ஆரோக்யம்

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை – டாக்டர் சுதா சேஷய்யன்விளக்கம் !

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை – டாக்டர் சுதா சேஷய்யன்விளக்கம் !

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை யார்-யார், எவ்வளவு பயன்படுத்தவேண்டும்? டாக்டர் விளக்கம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை - டாக்டர் சுதா சேஷய்யன் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தின் பயன்பாடு குறித்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், சிறப்பு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை கொரோனா வைரசை தடுக்குமா? பதில்:- ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்பது மலேரியா நோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிற ஒரு மருந்து. கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, இந்த மருந்தை பயன்படுத்தினால் நல்ல குணம் இருப்பதை டாக்டர்கள் கண்டார்கள். ஆகவே இந்த மருந்தை கொரோனா சிகிச்சையில் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கியுள்ளது.வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் அணுக்கள், ‘இண்டர்பெரான்’ எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்யும். ஆங்கிலத்தில் உள்ள ‘இண்டர்பியர்’ என்னும் சொல்லில் இருந்து வந்த பெயர் ‘இண்டர்பெரான்’ என்பதாகும். வைரசின் பெருக்கத்தில் இடையீடு செய்வதால், இத்தகைய…
Read More
கொரோனாவை சுற்றி சர்க்கரை..! சைலன்ட்டாக மனித உடலுக்குள் நுழையும் ரகசியம்..!!

கொரோனாவை சுற்றி சர்க்கரை..! சைலன்ட்டாக மனித உடலுக்குள் நுழையும் ரகசியம்..!!

புதிய ஆய்வு ஒன்றில் கொரோனா வைரஸ் எப்படி எந்த அறிகுறியும் இல்லாமல் மனித உடலுக்குள் நுழைகிறது என தெரிய வந்துள்ளது.கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கு காரணம், அந்த வைரஸ் குறித்த அதிக தகவல்கள் இல்லாததே. மேலும், மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அந்த வைரஸ் ஏமாற்றுவதால் எந்த மருந்து கொடுத்தாலும் அது பெரிய அளவில் பயனளிப்பதில்லை. இந்த நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை கொரோனா வைரஸ் எப்படி ஏமாற்றுகிறது? என்பது பற்றிய முக்கிய தகவல் ஆய்வில் வெளியாகி உள்ளது. மருந்து இல்லை உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் 14 லட்சம் பேரை தாண்டி பாதித்துள்ளது. 83,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒவ்வொரு நாடும் சில மருந்துகளை கூட்டாக கொடுத்து வருகிறது. சிலர் குணமடைகிறார்கள். சிலர் பலியாகிறார்கள். கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள் எப்படி இறக்கிறார்கள், எப்படி குணமடைகிறார்கள் என்பதும் மர்மமாகவே…
Read More
பி.சி.ஜி தடுப்பூசி ! கொரோனா தாக்கம் குறைவாக காணப்பட்டுள்ளது.!!

பி.சி.ஜி தடுப்பூசி ! கொரோனா தாக்கம் குறைவாக காணப்பட்டுள்ளது.!!

கொரோனாவால் தாக்கப்பட்டுள்ள முதல் 50 நாடுகளை ஆய்வு செய்ததில், இந்த தடுப்பூசி காலாகாலமாக பயன்படுத்திவரும் நாடுகளில் கொரோனாவால் இறப்பு வீதம் மிகவும் குறைவாக காணப்பட்டது என்ற உண்மை வெளியானது.அதுவும் சுமார் 6 மடங்கு அளவுக்கு கொரோனா தாக்கம் பி.சி.ஜி தடுப்பூசி பயன்படுத்திவரும் நாடுகளில் குறைவாக காணப்பட்டுள்ளது. தற்போது அதே பி.சி.ஜி தடுப்பூசியை மீண்டும் கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்த முடியுமா என்ற ஆய்வில் இறங்கியுள்ளனர் ஆய்வாளர்கள்.கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் 4,000 சுகாதார ஊழியர்களுக்கு பி.சி.ஜி தடுப்பூசி அளிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இந்த ஆய்வில் சாதகமான முடிவு வரும் என்றே ஆய்வாளர்கள் தற்போது நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Read More
M ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கே சென்று  காய்கறிகள், இலவச கபசுர குடிநீர் வினியோகம் செய்யும் திட்டம் !

M ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கே சென்று காய்கறிகள், இலவச கபசுர குடிநீர் வினியோகம் செய்யும் திட்டம் !

தமிழக முதலமைச்சரால் அண்மையில் தொடங்கிவைக்கப்பட்ட M Auto நிறுவனத்தின் மின்சார ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கே சென்று கொள்முதல் விலைக்கே காய்கறிகள், இலவச கபசுபம் குடிநீர் வினியோகம் செய்யும் திட்டம் அறிமுகமாகியுள்ளது: மாசில்லா தமிழகம் என்ற நோக்கத்தில் M Auto நிறுவனத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட மின்சார ஆட்டோக்களின் இயக்கத்தை அண்மையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கிவைத்தார். ஏற்கெனவே பயணிகள் ஆட்டோக்கள், நடமாடும் டீ கடைகள், போன்றவை M Auto நிறுவனத்தால் வடவமைககப்பட்ட மின்சார ஆட்டோக்களாக இயங்கிவருகிறன. இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. யாரும் வெளியே சென்று கடைகளில் கூட்டமாக நின்று சமையலுக்கு தேவையான காய்கறிகளை வாங்கமுடியாத சூழலும் உள்ளது. இந்நிலையில் குடியிருப்புகளுக்கே நேரடியாக M Auto நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட மின்சார ஆட்டோக்களில் சென்று, கொள்முதல் செய்யப்பட் விலையில் காய்கறிகள், கரோனா வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள அரசால் அங்கிகரிக்கப்பட்ட இலவச கபசுபம், இலவச முக்கவசம்,…
Read More
முகக்கவசத்தில் கொரோனா 7 நாட்கள் வரை உயிழ் வாழும் ? ஆய்வில் வெளியான தகவல்கள் ?

முகக்கவசத்தில் கொரோனா 7 நாட்கள் வரை உயிழ் வாழும் ? ஆய்வில் வெளியான தகவல்கள் ?

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் கோரத்தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. இதனால் இதை கட்டுக்குள் கொண்டு வர அனைத்து நாடுகளும், ஊரடங்கு உத்தரவிட்டது. இந்நிலையில், முகக்கவசத்தில் கொரோனா 7 நாட்கள் வரை உயிர் வாழும் என்றும், ரூபாய் நோட்டுகள் மற்றும் எவர்சில்வர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்களின் மீது சில நாட்கள் உயிர் வாழலாம் என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, வீடுகளில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் கிருமி நாசினிகள் மற்றும் பிளீச்சிங் பவுடர்கள், சோப்கள் போன்றவை வைரஸை எளிதில் கொன்று விடலாம் என்பதும் தெரியவந்துள்ளது. அதிலும் , அச்சடிக்கப்பட்ட காகிதம், டிசு பேப்பர் போன்றவற்றில் குறைந்தது 3 மணிநேரத்திற்கு, மரப்பலகை மற்றும் துணிகளில் இரண்டு நாட்கள் வரையிலும் உயிருடன் இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது முகக்கவசம் அணியும் நபர்கள், முகக்கவசத்தின் வெளிப்புறத்தில் தொடாமல் இருப்பது பாதுகாப்பானது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More
ஒரு மனிதரில் இருந்து 406 பேருக்கு கொரோனா பரவும்! ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை !!

ஒரு மனிதரில் இருந்து 406 பேருக்கு கொரோனா பரவும்! ஐ.சி.எம்.ஆர் எச்சரிக்கை !!

