சர்க்கரை நோயாளிகளுக்கு அருமையான உணவு வாழைப்பூ…!

வாழைப்பூ உடலுக்கு எந்தளவிற்கு ஊட்டம் தருகிறது என்று உங்களுக்கு தெரியுங்களா? தெரிந்து கொள்ளுங்க..வாழைப்பூவை நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். வயிற்று கடுப்பு நீங்க, வெள்ளைப்படுதல், கை கால் எரிச்சல், மலட்டு தன்மை நீங்க, ரத்த மூலம், உடல் சூடு, இருமல் என பல நோய்களுக்கு மருந்தாகிறது. அதை விட மக்களில் ஏராளமானோருக்கு இருக்கும் பிரச்னையான சர்க்கரை நோய்க்கு வாழைப்பூ சிறந்த மருந்து என்பதை தெரிந்து கொள்ளுங்க…

சர்க்கரை நோயை சித்த மருத்துவத்தில் மதுமேக நோய் என்பார்கள், சர்க்கரை நோய்க்கு மூலக்காரணம் நம் உணவு முறையே ஆகும்.ரசாயனம் கலந்த உணவுகள், போதிய உடற்பயிற்சியின்மை, அதிக வேளைப்பளு, சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளாதது. போன்ற காரணங்களினால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பூவுடன் பூண்டு, மிளகு, சின்ன வெங்காயம் சேர்த்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று, உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கச் செய்யும், இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும். எனவே வாழைப்பூவை ஒதுக்காதீங்க…. உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக்காதீங்க…

Related posts:

M ஆட்டோக்கள் மூலம் வீடுகளுக்கே சென்று காய்கறிகள், இலவச கபசுர குடிநீர் வினியோகம் செய்யும் திட்டம் !

கொரோனாவால் ஏற்படும் மன அழுத்தத்தை எப்படிசரிசெய்வது?

தினமும் நான்கு வேப்பிலை கொழுந்து உண்டு வந்தால் ஏற்படும் நன்மைகள்!

நீரிழிவு நோயாளிகளுக்கான புதிய ரக அரிசி !

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய் !

’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்தியா முழுவதும் 3 லட்சம் மாணவிகளிடம் HPV விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்!

இராயப்பேட்டை அரசு மருத்துவமனையுடன் இணைந்து வசந்த பவன் நடத்திய இரத்த தான முகாம்!

வர்மக்கலை மருத்துவத்தின் மகத்துவம்..! வர்மக்கலை ஆசான் பாமோ வெங்கடேசன் !