“
உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தான் பிரச்சினை ? அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு தேர்தல் வரும் நிலையில், மோடி அடுத்தக்கட்டமாக என்ன செய்யப் போகிறார்ங்கிற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. ஒரு துறவி மாநில முதல்வராக உயர்வது என்பது அவ்வளவு சுலபமில்லை..இது பாஜகவில் மட்டுமே சாத்தியம். ஆர்எஸ்எஸ் பின்புலமும், பாஜகவின் வலுவும் உள்ள நிலையில் மட்டும்தான், இது சாத்தியமாகும்..!
ஆனால், ஒரு சந்நியாசி இவ்வளவு அதிரடியாக செயல்படுவாரா என்று ஆச்சரியப்பட்டு போனார்கள்.. ஆரம்பத்தில் இந்துத்துவா சித்தாந்தத்தை இளைஞர்களை கொண்டே வலுப்படுத்தி கொண்டவர்தான் யோகி ஆதித்யநாத்..! கோரக்பூர் எம்பி தொகுதியை இளைஞர்கள் மூலம் தொடர்ந்து தக்க வைத்து கொண்டவர். இருந்தாலும், மத்தியில் ஆட்சியை பிடித்ததுமே பாஜகவுக்கு கூடுதல் தைரியம் பிறந்தது.. அதனால்தான், 2017-ல் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே, தேர்தலில் நின்று வெற்றியை பெறவும் முடிந்தது.. ஏற்கனவே ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் யோகிக்கு இணக்கமான போக்கு இருக்கவும், முதல்வர் பதவிக்கு பரிந்துரைக்க, மறுபேச்சின்றி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் யோகி ஆதித்யநாத். முதல்வரானதுமே இவரது போக்கு, மேலும் மாற தொடங்கியது.. எந்தெந்த வகையில் முடியுமோ, அந்தந்த வகையில், இந்துத்துவ சித்தாந்தத்தை உயர்த்தி பிடித்தார். பிரதமர் மோடிக்கும் நெருக்கமானவரானார்.. ஆனாலும் பிரதமர் மோடிக்கு சந்தேகம் இருந்தது.யோகியை அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிருந்துகிறார்களோ என்று சந்தேகம் வலுத்து கொண்டே இருந்தது.உபி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தார்கள்.யோகி முதல்வரானதும் 35000 கோடி விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்தார்.ஆனால் அடுத்த பாராளுமன்ற கூட்டத்தில் விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்தால் அதற்கான நிதி ஆதாரங்களை மாநில அரசைச் சேர்ந்ததுன்னு முதல் செக் வைத்தார் மோடி.அடுத்தடுத்து யோகி எடுத்த தவறான முடிவுகளால் அவருக்கு கெட்ட பெயர் தான் ஏற்பட்டது. ஆனாலும் மோடியையும் – யோகியையும் பிரித்து பார்க்க முடியாத சூழல் வடமாநிலங்களில் ஏற்பட்டது.. அப்படி இருக்கும்போது, திடீரென இவர்களுக்குள் விரிசல் வந்துள்ளது.. அந்த விரிசல் மெல்ல மறைந்து கொண்டிருக்கிறது என்று ஒரு தரப்பு சொல்கிறது.. நாளடைவில் இந்த விரிசல் அதிகமாகும் என்றும் இன்னொரு தரப்பு சொல்கிறது.. அப்படியானால் உபியில் என்னதான் நடக்கிறது? யோகி – மோடி இடையே என்ன நடந்து வருகிறது? என்ற கேள்வியும் எழுகிறது.
