சாதாரண போலீஸ்காரராக இருந்தவருக்கு இத்தனை கல்லூரிகளா..?

சாதாரண போலீஸ்காரராக இருந்த ஜேப்பியாருக்கு இத்தனை கல்லூரிகளா..? இத்தனை ஆயிரம் கோடி சொத்துக்களான்னு எல்லாரும் ஆச்சரியப்படுறாங்க.!

ஜேப்பியார் கல்வி குழுமத்தினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் 91.04 ஏக்கர் நிலம் செம்மஞ்சேரியில் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 2010 கோடி ரூபாய்ன்னு சொல்றாங்க.

ஜேப்பியார் கல்வி குழுமத்தை சேர்ந்த செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகம் 91.4 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் மாணவிகள் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டிருக்கு. 20 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி 91.04 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டிருக்குது.

சென்னை மாவட்ட ஆட்சியர் விஜய ராணி, தமிழ்நாடு நில மேம்பாட்டு ஆணையர் நாகராஜ் இவர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டு அரசுக்கு சொந்தமான இடம்னு அறிவிப்பு பலகை வைச்சிட்டாங்க. மீட்கப்பட்ட நிலத்தை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், மா.சுப்பிரமணியன், தென் சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் எல்லோரும் பார்வையிட்டாங்க. கல்லூரி விடுதியில் இருக்கும் மாணவிகளை மாற்றியதும் கட்டிடம் இடிக்கப்படும்னு வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ் ஆர் ராமசந்திரன் சொன்னாரு.

செய்தியாளர்களிடம் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசும் போது, கடந்த 20 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி, முறையான நீதிமன்ற உத்தரவின்பேர்ல இந்த 91.4 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு இருக்குது. இந்த இடத்தில் கட்டிடங்கள் கட்டப்பட்டுருக்கு. இதில் தங்கியுள்ள மாணவிகளை வேறு இடத்துக்கு முறையாக மாற்றப்படும். அதன்பிறகே , கட்டிடம் இடிக்கப்படும். தற்போது இந்தஇடத்தின் சந்தை மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி. அரசின் பல திட்டங்களுக்கு பயன்படுத்த நிலம் இல்லாத சூழ்நிலை இருக்குது. இனி இந்த இடம் அரசின் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேர்ல, தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள வருவாய் துறையின் நிலங்களை கண்டறிந்து மீட்க உள்ளோம். அதேபோல, குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலங்கள், குத்தகையில் குறிப்பிட்ட பயன்பாடின்றிவேறு விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தாலும் அதையும் மீட்போம்னு சொன்னாரு.அப்புறம் சந்தை மதிப்புக்கு ஏத்த மாதிரி குத்தகை தொகை இல்லாத பட்சத்திலும் அதையும் மீட்போம்னு பேட்டி குடுத்தாரு..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் இதுபோன்று ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இப்போ ஜேப்பியாரப் பத்தி பாக்கலாம்.சாதாரண போலீஸ்காரராக இருந்த ஜேப்பியார் இத்தனை கல்லூரிகளுக்கு அதிபரானது எப்படி? இத்தனை சொத்துக்கள் வந்தது எப்படி?

ஜேப்பியார் கல்வி குழுமத்தினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் 91.04 ஏக்கர் நிலம் செம்மஞ்சேரியில் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 2010 கோடி ரூபாய். இந்த நிலையில சாதாரண போலீஸ்காரராக இருந்த ஜேப்பியார் இத்தனை கல்லூரிகளுக்கு அதிபரானது எப்படி? இத்தனை சொத்துக்கள் வந்தது எப்படி?

ஜேப்பியாரின் சொந்த ஊர் குமரி மாவட்டத்தில் உள்ள முட்டம். ஜே.பங்குராஜ் என்ற பெயர்தான் பின்னாளில் ஜேப்பியார் ஆனது. காவல்துறையில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றிய அவர், எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசி. அதிமுக தொடங்கப்பட்ட நேரத்தில், கட்சி உறுப்பினர் படிவத்தில் எம்.ஜி.ஆர். கையெழுத்திட்டபோது, இவரும் கையெழுத்திட்டு உறுப்பினர் ஆனார். ஒரு பாதுகாவலராக இருந்து தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆருடன் சுற்றுப்பயணம் செய்தாரு. 1973-ல் இவரை தென் சென்னை அதிமுக மாவட்டச் செயலாளர் ஆக்கினார் எம்.ஜி.ஆர். அதிமுக ஆட்சி அமைந்ததும், குடிநீர் வாரிய தலைவர் ஆனார். எம்.எல்.சி யாகவும் மேலவை கொறடா ஆகவும் இருந்தார்.

