ஆரோக்யம்

கரோனா வைரஸைக் கண்டுபிடித்தவர் சீன மருத்துவர் ஜாங் ஜிக்சியான் !

கரோனா வைரஸைக் கண்டுபிடித்தவர் சீன மருத்துவர் ஜாங் ஜிக்சியான் !

கரோனாவை முதலில் கண்ட சீன மருத்துவர் ஜாங் ஜிக்சியான்.சுவாசக்குழல் நோய் நிபுணரான யூஹான் நகரைச் சேர்ந்த இந்த பெண் மருத்துவர்தான் முதன் முதலில் அப்போது இனம் புரியாத கரோனா வைரஸைக் கண்டுபிடித்தவர் என்று கொண்டாடப்படுபவராவார். மனிதகுலத்தை அழிக்கப் புறப்பட்ட கரோனா வைரஸை முதன் முதலில் 2 வயதான தம்பதியினரில் கண்டுபிடித்தவர் இவர் தான். டிசமப்ர் மாதம் சாதாரண ஜுரம் இருமல் என்று வந்த இரண்டு 2 வயதான தம்பதியினரில் முதலில் வைரஸை இனம் கண்ட மருத்துவர் ஜாங் ஜிக்சியான் என்ற இந்த மருத்துவர் தன் அனுபவத்தை சினுவா செய்தி ஏஜென்சிக்கு கூறும்போது, டிசம்பர் 26ம் தேதி ஹூபேய் மாகாண மருத்துவமனையான ஒருங்கிணைந்த சீன மற்றும் மேற்கத்திய மருந்து மையத்துக்கு 2 வயதான தம்பதியினர் வந்தனர். இவர்களுக்கு காய்ச்சல், இருமல், களைப்பு இவைதான் அறிகுறிகளாக இருந்தன. இது முதலில் ஃப்ளூ காய்ச்சல் அல்லது நிமோனியா என்றே நினைத்தோம். ஆனால் சிடி ஸ்கேன் எடுத்தோம்,…
Read More
கொரோனாவை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிப்பு?

கொரோனாவை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிப்பு?

கொரோனவை குணப்படுத்துவதற்காக பெங்களூரை சேர்ந்த மருத்துவர்கள் குழு ஒன்று புதிய மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளது. பெங்களூர் எச்சிஜி மருத்துவமனை புற்றுநோய் நிபுணர் விஷால் ராவ் தலைமையில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க அல்லது கொரோனாவை குணமாக்கும் சிகிச்சை முறையை கண்டுபிடிக்க உலகம் முழுக்க தீவிரமான முயற்சிகள் நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் நமது உடலுக்குள் சென்ற பின் நோய் எதிர்ப்பு சக்தி செல்களால் கண்டுபிடிக்க முடியாது. காரணம் கொரோனா வைரஸ், உடலில் இருக்கும் சாதாரண செல் போல வேடமிட்டு, அதற்கு உரிய சிக்னல்களை அனுப்புவதால், நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் குழம்பி போய், கொரோனாவை கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. இதனால் உடலை தாக்கும் கொரோனா, நோய் எதிர்ப்பு சக்தி செல்களை மொத்தமாக செயலிழக்க செய்கிறது. இந்த நிலையில்தான் கொரோனாவை குணப்படுத்துவதற்காக பெங்களூரை சேர்ந்த மருத்துவர்கள் குழு ஒன்று புதிய மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளது. பெங்களூர் எச்சிஜி…
Read More
பிளாஸ்மா தெரபி சிகிச்சை என்றால் என்ன ?

பிளாஸ்மா தெரபி சிகிச்சை என்றால் என்ன ?

