ஆரோக்யம்

எந்த ஜூஸ் குடித்தால் என்ன நன்மை கிடைக்கும் !

எந்த ஜூஸ் குடித்தால் என்ன நன்மை கிடைக்கும் !

இன்று ஏராளமான மக்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். இங்கு காலையில் எந்த ஜூஸ் குடித்தால் என்ன நன்மை கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம் . பாகற்காய் ஜூஸ். உங்கள் உடலில் உள்ள பூச்சிகளை அழிக்க நினைத்தால் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடியுங்கள். இது உங்களின் செரிமான திரவத்தின் அளவை அதிகரித்து, பசியின்மையைப் போக்கும் மற்றும் வயிற்றில் உள்ள பூச்சிகளையும் அழிக்கும். மேலும் பாகற்காய் ஜூஸ் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டுடன் இருக்க செய்யும். வேப்பிலை ஜூஸ் இது உண்மையிலேயே மிகவும் கசப்பான ஒன்று தான். ஆனால் வேப்பிலை ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்கலாம். முக்கியமாக இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற அற்புதமான ஓர் ஜூஸ். கேரட் ஜூஸ் காலை நேரங்களில் கேரட் ஜூஸைக் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின்…
Read More
சர்க்கரை நோயாளிகள் நடைபயிற்சி செய்ய முடியாமல் தவிப்பு ? இன்சுலின் விற்பனை அதிகரிப்பு !

சர்க்கரை நோயாளிகள் நடைபயிற்சி செய்ய முடியாமல் தவிப்பு ? இன்சுலின் விற்பனை அதிகரிப்பு !

ஊரடங்கு உத்தரவால் சென்னையில் மெரினா கடற்கரை உள்பட கடற்கரை பகுதிகளும், தினமும் நடைபயிற்சி சென்று பழகியவர்கள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். கொரோனா பரவும் வேளையில் நடைபயிற்சி முக்கியம் அல்ல. உயிர்தான் முக்கியம் என்ற மனநிலையில் பலர் நடை பயிற்சியை முழுமையாக கைவிட்டு தங்களது வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கிறார்கள். நடைபயிற்சி, உடற்பயிற்சி மூலம் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருந்த சர்க்கரை நோயாளிகளில் ஒரு சிலர் தற்போது ரத்த பரிசோதனை மையங்களுக்கு சென்று பரிசோதித்து கொள்கிறார்கள். பெரும்பாலானோர் தங்களுடைய வீடுகளில் வாங்கி வைத்துள்ள கருவி மூலம் பரிசோதித்து கொள்கிறார்கள். இந்தநிலையில் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் 'இன்சுலின்' மருந்துகள் விற்பனை அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Read More
பி6, பி12 ஏராளமாக இருக்கும் பழைய சாதம் !!

பி6, பி12 ஏராளமாக இருக்கும் பழைய சாதம் !!

முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்! கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது! பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில: 1. "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. 2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. 3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல்…
Read More
கருப்பட்டியின் மருத்துவ குணங்கள் !

கருப்பட்டியின் மருத்துவ குணங்கள் !

கருப்பட்டியில் உள்ள பொட்டாசியம் சத்து இதய ஆரோக்கியத்தை பராமரிக்க செய்கிறது. ரத்த அழுத்தத்தை குறைத்து அதன் மூலம் இதய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. கருப்பட்டி என்றதும் அனைவரும் நாக்கை சப்பு கொட்டவே செய்வர். கருப்பட்டியின் சுவை அப்படி. இனிப்பு சுவைக்கு இன்று சர்க்கரை பயன்படுத்தி வருகிறோம். முன்பெல்லாம் கருப்பட்டி தான் இனிப்புக்கென பயன்படுத்தி வந்துள்ளனர். சீனி என்ற வெள்ளை சர்க்கரை கண்டறிந்து பலபகுதிகள் பயன்படுத்திய போதும் கிராமப்புறங்களில் பெரும்பாலும் கருப்பட்டி காபிதான் குடிப்பார்கள். மேலுக்கு சுகமில்லாதபோது கொஞ்சம் கருப்பட்டியை தட்டி போட்டு காபி தூள் கொஞ்சம் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் மேல் வலி எல்லாம் குறைஞ்சு சுறுசுறுப்பாகிவிடுவர். அந்தளவிற்கு கிராமத்து பகுதிகளில் கருப்பட்டி உபயோகம் பெரும்பாலும் காபி போடத்தான் பயன்பட்டது. அதுபோல் சில பகுதிகளில் இனிப்பு பலகாரங்கள் செய்ய கருப்பட்டி மட்டுமே பயன்படுத்துபவர்களும் உள்ளனர்.நாம் தமிழ்நாட்டு மக்களோடு ஒன்றிணைந்த கருப்பட்டி பயன்பாடு சர்க்கரை வந்த பிறகு பெரும்பாலும் குறைந்து விட்டது.…
Read More
வூஹான் முடக்கப்படாமல் இருந்திருந்தால் உலகின் நிலை ?

