கோவையில் முக்கிய அதிகாரிகள் முகாம்..! எஸ்பி வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் ஸ்கெட்ச்..!

கோவையில் முக்கிய அதிகாரிகள் முகாம்..! எஸ்பி வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் ஸ்கெட்ச்..!

திமுக ஆட்சிக்கு வந்ததும் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனராக கந்தசாமி நியமிக்கப்பட்டார். இவர் சிபிஐயில் பல முக்கியமான வழக்குகளை கையாண்டவர். பிறகு ஒரு சில சர்ச்சைகளால் மறுபடியும் மாநிலப்பணிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இது நாள் வரை டம்மியான போஸ்டுகளில் இருந்த கந்தசாமியை, திமுக ஆட்சிக்கு வந்த உடன் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனர் எனும் மிக முக்கிய பதவியில் ஸ்டாலின் அமர வைத்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் மட்டும் அல்ல அதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் நபராக எஸ்.பி.வேலுமணி சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று மு.க.ஸ்டாலின் கூறி வந்த நிலையில் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

திமுக ஆட்சிக்கு வந்ததும் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனராக கந்தசாமி நியமிக்கப்பட்டார். இவர் சிபிஐயில் பல முக்கியமான வழக்குகளை கையாண்டவர். பிறகு ஒரு சில சர்ச்சைகளால் மறுபடியும் மாநிலப்பணிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். இது நாள் வரை டம்மியான போஸ்டுகளில் இருந்த கந்தசாமியை, திமுக ஆட்சிக்கு வந்த உடன் லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனர் எனும் மிக முக்கிய பதவியில் ஸ்டாலின் அமர வைத்துள்ளார். பதவிக்கு வந்தவருக்கு கொடுக்கப்பட்ட முதல் அசைன்மென்டே எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் தொடங்கி அதிமுக கால அமைச்சர்களின் மீதான புகார்களை விசாரிப்பது தான்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பரப்புரை நிகழ்வுகளிலும் தேர்தல் பிரசாரங்களிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறக்காமல் குறிப்பிட்ட ஒரு விஷயம். அதிமுக ஆட்சியில் ஊழல் செய்த அமைச்சர்களை சிறைக்கு தள்ளாமல் விடமாட்டேன் என்பது தான்.அதிலும் குறிப்பாக  முதலில் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்குகள் விரைவில் விசாரிக்கப்பட்டு, அவரை சிறையில் தள்ளுவதற்கு திமுக அரசு நடவடிக்கை எடுக்குமென்று தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தது உங்களுக்கெல்லாம் ஞாபகம் இருக்கும்.அதற்குண்டான பொறுப்பை லட்ச ஒழிப்புத் துறை இயக்குநர் கந்தசாமி ஐபிஎஸ் இடம் ஒப்படைத்து விட்டார்.அவர்கள் மீது திமுக தரப்பில் இருந்து புதிதாக புகார்கள் எதுவும் கொடுக்க தேவையில்லை..எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக தொடுத்துள்ள ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அவர் உள்பட அனைத்து அதிமுக நிர்வாகிகள் மீதும் அறப்போர் இயக்கம், ஆம் ஆத்மி கட்சி, மக்கள் செய்தி மையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஏற்கெனவே ஊழல் தடுப்புப் பிரிவில் கொடுத்துள்ள எண்ணற்ற புகார்களை தூசி தட்டி எடுத்தாலே போதும், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் அனைவருக்குமே சிக்கல்தான்..

கொரோனோ தொற்றை சமாளிக்க முடியாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் திணறி வருகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, மருத்துவர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எல்லோரும் வெளிப்படையாகவே கிண்டலடிக்க தொடங்கினாங்க.

இப்படிபட்ட தகவல்கள் எல்லாம் நம்பிக்கைக்குரிய பிரமுகர்களிடம் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்தவுடன்தான், அவரது அரசியல் ஆட்டத்தை தொடங்கியிருக்கிறாராம். கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளில் இடைவிடாது கவனத்தை செலுத்தி வரும் அதே வேளையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஒருவர் கூட ஊழல் புகாரில் இருந்து தப்பித்து விடக் கூடாது என்று ஸ்கெட்ச் போட்டு, அதையும் சத்தமில்லாமல் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் என்கிற தகவல் கெடச்சிருக்கு.

அத்தோடு ஒரு சில முன்னாள் அமைச்சர்களை கைது செய்வதற்கான அசைன்மென்டும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு மாத காலமாக ஆதாரங்களை திரட்டி வந்த கந்தசாமி, கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது எஸ்பி வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் என மூன்று முன்னாள் அமைச்சர்கள் மீதான புகார்கள் குறித்து ஆலோசித்ததாக சொல்கிறார்கள். இறுதியில் எஸ்பி வேலுமணி விவகாரத்தை கையில் எடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள். இதன் அடிப்படையில் டிஜிபி கந்தசாமியின் உத்தரவின்படி லஞ்ச ஒழிப்புத்துறையில் அவருக்கு நம்பகமான அதிகாரிகள் கோவையில் முகாமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

அங்கிருந்தபடி எஸ்பி வேலுமணிக்கு எதிரான புகார்கள் மீதான ஆதாரங்களை வலுப்படுத்துவதுடன் சில சாட்சியங்களையும் தயார் செய்வதாக கூறுகிறார்கள். மேலும் கைது நடவடிக்கையின் முதல்படியாகவே அதிகாரிகள் கோவையில் சென்று முகாமிட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். அந்த வகையில் மேலிடத்தில் இருந்து எப்போது உத்தரவு வந்தாலும் தமிழகத்தையே பரபரப்பாக்கும் அந்த கைது நடவடிக்கைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.