ஊழல் வழக்குலேருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு எஸ்.பி.வேலுமணி யோசிச்சுகிட்டே இருக்காராம்.?

கடந்த 4 ஆண்டுகளாக கோவை மாவட்ட அதிமுக.வைப் பொறுத்தவரை யாராலும் அசைக்க முடியாத அளவுக்கு சர்வ வல்லமை படைத்தவராக வலம் வந்தவர் தான் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இப்போ சப்த நாடியும் ஒடுங்கி ஊழல் வழக்குலேருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு யோசிச்சுகிட்டே இருக்காராம்.ஆட்சியில இருக்கும் போது யாரையும் மதிக்கலை காரணம் என்னன்னா  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எல்லாமுமாக இருந்த எஸ்.பி வேலுமணி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கோவை மாவட்டத்தில் சீனியர்களாக இருந்த அதிமுக முன்னாள் நிர்வாகிகளை ஒவ்வொருவராக ஓரங்கட்டி கட்சியில் தலை தூக்க விடாம பார்த்து கொண்டார்.

எஸ்.பி.வேலுமணியால் ஓரங்கட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் செ.ம.வேலுச்சாமி, செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் எஸ்.பி.வேலுமணியின் ஆதிக்கத்தை எதிர்த்து அரசியல் பண்ணத் துணிந்துவிட்டார்கள் என்று கூறுகிறார்கள் கோவை மாவட்ட அதிமுக முன்னனி நிர்வாகிகள்.

கிணத்துக்கடவு எம்.எல்.ஏ.வாகவும் அதிமுக.வின் அமைப்புச் செயலாளராகவும் முன்னாள் அமைச்சராகவும் உள்ள செ.தாமோதரன், முன்னாள் அமைச்சரும் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ.வுமான ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் மீது தனிப்பட்ட முறையில் அதிமுக முன்னணி நிர்வாகிகள் பலரும் இன்னமும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள்.

இவர்களது ஆதரவாளர்கள் அனைவரும், கடந்த நான்காண்டுகளாக எஸ்.பி.வேலுமணியால் பழிவாங்கப்பட்டவர்கள். அதனால், அதிமுக ஆட்சியை இழந்த பிறகு இனிமேலும் எஸ்.பி.வேலுமணியின் அதிகாரத்திற்கு ஏன் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்னு எதிர்க்கத் துணிந்து விட்டனர்.

இப்போ என்ன காரணம் சொல்றாங்கன்னா முன்னாள் அமைச்சரான செ.ம.வேலுச்சாமி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முயற்சி எடுத்து பாக்க வேண்டியவர்களை யெல்லாம் போய்ப் பாத்தார். அவரோட கட்சி விசுவாசத்திற்கு மரியாதை தரும் வகையில், பல்லடம் தொகுதியில் அவரை வேட்பாளராக அறிவிக்க விரும்பினார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், செ.ம.வேலுச்சாமி அரசியலில் தலையெடுக்கவே கூடாது என்ற வெறியோடு இருந்த எஸ்.பி.வேலுமணி, அதற்கு முட்டுக்கட்டைப் போட்டார் சீட்டு கொடுக்க விடாமல் தடுத்து விட்டாராம்.

அதிமுக மீதும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதும் மாறாத விசுவாசமும். பற்றும் கொண்ட செ.ம.வேலுச்சாமியை திட்டம் போட்டு கட்டம் கட்டிய எஸ்.பி.வேலுமணியின் ஆணவத் திமிரை அடக்க இதுதான் சரியான தருணம் என்று கூறுகிறார்கள் கோவையில் உள்ள அதிமுக முன்னணி நிர்வாகிகள்.

இதுபோல, எஸ்.பி.வேலுமணியால் கடந்த நான்காண்டுகளில் பழிவாங்கப்பட்ட அதிமுக முன்னணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் (அமமுக.வில் உள்ளவர்களும்) கடந்த பல நாட்களாக ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். எஸ்.பி.வேலுமணியின் சர்வாதிகார போக்கிற்கு எதிராக முதல் கல்லை வீசியவர், அ.தி.மு.க இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில துணைத் தலைவராக இருந்த விஷ்ணுபிரபு தான்.அதிமுக.வில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஜனநாயகம் இல்லை. மாவட்டஅமைச்சர்களாக இருப்பவர்களின் ஆதிக்கம் ஓங்கிவிட்டது. இளைஞர்களுக்கு, விசுவாசிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. 2021 தேர்தல் தோல்வியில் இருந்தும் அதிமுக முன்னாள் அமைச்சர்களும், அதிமுக.வின் இரட்டை தலைமையும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்று ஆவேசமாக அறிக்கை வெளியிட்டுவிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக.வில் ஐக்கியமாகிவிட்டார்.

