ஆரோக்யம்

நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்..!!

நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்..!!

தினம் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டால் தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும்.ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.நெல்லிச்சாறுடன் பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும். ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு ஸ்பூன் நாவல்பழப் பொடி, ஒரு ஸ்பூன் பாகற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வரவே வராது.நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து, நன்றாக கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தாலும், தலை பளபளப்பாகவும், கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க உதவும்.நெல்லிக்காயின் சாறையும் தேனையும் சேர்த்துக் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் பலம் கிடைக்கும், குடலுக்கும் பலம் கிடைக்கும்.
Read More
சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் !

சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் !

நாம் சாப்பிட கூடிய ஒரு சில தேவையற்ற உணவு பழக்கத்தை நிறுத்தி விட்டாலே உடலுக்கு எந்தவித நோய்களும் ஏற்படுவதில்லை. அந்த வகையில் இந்த சர்க்கரை முதல் இடத்தில் உள்ளது.இளமை குறையாமல் இருக்க வேண்டுமென்றால் அதற்கு சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினாலே போதும். சர்க்கரை சாப்பிடும் பழக்கத்தை நிறுத்துவது கொஞ்சம் கடினம் என்றாலும், முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை.சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தி பிறகு உங்களின் உடலில் இந்த மாற்றம் நடக்க கூடும். அதாவது, கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உடல் எடையை குறையும் என ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர். மேலும், தொப்பையால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் இந்த நல்ல தீர்வை தரும். இளமை குறையாமல் இருக்க வேண்டுமென்றால் அதற்கு சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினாலே போதும். இவை தோலில் உள்ள செல்களை சிதைக்காமல் வைத்து கொள்ளும். மேலும், சீக்கிரமே வயதாகாமல் மிக இளமையாக இருப்பீர்கள். அத்துடன் முக சுருக்கங்களும் வராது.பொதுவாக சர்க்கரை சாப்பிடும் பழக்கம் கொண்ட…
Read More
மனிதர்கள்  உண்ணும் உணவில்  பிளாஸ்டிக் துகள்கள் ?

மனிதர்கள் உண்ணும் உணவில் பிளாஸ்டிக் துகள்கள் ?

மனிதர்கள் உண்ணும் உணவில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுகின்றன என்ற அதிர்ச்சித் தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கின்றனர். தங்களால் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்ட ஒவ்வொரு மாதிரியிலும், ஒன்பது வெவ்வேறு வகை பிளாஸ்டிக் பொருட்களின் சிறிய துகள்கள் காணப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். உணவின் மூலம் குடலுக்குள் செல்லும் பிளாஸ்டிக் துகள்கள், உடலின் நோய் எதிர்ப்புக் கட்டமைப்பைப் பாதிப்பதோடு, தீங்கு விளைவிக்கக்கூடிய வைரஸ்களை விருத்தி செய்வதற்கும் வழிவகுக்கின்றன. டுனா எனப்படும் சூறை மீன், லாப்ஸ்டர் மற்றும் இறால் உணவுகளில் அதிக அளவிலான பிளாஸ்டிக் காணப்பட்டதை முந்தைய ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன. உலகில் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் 5 சதவீதம் கடலில் போய்ச் சேருகிறது என்றும், அங்கு அது படிப்படியாக உடைந்து கடல்வாழ் உயிரினங்களின் உணவுடன் கலக்கிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. உணவுகள் அடைக்கப்பட்டுவரும் பாக்கெட்டுகளின் மூலமாகவோ உணவை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் நுட்பங்கள் மூலமாகவோ உணவில் பிளாஸ்டிக் சேருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். உலகெங்கும் பிளாஸ்டிக்…
Read More
இந்தியர்கள் வருமானத்தில், 10 சதவீதம் மருத்துவ சிகிச்சைகளுக்கு செலவிடுகின்றனர்?

இந்தியர்கள் வருமானத்தில், 10 சதவீதம் மருத்துவ சிகிச்சைகளுக்கு செலவிடுகின்றனர்?

வருமானத்தில், 10 சதவீத தொகையை, மருத்துவ சிகிச்சைகளுக்காக இந்தியர்கள் செலவிடுவதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இலங்கை, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில், மருத்துவ சிகிச்சைகளுக்கு மக்கள் செலவிடும் தொகை குறித்து ஆய்வு நடத்திய, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:இந்தியர்களில், 23 கோடி பேர், அதாவது, நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 17 சதவீதம் பேர், தங்கள் வருமானத்தில், 10 சதவீதத்துக்கும் மேல், மருத்துவ சிகிச்சைகளுக்கு செலவிடுகின்றனர். இது, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம். இலங்கையில், 2.9 சதவீதம்; பிரிட்டனில், 1.6 சதவீதம்; அமெரிக்காவில், 4.8 சதவீதம் மற்றும் சீனாவில், 17.7 சதவீதத்தினர், மருத்துவ சிகிச்சைக்காக வருமானத்தில், 10 சதவீதத்துக்கும் அதிகமாக செலவிடுகின்றனர். பெரும்பாலானோர், தங்கள் வருமானத்தில் பெரும் பங்கு அல்லது வருமானத்துக்கு மேல் மருத்துவ சிகிச்சைகளுக்கு செலவிடும் போது, வறுமை நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.…
Read More
உடலில் இருப்பது கூட தெரியாத கொடூர புற்றுநோய்கள்..!

உடலில் இருப்பது கூட தெரியாத கொடூர புற்றுநோய்கள்..!

நாம் நினைத்து கூட பார்க்காத அளவிற்கு புற்றுநோய்கள் ஏராளமான வகையில் உள்ளது. பொதுவாக புற்றுநோய் என்பது புற்றுநோய் செல்களால் உருவாகிறது. இந்த செல்கள் பல நாட்கள் நம் உடலில் இருந்து கொண்டே வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை குறைத்து விடும். பிறகு உடல் முழுக்க இவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும். இன்று வருகின்ற நோய்களின் எண்ணிக்கையை பார்த்தால் நம்மை அறியாமலே உள்ளுக்குள் பயம் வருகின்றது. சில வகையான நோய்கள் அறிகுறிகளை முன்கூட்டியே காட்டி விடும். ஆனால், சில வகையான கொடூரமான நோய்கள் உங்கள் உடலுக்குள் இருந்து கொண்டே இறுதி நாட்களில் மட்டுமே வெளிப்படுத்தும்.இந்த வகையான நோய்கள் வருவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. குறிப்பாக நோய்களில் புற்றுநோய் வகைகள் தான் நம்மை அதிகம் மறைந்திருந்து தாக்க கூடும். உடலில் இருந்து கொண்டே அறிகுறிகளை இறுதி நாட்களில் காட்டும் புற்றுநோய் வகைகள் என்னென்ன என்பதை இனி அறிவோம். கணைய புற்றுநோய் கணையங்கள் மிக முக்கிய…
Read More