22
Jun
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச் சலுகை வரம்பை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. அத்துடன் முதலீட்டு வரம்பை ரூ. 25 கோடியாக நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்வது அதிகரிக்கும். இது தொடர்பாக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மிகப் பெரும் சலுகையாக அமைந்துள்ளது.இதற்கு முன்பு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச் சலுகை ரூ. 10 கோடியாக இருந்தது.ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெரும் முதலீடுகளுக்கு 1961-ம் ஆண்டைய வருமான வரிசட்டம் 56 (2) பிரிவின் கீழ் வரி விலக்கு அளிப்பதற்கான அறிவிக்கை விரைவில் வெளியாகும் என்று அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த நாளிலிருந்து 7 ஆண்டுகள் வரை ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இத்தகைய வரிச் சலுகை கிடைக்கும் என முன்னர் இருந்த விதிமுறை தற்போது 10 ஆண்டுகள் வரை என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.அதேபோல ஸ்டார்ட் அப் நிறுவனமாக பதிவு செய்த நிறுவனத்தின்…