கொரோனாவில் இருந்து குணமாகி 14 நாட்கள் கண்காணிக்கப்பட்ட நபர்களின் ரத்தத்தில் பி.லிம்போசைட் (B lymphocytes) செல்களால் சுரக்கப்படும் கொரோனா ஆன்டிபாடீஸ்களை பிரித்து எடுத்து அவற்றை நோயாளியின் உடலில் செலுத்துவதே பிளாஸ்மா தெரபி என அழைக்கப்படுகிறது.ஆரோக்கியமான நபரிடம் இருந்து சுமார் 800 மில்லிலிட்டர் அளவிற்கு பிளாஸ்மா சேகரிக்க முடியும். இந்தியாவில் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நோய்த் தொற்றில் இருந்து மீண்டவர்கள் உடலில் அந்த தொற்றினைப் போராடி அழிக்கும் எதிரணுக்கள் உருவாகியிருக்கும் என்பதுதான் இதன் அடிப்படைக் கோட்பாடு.கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட ஒருவர் உடலில் நோய் இல்லை என்பதை உறுதிப்படுத்த இரண்டு முறை சோதனை செய்யப்பட்ட பிறகுதான் அவரது உடலில் இருந்து எதிரணுக்கள் எடுக்கப்படும்.நோயில் இருந்து மீண்டவர்களுக்கு இரண்டு முறை கொரோனா இருக்கிறதா என்று பரிசோதனை, பிறகு எலிசா சோதனை ஆகியவை நடத்தப்பட்ட பிறகும், அவரது ரத்தம் தூய்மையானதா என்பதைத் தீர்மானிக்க இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை நிர்ணயித்துள்ள…
Read More
2022 ஆம் ஆண்டு வரை தனிமனித இடைவெளி அவசியம் ? ஆய்வில் அதிர்ச்சி தகவல் ?

2022 ஆம் ஆண்டு வரை தனிமனித இடைவெளி அவசியம் ? ஆய்வில் அதிர்ச்சி தகவல் ?

கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்காவிட்டால் 2022-ஆம் ஆண்டு வரை தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய அவசியம் வரும் என்று ஹார்வேர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தற்போது உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது.எனவே கொரோனா பரவாமல் இருக்க தனிமனித இடைவெளி அவசியம் என்று உலக நாடுகள் அனைத்தும் வலியுறுத்தி வருகின்றது.இதற்காக உலகில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால் மக்கள் வீடுகளிலே முடங்கியுள்ளனர். இந்நிலையில் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் பொதுசுகாதார பள்ளி நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ,கொரோனா வைரஸிற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் தனி மனித இடைவெளியே கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2003- ஆம் ஆண்டு சிறிய அளவில் தலைதூக்கிய சார்ஸ் வைரஸ் ,சிறிய இடைவெளிக்கு பின்னர் பெரிதாக பரவியது குறிப்பிடப்பட்டுள்ளது.அதேபோல் கொரோனாவும் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு சீனாவையும் உதாரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு குளிர்காலத்திலும் கொரோனா தலை தூக்க வாய்ப்பு…
Read More
நோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்து (Antidote) தான் இந்த ரசம் !உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!.

நோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்து (Antidote) தான் இந்த ரசம் !உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்!.

சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறி வேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும். இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் சேர்வது ரசத்தில்தான்.புளிரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம், கொத்துமல்லி ரசம் என்று பலவிதமான சுவைகளின் ரசத்தைத் தயாரித்தாலும் இந்தப் பொருட்கள் பெரும்பாலும் தவறாமல் இடம் பெற்றுவிடும். நோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்து (Antidote) தான் இந்த ரசம். வைட்டமின் குறைபாடுகளையும் தாது உப்புக் குறைபாடுகளையும் இது போக்கிவிடுகிறது.அயல் நாட்டினர் உணவு முறையில் சூப்புக்கு முதலிடம் கொடுத்துள்ளனர். இது, ரசத்தின் மறுவடிவமே. ரசமோ, சூப்போ எது சாப்பிட்டாலும் பசியின்மை, செரியாமை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன உடனே பறந்து போய்விடும்.சித்த வைத்தியப்படி உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும்…
Read More
கொரோனாவால் குலைநடுங்கும் வல்லரசு நாடு ! ஆவிகளின் நகரானது ‘நியூயார்க்’ !!

கொரோனாவால் குலைநடுங்கும் வல்லரசு நாடு ! ஆவிகளின் நகரானது ‘நியூயார்க்’ !!

