24
Aug
ஜியோ நிறுவனம் தொடர்ந்து மலிவு விலையில் பல புதிய திட்டங்களை கொண்டுவர முயற்சி செய்துள்ளது, அதன்படி இப்போது ஜியோ ஜிகா ஃபைபர் இணைய சேவை தற்போது மிகவும் குறிப்பிட்ட நகரங்களில் மட்டும சோதனை முயற்சியாக நடத்தப்பட்டு வருகிறது.இந்த புதிய சேவை கூடிய விரைவில் அறிமுகமாக உள்ள நிலையில் டிவி, இணையம், போன் என மூன்று சேவைகளையும் ஒரே இணைப்பில் தரும் இந்த ஜிகா ஃபைபர் சேவைகளுக்கான கட்டணங்கள் வெளியாகி உள்ளன.இந்த சேவைக்கு செக்யூரிட்டி டெபாசிட் கட்ட வேண்டும் என்று 4500 ரூபாய் கட்டணம் விதிக்கப்பட்டதாகவும், அது 2500 ஆககுறைக்கப்படுகிறது என்றும் அந்த தகவல்களில் கூடுதலாக சில முக்கிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. புதிய தொழில்நுட்பத்தில் உருவான இந்த சிங்கிள் ரூட்டர், சிங்கிள் பேண்டில் மிக அதிகமான இண்டர்நெட் வேகத்தை தரும். அதாவது 50 Mbps வேகத்தில் இருந்து 100 Mbps வேகம் வரை இண்டர்நெட் வேகம் பெறக்கூடியது இந்த ஆப்டிக்கல் நெட்வொர்க்…
