ஆரோக்யம்

நீரிழிவு நோயாளிகள்  சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள் !

நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள் !

நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுக் கட்டுப்பாடு, உடற் பயிற்சி , மனநலன் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது. உடல் கட்டுக்கோப்புடன் இருப்பது உடல் ஆரோக்கியம், நல்வாழ்வின் நிலையாகும். மேலும் குறிப்பாக திறனுடன் தினசரி வேலைகளை செய்யக் கூடிய திறன் கிடைக்கும். எனவேதான், ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருப்பதுடன் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. அதே நேரத்தில் நீரழிவு நோயாளிகள் என்று வரும்போது ரத்த த்தில் சர்க்கரை அளவை நிர்வகிப்பது, உடல் கட்டுக்கோப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களாகும் என்று நீரழிவு நோயில் இருந்து விடுதலை என்ற அமைப்பின் நிறுவனர் டாக்டர் பிரமோத் திரிபாதி கூறுகிறார்.நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுக் கட்டுப்பாடு, உடற் பயிற்சி , மனநலன் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை மறந்து விடக் கூடாது. சில எளிய பயிற்சிகளை இங்கே பார்க்கலாம். தொடர்ந்து உங்கள் உணவு கட்டுப்பாட்டுமுறையை மேற்கொள்ளுங்கள் நடுநிலையான உணவு…
Read More
சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருத்துவங்களை அறிவோம். !

சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருத்துவங்களை அறிவோம். !

கொரோனா வைரஸால் உலக நாடுகள் நடுங்கி ஒடுங்கிப்போய் நிற்கின்றன. அலோபதி மருத்துவம் அபார வளர்ச்சி அடைந்திருந்தாலும் கொரோனா வைரஸுக்கு 'மருந்து இருக்கு ஆனா இல்லை' என்று கூறும் நிலையே. ஆனால் பாரம்பரிய தமிழ் மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் மருந்து இருக்கிறது என்று உரக்கச் சொல்லி யாரும் பயப்பட வேண்டாம் என்று நம்பிக்கை தருகிறது தமிழகம். சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருத்துவங்களை அறிவோம். ஆனால் நம்மில் பலரும் அறியாத சிந்தாமணி மருத்துவம் ராவணனால் உருவாக்கப்பட்டது. ராமாயண ராவணனின் மறுபக்கத்தில் அவன் சிறந்த சிவபக்தனும், மருத்துவ சித்தனும் ஆவான். ராவணன் இயற்றிய ஆயிரக் கணக்கான மருத்துவ குறிப்புகள் சிந்தாமணி மருத்துவம் என்ற நுாலில் கிடைக்கின்றன. அகத்தியர் இயற்றிய சித்த மருத்துவம் இதற்கு பிந்தைய காலத்தில் உருவானது என்பது ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு. நுரையீரலின் குழந்தை சிறுநீரகம். அக்குபஞ்சர் மருத்துவ சித்தாந்தத்தின் படி 'சிறுநீரகம் நுரையீரலின் குழந்தை' என்றால் வியப்பாக இருக்கிறதா! ஆம், உடலின் உறுப்புகள்…
Read More
இரத்த அழுத்தம் உயர்வதும், அதிகரிப்பதும் ஆபத்துதான் ?

இரத்த அழுத்தம் உயர்வதும், அதிகரிப்பதும் ஆபத்துதான் ?

