ரூ.10 லட்சத்தில் தயாரான படம் !

ஒரு சினிமா படம் தயாரிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 2 கோடி வேண்டும் என்பதுதான் இன்றைய நிலை. ஆனால் வெறும் 10 லட்சத்தில் ஒரு படத்தை உருவாக்கி உள்ளனர். அதுவும் ஆஸ்திரேலியாவில். இதுபற்றிய விபரம் வருமாறு:அத்விக் விஷுவல் மீடியா மற்றும் பியூசர்ஸ் இன்டர்நேஷ்னல் சார்பில் ஆதர்ஷ், பின்னி மேத்யூ, விபின் தாமஸ் தயாரித்திருக்கும் படம் ‘டே நைட்’. இதில் ஆதர்ஷ் நாயகனாகவும், அன்னம் ஷாஜன் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அரிஷின் இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கி இருக்கிறார் என்.கே.கண்டி. இவர், சிம்புவை வைத்து கெட்டவன் படத்தை இயக்கியவர். படம் குறித்து இயக்குனர் என்.கே.கண்டி கூறியதாவது:ஆஸ்திரேலியாவின் கிராமப்புறங்களில் இரண்டு மாத காலங்கள் தங்கி எடுக்கப்பட்ட முழு நீள தமிழ் திரைப்படம் இது. பத்து லட்சம் ரூபாய் முதலீட்டில் மிகக்குறைந்த குழுவினருடன் இப்படத்தை உருவாக்கி இருக்கிறேன். இதில் நடித்த அனைவருமே புதுமுக நடிகர்கள் மற்றும் புதுமுக தொழில்நுட்பக் கலைஞர்கள்.இது ஒரு மர்டர் மிஸ்டரி படம். பாடல் காட்சிகள் எதும் இல்லை.

ஆனாலும், திகிலும் திருப்பங்களும் திரைக்கதை அமைப்புகளும் மிக புதுமையாக உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில் வரும் திரைக்கதை அமைப்பு இதுவரை இந்திய சினிமாவில் இடம் பெற்றதே இல்லை. 2018ம் ஆண்டு நடந்த ஒரு கொலை சம்பவத்தை 2019 புலனாய்வு செய்து தேடி கண்டுபிடித்து முடித்துக் கொள்வதே இக்கதையின் சிறப்பம்சம்.படத்தில் வரும் ஒரே ஒரு கதாபாத்திரத்தை தவிர மற்ற எல்லா கதாபாத்திரங்களும் கொலை செய்யப்பட்டு இறந்து விடுவார்கள். எப்படி கொலை செய்யப்படுகிறார்கள் என்பதை மிக விறுவிறுப்புடனும் திகிலுடன் நகைச்சுவையுடனும் சொல்லியிருக்கிறோம். என்றார்

Related posts:

PK7 Studios தயாரித்து வழங்கும் "ஜாக்கி"

'கடலில் கட்டுமரமாய்' விவசாயிகளுக்கான திரைப்படம் !

’மொத ராத்திரி’ திரைப்படம் நிச்சயம் ரசிகர்களை மகிழ்விக்கும்”: தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர்!*

அழிவைச் சந்திக்கிறதா, ஆட்டோமொபைல் சந்தை?

‘விடுதலை2’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

“’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்திற்குப் பிறகு அனந்த் நம் இண்டஸ்ட்ரிக்கு மிகவும் பிடித்தவராக இருப்பார் என நம்பிக்கை இருக்கிறது” - மிர்ச்சி விஜய்!

நாட்டிலேயே அதிகமாகப் பார்க்கப்பட்ட சேனலாக மாறிய தூர்தர்ஷன் !

சினிமா மேஸ்ட்ரோ ஜேம்ஸ் கேமரூன் புதுமை மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் சினிமா உருவாக்கத்தை மறுவரையறை செய்திருக்கிறார்!