சினிமா

புளூ ஹில் ஃபிலிம்ஸின் ஜோபி பி சாம் தயாரிப்பில் மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் பிரபுதேவா இணையும் ‘பேட்ட ராப்’ !

புளூ ஹில் ஃபிலிம்ஸின் ஜோபி பி சாம் தயாரிப்பில் மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் பிரபுதேவா இணையும் ‘பேட்ட ராப்’ !

புளூ ஹில் ஃபிலிம்ஸின் ஜோபி பி சாம் தயாரிப்பில் மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் பிரபுதேவா இணையும் 'பேட்ட ராப்' டி இமான் இசையில் உருவாகவுள்ள பரபரப்பான, கலகலப்பான, நகைச்சுவை நிரம்பிய, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த 'பேட்ட ராப்' திரைப்படத்தில் வேதிகா நாயகியாக நடிக்கிறார் நடிகர்-நடன இயக்குநர்-இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட பிரபுதேவா, பிரபல மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் 'பேட்ட ராப்' என்று பெயரிடப்பட்டுள்ள பரபரப்பான, கலகலப்பான, நகைச்சுவை நிரம்பிய, பொழுதுபோக்கு அம்சங்கள் மிக்க திரைப்படத்திற்காக இணைந்துள்ளார். புளூ ஹில் பிலிம்ஸ் பேனரில் ஜோபி பி சாம் தயாரிக்கும் இப்படம் சென்னையில் பூஜையுடன் துவங்கியது. ஜூன் 15, 2023 அன்று புதுச்சேரியில் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. இப்படத்தில் பிரபல நடிகை வேதிகா கதாநாயகியாக நடிக்கிறார். 'தேரு' (2023) மற்றும் 'ஜிபூட்டி' (2021) போன்ற மலையாளப் படங்களை எஸ் ஜே சினு இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.…
Read More
நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் தனது முதல் படைப்பிற்காக அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன்  இணைகிறது!

நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் தனது முதல் படைப்பிற்காக அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணைகிறது!

குளோபல் ஸ்டார் ராம் சரண் சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனமான ‘வி மெகா பிக்சர்ஸ்’-ஐ தனது நண்பர் யுவி கிரியேஷன்ஸ் விக்ரம் ரெட்டியுடன் இணைந்து அறிவித்தார். புதிய மற்றும் இளம் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட வி மெகா பிக்சர்ஸ், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ மற்றும் ‘கார்த்திகேயா 2’ வெற்றிப் படங்களை தயாரித்த அகில இந்திய தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் உடன் இணைந்துள்ளது. அபிஷேக் அகர்வால் தலைமையிலான இந்த தயாரிப்பு நிறுவனம், சிறந்த திரைப்படங்களை உருவாக்கி வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் தற்போது வி மெகா பிக்சர்ஸ் உடன் இணைந்து புதுமையான ஒரு படைப்பை பார்வையாளர்களுக்கு வழங்க உள்ளது. பான்-இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ள இதில், இளம் நாயகன் ஒருவர் முதன்மை வேடத்தில் நடிக்க, அறிமுக இயக்குநர் இயக்க உள்ளார். திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதர தகவல்களும் விரைவில் வெளியாக உள்ளன. வி மெகா பிக்சர்ஸ் மற்றும் அபிஷேக் அகர்வால்…
Read More
கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் #தளபதி68 !

கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் #தளபதி68 !

கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் #தளபதி68, வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 25-வது திரைப்படத்திற்காக தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளனர். மிகுந்த பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றவுள்ளார். 'பிகில்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக அவரது 68-வது படத்திற்காக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இணைகிறது. #Thalapathy68 என்று அழைக்கப்படும் இத்திரைப்படமானது ஏஜிஎஸ்-ன் 25-வது படைப்பு என்பதோடு இதுவரை இந்நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படங்களிலேயே மிக பிரமாண்டமான வகையில் உருவாக உள்ளது. சிறந்த உள்ளடக்கம் மற்றும் உயர்தர தயாரிப்பு என கடந்த 25 படங்களாக முத்திரை பதித்துள்ள ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட், #தளபதி68 அதன் மிகச்சிறந்த படமாக…
Read More
அகில இந்திய அளவில் தொடங்கப்பட்டுள்ள புதிய ஓடிடி தளமான எம்.எஸ்.எஃப் !

அகில இந்திய அளவில் தொடங்கப்பட்டுள்ள புதிய ஓடிடி தளமான எம்.எஸ்.எஃப் !