இன்று உலக ஹைபர்டென்சன் (உயர் ரத்த அழுத்தம்) தினம். ஒரு ஆரோக்கியமான மனிதனின் இரத்த அழுத்தம் 120/80 மி.மீ மெர்க்குறி என்பதாகும். நடுத்தர வயதில் உள்ள ஆரோக்கியமான மனிதர்களுக்கு இந்த அளவானது சிறிது மாறுபடும். 139/89 மி.மீ மெர்க்குறி என்னும் அளவு வரை நார்மல் என்றே கூறலாம். 140/90 முதல் 160/110 மி.மீ மெர்க்குறி வரை உள்ள அளவுகள் ஓரளவு உயர்ந்த இரத்த அழுத்தத்தைக் குறிக்கும் (Mild To Moderate Hypertension) இதற்கு மேல் உள்ள அளவுகள் மிக அதிகமான உயர் இரத்த அழுத்தத்தினைக் குறிக்கும். நார்மல் சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் (மி.மீ மெர்குறி) 130க்கு கீழ் டயஸ்டாலிக் இரத்த அழுத்தம (மி.மீ மெர்குறி) 85க்கு கீழ் இரத்த கொதிப்பு ஸ்டேஜ் -1 சிஸ்டாலிக் 140 – 159 டயஸ்டாலிக் 90 – 99 இரத்த கொதிப்பு ஸ்டேஜ் – 2 சிஸ்டாலிக் 160 – 179 டயஸ்டாலிக் 100 –…
Read More
பெண்களின் அந்தரங்கம் குறித்த கேள்விகளும் மருத்துவர்களின் பதில்களும்…!

பெண்களின் அந்தரங்கம் குறித்த கேள்விகளும் மருத்துவர்களின் பதில்களும்…!

உடம்பு சரியில்லை என்றால் மருத்துவரிடம் செல்வோம் அல்லது அதைப்பற்றிய விவரங்களும் நம்மளுக்கு ஓரளவுக்கு தெரியும். ஆனால் மக்கள் பாலியல் குறித்த விஷயங்களை அவ்வளவு சீக்கிரம் வெளிப்படையாக கேட்பதில்லை. இதனால் மக்களுக்கு இனப்பெருக்க உறுப்பு மற்றும் அதில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தெளிவில்லாமல் இருக்கிறார்கள். எனவே உங்களுடைய சந்தேகங்களை விளக்குகிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள். நமக்கு உடல் உபாதை ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்வோம். அவரிடம் கேட்டு எல்லா சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்வோம். ஆனால் மக்கள் என்னவோ செக்ஸ் மற்றும் இனப்பெருக்க உறுப்பு சார்ந்த சந்தேகங்களை மட்டும் கேட்க தயங்குகின்றனர் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் செக்ஸ் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது. இது தான் அடுத்த தலைமுறைக்கான வழியாகவும் உள்ளது. பாலியல் மற்றும் இனப்பெருக்க பிரச்சினைகளுக்கு மக்கள் மனதில் ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. ஆனால் அதை கேட்பதற்கான மருத்துவ சூழலை அவர்கள் ஏற்படுத்திக் கொள்வதில்லை என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள். சிலர் தங்கள் சந்தேகங்களை…
Read More
நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் ரசம் !

நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும் ரசம் !

தமிழக உணவுகளில் சேர்க்கப்படும் ரசம், நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவுவதாக விஞ்ஞானி டாக்டர் டி.மாரியப்பன் கணித்துள்ளார். மருத்துவ ஆராய்ச்சிக்கான வெக்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் (வி.சி.ஆர்.சி) மூத்த இந்திய துணை இயக்குநராக உள்ள விஞ்ஞானி டாக்டர் டி.மாரியப்பன் கூறியதாவது: இந்தியர்கள் உட்பட தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்தவர்கள் பரம்பரை ரீதியாக நன்கு பாதுகாக்கப்பட்டவர்கள். அவர்கள், வைரஸ் நோய்களுக்கு எதிராக போராட வலுவான, சக்திவாய்ந்த மரபணுக்களை கொண்டுள்ளனர். 2003ல் சார்ஸ் வைரஸ் வெடித்தபோது, மற்ற நாடுகளில் ஏராளமான பாதிப்புகள் இருந்தன. ஆனால் இந்தியா சிறிய அளவிலேயே பாதிக்கப்பட்டிருந்தது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகபிள் டிசைஸஸ் வெளியிட்ட குறிப்பின்படி, ஏப்ரல் 9, 2003 வரை, இந்தியாவில் சார்ஸ் வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை. மேலும், கோவிட்-19 மற்றும் SARS CoV-2, வைரஸ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது. சில நோய்களிலிருந்து நாம் பாதுகாக்கப்படுவதில் உணவுப் பழக்கமும் ஒரு பங்கு வகிக்கிறது. தென்னிந்தியாவில், நம் உணவில் ‛ரசம்' சேர்த்து…
Read More
கேரளாவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதன் பின்னணி!

கேரளாவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதன் பின்னணி!

கேரளாவில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதன் பின்னணி-வலுவான சுகாதார அமைப்பு செயல்படாத மருத்துவமனைகளை கோவிட் -19 வசதிகளாக மாற்றி, அரசு தனது மருத்துவ வசதிகளையும் முடுக்கிவிட்டது. இதுவரை, 38 அரசு மருத்துவமனைகள் கோவிட் -19 மருத்துவமனைகளாக மாற்றப் பட்டுள்ளன ஜனவரி 30 ஆம் தேதி, இந்தியா தனது முதல் கொரோனா வைரஸ் பாதிப்பை கண்டது. கேரளாவும் அன்று தான் தனது முதல் கொரோனா பாதிப்பை உறுதி செய்தது. வுஹானில் இருந்து திரும்பிய 23 வயதான மருத்துவ மாணவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அன்றிலிருந்து, இன்று வரை கேரளாவில் 437 கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சிகிச்சை மூலம் 308 பேர் வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இரண்டு பேர் இதுவரை இறந்துள்ளனர். 70% பேர் இதுவரை சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனர். மீட்பு விகிதம் நாட்டிலேயே கேரளாவில் தான் அதிகம். கேரளா இதுவரை 20,821 மாதிரிகளை பரிசோதித்துள்ளது, இது எந்த மாநிலத்தை விடவும் மிக அதிகமாகும். 1956…
Read More
உலக சுகாதார அமைப்பு எப்படி நிதி பெறுகிறது? எங்கே செலவு செய்கிறது?

உலக சுகாதார அமைப்பு எப்படி நிதி பெறுகிறது? எங்கே செலவு செய்கிறது?

உலக சுகாதார அமைப்பு அதற்கான நிதியை எங்கிருந்து பெறுகிறது? உலக சுகாதார அமைப்பு செலவினங்களுக்கு எவ்வாறு முன்னுரிமை அளிக்கிறது? கோவிட்-19 தொற்றுநோயில் உலக சுகாதார அமைப்பும்.. கோவிட்-19 தொற்றுநோயைக் கையாள்வது தொடர்பாக உலக சுகாதார அமைப்பை (WHO) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல நாட்கள் கடுமையாக விமர்சித்த பிற்கு, அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிற்கு அளிக்கும் நிதியை நிறுத்தப்போவதாக புதன்கிழமை அறிவித்தார். உலக சுகாதார அமைப்பு தொற்றுநோய் பரவலைத் தவறாக நிர்வகிப்பதாக அவர் கூறினார். உலக அளவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்த 1 லட்சம் பேர் உள்பட 2 மில்லியனை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 8 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உரிழந்துள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. உலக சுகாதார அமைப்பு அதற்கான நிதியை எங்கிருந்து பெறுகிறது? உலக சுகாதார அமைப்புக்கு ஏராளமான நாடுகள், புரவலர் அமைப்புகள், ஐக்கிய…
Read More
கோடைகால வெயிலின் மூலம் கரோனா வைரஸ் கட்டுப்படும் ?

கோடைகால வெயிலின் மூலம் கரோனா வைரஸ் கட்டுப்படும் ?

கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள 21 நாட்கள் ஊரடங்கு காலத்துக்குப் பின் வரும் கோடைகால வெயிலின் மூலம் கரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படும் என்று முன்னணி இந்திய நுண்ணுயிரியல் வல்லுநர்கள் (Indian microbiologists) நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இதுவரை கரோனா வைரஸால் இந்தியாவில் 681 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.இந்த 21 நாட்கள் ஊரடங்கு முடிந்தபின்பும் கரோனா தொற்று பரவுமா அல்லது அதற்குள் கட்டுப்படுமா என்பது மக்கள் மனதில் எழுந்துள்ள கேள்வியாகும். அதுகுறித்து தேசத்தின் முன்னணி நுண்ணுயிரியல் வல்லுநர்கள் பதில் அளித்துள்ளனர்.நாட்டில் உள்ள மிகப் பழமையான அறிவியல் அமைப்பான இந்திய நுண்ணுயிரியல் வல்லுநர்கள் கூட்டமைப்பின் (ஏஎம்ஐ) தலைவரும் நுண்ணுயிரியல் வல்லுநருமான ஜே.எஸ். விர்டி கூறுகையில், “வரும் ஏப்ரல் மாத…
Read More
கொரோனாவுக்கு எதிரான போர் ? கேரளா சாதித்தது எப்படி?