எஸ்.பி.வேலுமணியின் அதிகாரத் திமிருக்கு எதிராக விஷ்ணுபிரபு வீசிய கல்லால் உருவான சலசலப்பு அடங்கிப் போகாமல், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக மிரட்டிக் கொண்டிருக்கிறது. அமைச்சர் பதவியையும் ஆட்சியையும் இழந்து விட்ட இந்த தருணத்தில் தனக்கு எதிராக அதிமுக முன்னாள் நிர்வாகிகள் ஒன்றிணைவதைப் பார்த்து எஸ்.பி.வேலுமணி, திகிலடிச்சுப் போயிருக்காராம். அவரின் பரிதாப நிலையைப் பார்த்து அவரை வைத்து சம்பாதித்த அவரது விசுவாசிகள் கூட்டம் ரத்தக் கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் கோவை கழக உடன்பிறப்புகள்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பரப்புரை நிகழ்வுகளிலும் தேர்தல் பிரசாரங்களிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறக்காமல் குறிப்பிட்ட ஒரு விஷயம். அதிமுக ஆட்சியில் ஊழல் செய்த அமைச்சர்களை சிறைக்கு தள்ளாமல் விடமாட்டேன் என்பது தான்.அதிலும் குறிப்பாக  முதலில் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்குகள் விரைவில் விசாரிக்கப்பட்டு, அவரை சிறையில் தள்ளுவதற்கு திமுக அரசு நடவடிக்கை எடுக்குமென்று தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தது உங்களுக்கெல்லாம் ஞாபகம் இருக்கும்.அதற்குண்டான பொறுப்பை லட்ச ஒழிப்புத் துறை இயக்குநர் கந்தசாமி ஐபிஎஸ் இடம் ஒப்படைத்து விட்டார்.அவர்கள் மீது திமுக தரப்பில் இருந்து புதிதாக புகார்கள் எதுவும் கொடுக்க தேவையில்லை..எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக தொடுத்துள்ள ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அவர் உள்பட அனைத்து அதிமுக நிர்வாகிகள் மீதும் அறப்போர் இயக்கம், ஆம் ஆத்மி கட்சி, மக்கள் செய்தி மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஏற்கெனவே ஊழல் தடுப்புப் பிரிவில் கொடுத்துள்ள எண்ணற்ற புகார்களை தூசி தட்டி எடுத்தாலே போதும், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் அனைவருக்குமே சிக்கல்தான்..

கொரோனோ தொற்றை சமாளிக்க முடியாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் திணறி வருகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, மருத்துவர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எல்லோரும் வெளிப்படையாகவே கிண்டலடிக்க தொடங்கினாங்க.

இப்படிபட்ட தகவல்கள் எல்லாம் நம்பிக்கைக்குரிய பிரமுகர்களிடம் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்தவுடன்தான், அவரது அரசியல் ஆட்டத்தை தொடங்கியிருக்கிறாராம். கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளில் இடைவிடாது கவனத்தை செலுத்தி வரும் அதே வேளையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஒருவர் கூட ஊழல் புகாரில் இருந்து தப்பித்து விடக் கூடாது என்று ஸ்கெட்ச் போட்டு, அதையும் சத்தமில்லாமல் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் என்கிற தகவல் கெடச்சிருக்கு.

இந்தநேரத்தில், மாவட்ட அளவில் அதிமுக நிர்வாகிகளின் ஆதரவும் இல்லையென்றால் தன்னுடைய அரசியல் வாழ்வே அஸ்தமனமாகிவிடும் என்று அஞ்சி. ஒவ்வொருத்தருக்கும் ஃபோன் போட்டு அண்ணே…எப்படி இருக்கீங்க….நல்லா … இருக்கீங்களாண்ணேன்னு. பேசி வர்றாராம். எஸ்.பி.வேலுமணி. ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருந்தப்போ நம்மள சட்டை பண்ணல.இப்போ மட்டும் பாசம் பொங்குதுன்னு கூடிப் பேசி கிண்டலடிச்சிட்டு வர்றாங்களாம் கோவை மாவட்ட கழக உடன்பிறப்புகள்.

வழக்கு விசாரணை, சிறைச்சாலை வாழ்க்கை என தன்னை அலைக்கழிக்கும் சமயமாக பார்த்து, அதிமுக எதிர்தரப்பினர், தனது செல்வாக்கை சிதைத்துவிட்டால் என்ன செய்வது என்று கலங்கி போயிருக்கிறாராம் எஸ்.பி.வேலுமணி.