பிரச்சனை இதுதான்.. குஜராத் ஐஏஎஸ் அரவிந்த் குமார் ஷர்மா என்பவர் மோடிக்கு நெருக்கமானவர்.. இவர் தன்னுடைய பணிக்கு விஆர்எஸ் தந்துவிட்ட நிலையில், இவரை உபி அரசியலில், சட்டமேலவை பாஜக உறுப்பினராக ஈடுபடுத்த பிரதமர் நினைக்கிறார்.. ஆனால், ஏற்கனவே உபி சட்டமேலவையில் 2 துணை முதல்வர்கள் இருக்கிறார்கள்.. அவர்களில் ஒருவருக்கு பதிலாக அல்லது அவர்களில் ஒருவராக ஷர்மாவை இணைத்து கொள்ளும்படி யோகிக்கு பிரதமர் மோடி சொல்கிறார்.. ஆனால், இதை யோகி ஏற்க மறுக்கிறார்.. இதற்கு காரணம், பிரதமர் மோடி தன்னை கண்காணிக்கவே இப்படி ஒரு நபரை உபிக்கு அனுப்புவதாக யோகி கருதுகிறார்.. எனவே, பிரதமர் மோடியின் விருப்பத்துக்கும் யோகி மறுப்பு சொல்வதாக தெரிகிறது.. இதுதான் மோடி மட்டுமல்லாமல் அமித்ஷாவுக்கே ஷாக் தந்த விஷயம். இதுவரை மோடியை எதிர்த்து யாரும் பேசியதில்லை.. பிரதமர் ஒரு உத்தரவு போட்டால், அதை எதிர்க்கும் துணிச்சல் யாருக்கும் வந்ததில்லை.. முதல்முறையாக ஒரு மாநில முதல்வர், பிரதமரின் உத்தரவுக்கு செவிசாய்க்காமல் உள்ளார்.. இங்குதான் யோகிக்கான முக்கியத்துவம் உயர்கிறது.. உண்மையிலேயே யோகியை கண்காணிக்க பிரதமர், ஷர்மாவை உபிக்கு அனுப்புகிறாரா என்று தெரியவில்லை.. ஆனால், இந்த 4 ஆண்டு காலத்தில் யோகியின் செல்வாக்கு உபியையும் தாண்டி வளர்ந்துள்ளதாக தெரிகிறது.. மேற்குவங்கத்தில் எத்தனையோ தலைவர்கள் பிரச்சாரத்துக்கு போனார்கள்.. ஆனால், யோகி வந்தபோது, மம்தாவே சற்று ஆடித்தான் போனார்.. தமிழகத்தில் வானதிக்காக கோவைக்கும் பிரச்சாரத்துக்கு வந்தது கூட பரபரப்பை கிளம்பியது. அடுத்த 9 மாதங்களில் உபியில் தேர்தல் வர இருக்கிற நிலையில், யோகியே மீண்டும் முதல்வராக வெற்றி பெற்று வந்தால், அவரது பலம் மேலும் உயர்ந்துவிடும் என்பதையும் பிரதமர் அறியாமல் இல்லை.. தனக்கு போட்டியாக யாரும் பாஜகவில் இருந்திடக்கூடாது என்பதிலும் மோடி கவனமாகவே இருக்கிறார்.. ஒருவேளை யோகியுடன் மோதல் அதிகமானால், அது பாஜகவுக்குதான் மைனஸ் ஆக இருக்கும்.. அதேசமயம், நாளை தேசிய தலைவராக யோகி உருவெடுப்பதையும் கட்டுப்படுத்தும் நிர்ப்பந்தம் மோடிக்கு உள்ளது.. சுருக்கமாக சொல்லப்போனால், யோகியை எதிர்க்கவும் முடியாமல், நெருங்கவும் முடியாமல் தடுமாற்ற நிலையே காணப்படுகிறது. ஏற்கனவே கொரோனா நேரத்தில் உபி மாநிலத்துக்கு நிறைய கெட்ட பெயர் வந்துவிட்டது.. ஆக்சிஜன் பற்றாக்குறை, ஆஸ்பத்திரிகள் தட்டுப்பாடு போன்ற காரணங்களில் நிறைய அப்பாவிகள் உயிர்கள் பறிக்கப்பட்டு விட்டன.. சடலங்களை கங்கையில் மிதக்கவிட்டது.. இப்படி எத்தனையோ சர்ச்சையில் யோகி சிக்கி உள்ளார்.. இந்த கெட்ட பெயரும் பாஜக தலைமையிடம் சேர்ந்துள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக
மோடியின் பார்வை இப்போது உத்தரப்பிரதேசம் பக்கம் திரும்பியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக இப்போதே தனது அரசியல் ஆட்டத்தை தொடங்கிவிட்டார் மோடி” என்கிறார்கள் பா.ஜ.க- வின் தேசிய அரசியலை நன்கு அறிந்தவர்கள்.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில், தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சியில் உள்ளது. அந்த மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கிறது. கடந்த மே மாதம் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும் சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக, மேற்கு வங்கத்தில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கும் என்று பா.ஜ.க-வினர் பெரிதும் நம்பியிருந்த நிலையில், இரட்டை இலக்கத்திலான தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியைச் சந்தித்தது பா.ஜ.க. இந்தநிலையில், தற்போது பா.ஜ.க டெல்லி மேலிடத்தின் பார்வை உத்தரப்பிரதேசத்தை நோக்கித் திரும்பியுள்ளது.’