புதிய படைப்பாளர்கள் மற்றும் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில் அகில இந்திய அளவில் தொடங்கப்பட்டுள்ள புதிய ஓடிடி தளமான எம்.எஸ்.எஃப்-பின் (மூவி சூப்பர் ஃபேன்ஸ்) முதல் பிரத்தியேக வெளியீடாக முழு நீள நகைச்சுவை திரைப்படம் 'ரிங் ரிங்' திறமைமிகுந்த புதிய படைப்பாளர்கள் மற்றும் குறைந்த பொருட்செலவில் உருவாகும் திரைப்படங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தொழில்முனைவர் ராஜேஷ் கண்ணா, தொழில்நுட்ப தொழில்முனைவோரும் ஓடிடி தளங்களின் கைதேர்ந்தவருமான சுதாகர் சோழங்கத்தேவர் ஆகியோர் இணைந்து அகில இந்திய அளவில் முதல் முன்முயற்சியாக எம்.எஸ்.எஃப் (மூவி சூப்பர் ஃபேன்ஸ்) என்ற புதிய ஓடிடி தளத்தை சமீபத்தில் தொடங்கினர். இந்த ஓடிடி தளத்தின் முதல் பிரத்தியேக வெளியீடாக முழு நீள நகைச்சுவை திரைப்படமான 'ரிங் ரிங்' வரும் ஜூலை மாதம் 5-ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. திருமணத்திற்குப் பிந்தைய பிரச்சினைகளை மிகவும் நகைச்சுவையான முறையில் 'ரிங் ரிங்' விவரிக்கிறது. சக்திவேல் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் விவேக் பிரசன்னா,…
Read More
யாதும் ஊரே யாவரும் கேளிர் -விமர்சனம் !!

யாதும் ஊரே யாவரும் கேளிர் -விமர்சனம் !!

இலங்கை தமிழர் பிரச்சனைகளை பற்றி பேசும் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளில் பலர் வீராவேசமாக உணர்ச்சி பொங்க பேசுவார்கள். ஆனால் நம் ஊரில் முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள் பற்றி பேசமாட்டார்கள். அகதிகளுக்கு வாக்குரிமை இல்லாததே இதற்கு காரணம்.வாக்குரிமை மட்டும் இருந்தால் அரசியல்வாதிகள் கொண்டாடுவார்கள். ஒரு இலங்கை அகதியின் பார்வையில் சந்திக்கும் பிரச்சனையாக வந்துள்ளது யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம். இப்படத்தை வெங்கட கிருஷ்ணா ரோஹிந்த் இயக்கி உள்ளார். இலங்கையின் மோசமான போர் சூழலில் ஆதரவு அற்ற சிறுவன் புனிதனை பாதிரியார் ஒருவர் லண்டனில் உள்ள இசை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க முயற்சிக்கிறார். செல்லும் வழியில் ராணுவத்தினர் பிடியில் மாட்டி சிறையில் அடைக்கப் படுகிறான். விடுதலை அடைந்து கள்ள தோணியில் கேரளா செல்கிறான்.அங்கே உள்ள இசை கருவிகள் செய்யும் கடையில் வேலை செய்கிறான். இந்நிலையில் லண்டன் இசைப்பள்ளியில் போட்டியில் ஆன் லைன் மூலமாக கலந்து கொள்கிறான்.எந்த ஒரு நாட்டின் குடியுரிமையும்…
Read More
அதிகார பலம், பணபலம், பொய்ப் பிரச்சாரங்கள்..எல்லாம் தவிடு பொடியாகிவிட்டது! பாஜகவின் தோல்விக்கான காரணங்கள் காத்திரமானவை! காங்கிரசின் வெற்றிக்கான சூத்திரங்கள் நுட்பமானவை! இந்த தோல்வி பாஜகவிற்கு தேசிய அளவிலும், தமிழக அளவிலும் என்னென்ன பின்னடைவுகளைத் தரும்? கர்நாடகா தேர்தலில் வெற்றி பெற தன் முழு பலத்தையும் பிரயோகித்தது பாஜக! பிரதமர் மோடி ஆறுமுறை தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்ததோடு தெருத்தெருவாக சென்று ஓட்டு கேட்டார்! உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்து முழங்கினார்! தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பெருந்தலைகளின் பிரச்சாரம் எதுவுமே மக்களிடையே எடுபடாமல் போய்விட்டது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கின்ற ஹோதாவில் பாஜக இந்த தேர்தலில் செய்த அத்துமீறல்களும் கொஞ்ச, நஞ்சமல்ல! அத்தனையையும் கடந்து குழப்பமில்லாத தெளிவான வெற்றியை மக்கள் காங்கிரஸுக்கு தந்துள்ளனர். பாஜகவிற்கு பெருத்த பின்னடைவாக இந்த தேர்தல் முடிவுகள் அமைந்து விட்டன! காரணம், இந்த நான்கு வருட ஆட்சியில் பாஜக அரசு செய்த மிதமிஞ்சிய…
Read More
எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் இயங்கும் விழி ஒளி பரிசோதகர் பயிற்சி பள்ளியின் 60ஆம் ஆண்டு விழா மற்றும் உலக விழி ஒளி ஆய்வாளர் தினம் சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கலைக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மருத்துவ கல்வி இயக்குனர் மரு.R.சாந்தி மலர் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசும்போது:- இந்த பயிற்சிப் பள்ளி 1962ம் ஆண்டு தொடங்கப்பட்டது.எழும்பூர் கண்மருத்துவமனை இயக்குநராக இருந்த RGS முத்தையா அவர்கள்பிரைமரி ஹெல்த் கேர் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த பயிற்சிப் பள்ளியைத் துவக்கினார். என்றும் ஆரம்பத்தில் டிப்ளமா இன் ஆத்தால்மாலஜியாகத் தொடங்கி பின்னர் பிஎஸ்சி ஆப்தாலமாலாஜியாக விரிவு செய்ய படுத்தப்பட்டது.தற்போது எம்எஸ்சி ஆப்தாலமாலஜியாக ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார் . ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை கல்லூரி டீன் மரு.E.தேரணிராஜன், எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குனர் மரு.M.R.சித்ரா மற்றும் விழி ஒளி…
Read More
“மியூசிக் ஸ்கூல்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