திமுக.வின் கோபத்தை தணிக்கும் விதமாகதான், தன் வீராப்பை எல்லாம் விட்டுவிட்டு திமுக அமைச்சர்கள் சக்கரபாணி, க.ராமச்சந்திரன் ஆகியோர் கோவையில் கொரோனோ ஆய்வுக் கூட்டத்தை கூட்டிய போது அதில் போய் வாண்டடா கலந்துகிட்டாராம். தான் மட்டும் தனியே போய் கலந்துகிட்டா, தன்னால் பழிவாங்கப்பட்ட அதிமுக முன்னணி நிர்வாகிகள் கேவலமாக விமர்சனம் பண்ணுவாங்கண்ணு மற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்களான செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், அம்மன் அர்ச்சுணன், அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், அமுல்கந்தசாமி, வி.பி.கந்தசாமி ஆகியோரையும் உடன் அழைத்துச் சென்றாராம்

எஸ்.பி.வேலுமணியின் பாசாங்கை எல்லாம் திமுக அமைச்சர்கள் கண்டுகொள்ளவே இல்லை. அழையா விருந்தாளிகளாக திமுக அமைச்சர்கள் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டது முன்னாள் அமைச்சர்களான தற்போதைய எம்.எல்.ஏ.க்களுக்கும், சில அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கும் பிடிக்கவில்லை.ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருந்து கிட்டு அதிகாரத் திமிரோடும் ஆணவப் போக்கோட திரிஞ்சப்ப எங்களை ஞாபகம் வரலையான்னு கொந்தளிப்புல இருக்காங்களாம். ஆனாலும் கட்சிக்கு கட்டுப்பட்டு அன்றைக்கு அவர்கள் எதிர்ப்பை காட்டவில்லை என்றாலும், கடந்த சில நாட்களாக அவர்களது மனங்களிலும் செயல்களிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கு.

ஊழல் வழக்குகளில் இருந்து எஸ்.பி.வேலுமணி தப்பிக்கிறதுக்குத்தான் தங்களை பகடை காயாக பயன்படுத்த தொடங்கிவிட்டார் என்பதை உணர்ந்துகொண்ட அவர்கள், எஸ்.பி.வேலுமணியிடமிருந்து தப்பிக்கத் தயாராகிவிட்டார்கள். அதேபோல மற்ற அதிமுக முன்னணி நிர்வாகிகளும், எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான அணிக்கு தலைமை ஏற்கும்படி முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவரும் சஞ்சலத்தில்தான் இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இப்படி ஒட்டுமொத்தமாக தனக்கு எதிராக அதிமுக முன்னணி நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியிருப்பதை பார்த்து, கடந்த பல நாட்களாக நிம்மதியாக தூங்க கூட முடியாமல் எஸ்.பி.வேலுமணி மரண அவஸ்தைல இருக்காராம். உண்மையான விசுவாசத்தோடு இருந்த ஒரு சில உடன் பிறப்புகள் மட்டும் போய்ப் பாத்துட்டு வர்றாங்களாம்.
முன்னாள் முதல்வர் எடப்பாடியாரைச் சந்திச்சும் புலம்புனாராம்.அதுக்கு அவரு ஏங்க டெல்லில உங்களுக்கு தாங்க செல்வாக்கு இருக்கு. ! நீங்க தான் அடிக்கடி டெல்லிக்குப் போய்ட்டு வந்துகிட்டிருந்தீங்க ..! நான் பண்றதுக்கு ஒண்ணுமில்லீங்க.. எப்படி என்னைய காப்பாத்திக்கிறதுன்னு நானே முழிச்சிகிட்டிருக்கேன்னு கைய விரிச்சிட்டாராம்.ஆட்சியில இருக்கும் போது என்னென்ன வேலையெல்லாம் செஞ்சு குடுத்தேன் இப்போ கைய விரிச்சிட்டாரேன்னு புலம்பிகிட்டே திரும்பி வந்தாராம் வேலுமணி.

ஊழல் முறைகேடுகளுக்கு குறைந்த பட்சம் 2 ஆண்டுகளுக்கு மேல்தான் தண்டனை கிடைக்கும். அப்படிபட்ட தீர்ப்புகள் வந்தால், எதிர்க்கட்சி தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமி இழப்பார். அவரைப் போல அனைத்து முன்னாள் அமைச்சர்களும் எம்.எல்.ஏ. பதவிகளையும் இழப்பார்கள். ஆறு வருடத்திற்கு தேர்தலிலேயே நிற்க முடியாது.

தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி குடுத்த மாதிரி எஸ்.பி.வேலுமணிய உள்ள தூக்கி போடுவீங்களா சார்னு கோவை மக்கள் கேட்டு கிட்டே இருக்காங்களாம் ! செய்வீர்களா ஸ்டாலின் அவர்களே ?