ஆரோக்யம்

சாலைகளில் தெர்மல் கேமரா.. ஜிபிஎஸ் ! தமிழக அரசு மாஸ் திட்டம்!

சாலைகளில் தெர்மல் கேமரா.. ஜிபிஎஸ் ! தமிழக அரசு மாஸ் திட்டம்!

கொரோனா நோயாளிகள் தொடர்பு கொண்ட நபர்களை கண்டுபிடிப்பதற்காக தமிழக அரசு புதிய தொழில்நுட்பங்களை கையில் எடுத்துள்ளது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு திட்டங்களை வகுத்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பை கண்டு பிடிப்பதற்காக காண்டாக்ட் டிரேஸ் முறை பயன்படுத்தப்படுகிறது. இது வித்தியாசமான முறை ஆகும். அதாவது ஏ என்ற நபர் வெளிநாட்டில் இருந்து கொரோனா பாதிப்போடு இந்தியா வருகிறார். இந்தியாவில் அவர் பலரை சந்திக்கிறார். கொரோனா பாதித்த ஏ என்ற நபர் மூலம் அவர் சந்தித்த மற்றவர்களுக்கும் கொரோனா பரவி இருக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் இவர்கள் எல்லோரையும் கண்டுபிடிக்க வேண்டும். அதாவது ஏ என்ற நபர் ''காண்டாக்ட்'' செய்த எல்லோரையும் கண்டுபிடிப்பதுதான் காண்டாக்ட் டிரேஸ் முறை. இதன் மூலம்தான் கொரோனா மேலும் பரவுவதை தடுக்க முடியும். இந்தியா முழுக்க இந்த காண்டாக்ட் டிரேஸ் முறையில் சுகாதாரத்துறை அதிகாரிகள்தான் களமிறக்கப்பட்டு…
Read More
21-முதல் 40 வயதுக்கு இடையில் 42% பேர் பாதிப்பு? சுகாதாரத்துறை தகவல் ?

21-முதல் 40 வயதுக்கு இடையில் 42% பேர் பாதிப்பு? சுகாதாரத்துறை தகவல் ?

இந்தியாவில் 21 வயது முதல் 40 வயது இடைப்பட்டவர்களே 42 சதவீதம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலாளர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த வயது விவரக்குறிப்பு பகுப்பாய்வை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால், வெளியிட்டுள்ளார்.கொரோனாவால் 21 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என 42 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். நடுத்தர வயதுடையவர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறிப்பிட்ட அவர் 9% சதவீத பாதிப்புகள் 0-20 வயதுக்கு இடைப்பட்டவை என்றும்; 42% சதவீத பாதிப்புகள் 21 முதல் 40 வயது வரையும்; 33% பேர் 41 முதல் 60 வயது வரை பாதிக்கப்பட்டுள்ளனர்;மேலும் 17% சதவீத 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.மேலும் நாட்டில் 2,902 பேர் கொரோனா பாதிப்புகளில் 58 நோயாளிகள் ஆபத்தானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாகவும். இவற்றில் பெரும்பாலானவை மத்தியப் பிரதேசம், டெல்லி மற்றும் கேரளாவில் பாதிப்புகள் உள்ளன என…
Read More
சர்க்கரை நோயாளிகளுக்கு அருமையான உணவு வாழைப்பூ…!

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமையான உணவு வாழைப்பூ…!

வாழைப்பூ உடலுக்கு எந்தளவிற்கு ஊட்டம் தருகிறது என்று உங்களுக்கு தெரியுங்களா? தெரிந்து கொள்ளுங்க..வாழைப்பூவை நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். வயிற்று கடுப்பு நீங்க, வெள்ளைப்படுதல், கை கால் எரிச்சல், மலட்டு தன்மை நீங்க, ரத்த மூலம், உடல் சூடு, இருமல் என பல நோய்களுக்கு மருந்தாகிறது. அதை விட மக்களில் ஏராளமானோருக்கு இருக்கும் பிரச்னையான சர்க்கரை நோய்க்கு வாழைப்பூ சிறந்த மருந்து என்பதை தெரிந்து கொள்ளுங்க... சர்க்கரை நோயை சித்த மருத்துவத்தில் மதுமேக நோய் என்பார்கள், சர்க்கரை நோய்க்கு மூலக்காரணம் நம் உணவு முறையே ஆகும்.ரசாயனம் கலந்த உணவுகள், போதிய உடற்பயிற்சியின்மை, அதிக வேளைப்பளு, சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளாதது. போன்ற காரணங்களினால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பூவுடன் பூண்டு, மிளகு, சின்ன வெங்காயம் சேர்த்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று, உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கச் செய்யும், இதனால் சர்க்கரை…
Read More
சுகாதார காப்பீடு திட்டத்தின் கீழ் இலவச கொரோனா வைரசுக்கான பரிசோதனை?

சுகாதார காப்பீடு திட்டத்தின் கீழ் இலவச கொரோனா வைரசுக்கான பரிசோதனை?

