சினிமா

வெள்ளி விழா நாயகன் மோகன் நடிப்பில் உருவாகும் ‘ஹரா’  !

வெள்ளி விழா நாயகன் மோகன் நடிப்பில் உருவாகும் ‘ஹரா’ !

தாதா 87', 'பவுடர்' வெற்றிப் படங்களை தொடர்ந்து மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தை இயக்கும் விஜய் ஸ்ரீ ஜியின் அடுத்த புதிய திரைப்படம் அனித்ரா நாயருடன் இணையும் அமலா பாலின் சகோதரர் அபிஜித் பால் திருநங்கைகளின் காதலை சொல்லும் 'தாதா 87', பெண்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை மையமாக கொண்ட 'பவுடர்', பள்ளி பருவத்திலிருந்து மாணவர்களுக்கு சட்டத்தை கற்பிக்க வேண்டும் என்கிற கருத்தோடு வெள்ளி விழா நாயகன் மோகன் நடிப்பில் உருவாகும் 'ஹரா' போன்ற படங்களின் மூலம் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து வரும் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி, தசை சிதைவு நோயின் மருந்தை இந்தியா தயாரிக்க வேண்டும் என்கிற கருத்தை முன்னிறுத்தி புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தை வி ஆர் இன்டர்நேஷனல் மூவிஸ் ரவி ராயன் தயாரிக்கிறார். சமீபத்தில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த குழந்தைக்கு…
Read More
டெல்லி சிக்னல் ! ஓபிஎஸ் குஷி !! எடப்பாடி அப்செட் ?

டெல்லி சிக்னல் ! ஓபிஎஸ் குஷி !! எடப்பாடி அப்செட் ?

டெல்லி சிக்னல் ! ஓபிஎஸ் குஷி !! எடப்பாடி அப்செட் ? அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்ந்து நீடிச்சுக்கிட்டே இருக்கிறதால, அதிமுகவின் எதிர்காலம் என்னாகும்ங்கிறதே அதிமுக தொண்டர்களின் கேள்வியாக இருக்குது. அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடங்கியதில் இருந்தே எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கல் மேல் சிக்கல் வந்துகிட்டே தான் இருக்குது. ஆனாலும் 4 வருஷம் ஆட்சியை சிரமமில்லாம நடத்துனதைப் போல, இப்போ அதனை ஓரளவு சமாளிச்சுக்கிட்டு வர்றாரு. அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் நாடாளுமன்ற தேர்தல் வரை தொடரும்னு சொல்றாங்க அரசியல் நிபுணர்கள். உச்ச நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவே இறுதியானது.இப்போ அதிமுகவின் பொதுக்குழு செல்லுமா செல்லாதாங்கிறதுதான் உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு. ஆனால் தேர்தல் ஆணையத் தரவுகளின் படி இன்னும் மூன்று ஆண்டுகள் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகத்தான் தொடருவார். இதன் காரணமாக அவர் ஒப்புதல் இல்லாம நடந்த பொதுக்குழு செல்லுமாங்கிறது கேள்விய இருக்குது.…
Read More
செம்பி -விமர்சனம் !

செம்பி -விமர்சனம் !

கோவை சரளா கொடைக்கானல் மலை உச்சியில் உள்ள புலியூரில்  பழங்குடி இனத்தை சேர்ந்த பெண் வீரத்தாயி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் தன்னுடைய 10 வயதுள்ள பேத்தி செம்பியுடன் வாழ்ந்து வருகிறார். கொடைக்கானல் காட்டுப்பகுதிகளில் கிடைக்கும் தேனை விற்றுதான் வாழ்ந்து வருகின்றனர். ஒருநாள் கொடைக்கானலை சுற்றி பார்க்க வந்த 3 பேரால் வீரத்தாயின் பேத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறாள். இதனால் உடைந்து போன பாட்டி வீரத்தாயி அந்த குற்றவாளிகளுக்கு எப்படி தண்டனை வாங்கி கொடுத்தார்? என்பதை யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன் . -- கோவை சரளாவை இப்படத்தில் முற்றிலும் தன்னுடைய உருவத்தை மாற்றி பழங்குடியின மக்களில் ஒருவராகவே தோன்றுகிறார். இவர் இதுவரை நடித்த கதாபாத்திரங்களில் இருந்தும் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருக்கிறார். சரளாவின் ஒரு சில காட்சிகள் எல்லோரையும் கலங்க வைப்பதாக இருக்கிறது. அதேபோல செம்பியாக நடித்த நிலாவும் தன்னுடைய நடிப்பினால் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.எதிர்காலத்தில்…
Read More
‘மிகமிக அவசரம்’ ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் தமிழ்க்குடிமகன்

