முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பில் சந்தேகம்., படு கேவலமாக பேசிய ஆ ராசா.! கனிமொழி ரகசிய கண்டனம்.!*

 

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் ஆ ராசா., தனது பிரச்சார உரையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமியின் பிறப்பில் சந்தேகம் எழுப்பி பேசி இருப்பது, தமிழக மக்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.திமுகல இது போல் பேசுறதுக்குன்னு நாலாந்தர பேச்சாளர்கள் இருக்கிறாங்க.அந்த வேலைய இப்ப ராசா எடுத்துகிட்டாரு.பதிலுக்கு கலைஞர் குடும்பத்தப் பத்தி அதிமுக காரங்க பேச ஆரம்பிச்சா என்னாகும். ஆனா எடப்பாடியார் கவர்னருக்கும் டிஜிபிக்கும் புகார் அனுப்பியிருக்கிறார்.அதிமுககாரங்களை அமைதியாக இருக்கும் படி சொல்லிட்டாரு.

இந்த செய்தியில் திமுக எம்.பி., ஆ ராசா கூறிய வார்த்தையை, எழுத முடியலைங்கிறத வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.தமிழகத்தின் முதலமைச்சர் பதவியில் இருக்கும் ஒருவரையே இந்த வார்த்தை சொல்லி பேச முடியுமா? ங்கிற அளவுக்கு திமுக எம்.பி., ஆ ராசா பேசி இருப்பது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எங்களுக்கும் இது அதிர்ச்சி தான். இது மிகவும் கண்டனத்துக்கு உரியது. திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆ ராசாவுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும். ஆனால் கொடுப்பாரா என்பது சந்தேகம்தான்.இந்நிலையில், திமுக எம்.பி., கனிமொழி தனது ட்வீட்டர் பக்கத்தில் மறைமுகமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,

அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது.இதை எல்லோருமே மனதிலே வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும்.— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 26, 2021

“அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவு படுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லோருமே மனதிலே வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரும் விரும்பிய சமூகநீதி ஆகும்.” என்று தெரிவித்துள்ளார்.

ஆ ராசாவின் பேச்சுக்கு அவரின் பெயரை கூட குறிப்பிடாமல் கனிமொழி பதிவிட்டு இருப்பதற்கு சமூகத்தளவாசிகள் பின்னூட்டத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். பதவி வெளில என்ன வேணும்னாலும் பேசலாமா இதுக்கு யார் முற்றுப் புள்ளி வைக்கிறது.ஓட்டு போடும் மக்கள் தான் முற்றுப் புள்ளி வைக்கணும் செய்வார்களா?