சர்வ பலத்துடன் வலம் வந்த அமெரிக்காவை அலற விட்டு, 'வல்லரசு' என்ற வார்த்தையை மாயையாக்கிவிட்டது கொரோனா (கோவிட்- 19) வைரஸ். இதன் பாதிப்பில் சிக்கி அந்நாட்டு மக்கள் கொத்துக்கொத்தாய் செத்து விழுகின்றனர். தனித்தனியாய் புதைக்கக்கூட இடம் இல்லை. இறுதிச் சடங்கில் பங்கேற்க நாதி இல்லை. இயந்திரங்கள் தோண்டிய பள்ளங்களில் பிணங்களை குவியல் குவியலாய் மூழ்கடிக்கிறது அந்நாட்டு அரசு. சில மாகாணங்களைத் தவிர அமெரிக்காவின் அனைத்து பகுதிகளுமே கொரோனாவின் கோர பிடியில் சிக்கிவிட்டன. உலகிற்கே கலாச்சார, வர்த்தக தலைநகராக விளங்கிய நியூயார்க், வைரஸ் தாக்குதலில் முற்றிலும் நிலைகுலைந்துவிட்டது. வானுயர்ந்த மாட மாளிகைகள், மேகங்களை கொஞ்சும் கோபுரங்கள் என வியக்க வைக்கும் அந்நகரம் இன்று கொடிய நரகமாய் இருண்டுபோனது. அந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா பாதிப்புகளில் பாதிக்கு மேல் இங்கு தான். நிகழும் மரணங்களில் மூன்றில் இரண்டு பங்கு இங்கு தான். தினமும் 1500 முதல் 2 ஆயிரம் பேர் வரை இறக்கின்றனர்.வாழ்வில் ஒரு முறையாவது…
Read More
வவ்வாலுக்கும் கொரோனா வைரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை?

வவ்வாலுக்கும் கொரோனா வைரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை?

ஆய்வை நடத்திய புனே தேசிய வைராலஜி நிறுவனத்தின் விஞ்ஞானி பிரக்யா டி யாதவ் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிடெரோபஸ் வவ்வால் மற்றும் ரூசெட்டஸ் வவ்வால் வகைகளை ஆராய்ந்தோம். அவற்றின் தொண்டை மற்றும் மலக்குடல் மாதிரிகளை எடுத்து ஆராயப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் காணப்படுகிற வவ்வால்களில் காணப்படுகிற "வவ்வால் கொரோனா" வைரசுக்கும், மனிதர்களுக்கு தற்போது பரவி வருகிற கொரோனா வைரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அதாவது, "வவ்வால் கொரோனா" வைரசுக்கும், மனிதர்களுக்கு தற்போது பரவி வருகிற கோவிட்-19 வைரஸ் தொற்று நோய்க்கு காரணமான சார்ஸ்-கோவ் 2 வைரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. எங்கள் ஆய்வில் 2 வகையான வவ்வால்களில் "வவ்வால் கொரோனா" வைரசை காண முடிந்தது; தொற்று நோயுடன் வருகிற வைரஸ்களை அடையாளம் கண்டறிவதற்கு தொடர்ச்சியான, தீவிரமான கண்காணிப்பு தேவை. இவ்வாறு அவர் கூறினார்.
Read More
70 லட்சம் பரிசோதனை கருவிகள் இந்தியா வருகை ?

70 லட்சம் பரிசோதனை கருவிகள் இந்தியா வருகை ?

