செய்திகள்

A wonderful serenity has taken possession of my entire soul, like these sweet mornings of spring which I enjoy with my whole heart.

துணை மின் நிலையங்களில், ‘சோலார்’! மின்வாரியம் தீவிரம் !!

துணை மின் நிலையங்களில், ‘சோலார்’! மின்வாரியம் தீவிரம் !!

துணை மின் நிலையங்களில், 'சோலார்' எனப்படும், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கும் பணியை, மின் வாரியம், முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது.மின் வாரியத்திற்கு சொந்தமாக, மின் நிலையங்கள், துணை மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் உள்ள, காலி இடங்களில், சுற்றுச்சூழலை பாதிக்காத, சூரியசக்தி மின் நிலையங்களை, மின் வாரியம் அமைத்து வருகிறது.தற்போது, தர்மபுரி மாவட்டம், பாலவாடி துணை மின் நிலையத்தில், 50 கிலோ வாட்; அதே மாவட்டம், கரிமங்கலம் துணை மின் நிலையத்தில், 18 கி.வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர் மத்திய அலுவலகத்தில், 30 கி.வாட்; ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார் செயற்பொறியாளர் அலுவலகங்களில், தலா, 10 கி.வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
Read More
மொபைல் அடிமைகளாக மாறும் கல்லூரி மாணவர்கள்!- ஆய்வு முடிவு!

மொபைல் அடிமைகளாக மாறும் கல்லூரி மாணவர்கள்!- ஆய்வு முடிவு!

இப்போதெல்லாம ஸ்மார்ட் போன் இல்லாத நபர்களை காண்பதே அரிது என்று சொல்லும் அளவுக்கு எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் உள்ளது. பஸ், ரயில், பார்க், பீச் என எங்கும் ஸ்மார்ட்போனில் மூழ்கிய மனிதர்களைத்தான் பார்க்க முடிகிறது. இந்தியாவில் ஸ்மார்ட் விற்பனை விகிதம் இரட்டை இலக்கத்தில் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிலும், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதத்தில் மட்டும் 3 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். இதில் முதல் இடத்தில் ஸியோமி இருக்கிறது. இந்த நிறுவனம் மட்டுமே ஸ்மார்ட்போன் விற்பனை சந்தையில் 30 சதவிகித இடத்தைப் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து சாம்சங், விவோ உள்ளிட்டவை வருகின்றன. இதனிடையே நம் இந்திய மாணவர்கள் தங்கள் போனுக்கு வரும் எந்த தகவல்களையும் தவற விட்டுவிடகூடாது என்ற பதற்றம், மாணவர் கள் மத்தியில் அதிகம் காணப்படு கிறது. இதன் காரணமாக, அவர்கள், தினமும், 150 முறைக்கும் மேல், தங்கள் மொபைல்…
Read More
முறையான முதலீடுகளை செய்திருந்தால்  9 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்த வேண்டாம் !

முறையான முதலீடுகளை செய்திருந்தால் 9 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்த வேண்டாம் !

மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல், நேற்று முன்தினம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், நடுத்தர குடும்பங்களை சேர்ந்த, மூன்று கோடி பேர் பயன் பெறும் வகையில், ஆண்டுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வரை, வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு, 18 ஆயிரத்து 500 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மத்திய வருவாய் துறை செயலர் அஜய் பூஷன் பாண்டே நிருபர்களிடம் கூறியதாவது:வேலைக்கு செல்லும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், ஆண்டு வருவாய், ஐந்து லட்சம் ரூபாய் வரை, தனி நபர் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும், எட்டு முதல் ஒன்பது லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கும் வரி சலுகை உள்ளது. '80 சி' பிரிவில் முதலீடு செய்வோர், கல்விக் கடன், வீட்டுக் கடன் வட்டி செலுத்துவோர், பென்ஷன் திட்டம் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டத்தில் முதலீடு செய்வோர் இந்த வரிச்சலுகைக்கு தகுதி பெறுகின்றனர். நடுத்தர…
Read More
உலோகக் கழிவுகள் இனியும் வேஸ்ட் இல்லை..! அதிலிருந்து கான்க்ரீட் தயாரிக்கலாம் !!

உலோகக் கழிவுகள் இனியும் வேஸ்ட் இல்லை..! அதிலிருந்து கான்க்ரீட் தயாரிக்கலாம் !!