“மியூசிக் ஸ்கூல்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

யாமினி பிலிம்ஸ் சார்பில்,  இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் "மியூசிக் ஸ்கூல்".  பிவிஆர் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் 12 மே அன்று திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று இனிதே நடைபெறுகிறது.     நடிகை ஸ்ரேயா சரண் பேசியதாவது.. சென்னை வருவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை ஷூட்டிங் பற்றி நிறைய இனிமையான தருணங்கள் நினைவுக்கு வருகிறது. இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா மிக இனிமையான குணம் கொண்டவர். இப்படத்திற்கு ஷூட்டிங் செல்வது எனக்கு வீட்டுக்குப் போவது போல் தான் இருந்தது. எனக்கு மிகச்சிறந்த பெற்றோர்கள் இருந்தார்கள், என்னால் நான் நினைத்ததைச் செய்ய முடிந்தது. என் உறவினர்களில் பலர் வீட்டை விட்டு வெளியே வரவே நிறைய போராட வேண்டும். அதனால் இந்தக் கதையைக் கேட்ட போது அதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இது…
Read More
2026-ல் மாஸான அறிவிப்பு ஒன்று வெளியாகும்: சரத்குமார் பரபரப்பு பேட்டி!

2026-ல் மாஸான அறிவிப்பு ஒன்று வெளியாகும்: சரத்குமார் பரபரப்பு பேட்டி!

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு !!! தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், மீண்டும் திரையுலகில் பொன்னியின் செல்வன் பெரிய பழுவேட்டரையர், ருத்ரன் எதிர்நாயகன் பூமி என கலக்க ஆரம்பித்திருக்கிறார். இந்திய சினிமாவின் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டுகளை குவித்துள்ளது. மேலும் தற்போது 20க்கும் மேற்பட்ட படங்களில், நாயகன், எதிர்நாயகன், வெப் சீரிஸ் என படு பிஸியாக நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன், ருத்ரன் திரைப்படங்களின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் தான் நடிக்கும் மற்ற படங்கள் குறித்தும் பத்திரிகை ஊடக நண்பர்களோடு பகிர்ந்து கொண்டார் நடிகர் சரத்குமார். இந்நிகழ்வினில் நடிகர் சரத்குமார் பகிர்ந்து கொண்டதாவது… நான் இப்போது பேசுவது பெரிய பழுவேட்டரையர் பேசுவது போல் உள்ளது என்கிறார்கள், மகிழ்ச்சி. நான் எப்போதும் நல்ல தமிழ் தான் பேசி வருகிறேன். கலை உலகத்தில் இருந்து கொஞ்ச காலம் ஒதுங்கி…
Read More
‘ருத்ரன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை ஆனந்தம் முதியோர் இல்லத்தில் கொண்டாடிய ராகவா லாரன்ஸ் சரத்குமார்!

‘ருத்ரன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை ஆனந்தம் முதியோர் இல்லத்தில் கொண்டாடிய ராகவா லாரன்ஸ் சரத்குமார்!

'ருத்ரன்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை ஆனந்தம் முதியோர் இல்லத்தில் கொண்டாடிய ராகவா லாரன்ஸ் சரத்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் முன்னணி தயாரிப்பாளர் கதிரேசன் இயக்கி, ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எல்எல்பி பேனரில் தயாரித்து ராகவா லாரன்ஸ் மற்றும் சரத்குமார் உள்ளிட்டோரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ருத்ரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் அமோக ஆதரவுடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக தொடர்ந்து இரண்டாவது வாரமாக தமிழகம் எங்கும் முத்திரை பதித்து வருகிறது. இந்த வெற்றியை தொடர்ந்து சென்னை அம்பத்தூரில் உள்ள ஆனந்தம் முதியோர் இல்லத்திற்கு இன்று சென்ற ராகவா லாரன்ஸ், சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ், ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர், மற்றும் கலை இயக்குநர் ராஜு உள்ளிட்ட படக்குழுவினர், அங்கு வசிக்கும் சுமார் 300 மூத்த குடிமக்களுடன் உரையாடி அவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கினர். 'ருத்ரன்' திரைப்படத்தின் வெற்றியை அங்குள்ளவர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். நிகழ்ச்சியின் போது பேசிய ராகவா லாரன்ஸ்…
Read More