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் இறுதி வரை விமானப்போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் விமானங்கள் அனைத்தும் பயன்படுத்த முடியாத நிலையில் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது; கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 2500 ரயில் பெட்டிகள் இதுவரை தயார் செய்யப்பட்டுள்ளன. இதில் 40 ஆயிரம் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. நாள் ஒன்றுக்கு 152 விமானங்கள் மூலம் அத்தியாசிய பொருட்கள் அனுப்பட்டுள்ளது. இதன்…
Read More
கேப்சியூல் மாத்திரைகளை வெந்நீரில் சாப்பிட கூடாது ? ஏன் தெரியுமா ??

கேப்சியூல் மாத்திரைகளை வெந்நீரில் சாப்பிட கூடாது ? ஏன் தெரியுமா ??

பொதுவாக நாம் உட்கொள்ளும் மருந்துகளை மற்ற உறுப்புகளுக்கு எடுத்து செல்ல ஒரு கருவியாக இருப்பவை தான் திரவ பொருட்கள். இதில் தண்ணீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மாத்திரைகளில் பலவிதங்கள் உண்டு. அவற்றின் தன்மைக்கேற்ப தான் சரியான தட்பவெப்பம் கொண்ட நீரை நாம் பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு கேப்சுயூல் மாத்திரைகள், வீரியம் அதிகம் கொண்ட மாத்திரைகள், சாதாரண காய்ச்சல் மாத்திரைகளை சொல்லலாம். இவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு தட்பவெப்ப நீருடன் நாம் எடுத்து கொள்ள வேண்டும். வைட்டமின் டி, கால்சியம் போன்ற மாத்திரைகளை பாலை பயன்படுத்தி நாம் குடித்து வரலாம். ஆனால், இது எல்லா வகை மாத்திரைகளுக்கும் உகந்தது அல்ல. சில வகையான மாத்திரைகளுக்கு வெந்நீரை நாம் பயன்படுத்த கூடாது. முக்கியமாக கேப்சியூல் வகை மாத்திரைகளை வெந்நீரை பயன்படுத்தி நாம் குடித்து வந்தால் அவை நாக்கிலே ஒட்டி கொள்ளும். பாராசிட்டமால் போன்ற காய்ச்சல் வகை மாத்திரைகள் விரைவில் கரைய வெது வெதுப்பான நீரை…
Read More
உலக அளவில்  40 கோடி Chloroquine மாத்திரைகளை இந்தியா உற்பத்தி செய்கிறது.!

உலக அளவில் 40 கோடி Chloroquine மாத்திரைகளை இந்தியா உற்பத்தி செய்கிறது.!

உலக அளவில் Chloroquine மாத்திரை உற்பத்தியில் 40% மாத்திரைகள் 213 மருந்து கம்பெனிகள் மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.அதாவது மார்ச்சு மாத நிலவரப்படி மாதத்திற்கு 20 கோடி மாத்திரைகளை இந்தியா உற்பத்தி செய்து வந்தது....தற்போது மாதத்திற்கு 40 கோடி மாத்திரைகள் வரை உற்பத்தி செய்வதற்கான தயாரிப்பு பணிகள் முடிந்து அதிகளவில் உற்பத்தி தொடங்கிவிட்டன..இந்த மாத்திரை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில் இந்தியா கடந்த மாதம் இந்த மாத்திரையை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடை செய்தது... ஆனால் மனிதாபிமான அடிப்படையில் தேவைப்படும் நாடுகளுக்கு அனுப்பிவைக்க தயார் என்று மோடி உலக நாடுகளுக்கு அறிவித்தார்.மேலும்...உலக அளவில் மருத்துவம் சார்ந்த முகக்கவச உற்பத்தியில் இந்தியாவிற்கு தேவையான அளவு தயாரித்தது போக அயல்நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்துவந்தோம்... இந்தியாவின் கைவசம் தற்போது 20 கோடி முகக்கவசங்கள் உள்ளன.திருப்பூரில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் உள்நாட்டு ஆர்டர் 20 கோடி கவசங்கள் கேட்கப்பட்டுள்ளன.அயல் நாடுகளுக்கான ஆர்டர்கள் கோடிக்கணக்கில்…
Read More
புளி தரும் முகப் பொலிவு !