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கழிவு உலோகங்களைக் கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஏற்றவாறு கான்கிரீட் தயாரித்து, அதில் பல்வேறு கட்டுமான வடிவங்களை காட்சிக்கு வைத்து அசத்தி உள்ளது, தனியார் கட்டுமான நிறுவனம்.சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் இரும்பு, காப்பர், அலுமினியம், ஈயம் உள்ளிட்ட உலோகக் கழிவுகளைப் பயன்படுத்தி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்று சென்னையைச் சேர்ந்த ஆர்கிடெக்ட் கான்கிரீட் தொழில்சார் நிறுவனம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்து காண்பித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளது.சென்னையில் நடந்து முடிந்த தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில்தான் இந்த டெமோவை அது காட்டியது. சென்னையைச் சேர்ந்த இந்த கட்டுமான நிறுவனம் தங்களது பிரத்யேகத் தயாரிப்பு ரசாயனத்தின் மூலம் உலோகக் கழிவுகளைக் கொண்டு கான்கிரீட் தயாரித்து வருகிறது. இது வெளி நாடுகளில் பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் இதை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இதன் பயன்பாட்டை கொண்டுவர வேண்டும், இதனால் சுற்றுச்…
Read More
பேட்டரி கார் தயாரிப்பில் ஹூண்டாய் நிறுவனம் ரூ. 7000 கோடி முதலீடு !  தமிழக அமைச்சரவை ஒப்புதல் !!

பேட்டரி கார் தயாரிப்பில் ஹூண்டாய் நிறுவனம் ரூ. 7000 கோடி முதலீடு ! தமிழக அமைச்சரவை ஒப்புதல் !!

இந்தியாவில் இரண்டாவதுபெரியகார் தயாரிப்பு நிறுவனமானத் திகழும் ஹூண்டாய் நிறுவனம் பேட்டரி கார் தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் ஆலை தற்போது இருங்காட்டுக் கோட்டையில் செயல்படுகிறது. இந்த ஆலையின் விரிவாக்கம் மற்றும் பேட்டரி கார் தயாரிப்புக்கு ரூ.7 ஆயிரம் கோடி முதலீடு செய்யப் போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேட்டரி கார் தயாரிப்பு திட்டத்துக்கு அளிக்கப்படும் ஊக்கத்தொகை அடிப்படையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சுற்றுச் சூழலை பாதிக்காத வாகனங்கள் தயாரிப்புக்கு ஊக்கத் தொகை அளிக்கும் தமிழக அரசின் திட்டத்தின் கீழ் இந்த முதலீட்டுக்கு சலுகைகள் கிடைக்கும். இந்த விரிவாக்க நடவடிக்கை மூலம் 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது.இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் அடுத்த வாரம் சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. ஏற்கெனவே உற்பத்தியாகும் கார்களின் எண்ணிக்கையை மேலும் ஒரு லட்சமாக உயர்த்தவும் இந்த…
Read More
ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கம் செலுத்தி சொத்து வாங்கினால் வீடுதேடி வருமானவரி நோட்டீஸ் !

ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கம் செலுத்தி சொத்து வாங்கினால் வீடுதேடி வருமானவரி நோட்டீஸ் !

சொத்துக்களை வாங்குபவர்கள் இனி 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கம் செலுத்தி பணப்பரிவர்த்தனை செய்தால் வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.20 ஆயிரத்துக்கும் அதிகமாக ரொக்கம் செலுத்தி சொத்து வாங்கினால் வீடுதேடி வருமானவரி நோட்டீஸ்.கணக்கில் வராத பணம், கருப்புப்பணம் மற்றும் சட்டவிரோதமான பண பரிவர்த்தனைகளை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அவ்வகையில், இனிமேல் சொத்துக்களை வாங்குபவர்கள் இனி 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கம் செலுத்தி பணப்பரிவர்த்தனை செய்தால் வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
Read More
உலகிலேயே முதன்முதலாக 5ஜி சேவையை தொடங்கியது சீன நிறுவனம்..!!!

உலகிலேயே முதன்முதலாக 5ஜி சேவையை தொடங்கியது சீன நிறுவனம்..!!!