வூஹான் முடக்கப்படாமல் இருந்திருந்தால் உலகின் நிலை ?

கொரோனா வைரஸ் முதலில் பரவத் தொடங்கிய சீனாவின் வூஹான் நகரை பாதுகாப்பு நடவடிக்கையாக சீன அரசு முதலில் முடக்கியது. அந்த நடவடிக்கையால் மிகப் பெரிய பாதிப்பு நேராமல் தடுக்கப்பட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.உலகளவில் 203 நாடுகளுக்கு பரவியுள்ள உயிர்கொல்லி கொரோனா, இதுவரை 47,194 பேரை பலி கொண்டுள்ளது. உலகளவில், 9,35,346 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,94,000 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். ஆராய்ச்சியளர் கிரிஸ்டோபர் டை கூறுகையில் "வைரஸ் பாதிப்பு அதிகமானதும் வூஹான் நகரம் முழுவதுமாக முடக்கப்பட்டது. அங்கு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டது. அந்த நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்திருந்தால் ஏழு லட்சத்திற்கும் அதிகமானோர் கூடுதலாக பாதிக்கப்பட்டிருப்பர். இந்நேரம் நிலைமை மிக மோசமாகி இருக்கும்" என்றார்.
Read More
காலை உணவாக இட்லி சாப்பிட 5 காரணங்கள்!!

காலை உணவாக இட்லி சாப்பிட 5 காரணங்கள்!!

மல்லிகைப்பூ மாதிரி இட்லியை ஒரு வில்லையை அப்ப்டியே கிள்ளி, பட்டும் படாமலும் வெங்காயச் சட்னியை தீண்டி, அப்படியே குளத்தில் மூழ்குவது போல், சாம்பாரில் முக்கி, நேராக வாய்க்குள் போட்டு சாப்பிடுவது இருக்கே. என்னா ருசி பாஸ், இதெல்லாம் அந்த காஞ்சு போன, ரப்பர் பீஸாவில் இருக்குமா? டேஸ்டியா மட்டுமில்லாமல் மிகச் சிறந்த காலை உணவாக உலக ஆரோக்கிய மேம்பாட்டு கழத்தில் இட்லியை பரிந்துரை செய்துள்ளது என்றால் காரணமில்லாமலா. இட்லியில் அப்படி என்ன ஸ்பெஷல்…தெரிஞ்சுகோங்களேன்..அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம்.இதனால் இவற்றிலுள்ள சத்துக்கள் இரண்டு மடங்காக மாறுகின்றது.மாவு புளிப்பதால் பெருகும் நல்ல பேக்டீரியாக்கள் கல்லீரலுக்கும் குடலுக்கும் மிகவும் ஆரோக்கியத்தை விளைவிக்கின்றது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். காரணம் -1 : அரிசியிலும், உளுத்தம்பருப்பிலும் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு,கால்சியம், பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உயர்கின்றன. காரணம்-2 அமினோ அமிலங்களும்…
Read More
நுரையீரலைக் காக்கும் கரிசலாங்கண்ணி !

நுரையீரலைக் காக்கும் கரிசலாங்கண்ணி !