புளி தரும் முகப் பொலிவு !

தென்னிந்தியாவின் பெரும்பாலான உணவுகளுக்கு அச்சாரமாய் இருப்பது புளி. புளிக்குழம்பு, ரசம், சாம்பார் ஆகிய பாரம்பரிய தென்னிந்திய உணவுகளில் இது இல்லையென்றால் சுவையுமில்லை மனமுமில்லை. ஆனால், இந்த புலி உணவில் மட்டுமல்லாமல், அழகிலும் முக்கிய பங்கை கொண்டுள்ளது. புளியிலுள்ள அழகு தரும் பொருள்கள்,புளியில் கால்சியம் மற்றும் வைட்டமின் பி ஆகியவை அதிக அளவு காணப்படுகிறது. முக பொலிவுக்கு வைட்டமின் பி முக்கிய பங்காற்றுகிறது. உபயோகிக்கும் முறை,அதாவது சற்று புளியை நீரில் குறைத்துக்கொண்டு அதனுடன், தேவைக்கேற்ப எலுமிச்சை சாறு, சிறிதளவு தேன் ஆகிய மூன்றையும் சேர்த்து, நன்றாக கலந்துகொள்ளவும். அதன் பின்பு அவற்றை முகத்தில் அனைத்து பக்கங்களிலும் படுமாறு பூசவும். இதனால் முகத்தில் காணப்பட கூடிய வறட்சி மாறி, பொலிவான அழகிய சருமத்தை தருகிறது. மேலும் முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் அதை நீக்கி வெண்மை நிறமாக முகத்தை மாற்றுகிறது.
Read More
வெண் சர்க்கரை உண்டாக்கும் நோய்களும், கரும்பு சர்க்கையின் நன்மைகளும் !

வெண் சர்க்கரை உண்டாக்கும் நோய்களும், கரும்பு சர்க்கையின் நன்மைகளும் !

நமது முன்னோர்கள் உணவில் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, காரம் போன்றவற்றை மிகுந்த நேர்த்தியாக கையாண்டனர். ஒவ்வொரு சுவைக்கும் இயற்கை ரீதியாகவே பல்வேறு பொருட்களை கையாண்டனர். இயற்கையும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது. அதன் காரணமாக அவர்கள் நோய் நொடியின்றி வாழ்ந்து வந்தனர். ஆனால் நமது பாரம்பரியத்தை சீரழிக்கவும், நாகரீகம் என்ற போர்வையில் பல்வேறு பக்கவிளைவுகளை உருவாக்கும் பொருட்களை மனிதன் இடையில் புகுத்தியதன் விளைவு இன்று நோய் இல்லாத மனிதர்களை உருவாக்க காரணமாக அமைந்து விட்டது.மேற்கண்ட கெடுதல் தரும் பொருட்களில் முதன்மையாக இருப்பது வெண் சர்க்கரை, வெள்ளை சர்க்கரை என்பது இடையே உட்புகுந்த ஒரு விஷயமாகும். ஆரம்பக் காலத்தில் பனங்கற்கண்டு, கருப்பட்டி வெல்லம், கரும்பு சர்க்கரையை தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த காலத்தில் இப்போது போல உடல் பருமனோ, நீரிழிவு நோயோ இருந்ததாக யாரும் கேள்விப்பட்டதே இல்லை. நீரிழிவு என்பது பரம்பரை வியாதி என்பது மாறி காய்ச்சல், சளி போல அனைவருக்கும் உண்டாக…
Read More