தற்போது மின்னல் வேகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப 4ஜி தொடங்கி தற்போது 5ஜி என தனது எல்லையை பரப்பிக்கொண்டுவரும் இந்த சுழலில் இசட்.டி.இ. கார்ப்பரேஷன் மற்றும் சீனா யுனிகாம் நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் 5ஜி வாய்ஸ் கால் மேற்கொண்டதாக அறிவித்துள்ளன. இதற்கு இசட்.டி.இ. உருவாக்கிய 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்பட்டது.ஷென்சென் 5ஜி சோதனை மையத்தில் உலகின் முதல் 5ஜி வாய்ஸ் கால் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.இந்த சோதனை முயற்சியில் வாய்ஸ் கால் மட்டுமின்றி வீசாட் க்ரூப் கால், ஆன்லைன் வீடியோ மற்றும் பிரவுசிங் உள்ளிட்டவையும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. என்.எஸ்.ஏ. மோட் மூலம் கால் செய்யப்பட்ட வணிக ரீதியிலான முதல் சோதனை மையமாக சீனா யுனிகாம் நிறுவனத்தின் ஷென்சென் சோதனை மையம் இருக்கிறது. இந்த பகுதி முழுக்க நெட்வொர்க் உபகரணங்களை கட்டமைப்பது மற்றும் சிறப்பு சேவைகளை வழங்குவது, ரோமிங் மற்றும் இண்டர்கனெக்ஷன் உள்ளிட்டவற்றை பலகட்டங்களில்…
Read More
வருமான வரி  கணக்கு தாக்கல் புதிய திட்டத்துக்கு அனுமதி !

வருமான வரி கணக்கு தாக்கல் புதிய திட்டத்துக்கு அனுமதி !

வருமான வரி கணக்கு தாக்கல் மற்றும் அதன் மீதான பரிசீலனையை எளிமைபடுத்தும் வகையில், புதிய திட்டத்தை வடிவமைக்கும், 4,242 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை, 'இன்போசிஸ்' நிறுவனத்துக்கு அளிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது.இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, ரயில்வே அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, பியுஷ் கோயல் கூறியதாவது: வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில், வருமான வரி கணக்கு தாக்கல் மற்றும் அதன் மீதான பரிசீலனைக்கு, தற்போது பயன்பாட்டில் உள்ள மென்பொருள் மற்றும் நடைமுறையில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளோம். அதன் படி,புதிய நடைமுறையை வடிவமைத்து தரும்பணியை, இன்போசிஸ் நிறுவனத்துக்கு வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக, 4,242 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். அடுத்த, 18 மாதங்களுக்குள், இந்த நிறுவனம், புதிய நடைமுறையை வகுக்கும். பரிசோதனைகளுக்குப் பின், அது பயன்பாட்டுக்கு வரும்.இந்த புதிய முறையின் மூலம், கணக்கு தாக்கல்…
Read More
வோல்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ரூ.100 கோடி அபராதம் !

வோல்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ரூ.100 கோடி அபராதம் !

வோல்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மாசுக்களை பாதுகாப்பற்ற முறையில் வெளிப்படுத்தியதாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான வோல்ஸ்வேகன் மீது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய பசுமை தீர்ப்பாயம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் நாளை (ஜன.,18) மாலை 5 மணிக்கும் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், அப்படி அபராதம் செலுத்த தவறினால் வோல்ஸ்வேன் நிறுவனத்தின் இந்திய மேலாண் இயக்குனர் கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும். அத்துடன் வோல்ஸ்வேகன் நிறுவனத்திற்கு இந்தியாவில் உள்ள அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More
75 சதவீதம் இந்தியர்களுக்கு காப்பீடு இல்லை ? மத்திய அரசின் தகவல்

75 சதவீதம் இந்தியர்களுக்கு காப்பீடு இல்லை ? மத்திய அரசின் தகவல்

இந்தியாவில் 75 சதவீத மக்கள் காப்பீட்டு திட்டத்தில் இணையவில்லை என்ற தகவல் மத்திய அரசின் புள்ளிவிவரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. ஐரோப்பியா நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் 75 சதவீத மக்கள் காப்பீட்டு திட்டத்தில் இணையவில்லை.வருவாய் ஈட்டுபவர் இறந்தபின், காப்பீட்டால் பயன்பெறும் குடும்பம் 8 சதவீதம் மட்டுமே உள்ளது.இது ஒழுங்குபடுத்தப்படாத துறையின் விஷயத்தில் மிகவும் கடுமையானது .ஒழுங்குபடுத்தப்படாத துறையில் உள்ள முறைசாரா தொழிலாளர்கள் வருமான ஏற்றத்தாழ்வு, அபாயகரமான பணியிட நிலைமைகள் மற்றும் வயது முதிர்ச்சி ஆகியவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.அதேசமயம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவரும் காப்பீட்டில் சேர்ந்தால், இத்தகைய பாதிப்பை தவிர்க்கலாம்.இவ்வாறு அரசின் புள்ளிவிவரத் தகவல் கூறுகிறது.75 சதவீதம் இந்தியர்களுக்கு காப்பீடு இல்லை, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு காப்பீடு தேவை
Read More