைவி மூலம் பதிவு செய்தார் என்கிறார்கள் அரசு அதிகாரிகள். இவரது மூத்த மகன் பாஜகவில் இருப்பதாகவும் ஒரு தகவல் உள்ளது.

இதனிடையே, மேற்கு வங்கம், சிக்கிம், அசாம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் லாட்டரியில் கல்லா கட்டினார் மார்ட்டின். ஆனால், அங்கும் மோசடி வழக்குகள் இவர் மீது பதியப்பட்டுள்ளன. சிக்கிம் லாட்டரி சட்டப் பிரிவுகளை மதிக்காமல், மார்ட்டின் நிறுவனம் ஏமாற்றியது. அதேபோல், கேரளாவிலும் கூட அவர் மீது கடந்த காலங்களில் வழக்குகள் பாய்ந்தன. 2019ஆம் ஆண்டில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனைக்காக, லாட்டரி அதிபர் மார்ட்டினின் ரூ. 120 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது உங்களுக்கு நினைவிருக்கலாம். மேலும், ஹவாலா புகார்களும் இவர் மீது உள்ளது. இருந்தாலும், அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, இடது சாரிகள் தொடங்கி சிறுசிறு அமைப்புகள், இயக்கங்கள் வரை மார்ட்டினின் செல்வாக்கு இருப்பதால் ஒரு விவிஐபியாகவே அவர் வலம் வருகிறார்.

இந்த பின்னணியில்தான் கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்ததும், அதன் தொடர்ச்சியாக பழனிவேல் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை லாட்டரி மார்ட்டின் சந்தித்த தகவலும் வெளியாகியிருக்குது.

டாஸ்மாக் மதுக்கடைகளை ஒரேயடியா. மூட முடியாதுங்கிறது முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் தெரியும்.அதனால படிப்படியாக குறைக்க இருப்பதாலும், கொரோனா பேரிடர் காரணமாக தமிழ்நாட்டின் நிதி நிலைமை கடும் சரிவை சந்தித்துள்ளதாலும், நிதி  வருவாய்க்காக, லாட்டரி விற்பனையை முறைப்படுத்தி அனுமதிப்பதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்படலாம்.
பொதுமக்கள் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்படுதுன்னு முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிக்கை விட்டால் சரியாப் போயிடும்! 

அதேபோல்,அண்டை மாநிலமான கேரளாவில் இன்னமும் லாட்டரி விற்பனை படுஜோராக நடந்து வருவதையும் அரசு தரப்பில் சுட்டிக்காட்டலாம். லாட்டரி விற்பனையை அனுமதித்தால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு தோராயமாக ஏழாயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்பதை காரணம் காட்டியும், பக்கத்து மாநிலங்களில் லாட்டரி விற்பனை நடப்பதாலும் ,சிக்கிம்,
நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம்,மேகலயா மாநில லாட்டரிகள் மீண்டும் தமிழ்நாட்டுக்குள் விரைவில் வலது காலடி எடுத்து வைக்கும்…..அதோடு கூட ஒரு நம்பர் லாட்டரியும் ஆன்லைன் லாட்டரியும் சேர்ந்தே வரும்..இன்னமும் தமிழ்நாட்டில பெரும்பாலான பெட்டிக்கடைகள்ல ஆன்லைன் லாட்டரி சிறப்பு கவனிப்போட நடந்து கிட்டுதானிருக்குது.

தமிழக அரசு லாட்டரியை கொண்டு வருமா, மார்ட்டின் போன்றவர்களுக்கு இடமளிக்காமல் அதனை அரசே ஏற்று நடத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.