சுகாதார காப்பீடு திட்டத்தின் கீழ் இலவச கொரோனா வைரசுக்கான பரிசோதனை?

தேசிய சுகாதார ஆணையம் என்.எச்.ஏ. நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா வைரசுக்கான பரிசோதனையும், சிகிச்சையும் அரசு துறையில் இலவசமாக கிடைக்கிறது. இப்போது சுகாதார காப்பீடு திட்டத்தின் கீழ் பலன் பெறுகிற 50 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசுக்கு தனியார் பரிசோதனைக்கூடங்களில் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம். அரசு அறிவித்துள்ள சிறப்பு தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவச சிகிச்சையும் பெறலாம்” என கூறப்பட்டுள்ளது.

மேலும் இதுபற்றி மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் கூறும்போது, “முன் எப்போதும் இல்லாத வகையில் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், தனியார் துறையை மிக முக்கிய பங்காளியாகவும், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்குதாரராகவும் தீவிரமாக ஈடுபடுத்த உள்ளோம்” என குறிப்பிட்டார்.