தேசிய சுகாதார ஆணையம் என்.எச்.ஏ. நேற்று வெளியிட்ட அறிக்கையில், "கொரோனா வைரசுக்கான பரிசோதனையும், சிகிச்சையும் அரசு துறையில் இலவசமாக கிடைக்கிறது. இப்போது சுகாதார காப்பீடு திட்டத்தின் கீழ் பலன் பெறுகிற 50 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசுக்கு தனியார் பரிசோதனைக்கூடங்களில் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம். அரசு அறிவித்துள்ள சிறப்பு தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவச சிகிச்சையும் பெறலாம்" என கூறப்பட்டுள்ளது. மேலும் இதுபற்றி மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் கூறும்போது, "முன் எப்போதும் இல்லாத வகையில் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், தனியார் துறையை மிக முக்கிய பங்காளியாகவும், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்குதாரராகவும் தீவிரமாக ஈடுபடுத்த உள்ளோம்" என குறிப்பிட்டார்.
Read More
நீரிழிவு நோயாளிகளுக்கான புதிய ரக அரிசி !

நீரிழிவு நோயாளிகளுக்கான புதிய ரக அரிசி !

நீரிழிவு நோயாளிகளுக்கான புதிய ரக அரிசி... அரிசி சாதம் அதிகம் எடுத்துக் கொள்வதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து அவதிப்படும் நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி ஒன்று உள்ளது. கம்பு, கேழ்வரகு போன்ற சிறுவகை தானியங்களை விடவும் மாவுச் சத்து குறைவான தெலங்கானா சோனா என்ற அரிசி ரகத்தை ஐதராபாத் தெலங்கானா வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஜெய்சங்கர் என்பவர் உருவாக்கி இருக்கிறார். இந்த அரிசியில் 51 சதவிகிதம் மட்டுமே மாவுச் சத்து இருப்பதுடன், இருதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கவும் உதவும் என்று புகழ் பெற்ற American Journal of Food Nutrition இதழ் தெரிவித்துள்ளது. Type Two டயாபெட்டிஸ் எனப்படும் பொதுவான சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்கு இந்த அரிசி பெரிதும் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது. 120 ல் இருந்து 130 நாட்களுக்குள் விளைச்சல் தரும் ரகமாக இருப்பதால், விவசாயிகளுக்கும் இந்த அரிசி ரகம் பயனுள்ளதாக இருக்கும்.
Read More
மல்லி விதையில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள் !

மல்லி விதையில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள் !

சமையலில் சேர்க்கப்படும் மசாலா பொருட்களில் முக்கியத்துவம் வாய்ந்தது மல்லி. இதில் விட்டமின் ஏ, விட்டமின் பி1, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரோட்டீன் சத்துக்கள் அடங்கியுள்ளது. இதனை இரவு படுக்கும் முன் நீரில் ஊறவைத்து காலையில் எழுந்து குடித்து வந்தால் ஏராளமான நன்மைகளை பெறலாம். சர்க்கரை அளவை பராமரிப்பதில் முக்கியத்துவம் வாய்ந்தது, கொத்தமல்லி விதை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்கிறது. குறிப்பாக சர்க்கரை நோய் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படும் நபர்கள் இதனை குடித்து வந்தால் நல்ல பலனை பெறலாம். ஒரு வாரம் தொடர்ச்சியாக காலையில் எழுந்தவுடன் இந்நீரை குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதிலுள்ள விட்டமின் கே மற்றும் கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால், இரத்த சோகை பிரச்சனையில் இருந்து விரைவில்…
Read More
அற்புதமான மருத்துவக் குணங்கள் அடங்கிய மாம்பூ !

அற்புதமான மருத்துவக் குணங்கள் அடங்கிய மாம்பூ !

அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்டது மாம்பூக்கள்... முக்கனிகளில் ஒன்றாகப் போற்றப்படும் மாம்பழம் எண்ணற்ற மருத்துவப் பயன்களைக் கொண்டுள்ளது. வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே, மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன. பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய் புண்களைக் குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச் சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றன என்று கூறுவர். வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன. தொண்டையில் புண் ஏற்பட்டு எதையும் சாப்பிடக்கூட முடியாமல் இருப்பவர்கள், மாம்பூக்களை பறித்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்யவேண்டும்.அதனை நன்கு நீரில் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டிக்கொண்டு அதில் எலுமிச்சம் பழத்தின் சாறினை பிழிந்து விடவேண்டும். அந்த தண்ணீரை நன்றாக தொண்டைக்குள் இறங்குமாறு கொப்பளிக்க தொண்டை வலி குணமடையும். உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காண்பிக்க கொசுத் தொல்லை ஒழியும். மாம்பூ, சீரகம், இரண்டையும் சம அளவாக…
Read More
உடல் உஷ்ணத்தை தணிக்கும் மருதாணி !

உடல் உஷ்ணத்தை தணிக்கும் மருதாணி !