‘மிகமிக அவசரம்’ ஸ்ரீபிரியங்கா இணைந்து நடிக்கும் தமிழ்க்குடிமகன்

“நான் அழுத்தமாக சொல்ல நினைத்த விசயத்தைத்தான் இசக்கி கார்வண்ணன் சொல்லியிருக்கிறார்.. சமூகத்திற்கான சிந்தனையில் அவர் என்னோடு நிற்கிறார் என்பதில் மகிழ்ச்சி".. ; தமிழ்க்குடிமகன் இயக்குனருக்கு சேரன் பாராட்டு தமிழ்க்குடிமகன் யாரை அடையாளப்படுத்துகிறான் ? ; இயக்குநர் இசக்கி கார்வண்ணனின் புதிய பாதை ”குலத்தொழில் ஒழிந்து விட்டது. . ஆனால் குலம் இன்னும் இருக்கிறதே” ; தமிழ்க்குடிமகன் இயக்குநர் வேதனை தமிழ்க்குடிமகன் திரைப்படத்தின் டீசர் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை பெட்டிக்கடை, பகிரி ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக மிக மிக அவசரம் புகழ் ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் நடிகர்கள் லால், எஸ் ஏ சந்திரசேகர், வேல ராமமூர்த்தி, தீபிக்ஷா, அருள்தாஸ், ரவிமரியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விக்ரம் வேதா புகழ் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.…
Read More
பாஜக வேண்டவே வேண்டாம். எடப்பாடி பிடிவாதம் ? சீனியர்கள்..அமைச்சர்கள் சமாதானம்? உள்துறை அமைச்சர் அமித் ஷாவப் பத்தி எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அளித்த பேட்டி தான் அரசியல் வட்டாரத்தில் பரபரபபா பேசப்பட்டுகிட்டு வருது.பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக அதிமுக - பாஜக உறவு நீடிக்குமாங்கிற சந்தேகம் வர ஆரம்பிச்சிடுச்சி?. கடந்த சனிக்கிழமை உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னைக்கு வந்தார். இவரை ஓ பன்னீர்செல்வம் போய்ப் பாத்த நிலையில் எடப்பாடி பழனிசாமி பாக்கலை. அமித் ஷாவை ஏன் எடப்பாடி சந்திக்கலை? எதுவும் மோதலா? கருத்து வேறுபாடாங்கிற கேள்விகள் வர ஆரம்பிச்சுது. இதப் பத்தி கேள்விகேட்டதுக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் மேலும் விவாதங்களை தீவிரமாக்கிடுச்சி. ஓபிஎஸ் + சசிகலா + டிடிவி.. இவங்க மூணு பேரையும் சேத்துக்குங்கன்னு சொன்ன அமித் ஷா.. கொந்தளிச்ச எடப்பாடி! பிரச்சனை தொடங்கியது இங்குதான்? அமித் ஷாவப் பத்தி கேட்ட கேள்விக்கு எடப்பாடி என்ன சொன்னாருன்னா…
Read More
காமெடியனாக திரையுலகிற்கு வந்து தற்போது படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் யோகி பாபு. ஷூ படத்தில் யோகி பாபு, திலீபன், ரெடின் கிங்சிலே, ஜார்ஜ் விஜய், விஜய் டிவி பாலா போன்றோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவ்வளவு பேர் இருந்தாலும் குழந்தைகளை சுற்றியே இக்கதை நகர்கிறது. ஷூ வடிவில் டைம் மெஷின் ஒன்றை கண்டுபிடிக்கிறார் திலீபன், அதனை சோதனை செய்யும் போது எதிர்பாராத விதமாக போலீசில் மாட்டிக் கொள்கிறார். மறுபுறம் ஒரு கும்பல் குழந்தைகளை விலைக்கு வாங்கி அவர்களை விபச்சாரத்திற்கு உட்படுத்துகிறது, மறுபுறம் தாய் இல்லாத குழந்தை குடிகார அப்பாவிடம் இருந்து கஷ்டப்படுகிறது. இவர்கள் மூன்று பேரையும் அந்த ஷூ ஒரு கட்டத்தில் இணைக்கிறது, என்பதே இப்படத்தின் கதை. கல்யாண் இயக்கியுள்ள இப்படம் டெக்னிக்கலாக சிறப்பாக உள்ளது. படத்தில் உள்ள நடிகர்களைப் போலவே டெக்னீசியன்களும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவராக பார்த்து பார்த்து அமைத்துள்ளார். இசையமைப்பாளர் சாம்…
Read More

வேலுமணியை காப்பாற்றும் பாஜக!

