23
Aug
*தமிழ் ஒரிஜினல் தொடரின் மொத்த பார்வை நேரத்தில் கிட்டத்தட்ட பாதி இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி பார்வையாளர்களிடமிருந்து கிடைத்துள்ளது!* ஜியோஹாட்ஸ்டாரின் நீண்டகால தமிழ் ஒரிஜினல் தொடரான ‘ரிசார்ட்’ 100 மில்லியன் வாட்ச் ஹவர்ஸை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் பிக்ஷன் ஒரிஜினல் தொடராக ‘ரிசார்ட்’ உள்ளது. ஒளிபரப்பான நாள் முதல், எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய கதாபாத்திரங்கள், உணர்வுப்பூர்வமான கதைக்களம் மற்றும் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் வெளியாகும் எபிசோடுகள் மூலம் ‘ரிசார்ட்’ தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி, பல்வேறு மொழிகளைச் சேர்ந்த பார்வையாளர்களிடமும் ‘ரிசார்ட்’ வரவேற்பைப் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் தொடர்புபடுத்திக் கொள்ளும்படியான கதைக்களங்கள், தங்களது சொந்த மொழி மற்றும் சந்தையைத் தாண்டியும் ரசிகர்களை சென்றடைய முடியும் என்பதை ’ரிசார்ட்’ மீண்டும் நிரூபித்துள்ளது. ‘ரிசார்ட்’ தொடரின் மொத்த வாட்ச் டைமில் 53% தமிழக பார்வையாளர்களிடமிருந்து கிடைத்துள்ளது.…
