அடுத்தப் படத்திலும் மிரட்டலுக்குப் பஞ்சம் இருக்காது ? இயக்குநர் மோகன் ஜி.!

நாடகக் காதலை மையமாக வைத்து திரவுபதி படத்தை எடுத்திருந்தார் இயக்குநர் மோகன் ஜி. இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே பெரும் சர்ச்சையில் சிக்கியது. இருந்தபோதும், அந்த சர்ச்சைகளே படத்துக்கு மிகப் பெரிய விளம்பரத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.இந்தப் படத்தில் ரிச்சர்ட் ரிஷி, ஷீலா, ஜீவா ரவி, பாரதி, கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்க, ஜுபின் படத்துக்கு இசையமைத்திருந்தார். கூட்டு முதலீட்டின் கீழ் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரிலீசாகி பெரும் வெற்றி பெற்றது. கிட்டதட்ட படம் பத்து கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூல் செய்தது. படத்துக்கு முதலீடு என்பது மிகவும் குறைவுதான். ஒரு கோடி ரூபாக்கும் கீழாகவே செலவு இருந்தது.இந்நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமையை யாரும் வாங்க முன் வரவில்லை எனக் கூறி, தன்னுடைய ஆதங்கத்தை டுவிட்டர் மூலம் வெளிப்படுத்தி இருந்தார் மோகன் ஜி. இதையடுத்து, படம் சாட்டிலைட் டி.வி.,க்களில் வெளியிட முடியாத அளவுக்கு மோசமாக இருந்ததுதான் காரணம் என பலரும் இயக்குநர் மோகன் ஜியை டுவிட்டரில் தொடர்ந்து கலாய்த்து வந்தனர்.

இந்நிலையில், அவர்கள் அவ்வளவு பேருக்கும் பதில் அளிக்கும் வகையில் ட்விட்டர் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் இயக்குநர் மோகன் ஜி. அதில் அவர் கூறியிருப்பதாவது: தயவு செய்து எல்லோரும் கதறுவதை நிறுத்தவும். அடுத்தப் படத்திலும் திரைக்கதையில் மிரட்டலுக்குப் பஞ்சம் இருக்காது. அதுவரை உடம்பை ரணகளப்படுத்திக் கொள்ளாதீர்கள். கொரோனா வைரஸ் அப்டேட்டுகளைத் தொடர்ச்சியாக படித்து, பாதுகாப்புடன் இருங்கள். ஏனென்றால், அடுத்தப் படத்திற்கும் விளம்பரம் செய்ய நீங்களெல்லாம் தேவை. இவ்வாறு மோகன் ஜி பதிவிட்டிருக்கிறார்.

Related posts:

உற்றான் திரைப்பட நாயகன் ரோஷன் அறிமுக பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது. !

“வேல்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்து இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு ஐந்து நாள் விழா நடத்துகின்றனர்”

அஃப்ரிஞ்ச் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் அறிமுக இயக்குநர் ஜாபர் இயக்கத்தில், ‘விடாமுயற்சி’ புகழ் கணேஷ் சரவணன் நடிக்கும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது!

விஷன் சினிமா ஹவுஸின் 'ஹைக்கூ' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!*

TTF வாசனின் IPL-ல் திரைப்படத்தின் பாடலை பாராட்டிய சங்கர் மகாதேவன்.!

தமிழ்நாட்டில் கருவுறாமை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது !

அறிமுக இயக்குநர் மேகராஜ் தாஸ் இயக்கத்தில் ராஜ் அய்யப்பா-டெல்னா டேவிஸ் நடிக்கும் ரோம்- காம் திரைப்படம் ‘லவ் இங்க்’!

‘காடன்’, ‘அரண்யா’, ‘ஹாத்தி மேரே சாத்தி’ - மூன்று திரைப்படங்களின் டீஸர் வெளியீடு -