ஊழல் செய்வதில் சாதனை படைத்தவர் எஸ்.பி.வேலுமணி. இவருக்கு ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆதரவு பரிபூரணமாக இருந்தது என்பதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும் என்றாலும், இன்றைக்கு மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரலாக உள்ள எஸ்.வி.ராஜி வேலுமணி சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரானது அதிர்வை ஏற்படுத்தியது! அதிமுக ஆட்சி காலத்தில் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ரூ.2704 கோடி மதிப்பிலான கட்டுமான பணியில் டெண்டர் விட்டதில் பெரிய அளவில் முறைகேடு நடந்து இருப்பதாக அறப்போர் இயக்கம் வழக்கு தொடுத்து இருந்தது. மேலும், ஒரே ஐபி எண்கள் கொண்ட கம்ப்யூட்டரில் இருந்து சகோதர நிறுவனங்களின் பெயர்களில் இருந்து டெண்டர்கள் கோரப்பட்டுள்ளதையும் அது குறிப்பிட்டு இருந்தது. அப்படி டெண்டர் நிறுவனங்கள் குறுகிய காலத்தில் அசுரவளர்ச்சி அடைந்துள்ளன. பலநூறு கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் முறைகேடாகக் கொடுக்கப்பட்டுள்ளன,  வேலுமணிக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதற்காக டெண்டர் விதிமுறைகள் தாராளமாக தளர்த்தித் தரப்பட்டுள்ளது. இதில், பல கட்டங்களில்…
Read More
கார்ப்பரேட்டுகளின் கூடாரமாகும் அரசியல் கட்சிகள் !

கார்ப்பரேட்டுகளின் கூடாரமாகும் அரசியல் கட்சிகள் !

தொண்டர்களை மட்டுமே நம்பி களத்தை சந்தித்து பழகிய அரசியல் கட்சிகள், இப்போ வியூக வகுப்பு நிறுவனங்களை நம்பியே களம் இறங்குகிறது. அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுதுங்கிற காலம் போய், அரசியல் கட்சிகளின் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாகவும், தங்களது கட்சியை அடமானம் வைக்கும் இடமாகவும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மாறி வருது.. அந்த வகையில், வருகிற 2024 மக்களவை தேர்தல் போட்டி, இரு பெரும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளான, அதாவது; பாஜகவுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பதாக விமர்சிக்கப்படும் பிரஷாந்த் கிஷோர் அப்புறம் காங்கிரஸுக்கு பணியாற்ற அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ள சுனில் கனுகோலுவுக்கும் இடையேயானதாக பார்க்கப்படுது. 2024 மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் பணிக்குழுவில் தேர்தல் உத்தி வகுப்பாளர் சுனில் கனுகோலு இடம்பெற்றுள்ளதன் மூலம் அக்கட்சியின் தேர்தல் ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளது அதிகாரப் பூர்வமாக தெரியவந்திருக்குது.. முன்னதாக, காங்கிரஸ் கட்சியில் இணைய பிரபல தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர் மறுப்பு தெரிவிச்சிட்டதுனால, அக்கட்சிக்காக 2024 மக்களவை…
Read More
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல்

  பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதாக தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளது அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் எனக் கூறி விட்டு, தற்போது, நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிலைப்பாட்டை மாற்றுவது ஏற்புடையது அல்ல என எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். தொடர்ந்து அரசை சந்தித்து முறையிடும் முடிவையும் எடுத்துள்ளார்கள். இருப்பினும் கூட, பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்ற நிலைப்பாட்டில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. நிதி ஆதாரம் இல்லாததால் சிக்கலா?: பழைய ஓய்வூதிய திட்டத்தை ராஜஸ்தான் அரசு நடைமுறைப்படுத்துகிறது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் நடைமுறைப்படுத்துவதாக கூறியது. ஆனால், நடைமுறைப்படுத்த சட்ட சிக்கல் மற்றும் நிதி பற்றாக்குறை…
Read More
அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம் ! ஸ்டாலின் மனமாற்றம் ?

அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம் ! ஸ்டாலின் மனமாற்றம் ?

அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம் ! ஸ்டாலின் மனமாற்றம் ?துபாய் சென்று வந்த கையோடு அமைச்சரவையில் முதல் மாற்றத்தை அரங்கேற்றியிருக்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். அமைச்சரவையில் இடம்பெற்றவர்கள் மீது எந்த புகார் வந்தாலும் அது குறித்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்னு முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற நேரத்திலேயே எச்சரிக்கை பண்ணியிருந்தாரு. இந்த விஷயத்தில் கலைஞர் கருணாநிதி போல் விட்டுபிடிப்பவர் அல்ல ஸ்டாலின், ஜெயலலிதா போல் உடனடியாக மாற்றம் தான்னு திமுகவினரே கசொல்லிட்டு வந்தாங்க. இந்நிலையில் ஆட்சி பொறுப்பேற்ற பத்து மாதங்களில் அமைச்சரவையில் முதல் மாற்றம் நடந்திருக்குது.பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் எஸ்.எஸ்.சிவசங்கரை போக்குவரத்து துறை அமைச்சராகவும், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் மாற்றி உத்தரவு போட்டிருக்காரு முதல்வர் ஸ்டாலின்.ராஜ கண்ணப்பனை குறிவைத்து தான் இந்த மாற்றம் அரங்கேறியிருக்கிறது என்பது அரசியல் வட்டாரம் அறிந்த செய்தி தான். உண்மையில் பத்து மாதம் என்பதே அதிகம்…
Read More