மருதாணி இலைச் சாறு, நல்லெண்ணெய், பசும்பால், மூன்றையும் ஒன்றாகக் கலந்து காய்ச்சி தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை நீங்கும்.மருதாணி இலையை தயிருடன் சேர்த்து அரைத்து இரவு படுப்பதற்கு முன் காலில் உள்ள பித்த வெடிப்புகளில் தடவி வந்தால் பித்த வெடிப்பு சரியாகும்.பெண்கள் அடிக்கடி தங்களின் கைகளில் மருதாணி இலைகளை அரைத்து இட்டுக்கொள்வதால் கைகளில் இருக்கும் முரட்டு தன்மை நீங்கி கைகள் மிருதுவாகும்.மருதாணியை விரல்களின் நகங்களின் மீது இட்டுக்கொள்வதால் நகசுத்து பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.
மருதாணி இலைகளை அரைத்த பின்பு அந்த இலைகளை பிழிந்து வடிகட்டி எடுக்கப்படும் மருதாணி இலை சாற்றை தீராத வயிற்று போக்கு சீதபேதி பாதிப்பு கொண்டவர்கள் அருந்தி வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.சொறி சிரங்கு போன்ற தோலில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் சிறந்த நிவாரணமாக மருதாணி இலை சாறு மற்றும் எண்ணெய் இருக்கிறது.மருதாணி இலையில் இருந்து பெறப்பட்ட மருதாணி எண்ணையை தலைக்கு அடிக்கடி தேய்த்து வந்தால் உடல் உஷ்ணத்தை தணித்து, நரம்புகளை குளிர்ச்சியாக்கி தூக்கமின்மை பிரச்சனை நீங்குகிறது.
மருதாணி இலைகள் ஊறவைக்கப்பட்ட தண்ணீரை அருந்தி வருபவர்களுக்கு ரத்த அழுத்தும் சமசீரான அளவில் இருக்க செய்கிறது.