பாஜக பள்ளப்பட்டிக்குள்ள போகும் ! அண்ணாமலை சவால் !!

பாஜக பள்ளப்பட்டிக்குள்ள போகும் ! அண்ணாமலை சவால் !! பாஜக உறுப்பினராக இருக்கும் அண்ணாமலை எங்கள் ஊருக்குள் வர விடமாட்டோம் என சில இஸ்லாமிய குடியிருப்புக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது என்பது நாமெல்லாம் இந்தியாவில் இருக்கின்றோமா இல்லை ஆப்கானிஸ்தானில் ஈரானில் இருக்கின்றோமா என நினைத்து பார்க்க தோணுது! நடப்பது ஜமாத் தேர்தல் அல்ல, இஸ்லாமிய தலைவருக்கான தேர்தல் அல்ல. இது தமிழக சட்டமன்றத்துக்கான தேர்தல் ! அதில் எங்கள் ஊருக்குள் அவர் வரகூடாது, இவர் வர கூடாதுன்னு சொல்றதெல்லாம் மிகபெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

அந்த மக்கள் சொல்வது போல இந்துக்களும் இதர மதத்தினரும் சொல்ல ஆரம்பித்தால் இங்கு முழு வன்முறையும் குழப்பமும்தான் மிஞ்சுமே தவிர வேறொன்றும் மிஞ்ஞாது. ஒரு  வாதத்துக்கு அண்ணாமலை வரகூடாது என்றால் இதற்கு முன் அண்ணாமலை எம்.எல்.ஏவாக இருந்து அவர்களை வஞ்சித்திருக்க வேண்டும், அல்லது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தவிர்த்திருக்க வேண்டும் அல்லது எங்கேயாவது ஒரு இடத்தில் மத வெறியைத் தூண்டுவது போலப் பேசியிருக்கணும் அதெல்லாம் இல்லாத நிலையில் நீ பாஜக வேட்பாளர் அதனால் இந்த ஊருக்குள் வரகூடாது என்றால் பாஜக ஆளும் நாட்டை விட்டு இவர்கள் கிளம்ப தயாரா? இந்த கேள்வியக் கேட்கத் தோணுதா இல்லையா ?இங்கு பாஜகவினால் இஸ்லாமியருக்கு எந்த சிக்கலுமில்லை, அவர்களின் வழிபாட்டுக்கோ இதர சடங்குகளுக்கோ ஒரு ஆபத்துமில்லை முத்தலாக்கில் பாஜகவின் அணுகுமுறை கூட இஸ்லாமிய பெண்களின் துயர் துடைத்ததைத் தவிர வேறென்ன செய்தது?
இதே கோஷ்டி நாளை கலெக்டர் ஒரு இஸ்லாமியன் அல்ல, காவல்துறை ஒரு இஸ்லாமியர் அல்ல அதனால் வரகூடாது என்றெல்லாம் பேசினால் என்னாகும்?
இதே வைராக்கியத்துடன் அக்கம் பக்கம் இந்துக்களெல்லாம் சிந்தித்தால் என்னாகும்?

இங்கு மதகலவரங்களோ இதர விரும்பத்தகாத சம்பவங்களோ தானாய் உருவாவது அல்ல, இம்மாதிரி குதர்க்கவாதிகளை சில சமூக விரோத சக்திகள் தூண்டி விடுவதில் இருக்கின்றது.பள்ளபட்டி மக்கள் பின்னால் யார் இருக்கின்றார்கள் என்பது ஒன்றும் ரகசியமல்ல‌?அப்படியும் அண்ணாமலை மிக சரியான கேள்விகளை எழுப்புகின்றார், அதாவது பள்ளப்பட்டி இந்தியாவுல தான் இருக்குது.ஜமாத்துல இருக்கிற ஒரு எட்டு பேர் எனக்கு ஆர்டர் போட முடியாது. இஸ்லாமிய மார்கத்தின் ஒவ்வொரு வரி குறித்தும் தான் விவாதிக்க தயார் என்கின்றார், நல்ல இஸ்லாமியர்கள் அதை எதிர்கொள்ளலாம். மாறாக  இது எங்கள் ஊர் என ஆப்கன் பழங்குடியினர் போல அடம்பிடிப்பது இந்த ஜனநாயக நாட்டில் பரபரப்பை ஏற்படுத்துமே தவிர சல்லிக் காசுக்குப் பிரயோசனபடாது, எந்த பலனையும் கொடுக்காது.பள்ளபட்டி இஸ்லாமியர்கள் அண்ணாமலையின் கருத்தை கருத்துக்களால் எதிர்கொள்ள வேண்டும்.

மாறாக எங்கள் ஊருக்குள் அவர் வரகூடாது என்றால் இவர்கள் மற்ற ஊருக்கு செல்லும் அவசியம் வரும்பொழுது என்ன செய்வார்களாம்?தொகுதி வேட்பாளராக அவரிடம் நியாயமான தேவைகளை கோரிக்கை வைக்கலாம், பாஜகவின் நிலைப்பாடு பற்றி கேள்வி எழுப்பலாம், வேண்டிய விளக்கங்களை எல்லா வகையிலும் பெறலாம் மாறாக இப்படியெல்லாம் மிரட்டுவது சரியல்ல, அது ஏற்புடையதுமல்ல‌ பள்ளபட்டி மக்கள் நல்ல முடிவு எடுத்து தேர்தல் அமைதியாக நடக்க ஒத்துழைப்பார்கள் என தமிழகம் நம்புவது போல் நாமும் நம்பிகொண்டிருக்கின்றோம்.இறுதியா ஜமாத்திலேருந்து அனுமதி கடிதம். கொடுத்திருக்காங்க.இப்ப பள்ளப்பட்டி இஸ்லாமியர்கள தூண்டி விட்டவங்க எங்க. போவாங்க.

Related posts:

அன்வர் ராஜா எடுக்கும் அதிரடி முடிவு!

சயானுக்கு 20 கோடி கொடுத்த காண்ட்ராக்டர் யார்! அவருக்கு ‘பவர்’ கொடுக்கச் சொன்னது யார் ?

நிதி அமைச்சர் பிடிஆரை பதவியில் இருந்து தூக்குங்க…நெருக்கடி கொடுக்கும் டெல்லி!

6 மாவட்டங்களில் அதிமுகவை வாஷ் அவுட் செய்த திமுக

வேலுமணியை தொடர்ந்து கே.சி.வீரமணி..அறப்போர் இயக்கம் வழங்கிய லிஸ்ட்..

`தமிழ்நாட்டில் மின் தடைக்கு யார் காரணம்? மோதும் கட்சிகள் - அதிர வைக்கும் பின்னணி

சசிகலா தனிக்கட்சி ! அதிர்ச்சியில் திமுகவும் அதிமுகவும் ?

மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் மகேந்திரன் விலகியிருப்பதற்கு, தி.மு.க.,வின் நிர்ப்பந்தம்தான் காரணமென்ற தகவல் வெளியாகியுள்ளது.