மருதாணி இலைச் சாறு, நல்லெண்ணெய், பசும்பால், மூன்றையும் ஒன்றாகக் கலந்து காய்ச்சி தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை நீங்கும்.மருதாணி இலையை தயிருடன் சேர்த்து அரைத்து இரவு படுப்பதற்கு முன் காலில் உள்ள பித்த வெடிப்புகளில் தடவி வந்தால் பித்த வெடிப்பு சரியாகும்.பெண்கள் அடிக்கடி தங்களின் கைகளில் மருதாணி இலைகளை அரைத்து இட்டுக்கொள்வதால் கைகளில் இருக்கும் முரட்டு தன்மை நீங்கி கைகள் மிருதுவாகும்.மருதாணியை விரல்களின் நகங்களின் மீது இட்டுக்கொள்வதால் நகசுத்து பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும். மருதாணி இலைகளை அரைத்த பின்பு அந்த இலைகளை பிழிந்து வடிகட்டி எடுக்கப்படும் மருதாணி இலை சாற்றை தீராத வயிற்று போக்கு சீதபேதி பாதிப்பு கொண்டவர்கள் அருந்தி வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.சொறி சிரங்கு போன்ற தோலில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் சிறந்த நிவாரணமாக மருதாணி இலை சாறு மற்றும் எண்ணெய் இருக்கிறது.மருதாணி இலையில் இருந்து பெறப்பட்ட மருதாணி எண்ணையை தலைக்கு அடிக்கடி தேய்த்து வந்தால் உடல் உஷ்ணத்தை தணித்து,…
Read More
உங்க ஆரோக்கியத்திற்கு சிறந்தது பச்சை மிளகாயா! சிவப்பு மிளகாயா!

உங்க ஆரோக்கியத்திற்கு சிறந்தது பச்சை மிளகாயா! சிவப்பு மிளகாயா!

எல்லா வகையான உணவுகளிலும் நாம் காரத்திற்கு மிளகாய் சேர்ப்போம். இந்திய உணவுகளில் கார ருசிக்கு மிளகாய் ஒரு முக்கிய காரணம். பச்சை மிளகாய் மற்றும் சிவப்பு மிளகாய் இரண்டையும் நாம் உணவில் சேர்த்துக்கொள்கிறோம். இரண்டிற்கும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. மக்களில் சிலர் பச்சை மிளகாயை விரும்புகிறார்கள். சிலர் சிவப்பு மிளகாயை விரும்புகிறார்கள். அனைத்து மசாலா பிரியர்களுக்கும், மிளகாய் அவர்களின் உணவின் முக்கிய பகுதியாக அமைகிறது. சிலர் பச்சை மிளகாயின் புத்துணர்ச்சியை விரும்பினாலும், மற்றவர்கள் தங்கள் உணவில் தூவப்படும் சிவப்பு மிளகாய் தூளை விரும்புகிறார்கள். ஆனால் எந்த மிளகாய் உண்மையில் உங்களுக்கு சிறந்தது? இங்கே நாம் பச்சை மற்றும் சிவப்பு மிளகாயின் நன்மைகளை ஒப்பிடுகிறோம். எந்த வடிவத்தில் அவை உகந்த நன்மைக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம். பச்சை மிளகாயின் நன்மைகள் காரம் நிறைந்த பச்சை மிளகாயில் ஆரோக்கிய நன்மைகள் நிறைய உள்ளன. எல்லா வகையான இந்திய உணவுகளிலும்…
Read More
அஜீரணம் குறித்து ஆயுர்வேதம் என்ன கூறுகிறது..?

அஜீரணம் குறித்து ஆயுர்வேதம் என்ன கூறுகிறது..?

ஜீரணம் சீராக நடைபெற கனமான பொருட்களை அரை வயிறு அளவுக்கும், இலகுவான பொருட்களை சற்று அதிகமாகவும் சாப்பிடலாம் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.ஜீரணம் சீராக நடைபெற கனமான பொருட்களை அரை வயிறு அளவுக்கும், இலகுவான பொருட்களை சற்று அதிகமாகவும் சாப்பிடலாம் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அளவுக்கு மீறிய உணவு எல்லா தோ‌‌ஷங்களையும் பிரச்சினைக்கு உள்ளாக்குகிறது. இதனால் பல விதமான வயிற்று நோய்கள் உருவாகின்றன. அஜீரண நோய் உள்ளவர்கள், கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டால் மருந்து சாப்பிடாமல் பட்டினி இருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. அஜீரணத்தால் மலம், சிறுநீர் கழிப்பதில் தடை, குடல் வாட்டம், அபான வாயு தடை, வயிற்றுப் பொருமல் போன்றவை ஏற்படலாம். கோபம், மனத்துயரம் போன்றவற்றாலும் செரிக்கும் தன்மை பாதிக்கப்படுகிறது. பத்தியமான உணவுடன் அபத்தியமான உணவைச் சேர்த்துச் சாப்பிடுவது சமாசனம் என்றும், உணவைச் சாப்பிட்ட உடன் மறுபடியும் சாப்பிடுவது அத்யசனம் என்றும், அகாலத்தில் அதிக அளவு அல்லது குறைந்த…
Read More