யார் ஹீரோ.. யார் ஜீரோ..” விஜயகாந்த்.. ரஜினிகாந்த்.. ஓர் ஒப்பீடு..!

ரஜினி இப்போது கட்சி தொடங்குவார், அப்புறமாக தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 31ம் தேதி ஆரம்பிக்க போகிறேன் என்று கூறி உள்ள நிலையில்

அரசியலில் அவரது தர்பார் பலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது? இந்நிலையில், ஏற்கனவே நடிகராக இருந்து அரசியல் அரிதாரம் பூசி தனக்கென தனி முத்திரை பதித்துள்ள விஜயகாந்தை போன்று ரஜினியும் அரசியலில் அரிச்சுவடி காண்பாரா? சாதனை படைப்பாரா? என்ற கேள்வி பலரால் எழுப்பப்படுகிறது.

ஆனால் திரைத்துறையில் ரஜினி சாதித்தது என்ன? தன்னுடைய துறை சாந்தவர்களுக்கு ரஜினி செய்தது என்ன? மக்களுக்கு ஒரு நடிகனாக அவர் செய்தது என்ன? போன்ற பல கேள்விகளை எழுப்புகின்றனர் பொது நல விரும்பிகள். அதே போன்று கேள்விகளுக்கு விஜயாகாந்திடம் உள்ள பதில் என்ன?

ரஜினி மற்றும் விஜயகாந்த் ஓர் ஒப்பீடு

1. எளிமை

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த போதும் சொகுசாக வாழ்ந்து வருபவர் ரஜினி

கொஞ்சம் வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருபவர் விஜயகாந்த்

2. இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளித்தல்

சினிமாவில் பாலசந்தர், பாரதிராஜா போன்ற பெரிய இயக்குநர்களால் உருவானவர் தான் ரஜினி

ஆர்.கே.செல்வமணி, ஆபாவாணன், அரவிந்தராஜ் திரைப்பட கல்லூரி மாணவர்கள் இயக்குநராக வாய்ப்பளித்தவர் விஜயகாந்த்

3. ரசிகர்கள் மீதான அன்பு

தன்னுடைய திருமணத்தை கூட மதுரை தமுக்கம் மைதானத்தில் ரசிகர்கள் புடைசூழ அவர்களுக்கு வடை பாயாச விருந்துடன் நடத்தியவர் விஜய்காந்த்

தன்னுடைய இளைய மகள் சௌந்தர்யா திருமண வரவேற்பிற்கு வந்த ரசிகர்களை பவுன்சர்களை வைத்து அடித்து துரத்தியவர் ரஜினி

4. மொழி மீதான பற்று

மாணவர் பருவத்திலேயே திமுக முன்னெடுத்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர் விஜயகாந்த்

மொழிக்கான போராட்டத்தில் தலை காட்டாதவர் ரஜினி

5. இலங்கை தமிழர் இனபடுகொலை

இலங்கை தமிழர் இனபடுகொலையை கண்டித்து 1986ல் நடிகர்களை திரட்டி சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தியவர் தான் விஜயகாந்த்.

அந்த சமயத்தில் ஹிந்தி படமொன்றின் படபிடிப்பிற்காக மும்பையில் நடித்திக் கொண்டிருந்தவர் ரஜினி

6. திரைப்பட தொழிலாளர்களின் நலன்

தன்னுடன் சக கலைஞர்களுக்கும் தான் சாப்பிடும் உணவையே கொடுக்க வேண்டுமென்று விரும்பி அதையே அனைவருக்கும் கொடுத்தவர் விஜயகாந்த்

திரைப்பட தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டதாக ரஜினி எப்போதும் இருந்ததில்லை

7. அன்னதானம்

சென்னையில் இருக்கும் தன்னுடைய சினிமா அலுவலகத்தை கூட அன்ன சத்திரமாக மாற்றி வைத்திருந்தவர் விஜயகாந்த். சினிமா வாய்ப்பு தேடி சென்னை வரும் இளைஞர்களுக்கு விஜயகாந்த்தின் அலுவலகம் தான் பசி போக்கும் அன்ன சத்திரம் என்று சொல்லப்படுவதுண்டு

ஆனால் ரஜினி சோறு போட்டதாக செய்தியே இல்லை என்றும் கூறப்படுகின்றது

8. பொதுமக்களுக்கான சேவை

ஈரோட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவமனை நடத்தியவர் விஜயகாந்த்

இது போன்ற சேவைகளை ரஜினி செய்தததாக தகவல் இல்லை

9. கல்வி உதவி

2006ல் தமிழகம் முழுவதும் இளைஞர்களுக்காக 50 கணிணி பயிற்சி மையங்களை துவக்கி நடத்தியவர் விஜியகாந்த்

ஆனால் கல்விக்கென்று எதையும் ரஜினி செய்ததாக தகவல் எதுவும் இல்லை

10. காவேரி போராட்டம்

காவேரிக்காக போராட்டம் நடத்த இயக்குநர் பாரதிராஜா ஏற்பாடு செய்த போது அதை புறக்கணித்தவர் ரஜினி.

