சினிமா

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து வழங்கும். புதிய திரைப்படம் !..

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து வழங்கும். புதிய திரைப்படம் !..

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து வழங்கும்... 'தாமிரபரணி', 'பூஜை' வெற்றிப் படங்களுக்கு பிறகு விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படம் 'தாமிரபரணி', 'பூஜை' வெற்றி கூட்டணியான விஷால் மற்றும் இயக்குநர் ஹரியை மீண்டும் இணைத்து ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறது 'தாமிரபரணி' மற்றும் 'பூஜை' சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி ஆகியோர் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ஒன்றுக்காக மீண்டும் இணைகின்றனர். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள் இணைந்து இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கின்றன. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத திரைப்படங்களை பார்வையாளர்கள் ரசிக்கும் விதத்தில் எடுப்பதில் வல்லவரான இயக்குநர் ஹரியும், அதிரடி ஆக்ஷன் நடிப்புக்கு புகழ் பெற்ற நடிகர்…
Read More
“அயோத்தி” திரைப்பட 50 வது நாள் கொண்டாட்டம்!!!

“அயோத்தி” திரைப்பட 50 வது நாள் கொண்டாட்டம்!!!

Trident Arts ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில், சசிகுமார் , யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் மனதை உருக்கும் காவியமாக விமர்சகர்கள், ரசிகர்கள் இருவரிடத்திலும் பாரட்டுக்களை குவித்த அயோத்தி திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது. மதம் முக்கியமில்லை மனிதமே முக்கியம் என்பதை அழுத்தி சொல்லி மக்களின் மனங்களை வென்று பிரமாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது “அயோத்தி” திரைப்படம். அயோத்தி படத்தின் பிரமாண்ட வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு பட நிறுவனம் கேடயம் வழங்கி கௌரவித்தது. இவ்விழாவினில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினர். இவ்விழாவினில் நடிகை ரோகிணி பேசும்போது:- படம் பார்த்தேன்... இந்தப்படம் இந்த காலகட்டத்திற்கு, இப்போதைய நேரத்திற்கு மிகமிக அவசியமான ஒரு படம். இயற்கை போல் அன்பு செய்வதை நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது இந்தப்படம். இதில் உழைத்த அத்தனை பேரையும் மேடையேற்றி வாழ்த்தும் இந்த அன்பு உள்ளங்களுக்கு என் நன்றி. இப்படி…
Read More
யாத்திசை – விமர்சனம்!

யாத்திசை – விமர்சனம்!