கொரோனா வைரஸை உடனடியாக கண்டறிய 70 லட்சம் பரிசோதனை கருவிகளை கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இந்தக் கருவிகள் எந்த நேரத்திலும் இந்தியா வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது.11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 400 பேர் வரை பலியாகி இருக்கிறார்கள்.கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் பரிசோதனைகள் மிகவும் ஆமை வேகத்தில் நடக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. போதுமான பரிசோதனை கருவிகள் இல்லாததால் சோதனை முடிவுகள் தாமதமாகிறது. கொரோனா வைரஸ் தொற்றை உறுதிசெய்ய பி.சி.ஆர். ( பாலிமரேஸ் செயின் ரியாக்சன்) சோதனை நடத்தப்படுகிறது. இதன்படி பாதிக்கப்பட்டவர்களின் தொண்டை,மூக்கில் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு தொற்று உள்ளதா என்று கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த சோதனை முடிவை அறிய 48 மணி நேரம் ஆகும்.நாடு முழுவதும் தற்போது இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் 'ஆன்டிபாடி' எனப்படும் விரைவு பரிசோதனையை…
Read More
கொரோனா  தடுப்பூசிஏன் கண்டுபிடிக்கப்படவில்லை ?

கொரோனா தடுப்பூசிஏன் கண்டுபிடிக்கப்படவில்லை ?

கொரோனாவிற்கு ஏன் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை ?? ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிப்புன்னு அரசு அறிவித்ததும் மக்களுக்கு எழுந்த ஒரே கேள்வி !! "அட ச்சே.... எவ்ளோ நாள் தான் வீட்லயே இருக்குறது??? இந்த கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபுடிச்சா தான் என்ன" ?? இது ஒரு நியாயமான ஆதங்கம் தான். இதற்கான தெளிவான பதில் தேவைன்னா அப்டியே காலச்சக்கரத்தை சுழற்றி கொஞ்சம் பின்நோக்கி போகலாம். மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே தோன்றிய இனம் தான் இந்த வைரஸ். (நமக்கெல்லாம் சீனியர் இவர்!!)நாம எப்படி கற்காலத்துல இருந்து கூகிள் காலத்துக்கு ஏற்ற மாதிரி நம்மை தகவமைச்சிட்டு வளர்ந்தோமோ, அதே மாதிரி வைரஸும் பல்வேறு தகவமைப்பை மேற்கொண்டு வளர்ச்சியடைந்தது. இந்த வைரஸ் இருக்குல்ல, இதனோட மரபணு DNA அல்லது RNA இவற்றில் எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கும். இந்த RNA வைரஸ் கிருமி DNA வைரஸ் கிருமிகளை விட கொஞ்சம் சவாலானது. (கொரோனா ஒரு…
Read More
கொரோனா வைரசுக்கான தடுப்பூசி ரெடி.!

கொரோனா வைரசுக்கான தடுப்பூசி ரெடி.!

கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட உலகம் முழுவதிலுமிருந்து விஞ்ஞானிகள் ஒன்றுபட்டுள்ளனர். இதற்கிடையில், ஒரு நல்ல செய்தி வருகிறது. கொரோனா வைரஸைக் கொல்ல இங்கிலாந்து மற்றும் ரஷ்யாவும் தடுப்பூசிகளைத் தயாரித்துள்ளன. சிறந்த விஷயம் என்னவென்றால், இரண்டு தடுப்பூசிகளின் முடிவுகளும் மிகவும் நம்பிக்கைக்குரியவை. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா வைரஸ் தடுப்பூசியைத் தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியின் சோதனைகள் இங்கு 18-55 வயதுக்குட்பட்டவர்களில் தொடங்கியுள்ளன. ChAdOx nCoV-19 என்ற மருந்துக்கு இங்கிலாந்தின் மருந்துகள் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல், ரஷ்யாவில் உள்ள விஞ்ஞானிகள் இந்த கொடிய வைரஸை அகற்றியுள்ளனர். ரஷ்யாவின் வெக்டர் ஸ்டேட் வைராலஜி மற்றும் பயோடெக் மையம் ஒரு தடுப்பூசி தயாரித்துள்ளது. அதன் சோதனை விலங்குகள் மீது தொடர்கிறது. இது விரைவில் தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டியூக் பல்கலைக்கழகத்தின் தலைவர் ஜொனாதன் குயிக் கூறுகையில், தடுப்பூசிகள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டதும், அவற்றின் எதிர்வினையை மனதில் கொள்ள வேண்டியது அவசியம். இருப்பினும், தடுப்பூசி தயாரிக்கும் பணி…
Read More