கச்சேரி” இருக்கு.. ஸ்டாலின் வரை பறந்த புகார்கள்.. அனல் அடிக்கும் அறிவாலயம்.. நடுக்கத்தில் “தலைகள்”

நடந்து முடிந்த தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததற்கு யார் யார் காரணம்னு முதல்வர் ஸ்டாலின் லிஸ்ட் கேட்டிருக்காராம்.லிஸ்ட் கைக்கு கெடச்சதும் களையெடுக்கப் போறாராம்.கலக்கத்தில் நிர்வாகிகள் ?

நடந்து முடிந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்றுதான் பிரச்சாரம் செய்தார்.. ஆனால், களம் வேறுமாதியாக இருந்தது.. எளிதில் வெற்றி என்பது கிட்டாமல், பல இடங்களில் போராடி வெற்றி பெற்றது.. இந்த வருத்தம் ஸ்டாலினுக்கு இன்னமும் உள்ளது.. கூடுதலாக, 20 இடங்களில் அதிகமாக வெற்றி பெற்றிருக்கலாம் என்பதே ஸ்டாலினின் எண்ணம். இதில் பெரும்பாலும் திமுகவை கைவிட்டது கொங்கு மண்டலம்தான்.. அதாவது கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஏற்பட்ட  சறுக்கலைதிமுகவால் ஜீரணிக்கவே முடியவில்லை..அதை விடவும் 4 இடங்களில் தாமரை மலர்ந்ததை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியலையாம்.நாகர்கோவில்ல திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் தோத்தது ஸ்டாலின் குடும்பத்தினருக்கு ரொம்ப வருத்தமாம்.காரணம் துர்கா ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு செல்வதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுப்பதே சுரேஷ் ராஜன் தானாம்.என்னதான் அதிமுக வாக்குகள் அதிகமாக இருந்தாலும் பாஜக வேட்பாளர் எம்..ஆர் காந்தி எப்படி ஜெயிச்சாருன்னு எல்லாரும் ஆச்சரியமா பார்க்கிறாங்க.அடுத்து திருநெல்வேலியில நைனார் நாகேந்திரன் பாஜக சார்பில் ஜெயிச்சது அவருடைய சொந்த செல்வாக்கு மற்றும் அதிமுக வாக்குகள் தான் காரணம்.திமுக வேட்பாளர் ஏஎல்எஸ் லக்ஷ்மணன் சீட் கொடுக்கும் போதே எங்கிட்ட காசில்லை நீங்கள் சொல்றதுனால நிக்கறேன்னு சொன்னாராம் கட்சிக்காரங்களை அவர் அரவணைச்சுப் போகலையாம்.அதானால திருநெல்வேலி திமுக நிர்வாகிகள் விசாரணை வளையத்தில் இருந்து தப்பிச்சிட்டாங்க.அடுத்து மொடக்குறிச்சி தொகுதியில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோற்பாருன்னு யாருமே எதிர்பார்க்கலை.அவுங்க சீனியர் பொலிடீசியன்.ஆனா தொகுதி நிர்வாகிகள் கிட்ட நெருங்கி பழக மாட்டாராம்.எந்த நிகழ்ச்சிக்கும் போகமாட்டாராம் முதல்வர் கிட்ட புகார் கொடுத்திருக்கிறாங்களாம்.விசாரணை நடத்தட்டும் நாங்கள் பேசறோம்ங்கிறாங்க.ஆனா அவுங்க தோத்ததுக்கு ஈரோடு மாவட்டப் பொறுப்பாளரும் ஒரு காரணமாம்.ஆனா அவர் மந்திரி ஆயிட்டதால விசாரணை வளையத்தில் இருந்து தப்பிச்சிடுவாருங்கிறாங்க.  தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த தேர்தலில் திமுக நல்ல வாக்கு வங்கியை வைத்திருந்தது.

முக்கியமாக கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி வென்றுள்ளது. கோவையை முழுவதுமாக இழப்பது இது தி.மு.க-வுக்கு முதல்முறை இல்லை. கடந்த ஐந்து சட்டமன்றத் தேர்தல்களாகவே தி.மு.க கோவை மாவட்டத்தை இழந்துதான்வருது.