நுரையீரல் தொடர்பான அனைத்து நோய்களும் நீங்கி உடலும் உள்ளமும் வலிமை அடைய இதை செய்யுங்கள்!காடுகளிலும் குறிப்பாக தண்ணீர் பாயும் இடங்களிலும் செழிப்பாக வளர்ந்து கிடக்கும் ஒரு மூலிகைதான் கரிசாலை. கரிசாலை என்பது தற்போது மக்களால் கரிசலாங்கண்ணி என்று அழைக்கப்படுகிறது. இதில் வெள்ளை கரிசலாங்கண்ணி மஞ்சள் கரிசலாங்கண்ணி என இரண்டு வகைகள் உள்ளன.வெள்ளை கரிசலாங்கண்ணி வெளி உபயோக மருந்துகளுக்காகவும், மஞ்சள் கரிசலாங்கண்ணி உடலின் உள் பகுதிக்கு சாப்பிடும் மருந்துகளாகவும் பயன் படுத்தப்படுகிறது.இதில் மஞ்சள் கரிசலாங்கண்ணியை பயன்படுத்தி நுரையீரல் சம்பந்தமான நோய்களை எவ்வாறு குணப்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்! உலர்ந்த மஞ்சள் கரிசலாங்கண்ணி 100 கிராம், உலர்ந்த தூதுவளை இலை 25 கிராம், உலர்ந்த முசுமுசுக்கை இலை 25 கிராம், சீரகம் 25 கிராம் ஆகிய நான்கையும் நன்றாக அரைத்து ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி காற்றுப்புகாத ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். காலையில் இந்தக் கலவையில் ஒரு தேக்கரண்டி…
Read More
தனிமை வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்!

தனிமை வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்!

ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்ற ரயில்வே துறை முன்வந்தது. தற்போது இது எவ்வாறு செயல்படுத்தப்படும் என சில தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 873-ஐ எட்டியுள்ளது. இந்தியாவில் மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் மருத்துவமனைகள், படுக்கை வசதிகள் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன.தற்போது வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் படுக்கை வசதிகளை அதிகரிக்க ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்ற ரயில்வே துறை முன்வந்ததுள்ளது. தற்போது இது எவ்வாறு செயல்படுத்தப்படும் எனவும் சென்னையில் கொரொனாவால் பாதிக்கபப்ட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றும் பணிகளும் துவங்கியுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இந்த திட்டம் குறித்து வெளியாகியுள்ள முதற்கட்ட தகவல் பின்வருமாறு... ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படும். 9 கேபின்கள் உள்ள பெட்டிகளில் முதலில் ஒரு கேபினுக்கு ஒரு நோயாளி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் ஒரு கேபினில்…
Read More
இந்தியாவை அலறவிட்ட வைரஸ்கள்!

இந்தியாவை அலறவிட்ட வைரஸ்கள்!

” 2006ஆம் ஆண்டு தென் இந்தியாவில் ஏற்பட்ட சிக்கன்குனியா தாக்கம், மிகக்கடுமையான வைரஸ் தாக்குதலாக இருந்தது” கொரோனா தாக்குதலை உலகளாவிய நோய் தொற்று என உலக சுகாதார மையம் அறிவித்துள்ள நிலையில், சுதந்திரம் பெற்ற பின் இதுவரை இந்தியா எதிர்கொண்ட வைரஸ்கள் தாக்குதல் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கும் கொரோனா, இந்தியாவிலும் வேகமாக காலூன்றி வருகிறது.இதற்கு முன் 1974ல் சின்னம்மை தாக்கம் இந்தியாவை உலுக்கியெடுத்தது. சின்னம்மை இந்தியாவை அலறவிட்டது என்றால் அது மிகையல்ல. சின்னம்மை நோயால் 61,482 பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டனர். அதில் 15,000 பேர் உயிரிழந்தனர். 1994ஆம் ஆண்டு குஜராத்தின் சூரத் பகுதியில் ஏற்பட்ட பிளேக் நோயால் 693 பேர் பாதிக்கப்பட்டனர்.அதில் 56 பேர் உயிரிழந்தனர். அதன்பின்னர் 2006 ஆம் ஆண்டு 3,0613 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அதில் 50 பேர் உயிரிழந்தனர். அதே 2006ஆம் ஆண்டு தென்…
Read More