2022-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அந்தத் தேர்தல் வெற்றியைவைத்தே பா.ஜ.க-வின் அகில இந்திய செல்வாக்கும் மதிப்பிடப்படும் என்பதை பா.ஜ.க உணர்ந்துள்ளது. காரணம் ஆண்டாண்டு காலமாக உபியில் வெற்றி பெறும் கட்சி தான் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்கிற செண்டிமெண்ட் இருக்குது. இதனால், உ.பி தேர்தலுக்கு அடுத்த மாதம் முதலே பா.ஜ.க பணிகளைத் தொடங்கவிருக்கிறது. சமீபத்தில் டெல்லி சென்ற உத்தரப்பிரதேசத்தின் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத், உள்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோரைச் சந்தித்தார். அப்போது தேர்தல் முன்னேற்பாடுகள் பற்றியும், பா.ஜ.க-வின் தேர்தல் வியூகங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தநிலையில், உத்தரப்பிரதேசத் தேர்தலை வைத்து பா.ஜ.க-வுக்குள்ளும் அதிகாரப் போட்டி அதிகமாகிவிட்டது என்கிற புதுத் தகவலும் டெல்லி பா.ஜ.க-வுக்குள் பலமாக ஒலிக்கத் தொடங்கி விட்டது. இது குறித்து டெல்லி பா.ஜ.க தலைமைக்கு நெருக்கமானவர்கள் என்ன சொல்றாங்கன்னா “சமீபத்தில் பிரதமர் மோடிக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ் அதிகாரி ஏ.கே.சர்மா என்பவர், ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு உத்தரப்பிரதேச பா.ஜ.க-வுக்குள் கால் பதித்துள்ளார். இவரின் வருகையே இப்போது யோகிக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
சர்மாவின் சொந்த மாநிலம் உத்தரப்பிரதேசமாக இருந்தாலும், அவர் குஜராத் கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றினார். குஜராத் மாநில முதல்வராக மோடி இருந்தபோது, மோடிக்கு நம்பிக்கைக்குரியவராக சர்மா இருந்துள்ளார். இதனால் பிரதமராக மோடி பதவியேற்றதும், பிரதமர் அலுவலகத்திலும் முக்கியப் பொறுப்பில் சர்மாவை அமரவைத்தார். இப்போது அதே சர்மாவை தனது தளபதியாக உத்தரப்பிரதேச பா.ஜ.க-வுக்குள் நுழைத்திருக்கிறார் மோடி. இது தனக்கு செக் வைக்கும் அரசியல் என்பதை யோகியும் புரிந்துவைத்திருக்கிறார். சர்மா சமீபத்தில் பா.ஜ.க-வின் எம்.எல்.சி-யாகவும் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
பா.ஜ.க-வில் மோடிக்கு அடுத்த பிரதமர் ரேஸில் இப்போது இருப்பவர் யோகிதான். ஆனால், மோடி தனக்குப் பிறகு அமித் ஷாவை முன்மொழியும் நிலையில் இருக்கிறார். வரும் உத்தரப்பிரதேசத் தேர்தலில் மீண்டும் யோகி வெற்றிபெற்று முதல்வராகப் பொறுப்பேற்றால், அகில இந்திய அளவில் யோகி முக்கியத் தலைவராக மாறிவிடுவார் என்கிற அச்சம் மோடி, அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு உள்ளது. குறிப்பாக, சமீபத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில இந்தியக் கூட்டத்திலும் இந்துத்துவா அஜெண்டாக்களைத் தொடர்ந்து அமல்படுத்த மோடிக்கு அடுத்த சாய்ஸாக யோகியைப் பார்ப்பதாக அந்த அமைப்பு புகழ்பாடியுள்ளது.