கொரோனாவுக்கு எதிரான போர் ? கேரளா சாதித்தது எப்படி?

கொரோனா வைரஸ் பீதி உலகத்தையே ஒரு புரட்டு புரட்டி போட்டுள்ள நிலையில் கடவுளின் நகரம் என அழைக்கப்படும் கேரள மாநிலம், மக்களின் உதவியுடன் அதன் பாதிப்பை குறைத்து சாதித்துக் காட்டியுள்ளது.மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், உள்ளாட்சி நிர்வாகங்களுடன், மகளிர் சுயஉதவிக்குழுக்கள், தன்னார்வலர்கள் அமைப்பு உள்ளிட்டவைகள், மாநில அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளில் உள்ளவர்கள், ஹாட்ஸ்பாட் பகுதிகளில் உள்ளவர்களுக்கு தேவையான மருத்துவம் சாராத பிற உதவிகளை செய்ய மகளிர் குழுக்கள், தன்னார்வலர்கள் அமைப்பு ஈடுபட்டுள்ளதன் மூலம், தொற்று பரவாமல் அடிப்படையிலேயே கட்டுப்படுத்தப்பட்டது.கொரோனா தொற்று பரவலை கண்காணிக்கும் வகையில், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பை விரிவுபடுத்தும் பொருட்டு 1.71 லட்சம் அமைப்புகள் அமைக்கப்பட்டு வார்டு வாரியாகவும், டிவிசன் வாரியாகவும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த அமைப்பினர், மாநில சுகாதார துறையுடன் தொடர்ந்து தொடர்பிலேயே இருந்து, வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவர்களை உடனடியாக…
Read More
நுரையீரலை மட்டுமல்லாது சிறுநீரகத்தையும் கொரோனா பாதிக்கும்

நுரையீரலை மட்டுமல்லாது சிறுநீரகத்தையும் கொரோனா பாதிக்கும்

கொரோனா வைரசானது நுரையீரலை மட்டுமல்லாது மற்றொரு உறுப்பையும் பாதிக்கும் என வெளியாகியுள்ள புதிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.உலகமெங்கும் பரவி வருகிற கொரோனா வைரஸ் தொற்றுநோய், நோயாளிகளின் நுரையீரலை பாதித்து விடுகிறது. இதனால் சுவாசிக்க முடியாத நிலைக்கு நோயாளிகள் தள்ளப்பட்டு, நிலைமை மோசமாகிறது. இதுபற்றிய விழிப்புணர்வு இப்போது ஓரளவுக்கு எல்லோருக்கும் வந்து விட்டது. இந்த நிலையில், இந்த வைரஸ், நுரையீரலை மட்டுமல்லாது சிறுநீரகத்தையும் பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். சர்வதேச சிறுநீரக சொசைட்டியும் இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில் கூறி இருக்கும் முக்கிய அம்சங்கள் வருமாறு:- 25 முதல் 50 சதவீத கொரோனா நோயாளிகளுக்கு சிறுநீரகமும் பாதிக்கிறது. ‘அக்கியுட் கிட்னி இன்ஜுரி’ என்ற கடுமையான சிறுநீரக காயம் ஏற்படுகிறது.எனவே கொரோனா வைரஸ், பாதிப்புக்கு ஆளாகிறவரின் நுரையீரல் மட்டுமல்ல, சிறுநீரகமும் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது.சார்ஸ் வைரஸ் போன்ற கொரோனா வைரஸ், சிறுநீரில் கூடுதலான அளவு ரத்தத்தையும்,…
Read More