எம்.ஜி.ஆர். இறந்ததும், ஜானகி அணியில் தன்னை இணைத்துக்கொண்ட அவர், “கவலையே படாதீங்க. விரட்டிடலாம்..”என்று ஜெயலலிதாவுக்கு எதிராக கடுமையாக நடந்துகொண்டார். எம்.ஜி.ஆர். இறந்தவுடன், அவரை அடக்கம் செய்வதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, முதலில் மெரினா பீச் ஐ.ஜி. அலுவலகம் எதிரில், எந்த இடத்தில் எந்தமாதிரியான அமைப்பில் சமாதி அமைக்க வேண்டும் என்று நாவலர் நெடுஞ்செழியனும் உயர் அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினார்கள்.

ஜேப்பியாரோ, அன்றைய உள்துறைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமனோடு சேர்ந்துகொண்டு, ‘அண்ணாவின் இதயக்கனி என்று பெயரெடுத்தவர் எம்.ஜி.ஆர். அதனால், அண்ணா சதுக்கத்துக்கு அருகில்தான் அவரைப் புதைக்க வேண்டும்.” என்று கடுமையாக வாதிட்டு, நாவலர் நெடுஞ்செழியனையும் சம்மதிக்க வைத்தார்கள்.

ஜேப்பியார் எப்போதுமே அதிரடி அரசியல்வாதிதான். அதனால் ‘மாவீரன்’என்ற அடைமொழி, அவருடைய பெயருக்கு முன்னால் சேர்ந்துகொண்டது. திமுக ஆட்சியின்போது, வழக்கு பதிவாகி சிறையில் அடைபட்டிருக்கிறார். மேடையிலும்கூட அனல் பறக்கப்பேசுவார் ஜேப்பியார். அவருடைய பேச்சு எப்படி இருக்கும் என்பதற்கு  1982-ல் மதுரை பொதுக்கூட்டத்தில் பேசியதை உதாரணமாகச் சொல்லலாம்.

“டேய்.. எனக்கு பெரிய கொள்கை லட்சியம்னு எதுவும் இல்ல. நான் எம்.ஜி.ஆர். ரசிகன். எம்.ஜி.ஆர். என் தலைவன். இன்னைக்கு நான் இந்த வசதி அந்தஸ்தோட இருக்கேன்னா.. அதுக்கு என் தலைவன்தான் காரணம். சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளா இருந்த என்னை ஜேப்பியாரா இந்த அளவுக்கு உயர்த்தியது என் தலைவன்தான். என் தலைவனுக்காக உயிரையும் கொடுப்பேன். கொள்கையே தனக்கு இல்லை என்று  பேசிய ஜேப்பியார்தான், 1988-ல் எம்.ஜி.ஆரின் தாயார் சத்யபாமா பெயரில் இன்ஜினியரிங் காலேஜ் ஆரம்பித்து கல்வித்தந்தை ஆனார்.அது இப்போது பல்கலைக்கழகம் ஆகிவிட்டது. ஜோசப் பொறியியல் கல்லூரி, ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, பனிமலர் பொறியியல் கல்லூரி, சத்யபாமா மருத்துவக் கல்லூரி, செயின்ட் மேரீஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட், பனிமலர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட், எஸ்.ஆர்.ஆர்.பொறியியல் கல்லூரி, மாமல்லன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, பனிமலர் பாலிடெக்னிக் என பல கல்வி நிறுவனங்களை உருவாக்கிய அவர், ஜேப்பியார் குடிநீர், ஜேப்பியார் பால், ஜேப்பியார் இரும்பு, ஜேப்பியார் சிமெண்ட், ஜேப்பியார் உப்பு, தொழில்நுட்ப பூங்கா என பிற தொழில்களிலும் ஈடுபட்டார். அட, பத்திரிக்கைத் துறையையும் கூட அவர் விட்டுவைக்கலை. கடந்த 2016ம் ஆண்டு ஜேப்பியார் மரணமடைந்தார்.நில ஆக்கிரமிப்பு செய்த இடங்களை தமிழக அரசு கைப்பற்ற ஆனம்பிச்சதுனால ஆக்கிரமிப்பு செய்த கல்லூரிகள் கலகத்தில் இருக்காங்களாம்.