இந்த நிலையில் தான் உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க-வுக்கு சமீபத்தில் ஓர் உத்தரவு சென்றுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் மோடியை முன்னிறுத்தியே பா.ஜ.க-வின் பிரசார வியூகம் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இது யோகியை அதிர்சியடையச் செய்துள்ளது. ’தனது மாநிலத்தில் தன்னைத் தவிர வேறு யாரும் முன்னிலையில் இருக்கக் கூடாது. ஒரு மாநிலத்தின் முதல்வர் வேட்பாளரை வைத்தே பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். அதை எதற்காகத் தலைமை மாற்றுகிறது?’ என்கிற கடுப்பில் இருந்தார். அதைத் தொடர்ந்து யோகிக்கு அடுத்த அதிர்சியைக் கொடுத்தது டெல்லி தலைமை. அதாவது, மோடியின் நம்பிக்கைக்குரிய நபரான சர்மாவுக்கு துணை முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைதான் அது.
இதனால், எதிர்காலத்தில் தனது அரசியல் வளர்ச்சிக்கு சர்மா மூலம் மோடி தரப்பு செக் வைக்கப் பார்க்கிறது என்கிற அச்சம் யோகிக்கு உருவானது. இதனால் “எனது மாநிலத்தில் நடக்கும் அரசியல் முடிவுகளை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று தடாலடியாக தலைமைக்கு பதில் அளித்திருக்கிறார் யோகி. அதன் பிறகு டெல்லி தலைமையும் அடுத்தடுத்த காய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது.
தொடர்ந்து டெல்லி தலைமை, உத்தரப்பிரதேசத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தொடர் ஆலோசனையில் இறங்கியது. மற்றொருபுறம், யோகியைப் பணியவைக்கும் வேலையிலும் இறங்கினார்கள். இதன் தொடர்ச்சியாகவே டெல்லிக்கு வந்த யோகி, உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமரை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு யோகியின் சீற்றம் குறைந்துள்ளது என்கிறார்கள். அதேபோல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் யோகியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவதாக அறிவித்தது. இதனால் யோகி சமாதானம் அடைந்துள்ளார்.
இந்தநிலையில், உ.பி-யில் பா.ஜ.க-வுக்கு அச்சுறுத்தலாக சமாஜ்வாடி கட்சி இருக்கும் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, இந்தமுறை எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்கிற உறுதியிலுள்ள அகிலேஷ் யாதவ், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் உதவியை நாடியிருக்கிறார். நேரடியாக அரசியல் கட்சிகளுக்கு பணியாற்றப்போவதில்லை என கிஷோர் சொல்லியிருந்தாலும், அகிலேஷ் யாதவுக்கு மறைமுகமாகக்கூட கிஷோர் உதவினால் அது தங்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பா.ஜ.க தலைமையும் அஞ்சுகிறது. இதனால் முன்கூட்டியே தேர்தல் வேலைகளை ஆரம்பிக்க அந்த மாநில பா.ஜ.க-வுக்கு டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளது. `தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் நிலையே வரும் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வந்தாலும், யோகி முதல்வராகத் தேர்வு செய்யப்படுவதில் பல சிக்கல்கள் எழும்’ என்கிறார்கள் டெல்லி தலைமையின் மனநிலையை அறிந்தவர்கள். குறிப்பாக, யோகிமீது கடந்த காலத்தில் எழுந்த புகார்களைவைத்தே அவருக்கு நெருக்கடி கொடுக்க மோடி தரப்பு மும்முரமாக இருக்கிறது என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.மோடி என்ன முடிவெடுக்க போகிறார்? யோகியை வருங்காலத்தில் எப்படி கன்ட்ரோல் செய்ய போகிறார்? என்பதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…!