பாரதி ராஜாவின் அந்த போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்தவர் விஜயகாந்த்

11. சினிமா துறை சார்ந்தவர்கள் மீதான அக்கறை

நடிகர் சங்க தலைவராக பதவியேற்று நலிந்த கலைஞர்களின் நலனுக்காக மாதம் தோறும் ஓய்வூதியம் கிடைக்க வழி செய்தவர் விஜயகாந்த்

தன் துறை சார்ந்தோர் மீதும் தான் சார்ந்திருக்கும் சினிமா துறையில் எந்த அக்கறையும் காட்டாதவர் ரஜினி

12. துணிச்சல்

கருணாநிதியும், ஜெயலலிதாவும் அரசியலில் கோலோச்சிய நேரத்திலேயே அரசியலில் களம் கண்டவர் விஜயகாந்த்

அவர்கள் இருக்கும் போது அரசியல் பக்கம் வராதவர் ரஜினி

13. ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தல்

தனது ரசிகர்களை சேர்மனாகவும், எம் எல் ஏ வாகவும், கவுன்சிலர்களாகவும் உருவாக்கியவர் விஜயகாந்த்

தன் நம்பகமற்ற பேச்சுக்களால் தன்னுடைய ரசிகர்களை இழந்து நிற்பவர் ரஜினி.

14. அச்சம்

அச்சத்தின் காரணமாக அரசுகளை குறை கூற பயந்து சிஸ்டத்தை குறை கூறியவர் ரஜினி

ஜெயலலிதாவை சட்டப்பேரவையில் கைநீட்டி கேள்வி கேட்டவர் விஜயகாந்த்

15. முதலீடு

தான் சம்பாதித்த பணத்தை தமிழகத்திலேயே முதலீடு செய்தவர் விஜயகாந்த்

தன்னுடைய சம்பளத்தை கர்நாடகா மற்றும் மஹராஸ்டிராவில் முதலீடு செய்தவர் ரஜினி

மொத்தத்தில் விஜயகாந்த் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவது அவரது துணிவு, நிர்வாகத்திறன், உதவும் மனப்பான்மை, முடிவெடுப்பதில் ஆற்றல் மிகு துணிவு உண்டு
ரஜினி என்றால் மக்களுக்கு நினைவுக்கு வருவது அவருடைய சுயநலம், முடிவெடுப்பதில் உள்ள குழப்பம், ஏழைகளை பார்த்து இறங்காத மனது, துணிவின்மை போன்றவை தான்.

இது போன்ற ஒப்பீடு சமூக வலைதளங்களிலும், பொதுவெளியிலும் பரவலாக எழுப்பப்படுகிறது. இணையதளத்தில் வைரலாகி வரும் இந்த பதிவால் ரஜினி வட்டாரம் கலக்கமடைந்துள்ளது

Related posts:

நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் ஸ்டேஷன் !மத்திய அரசு வழிமுறைகளை வகுத்துள்ளது !!
பிரபல மருத்துவர் டாக்டர் யு.பி. சீனிவாசன் உருவாக்கியுள்ள 'ஜண்ட மட்டான்’ இசை ஆல்பம் வெளியீடு !
விக்ராந்த், மெஹ்ரீன் பிர்சாதா, ருக்ஷார் தில்லானின் பிக் பட்ஜெட் சைக்காலஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் 'ஸ்பார்க் எல்.ஐ.எஃப்.இ' நவம்பர் 17ஆம் தேதி இந்தியா முழ...
உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துக்கொண்ட ‘கண்ணப்பா’ படக்குழு!
தீபாவளி பண்டிகை சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு..!
பத்திரப்பதிவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விசயங்கள்.!
எளிதில் தீப்பற்றாத லித்தியம் பேட்டரி ! அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு !!
ஏ ஆர் ரஹ்மான், பரத் பாலா, டோட் மக்கோவர், ஜே ஜெயராமன் இணைந்து முன்னெடுக்கும் ‘தa பியூச்சர்ஸ்’ !