1996 சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் தி.மு.க பிரமாண்ட வெற்றிபெற்றது. அப்போது, கோவை மாவட்டம் முழுவதையும் கைப்பற்றியது. ஆனால், அதற்குப் பிறகு நடந்த 2001 சட்டமன்றத் தேர்தலில் அதில் ஒரு தொகுதியைக்கூட தி.மு.க தக்கவைச்சுக்க முடியலை. 2001-ல் கோவை மாவட்டத்திலுள்ள அத்தனைத் தொகுதியையும் அப்படியே தூக்கியது அ.தி.மு.க.

2006 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைத்தாலும், கோவை மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளை மட்டுமே தி.மு.க கைப்பற்றியது.கோவை கிழக்கில் பொங்கலூர் பழனிச்சாமியும், பொங்கலூர் தொகுதியில் மணியும் வெற்றி பெற்றாங்க. பொங்கலூர் பழனிச்சாமி ஊரகத் தொழில்துறை மற்றும் கால்நடைத் துறை அமைச்சராக ஆக்கப்பட்டார்.

2011 சட்டமன்றத் தேர்தலில் கோவையை மீண்டும் மொத்தமாக அள்ளியது அ.தி.மு.க. 2016 சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியை மட்டும் தி.மு.க கைப்பற்றியது. சிங்காநல்லூர் தொகுதியில திமுக வேட்பாளர் கார்த்திக் வெற்றி பெற்றார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கோவை மாவட்டத்தை மீண்டும் மொத்தமாக வாரிச் சுருட்டி விட்டது. இதனால் பலரும் சமூக வலைதளங்களில் கோவையை விமர்சனம் பண்றாங்க.. ஆனால், கோவை மக்கள் அ.தி.மு.க-வினரைத் தவிர வேறு யாருக்கும் வாக்களிக்கவே மாட்டாங்களா என்ன ? இல்லைன்னு தான் சொல்லணும்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலம் முழுவதும் தி.மு.க மொத்தமா ஜெயித்தது. அ.தி.மு.க அமைச்சர்களின் தொகுதிகளிலேயே தி.மு.க-தான் முன்னிலை வகித்தது. நாட்டிலேயே பி.ஜே.பி-யை வீழ்த்திய ஒரே கம்யூனிஸ்ட் என்ற பெருமையுடன் கோவை எம்.பி-யாக இருக்கிறார் பி.ஆர்.நடராஜன்.

நடந்து முடிந்த தேர்தலில்கூட கோவை தெற்கு, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம், கோவை வடக்கு போன்ற தொகுதிகளில் 5,000 வாக்குகளுக்குள்தான் வித்தியாசமே! கோவை வடக்குத் தொகுதியைத் தவிர மற்ற நான்கு தொகுதிகளில் 1,000 – 2,000 வாக்குகள்தான் வித்தியாசம். இங்க இன்னும் கொஞ்சம் எறங்கி அடிச்சிருந்தா முடிவுகள் மாறியிருக்கும்.கோவை தெற்கில் கமல்ஹாசன் ஜெயிச்சாலும் பரவாயில்லைன்னு தான் ஸ்டாலின் சொன்னாராம்.வானதிக்கு கடுமையான போட்டியை கொடுத்தாலும் நூலிழைல தோத்துப் போயிட்டாரு.

1996 சட்டமன்றத் தேர்தலில் கோவையை முழுவதுமாகக் கைப்பற்றிய தி.மு.க-வால் அதன் பிறகு நடந்த ஐந்து தேர்தல்களில் பாதி தொகுதிகளைக் கூட வெல்ல முடியவில்லை. அ.தி.மு.க-வைப்போல வலுவான தலைவர்கள் இல்லாமல் இருப்பதே தி.மு.க-வுக்கு இங்கு பெரிய மைனஸ்.

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது. 15 தொகுதிகளில் திமுகவும், ஒரு தொகுதியில் கூட்டணிக் கட்சியான காங்கிரசும் வெற்றி பெற்றிருக்குது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, ஆவடி உள்பட 10 தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகளை பெற்று திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்காங்க..