கோடிகளைக் கொட்டி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தை பார்க்க வைப்பதற்காக, அந்த படக்குழு ஊர் ஊராய் போய் புரொமோஷன் செய்து கொண்டிருக்க, எங்களாலும் அரசர் கால படத்தை மினிமம் பட்ஜெட்டில் எடுக்க முடியும் என்று சொல்லி கவனம் ஈர்த்து இருக்கிறது யாத்திசை என்கிற இந்தப்படம்.முதலில் இப்படியான ஒரு முயற்சியை குறைந்த பட்ஜெட்டில் எடுத்ததற்கு இயக்குநர் தயாரிப்பாளர் இரண்டு பேரின் தைரியத்தை பாராட்டித் தான் ஆகவேண்டும். யாத்திசை திரைப்படம் மக்கள் மத்தியில் ஒரு வித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதற்கான சான்றுதான் படத்தின் ட்ரெய்லர் யூடியூப்பில் 5 மில்லியனுக்கும் மேலான வியூவ்சைப் பெற்றிருப்பது.நாடே அஞ்சி நடுங்கக் கூடிய பாண்டிய மன்னன் ரணதீரனை கருவறுத்து கோட்டையை கைப்பற்ற வேண்டும் என்று ஒரே குறிக்கோளுடன் பயணப்படுகிறான் எயினர் குலத்தைச் சேர்ந்த கொதி. அவனின் உறுதியை நம்பும் அவனது இனமும் ஒரு கட்டத்தில் அவனுக்கு துணையாக நிற்க, தன் படையுடன் நேரடியாகவே மன்னனுடன் மோதுகிறான் கொதி. இரு…
Read More
யாத்திசை என்பது 7 ஆம் நூற்றாண்டின் பாண்டிய இளவரசர் ரணதீரனை அடிப்படையாகக் கொண்ட ஒரு காலகட்ட புனைகதை ஆகும், அவர் சோழ சாம்ராஜ்யம் அதன் அதிகாரத்தை இழந்து அதன் மக்கள் காடுகளில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்த காலத்தில் ஆட்சி செய்தார். பாண்டியர்களுக்கு எதிராக எயினர் மற்றும் சோழர்களின் கிளர்ச்சி மற்றும் தேவரடியார்களின் வாழ்க்கையை போர் எவ்வாறு சீர்குலைத்தது என்பதையும் படம் மையமாகக் கொண்டுள்ளது.மேலும் சோழர்களின் வரலாற்றை விளக்கும் 'பொன்னியின் செல்வன் 2'க்கு முன்னதாக பாண்டியர்களின் வரலாற்றை நன்றாக விளக்குவது போல் தெரிகிறது. தரணி ராசேந்திரன் இயக்கத்தில், சக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சந்திரகுமார், செம்மலர் அன்னம், சுபத்ரா, சமர், விஜய் சேயோன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் 'யாத்திசை'. சக்ரவர்த்தி இசையமைக்க, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை முறையே அகிலேஷ் காத்தமுத்து மற்றும் மகேந்திரன் கணேசன் ஆகியோர் கையாள்கின்றனர். வரலாற்றுத் திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது.
Read More
ராகவா லாரன்ஸ், பிரியா பவானி ஷங்கர், சரத்குமார், பூர்ணிமா பாக்கியராஜ், நாசர், காளி வெங்கட் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். 4 வருடங்களுக்கு பின் ராகவா லாரன்ஸ் நடிப்பில் இந்த திரைப்படம் வெளிவந்துள்ளது. இதனாலேயே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்ப்பை ருத்ரன் படம் பூர்த்தி செய்ததா? பார்க்கலாம். தனது தாய் பூர்ணிமா பாக்கியராஜ், தந்தை நாசருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் ருத்ரன் {ராகவா லாரன்ஸ்}. குறிப்பாக தனது தாயின் மீது அளவுகடந்த பாசத்தை வைத்துள்ளார். இந்த சமயத்தில் கதாநாயகி பிரியா பவானி ஷங்கரை சந்திக்கும் ருத்ரன் காதலில் விழுகிறார்.கண்டதும் காதல்.நாயகிக்கு அப்பா அம்மா இல்லாததுனால இந்த காதல் திருமணம் வரை செல்லும் நேரத்தில், ருத்ரனின் தந்தைக்கு பிரச்சனை வருகிறது. தனது நண்பனை நம்பி 6 கோடி கடன் வாங்கினார் நாசர். ஆனால், அவர் நாசரை ஏமாற்றிவிட்டு 6 கோடி பணத்துடன் எஸ்கேப் ஆகிவிட்டார். கடன் கொடுக்க முடியாமல்…
Read More

ருத்ரன் -விமர்சனம் !

ராகவா லாரன்ஸ், பிரியா பவானி ஷங்கர், சரத்குமார், பூர்ணிமா பாக்கியராஜ், நாசர், காளி வெங்கட் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். 4 வருடங்களுக்கு பின் ராகவா லாரன்ஸ் நடிப்பில் இத்திரைப்படம் வெளிவந்துள்ளது.இதனாலேயே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. தனது தாய் பூர்ணிமா பாக்கியராஜ், தந்தை நாசருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் ருத்ரன் {ராகவா லாரன்ஸ்}. குறிப்பாக தனது தாயின் மீது அளவுகடந்த பாசத்தை வைத்துள்ளார். இந்த சமயத்தில் கதாநாயகி பிரியா பவானி ஷங்கரை சந்திக்கும் ருத்ரன் காதலில் விழுகிறார். இந்த காதல் திருமணம் வரை செல்லும் நேரத்தில், ருத்ரனின் தந்தைக்கு பிரச்சனை வருகிறது.தனது நண்பனை நம்பி 6 கோடி கடன் வாங்கினார் நாசர். ஆனால், அவர் நாசரை ஏமாற்றிவிட்டு 6 கோடி பணத்துடன் எஸ்கேப் ஆகிவிட்டார். கடன் கொடுக்க முடியாமல் நண்பனின் துரோகத்தை தாங்க முடியாமல் மரணடைகிறார். நாசரின் மரணத்திற்கு பின், வாங்கிய 6 கோடி கடனை வட்டியுடன்…
Read More

‘யாத்திசை’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !

'யாத்திசை' டிரெய்லர் வெறும் 6 நாட்களில் 6 மில்லியன் பார்வைகளை கடந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், திரைப்படத்தை ஏப்ரல் 21 அன்று தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் சக்திவேலனின் சக்தி ஃபிலிம் பேக்டரி வெளியிடுகிறது வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே ஜெ கணேஷ் வழங்கும் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'யாத்திசை'. ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராக போராடிய ஒரு சிறு தொல்குடியை பற்றிய கதைதான் 'யாத்திசை'. வெறும் 6 நாட்களில் 6 மில்லியன் பார்வைகளை கடந்து டிரெய்லர் மூலம் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த இப்படம் ஏப்ரல் 21 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. 'யாத்திசை' தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை சக்திவேலனின் சக்தி ஃபிலிம் பேக்டரியும், வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை ஐங்கரன் இன்டர்நேஷனலும் பெற்றுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இனிதே நடைபெற்றது. இசையமைப்பாளர் சக்ரவர்த்தி பேசியதாவது… முதலில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கு…
Read More
நடிகை நயன்தாரா நடிக்கும் ‘லேடிசூப்பர் ஸ்டார் 75’*

நடிகை நயன்தாரா நடிக்கும் ‘லேடிசூப்பர் ஸ்டார் 75’*

ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் வழங்கும், நீலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்கும் 'லேடிசூப்பர் ஸ்டார் 75'* லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 'லேடி சூப்பர் ஸ்டார் 75' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தினை இயக்குநர் ஷங்கரின் முன்னாள் உதவியாளரான நீலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்குகிறார். மேலும் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் உடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. ஃபேமிலி என்டர்டெய்னர் படமான இது அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில் இருக்கும். இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி, மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை, படக்குழுவினர் சென்னையில் நடத்தி முடித்து…
Read More
அகிலன்– விமர்சனம் !

அகிலன்– விமர்சனம் !

கிங் ஆஃப் இந்தியன் ஓஷன் ஆக இருக்கும் ஹார்பரில் சாதாரண லேபரான அகிலனுக்குத் தெரியாமல் ஒரு அணுவும் அசையாது. அவனுக்கு சர்வதேச ஹார்பர் கேங்ஸ்டரான கபூரை சந்திக்க வேண்டும் என்பதே திட்டம். அதற்காக கொலை, இல்லீகல் பிஸினஸ் என எல்லாவற்றையும் செய்து கொடுக்கிறான். இறுதியாக ஒரு சைபர் கிரைம் ஸ்பெஷலிஸ்ட் ஒருவனையும் Human Traffic முறையில் கண்டெய்னரில் ஏற்றி தப்பி செல்ல வைக்கிறான். அதன் மூலம் அவன் நினைத்தபடி கிங் ஆஃப் இந்தியன் ஓஷன் என்ற பட்டத்தையும் கைப்பற்றுகிறான். அகிலனின் டபுள் ஆக்‌ஷன் இன்னொரு பக்கம் லோக்கல் ஹார்பரில் இருக்கும் யூனியன் பிரச்சினை முதல் தன்னுடன் இருந்தவர்களை ஓரங்கட்டுவது, அடங்கிப் போக செய்வது என பல அதிரடிகளை அரங்கேற்றுகிறான் அகிலன். இதற்கெல்லாம் போலீஸ் கேரக்டரில் வரும் மாதவியும் உதவி செய்கிறார்.பிரியா பவானி சங்கருக்கு ரெமான்ஸ் காட்சியும் இல்லை, படத்தில் பெரிதாக வேலையும் இல்லை. பெயருக்கு படத்தின் நாயகியாக வந்து போகிறார். அகிலன்…
Read More
அகிலன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

அகிலன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

அகிலன் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு! நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், இயக்குநர் N.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் “பூலோகம்” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, இக்கூட்டணியில் மீண்டும் ஒரு அசத்தலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “அகிலன்”. இப்படத்தை Screen Scene Media Entertainment Pvt Ltd நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. மார்ச் 10 அன்று இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது. தயாரிப்பாளர் சுந்தர் பேசியதாவது.. பத்திரிகை, ஊடக நண்பர்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி, எனக்கு இது மிகப்பெரிய பயணம் என்னை நம்பிய ரவி சாருக்கு நன்றி, இந்தப் படத்தை உருவாக்குவது சற்று கடினமாகத்தான் இருந்தது ஏனென்றால் படப்பிடிப்பு முழுக்க துறைமுகத்தில் நடைபெற்றது, சில கப்பல்கள் வருவதற்கும் சில கப்பல்கள் செல்வதற்கும் காத்திருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது, ஆனாலும் படக்குழு இதை சமாளித்து, அருமையாக படத்தை எடுத்துள்ளனர். படத்தில் ஸ்டண்ட்…
Read More