திருச்சி மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 தொகுதிகளையும் திமுக தன்வசப்படுத்தியுள்ளது. லால்குடி, துறையூர்,மண்ணச்சநல்லூர்,மணப்பாறை, ஸ்ரீரங்கம், முசிறி, என அனைத்து தொகுதிகளிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர். இதன்மூலம் திருச்சி மாவட்டம் திமுகவின் கோட்டையாக மாறியுள்ளது.

இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 4 தொகுதிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுக, திமுக இடையே கடுமையான போட்டி நிலவினாலும், அதிமுகவால் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை. இதனால் பரமகுடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 தொகுதிகளும் திமுக வசமானது.

அரியலூர் மாவட்டத்தின் 2 தொகுதியிலும் திமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில்தான், திமுக எங்கெல்லாம் தோல்வி அடைந்ததோ, அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து ரிப்போர்ட் கேட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.ஒருசில திமுக மாவட்ட செயலாளர்கள் குறித்த புகார்கள் தலைமைக்கு வந்து கொண்டிருக்கிறதாம்.. இதையடுத்து, அடுத்த அதிரடியில் முதல்வர் முக ஸ்டாலின் இறங்குவார் என்கிறது அறிவாலய வட்டாரங்கள்.. குறிப்பாக, அமைச்சர்கள் தொகுதியில் திமுக நிர்வாகிகள் எப்படி வேலை பார்த்தனர் என்ற விவரத்தையும் ஸ்டாலின் கேட்டுள்ளார்.. இதற்கான பணிகளும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடந்து வருது..  மேலும், மதுரை, சேலம், ஈரோடு, நாமக்கல், நெல்லை, தென்காசி, மாவட்டங்களில் திமுகவின் தேர்தல் பணி சறுக்கலாகிவிட்டது என்ற விஷயமும், இந்த மாவட்டங்களில் எல்லாம் அதிமுக எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டிருந்தது என்ற தகவலும் ஸ்டாலினுக்கு வந்து சேர்ந்துள்ளது.  எனவே, திமுகவின் வெற்றிக்கு தடையாக இருந்த நிர்வாகிகள் யார்?  யார்? என்ற லிஸ்ட்டும் ஸ்டாலின் கேட்டுள்ளார்.. இப்போது விஷயம் என்னவென்றால், பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் மீது புகார்கள் கிளம்பி உள்ளதாக தெரிகிறது.. இந்த புகார்களை தெரிவிப்பவர்கள், தோல்வியடைந்த திமுக வேட்பாளர்கள்தானாம்.. இதுபோல ஒவ்வொருவரும் தங்களது தொகுதிகளில் நாங்கள் எப்படி தோற்றோம் என்பது குறித்து பல காரணங்களை லிஸ்ட் போட்டு தலைமைக்கும் தெரிவித்து வருகிறார்களாம்.  இது ஒரு பக்கம் இருந்தாலும், கூட்டணி கட்சிகளிடம் திமுக நிர்வாகிகளுக்கும் ஆங்காங்கே அதிருப்தி தலைதூக்கி வருவதாக சொல்லப்படுது.. குறிப்பாக தென்காசி காங்கிரஸ் எம்எல்ஏவுக்கும் திமுக மாவட்ட செயலாளருக்கும் கருத்து மோதல் வெடித்துள்ளது.. இந்த பஞ்சாயத்தும் ஸ்டாலின் வரை வந்துள்ளதாம். அதாவது, வேட்பாளர்கள் தோல்வி ஏன்? நிர்வாகிகள் செயல்பாடு எப்படி இருந்தது? மாவட்ட செயலாளர்களின் களப்பணி எப்படி இருந்தது? அமைச்சர்கள் தொகுதியில் திமுக பெருந்தலைகள் எப்படி செயல்பட்டனர்? என்பன போன்ற விவரங்கள் அனைத்தும் தயாராகி கொண்டிருக்கிறது..  இந்த லிஸ்ட்கள் கிடைத்தபிறகு, ஒவ்வொரு மாவட்டத்திலும் களையெடுக்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் கையில் எடுப்பார் என்று தெரிகிறது.. இவ்வளவு நாட்களும் கொரோனா பணியில் முழுமையாக ஈடுபட்டிருந்த ஸ்டாலின், இனி பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க உள்ளதால், பல திமுக புள்ளிகளுக்கு இப்போதே பீதி கிளம்பி விட்டதாம்..!